முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் இரண்டு!
கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள் பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?
நீ!
உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.
மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை
அங்கேயே தேங்கிவிடாதே! தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய் சிறு துளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறு துளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறு துளியாய் ஆனதைப்பார்!
முகமது ஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய சூஃபி கவிஞருடைய கவிதைகளில், காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்ம நேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதை வரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்!காதல் கவிதை மாதிரித் தோன்றினாலும் உயர்ந்த ஆன்மீகத் தேடலோடு கூடிய உயிரின் வேட்கையாக இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்!
காதல் என் காதோடு வந்து சொன்னது:
"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால் வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"
**********
இயற்கையிடமிருந்து வெகுதூரம் விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்!
சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக, இயற்கையோடு ஒட்டியிராமல், மிகவும் செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது!
நாற்பது வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலப் பாடமாகப் படித்த கவிதை வரிகள், இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் வினோதத்தை நினைவு படுத்திக் கொண்டே, இங்கேயும் ஒரு மீள் பார்வையாக! உள்ளிருந்து வெளிப்படும் ஏக்கமாக....!
வில்லியம் ஹென்றி டேவிஸ் என்ற இந்தக் கவிஞனுடைய இந்த வாரத்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்!
What is this life if, full of care,
We have no time to stand and stare.
No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.
No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.
No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.
No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance.
No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.
A poor life this if, full of care,
We have no time to stand and stare.
கிட்டத் தட்ட இதே உணர்வுகளைச் சொல்கிற மாதிரி வில்லியம் ஒர்ட்ஸ்ஒர்த் கவிதை வரிகளைக் கொஞ்சம் அனுபவித்துத் தான் பாருங்களேன்! தயாசுரபி என்ற பெயரில் யாகூ! 360 தளத்தில் எனக்கு அறிமுகமான மாதிரி இலக்கிய ரசனையும் விமரிசனத் திறமும் கொண்ட வாசகர்கள் எவரேனும் இங்கே இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ரகசியமாய் ஒரு ஆசை இருக்கிறது!சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக, இயற்கையோடு ஒட்டியிராமல், மிகவும் செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது!
நாற்பது வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலப் பாடமாகப் படித்த கவிதை வரிகள், இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் வினோதத்தை நினைவு படுத்திக் கொண்டே, இங்கேயும் ஒரு மீள் பார்வையாக! உள்ளிருந்து வெளிப்படும் ஏக்கமாக....!
வில்லியம் ஹென்றி டேவிஸ் என்ற இந்தக் கவிஞனுடைய இந்த வாரத்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்!
What is this life if, full of care,
We have no time to stand and stare.
No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.
No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.
No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.
No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance.
No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.
A poor life this if, full of care,
We have no time to stand and stare.
The world is too much with us; late and soon,
Getting and spending; we lay waste our powers:
Little we see in Nature that is ours;
We have given our hearts away, a sordid boon!
This Sea that bares her bosom to the moon;
The winds that will be howling at all hours,
And are up-gathered now like sleeping flowers;
For this, for everything, we are out of tune;
It moves us not. — Great God! I’d rather be
A Pagan suckled in a creed outworn;
So might I, standing on this pleasant lea,
Have glimpses that would make me less forlorn;
Have sight of Proteus rising from the sea;
Or hear old Triton blow his wreathèd horn.
The Sonnet by William Wordsworth,
Miscellenous sonnets 33
கவிதைகளைப் படித்துவிட்டு, அவை தந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! கேட்போம்!