Saturday, December 18, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது-6


மாற்றங்களுக்குத் தயாராவது எப்படி ஆரம்பிக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த ஐந்து பதிவுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாற்றங்கள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஜென் ஞானியைப் போல மேகங்கள் வந்தன போயின, நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் சாட்சி மட்டும் தான் என்று உலக வாழ்க்கையில் எல்லோராலும்  இருந்துவிட முடியாது அல்லவா?

மாற்றங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன? ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் மாற்றத்திற்கான ஆர்வம் ஆசை ஏற்பட்டு விடுவதில்லை என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால், மாற்றங்கள் எப்படி இருக்குமோ, நான் எதற்காக மாற வேண்டும்,
என்னை விட்டு விடுங்கள், நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று முதலில் கெஞ்சலாகவும் பிறகு முரட்டுப் பிடிவாதமுமாக ஒரு எதிர்ப்பு நிலை ஏற்படுவதைத் தான் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். மாற்றங்களுக்குத் தயாராக முரண்டு பிடிப்பது, பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவது என்பது மனித இனத்தின் பொதுவான தன்மைதான். ஆனாலும் மாற்றங்கள், அந்தப் பொதுவான தன்மையையும் உடைத்து, பழமையைப் புரட்டிப் போட்டுவிடுகிறதாக வந்து கொண்டே இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

க, மாற்றங்கள் என்பது, ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறிய குழுவினால் முன்னோடிகளாகக் கொண்டு ஆரம்பித்திருப்பதை வரலாற்றை சரியாகப் புரிந்துகொண்டாலே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக,கிறித்தவ திருச்சபையின் இறுக்கமான பிடியில் மத நம்பிக்கை, இந்த பூமி தான் படைப்பின் நடுநாயகமாக இருக்கிறது என்பதை நம்ப வைத்துக் கொண்டிருந்தது; மக்களும் ஆடு மந்தையைப் போல ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். கலீலியோ என்ற விஞ்ஞானி, உண்மையில் பூமி சூரியனைச் சுற்றி வரும் பல கிரகங்களில் ஒன்று தான் என்பதை சொன்னபோது முரட்டுத் தனமாக, எதிக்கத் தான் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து பழக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தெரிந்திருந்தது.வாடிகன் மிகக் கடுமையாக மத நம்பிக்கைத் திணிக்க முற்பட்டபோது என்ன நடந்தது என்பதை அறிவியல் வரலாறு சொல்கிறது. (அறிவியல் வரலாறு என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நூலின் அற்புதமான தமிழ்மொழி பெயர்ப்பாகத் திரு.பெ.நா. அப்புசாமி, எழுதியிருந்த நூலை இளம் வயதில் படித்த நினைவு வருகிறது.)

ந்த முன்னோடி அல்லது முன்னோடிகளைத் தான் மாற்றங்களைத் தலைமையேற்று வழிநடத்துபவர்கள் என்று சொல்கிறோம். கலீலியோவை ஆரம்ப கட்டத்தில் ஏளனம் செய்த, எரிக்க முயன்ற வெறியர்களுடைய பார்வையில் அவர் ஒரு கிறுக்கனாகத் தான் தெரிந்தார். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகவோ, உலகம் என்ன சொல்கிறது என்பதை அடியொற்றித் தான் தானும் ஆமாம் சாமி போடுகிறவனாக இருக்கவேண்டும் என்பவராகவோ இருக்கவில்லை. தன்னுடைய கண்டுபிடிப்பில் அவர் உறுதியாக இருந்தார், அதைப் புரிந்து கொள்ள தயாராக இருந்த
நபர்களுக்குப் பொறுமையாக விளக்கவும் தயாராக இருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும்! எதிர்த்து நின்றவர்களுடைய எண்ணிக்கை, பயமுறுத்தல், ஏளனங்கள் அவரை சலனப் பட செய்யவில்லை. மாறாக, அவர் என்னதான் சொல்கிறார், அது உண்மையா என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வர ஆரம்பித்தார்கள். இங்கே ஒரு கருத்து, அதற்கு ஆரம்பத்தில் ஒட்டு மொத்த எதிர்ப்பு, அப்புறம் இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வந்த விதம், இப்படி சிறுதுளியாகப் பெருகிக் கொண்டே போனதில், எந்தக் கட்டத்தில் மாற்றத்திற்கான எதிர்ப்பு அடித்துச் செல்லப் பட்டது என்பதைத் துல்லியமாக எவராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.

ஜான் பி கோட்டர் முதலான ஆசிரியர்கள் எழுதிய பல நூல்களைப் படிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. நடைமுறையில் நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலேயே, புத்தகங்களையும் தாண்டிய அனுபவங்கள், நாம் சரியாகப் புரிந்து கொண்டு ஜெயித்தவை, புரிந்துகொள்ளத் தவறித் தோல்வியில் முடிந்தவை என்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.



Think differently  என்ற வலைப்பதிவில் ஒரு மாதத்திற்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்.

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  


ந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம்

ரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு தலைவன் அல்லது முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்!

தொடர்ந்து பேசுவோம்!


 

8 comments:

  1. சிறந்ததொரு அலசல் சிறப்பானப் பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாருங்கள் சங்கர்!

    மாற்றங்களுக்குத் தயாராகி விட்டீர்களா?

    ReplyDelete
  3. //ஒரு தலைவன் அல்லது முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான்.//

    //மாற்றங்கள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.//

    இதில் இரண்டாவது சொன்னது தானே உண்மை?.. அந்த மாற்றம் ஏற்பட்டேயாக வேண்டிய ஒரு கனிந்த சூழ்நிலை உருவாகின்ற காலத்தின் நேர்த்தியைத் தானே வித்து என்று சொல்ல வேண்டும்?.. (கொதிநிலை நிலையை அடையும் வ்ரைக் காத்திருந்தேயாக வேண்டிய நீர்,அந்த நிலையை அடைந்தவுடனே தானே ஆவியாக ஆகும் மாற்றத்தை அடையத் துவங்குகிறது?) அந்த மாற்றத்தின் நேர்த்தியைப் புரிந்து கொண்டு செயல்படுகின்ற முன்னோடியை வித்து என்று சொல்கிறோமா?..

    ஆக, ஒவ்வொரு மாற்றத்திற்கும் அதற்கான கனிந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிற காலம் தான் நாயகனா?..

    ReplyDelete
  4. வாருங்கள் ஜீவி சார்!.

    இந்தப் பதிவே மாற்றத்திற்குத் தயார் செய்யும் தலைவர்கள், தலைமைப் பண்பு பற்றியது. கொஞ்சம் நீங்கள் மேற்கோள் காட்டியிருந்த வாக்கியத்துக்கு அடுத்த வாக்கியத்தையும் சேர்த்துப் படித்தால், இரண்டாவது சொன்னது ஒரு பகுதிதான் உண்மை என்பதும், முதலில் சொன்னது தான் முழு உண்மையாக இருக்கிறது என்பதும் புரியும்.

    மாற்றத்திற்குத் தயாராவது என்பது ஒரு பண்பு. ஒரு லட்சியம்.அதைத் தகவமைத்து, முன்னெடுத்துச் செல்லவும், பின்பற்றுகிறவர்களை வழிநடத்தவும் ஒரு தலைவன் தேவைப் படுகிறான். அந்தத் தலைவன் எப்படி அதை ஆரம்பிக்கிறான் என்பதைக் கொஞ்சம் எளிமையாக சொல்வதற்காகத்தான் டெரெக் சிவெர்ஸ் வலையேற்றம் செய்த வீடியோவைக் கொடுத்திருந்தேன்.

    காலம் என்பது மிக நீண்ட பரிமாணம் கொண்டது. காலம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் அல்லது முடித்து வைக்கும் இயல்பிலானது. இங்கே காலம், கனிந்து வருவது என்று சொன்னால், வேறு அர்த்தத்தைக் கொடுத்து விடக் கூடும். காலமோ வேறெதுவோ, இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தனிநபர் தான் முன்னோடியாக உருவாகிறான், அவனைத்தான் முன்னோடி என்றும், வித்து என்றும் சொல்கிறோம்.

    ReplyDelete
  5. விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. கடைசியில் வியக்க வைத்தது

    ReplyDelete
  7. மற்ற நாடுகளில் உள்ள நிலைமை இங்கு இந்தியாவில் நிச்சயம் இல்லை. இருக்கப்போவதுமில்லை.
    இங்கே மொழியும், உடையும் ,உணவும் ,கும்பிடும் சாமியும் ,மதமும், ஜாதியும்,சினிமாவும், .கட்சிகளும் கணக்கற்றவை. இவைகளை மீறி இவர்களை ஒன்றாக இணைப்பது என்பது.....................இது காந்தியின் காலமும் அல்ல. யாராவது தொப்பி போட்ட இந்திக்காரர்கள் சொன்னால் கேட்பதற்கு.

    இந்த உண்மை யாருக்கு புரியுமே காங்கிரஸ் கார்களுக்கு நன்றாகவே புரியும். நம் மக்கள் அவிழ்த்து நெல்லிக்காய் மூட்டைகள் தான் என்பது.
    பழைய சோவியத்து யூனியன் கதை தான் இங்கு நிகழ அதிக வாய்ப்புள்ளது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் வருங்காலங்களில் சாத்தியமாய் இருக்கும். வேறு வழி இல்லை. அதற்கான ஆரம்பங்கள் அறிகுறிகள் தோன்றி யுள்ளன.

    ReplyDelete
  8. எதையும் துண்டிவிட ஒருவர் வேண்டியது இங்குள்ளநிலை___

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)