Showing posts with label ராயல் அக்கப்போர் கோமகனின் காதல். Show all posts
Showing posts with label ராயல் அக்கப்போர் கோமகனின் காதல். Show all posts

Friday, February 19, 2021

#ராயல்அக்க்ப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப்படுத்துகிறதாம்!

கோமகன், காதல் என்றாலே நிறைய வில்லங்கம் நிறைய  ஊர்வம்பு, அக்கப்போர்  என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மட்டும் தான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெங்கும் இருந்தது இல்லை! அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கத்தைப்   பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது. இப்போது பிரிட்டனை ஆள்வது Windsors வம்சம் முந்தைய அரசபரம்பரைகளை மிஞ்சிய ராயல் அக்கப்போர்களாக, பிரிட்டிஷ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் உலக ஊடகங்களாலும் கதைக்கப்படுவதாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. 


பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஒரு அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கிலை காதல் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே பிரிட்டிஷ் ஊடகங்கள் கொஞ்சம் பொறாமை, வெறுப்பு கலந்த செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன. இயல்பாகவே பிரிட்டிஷ் மீடியாவுக்கு அமெரிக்கர்கள் என்றாலே கொஞ்சம் இளப்பம்! மட்டந்தட்டுவதும் கூட  வாடிக்கைதான்! அதுவும் போக மூத்த இளவரசர் வில்லியம், இளையவர் ஹாரி இருவருக்கும் இடையில், ஒரு பனிப்போர், ஹாரியின் திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததாக  ஊடகங்களில் செய்திகள், மறுப்பு என மாறி மாறி வந்துகொண்டே இருந்ததில், கடந்த வருடம் ஹாரி மேகன் தம்பதியினர் அரசகுடும்பத்தின் சீனியர் உறுப்பினர்களாகச் செயல்படுவதில் இருந்து வெளியேற இருப்பதாக செய்தி ஒன்று கசியவிடப்பட்டது. பாட்டி எலிசபெத் ஒரு சமரச முயற்சியாக இளைய பேரனும் அவர் மனைவியும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒருவருட காலம் அவகாசம் கொடுத்ததில், ஹாரியும் மேகன் மார்க்கிலும் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் முதலில் கனடாவிலும், அது சரிப்பட்டு வராததால் அமெரிக்காவிலும் குடியேறினார்கள். அரச குடும்பத்தை சார்ந்திராமல், Netflix முதலான ஊடகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மில்லியன் கணக்கான் டாலர்களை சம்பாதித்து காலை வலுவாக ஊன்றிக்கொண்டும் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடத் தீர்மானித்து விட்டமாதிரியே செய்திகள். 



#Megxit என்று பிரிட்டிஷ் ஊடகங்களால் ஊதிப்பெரிது படுத்தப்பட்ட இந்த விவகாரம் கடந்த ஒருவருட காலமாகவே புகைந்துகொண்டிருந்ததில் இளவரசர் ஹாரி தம்பதியினர், தாங்கள் செயல்படும் ராஜ குடும்பத்தினராகத் தொடரப்போவதில்லை என்று தெளிவாகத் தங்களது முடிவை பிரிட்டிஷ் ராணிக்குத் தெரியப்படுத்தியிருப்பது இன்றைக்கு ராயல் அக்கப்  போராக ஊடகங்களில் பரபரப்பாகியிருக்கிறது.
அவர்கள் இனிமேல் அரசகுடும்பத்தினருக்கு அளிக்கப் படும் கௌரவ ராணுவ பதவி அடைமொழிகளையோ, மாட்சிமை தாங்கிய என்ற முன்விகுதியையோ பயன் படுத்த முடியாது என்பதை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
     
பிரச்சினை இப்போது வேறுவிதமாகத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் உச்சகட்ட தமாஷ்!
எலிசபெத்துக்கு அடுத்து அரசராகப் பதவியேற்க மகன் சார்லஸ் காத்திருக்கிறார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் வில்லியம் இவர்களெல்லாம் பதவிக்கு வந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப்போகிறார்கள்? முடியாட்சி  எலிசபெத்துடனேயே முடிந்து போகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவரே இனி இருக்கவேண்டும் என்கிற குரல்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உரத்து எழ ஆரம்பித்திருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் முடிவிலேயே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது பிரிட்டிஷ் அரச குடும்பம் அதற்குப்பிறகும் கூட எழுபத்தைந்து ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டது. காலாவதியாகிப் போகிற நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது போல! 

#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!

 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)