செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதரவாளர்களைக் கதறவிட்டிருப்பது இந்த நாளுடைய ஆகச் சிறந்த காமெடி! வீடியோ 13 நிமிடம்.
ஒரு செய்தியாளராகவோ விவாத நெறியாளராகவோ செந்தில் என்றைக்கும் சோபித்ததில்லை. ஆனாலும் கூட இந்த வீடியோவில் ஒரு நகைச்சுவை ஓரங்க நாடகத்தை நடத்தியிருக்கிறார். நிறைய சொதப்பல்களுடன் தனி ஒருவனாக தமிழ் கேள்வி என்றொரு யூட்யூப் சேனலில் திமுகவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றும் கூட அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவரானதைக் கிண்டல் செய்து வெளியிட்டிருந்தார். செந்தில் எத்தனை வன்மத்தோடு தவறான தகவலைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள கீழே ஸ்க்ரீன்ஷாட் ஒன்றே போதும்.
தினமலர் காரன் - மோடி முடிவெடுத்து விட்டார் - கொங்கு நாட்டை பிரிக்க என்று கிளப்பி விட -
அண்ணாதுரை கருணாநிதியும் - அடைந்தால் திராவிட நாடு என்று இந்த நாட்டை துண்டாட பேசிய பொது - தேசியவாதிகள் மனம் துடித்த துடிப்பை தற்போது கொங்கு நாட்டு காரர்கள் திரும்பவும் கழகத்திற்கு குடுத்து கொண்டு இருக்கிறார்கள் .
1921 இறந்த பாரதி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று- 1947 வரப்போகும் விடுதலை பற்றி பாடியது போல..
இன்று பலர் கொங்கு நாடு மலர்ந்து விட்டது போல - வரி விதிப்பு வருமானம் கொங்கு நாட்டில் அதிகம் என்றும் - காவேரி நீர் பங்கீடு பற்றி - கர்நாடகம் மற்றும் திராவிட தமிழ்நாடு உடன் எப்படி பேச்ச்சு வார்த்தை செய்வது - ஏற்றுமதி துறைமுகம் எப்படி என்பது பற்றியெல்லாம் எழுதுகிறார்கள் ..
ஒரு மந்திரம் மாதிரி சொல்லி சொல்லி - எல்லாரும் அதை நம்ப ஆரம்பித்து விட்டனர் என நினைக்கிறேன் ..
இந்த காவேரி நீர் ஓடும் பகுதியான திருச்சி தஞ்சை நாகப்பட்டினம் வரை - உங்கள் கூட சேர்த்து கொள்ளுங்க - உங்களுக்கு பழைய பூம்புகாரில் ஒரு பெரிய துறைமுகம் கட்டி - திருப்பூர் ஆடைகளை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் !!
இப்படிக்கு
சோழதிருநாட்டு நம்பி (விஜயராகவன் கிருஷ்ணன்)
புலர்ந்து வரும் திராவிட தீது இல்லா திருநாட்டில் புது பெயர்
2500 கோடி ரூபாய் செலவில் சென்னையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பூங்காக்கள் அவசியம் தான்! ஒரு பேரிடர்த்தொற்று அபாயம் முற்றிலும் குறையாத தருணம் இது, இப்போது இது ரொம்ப முக்கியமா என்று கேள்வி கேட்டால் பதில் வருமா வராதா என்று எனக்குத் தெரியாது.
1980 களில் ராஜீவ் காண்டி பிரதமராக இருந்த சமயம், புதிய கல்விக்கொள்கை ஒன்று அறிவிக்கப்பட்டு அதன் ஒரு அம்சமாக மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளியும் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு நல்லவிஷயத்தையும் குறுக்கே விழுந்து மறிக்கும் இடதுசாரிகள் அதையும் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழகத்தில் அன்று ஆண்ட கழகம் என்ன காரணத்தாலோ நவோதயா பள்ளிகளைத் தமிழகத்துக்குள் நுழைய விடவில்லை. இப்போதும் கூட பூங்காவுக்குச் செலவிட உத்தேசித்திருக்கும் 2500 கோடியில் 125 - 150 நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசே செலவுசெய்து ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்யலாம். நீட் தேர்வு பற்றி எல்லாம் வீணாக அச்சப்படாமல் மாணவர்கள் தயாராக தரமான பள்ளிகளை உருவாக்குவதுதான் உண்மையான சமூகநீதி, சமநீதியும் கூட! இலவச சைக்கிள்களோ, கலர் டிவி போன்ற இலவசங்களோ அல்ல என்பதை யாரிங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பது?
மே 2க்கு முன்னால் தமிழகத்தில் எல்லோருமே பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்துத் தான் போராடினார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தை உதாரணமாக காட்டி, அங்கு போல தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து, விலையை குறைத்தால் என்ன என்றெல்லாம் கேட்டார்..
ஆனால் தற்போது, பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் எல்லாப் போராட்டத்திலும் மாநில அரசு கழன்று விட்டது; மத்திய அரசை மட்டும் கண்டிக்கிறார்கள். இங்கே ஒரு நியாயமான ஊடகமிருந்தால், அது என்ன கேள்வி எழுப்ப வேண்டும்? என சுந்தர் ராஜ சோழன் முகநூலில் கேள்வி எழுப்புகிறார். யார் இதற்குப் பதில் சொல்வது?
பிரிட்டன் உட்பட சில மேற்கத்திய நாடுகளில் Shadow Government என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் செயல் பாடுகள், துறை வாரியான யோசனைகள், விமரிசனம் என்பதை காப்பியடித்து பாமக இங்கே சிலகாலமாக நிழல் நிதிநிலையறிக்கை (பட்ஜெட் ) வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராம்தாஸ் இங்கே வெளியிட்டு இருக்கிறார். 126 அறிவிப்புக்களைக் கொண்டதாக இந்த அறிக்கை இருப்பதை பாமகவினரே புரிந்துகொண்டு விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஆளும் தரப்பு எப்படிப்புரிந்து கொள்ளுமோ?