ஜனவரி முதல் தேதி! உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், என்னென்ன வழிகளில் சாத்தியமோ அத்தனை விதங்களிலும் நடந்து கொண்டிருக்கும். கேளிக்கை, கூச்சல், விருந்து சோம, சுரா பானங்கள், பப் கல்ச்சர் என்று ஒரு பக்கம் உலகம் ஆரவாரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்-------
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் வாசலில், ஆயிரக்கணக்கான மக்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வரிசையாக, ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காக, ஏற்கெனெவே பெற்ற அனுபவத்தை உயிர்ப்பித்துக் கொள்வதற்காக, அங்கே பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காண முடியும்!
பாண்டிச்சேரி, எத்தனையோ விஷயங்களுக்குப் "பேர்போனதுதான்" என்றாலும், உன்னதமான ஆன்மீகத் தேடலோடு, அங்கே ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு வருபவர்கள் ஏமாற்றமடைந்தது இல்லை.
ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த ஆரம்ப காலங்களில், ஸ்ரீ அரவிந்தரையோ, ஸ்ரீ அரவிந்த அன்னையையோ நினைத்த நேரத்தில் எவரும் பார்த்து விட முடியாது. ஆசிரமத்தில் சாதகர்களாக இருந்தவர்களே கூட, ஸ்ரீ அரவிந்தரிடம் தங்களுடைய ஆன்மீகத் தேடலில் எழுந்த வினாக்களை, ஒரு நோட் புத்தகத்தில் எழுதிக் கேட்டு, அவரிடமிருந்து எழுத்து வடிவத்தில் தான் பெற முடியும். ஸ்ரீ அன்னை தான், அடியவர்களுக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நடுவே இணைக்கிற பாலமாகவும், வழியாகவும் இருந்து உதவிய ஆரம்ப நாட்களில், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரையும் தரிசனம் செய்வதற்கு, வருடத்தில் சில நாட்கள் தரிசன நாட்களாக ஆகிப் போயின!
ஜனவரி முதல் தேதி, வருடத்தின் முதல் தரிசன நாளாக இன்றைக்கும் இருக்கிறது.
அன்றைக்கு ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும், அடியவர்களுக்கும் ஸ்ரீ அன்னை தன் கைகளினாலேயே ஒரு காலண்டரும், மலர்களைப் பிரசாதமாகவும் வாழங்குகிற வழக்கம் இருந்தது. காலண்டரில், ஸ்ரீ அரவிந்தர் அல்லது அன்னையின் படம், அவர்கள் சொன்னதில் ஏதாவது ஒரு வாக்கியம் இருக்கும்.
ஸ்ரீ அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் மனித உடலை நீத்து சமாதி நிலையை ஏற்றுக் கொண்ட பிறகு, ஆசிரமத்தில் காலை வேளையில் சமாதியைச் சுற்றி அன்பர்கள் அமர்ந்து, கூட்டுப் பிரார்த்தனை செய்வதும், காலண்டர், மலர் பிரசாதம், அப்புறம் அந்த தருணத்திற்காண செய்தியை அருளாசியாகப் பெறுவதும் இன்றைக்கும் தொடர்ந்து நடக்கிறது.
கொடுப்பினை உள்ளவர்கள் அங்கே ஆசிரமத்தில் நேரடியாக இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
அன்னை! ஸ்ரீ அரவிந்தர், ஒரு சாதகருக்கு எழுதிய ஆறு கடிதங்கள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டு ஒரே நூலாக வெளிவந்தது. ஸ்ரீ அரவிந்த அன்னையை, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரைத் தேடி வந்த மற்றொரு சீடர் என்று எண்ணிக் கேள்வி எழுப்பியிருந்ததற்கு, ஸ்ரீ அரவிந்தர் மிகத் தெளிவாகவே சொன்ன பதில் " மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று எண்ணி ஏமாந்து விடாதே! அன்னை, பராசக்தியின் அவதாரம்!"
அன்னை என்னும் அற்புதப் பேரொளி! திருமதி விஜய சங்கரநாராயணன் எழுதிய அழகான தமிழ் நூல். ஸ்ரீ அரவிந்த ஆசிரம வெளியீடாகவே வெளி வந்த இந்தப் புத்தகம், எளிய தமிழில், ஸ்ரீ அரவிந்த அன்னையின் சரிதத்தைச் சொல்லும் புத்தகம். அம்மா, அம்மா என்று ஒரு சிறு குழந்தை மிழற்றுவதைப் போலவே, அவளைப் பேச முனையும் தருணமாக நெக்குருகுவதை, படித்துப் பார்த்த நினைவுகள் இப்போதும் தருகின்றன.
இந்த வீடியோவில், ஸ்ரீ அன்னையின் தரிசனம் எத்தனை எத்தனை விதங்களில் தான் நமக்குக் கிடைக்கிறது! ஹூதா ஹிந்தோச்சா என்ற அடியவர், அன்னையின் வழிகாட்டுதலோடு அரவிந்த மகாகாவியமான சாவித்திரியில் இருந்து சில கருத்துக்களை மையப் படுத்தி ஓவியங்களாக வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் கொஞ்சம், ஸ்ரீ அன்னையின் தரிசனம், பால்கனி தரிசனம் என்று பிரபலமான தரிசனம், ஸ்ரீ அரவிந்தரின் நூலை அன்னையின் குரலிலேயே வாசிக்கக் கேட்பது இப்படி எத்தனை எத்தனை அனுபவங்கள்!

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறாள் ஆண்டாள்! ஆன்மீக அனுபவமும் கூட இப்படி எல்லோருடனும் கூடியிருந்து அனுபவிக்கப் படுவது தான்!
அன்னை என்னும் அற்புதப் பேரொளி
ஆசிரியர்: திருமதி விஜய சங்கர நாராயணன்
கிடைக்குமிடம் SABDA, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம், பாண்டிச்சேரி. அன்னை என்னும் அற்புதப் பேரொளி
ஆசிரியர்: திருமதி விஜய சங்கர நாராயணன்
படித்தேன். கொடுக்கப் பட்டுள்ள படமும் பார்த்தேன். Buffer ஆகும்போது திரையில் சுழலும் வட்டம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கற்பனை...முதலில் அது தியானம் செய்பவரது வயிற்றில், மேலே உட்கார்ந்து தியானம் செய்பவர் நெஞ்சில் அடுத்த படத்தில் அன்னையின்நெற்றியில்,அடுத்த காட்ச்சியில் கீழே நின்றிருக்கும் பக்தர்களின் நெஞ்சில் சுழன்ற அந்த வட்டங்கள்...!
ReplyDelete