தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஒரு கதையை, தொடர்கதையாக வாரம் ஒரு அத்தியாயம் என்று பொறுமையாக, ஆர்வம் குறையாமல் படிக்க வைத்த எழுத்து அவருடையது.
கதைக்குத் தேவையான சரித்திரச்சான்றுகளை, சந்தேகத்துக்கிடமில்லாமல், தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்வது, நிஜத்தில் வாழ்ந்த சரித்திர புருஷர்களோடு, கற்பனைக் கதாபாத்திரங்களையும் கலந்து, ஒரு கதையை உருவாக்குவது கடினம். கல்கி அதை சாதித்தார்! அதனால் தான், வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில் அதிசயமில்லை!.
அதற்கு முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!
கல்கி சோழர்களையும், பல்லவர்களையும் வைத்துக் கொண்டு மூன்று அற்புதமான சித்திரங்களைப் படைத்தார் என்றால் சாண்டில்யன், தனக்கென்று ஒரு சிருங்கார பாணியை, மொழிநடையை வைத்துக் கொண்டு, கல்கி தொடக் கூட முயற்சி செய்யாத உயரங்களை, இந்திய வரலாற்றின் பல பக்கங்களைத் தொட்டுக் காவியம் படைத்தார். ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் சாண்டில்யனுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அகிலன், நா.பார்த்த சாரதி, விக்கிரமன், கோவி.மணிசேகரன், அரு.ராமநாதன், கௌசிகன் என்று பலரும் சரித்திரப் பின்னணியில் கதை எழுதியிருக்கிறார்கள்.அவர்களுமே கூட, கல்கி, அடுத்து சாண்டில்யன், என்ற வரிசையில் அடுத்த மூன்றாவது இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை என்பது கொஞ்சம் நெருடலான உண்மை.
மிகச் சமீப காலத்தில் தான், எழுத்தாளர்களுடைய கவனம் சரித்திரத்தின் பக்கம் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் என்னுடைய கவனத்தை சமீப காலத்தில் ஈர்த்த ஒரு புத்தகம், SMS எம்டன்! மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் விவாத இழைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணங்களில், இந்த நூலும் , நூலாசிரியர் திரு வி.திவாகரும் அறிமுகமானார்கள். நமக்கு அடுத்த வீடான ஆந்திராவில் இருக்கிறார், தமிழ்நாட்டில் பெயரைச் சொன்னவுடன் அல்லது முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. நான்கு சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்! SMS எம்டன் புதுவரவு! கதைக்குத் தேவையான சரித்திரச்சான்றுகளை, சந்தேகத்துக்கிடமில்லாமல், தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்வது, நிஜத்தில் வாழ்ந்த சரித்திர புருஷர்களோடு, கற்பனைக் கதாபாத்திரங்களையும் கலந்து, ஒரு கதையை உருவாக்குவது கடினம். கல்கி அதை சாதித்தார்! அதனால் தான், வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில் அதிசயமில்லை!.
அதற்கு முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!
கல்கி சோழர்களையும், பல்லவர்களையும் வைத்துக் கொண்டு மூன்று அற்புதமான சித்திரங்களைப் படைத்தார் என்றால் சாண்டில்யன், தனக்கென்று ஒரு சிருங்கார பாணியை, மொழிநடையை வைத்துக் கொண்டு, கல்கி தொடக் கூட முயற்சி செய்யாத உயரங்களை, இந்திய வரலாற்றின் பல பக்கங்களைத் தொட்டுக் காவியம் படைத்தார். ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் சாண்டில்யனுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அகிலன், நா.பார்த்த சாரதி, விக்கிரமன், கோவி.மணிசேகரன், அரு.ராமநாதன், கௌசிகன் என்று பலரும் சரித்திரப் பின்னணியில் கதை எழுதியிருக்கிறார்கள்.அவர்களுமே கூட, கல்கி, அடுத்து சாண்டில்யன், என்ற வரிசையில் அடுத்த மூன்றாவது இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை என்பது கொஞ்சம் நெருடலான உண்மை.
இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டன. நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தின் தளபதியான டாக்டர் செண்பக ராமன் அந்த கப்பலில் இருந்தார் என்பது ஒன்று! அவரை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இறக்கிவிட்டு விட்டு, எம்டன் போய் விட்டது என்பது இன்னொன்று! ஆங்கிலேயர்களுடைய வியாபார சாம்ராஜ்யத்திற்கு எச்சரிக்கை விடுப்பதும், இந்திய விடுதலை வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கும் தான் இந்த குண்டு வீச்சு என்பது இன்னொரு வதந்தி!
ஆக, எம்டன் சென்னையை அழிக்காமல் விட்டு விட்டதற்கு ஒரு இந்தியர் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ,நடந்த ஒரு சரித்திர சம்பவத்தை வைத்துக் கதைக்களத்தை, கதாசிரியர் ஆரம்பிக்கிறார்,. தந்தையின் மரணத்தை, வெறும் இறுதிச் சடங்காகநடத்தாமல் முக்தி நிலை பெற்ற மகானுக்குச் செய்வதுபோல சமாதிக் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன், எம்டன் கப்பலுக்குக் கடத்திவரப்படுவதில் இருந்து, எம்டன் கப்பலை வைத்து, அதன் பயணத்தை வைத்து ஒரு கதைக்களம், எம்டன் கப்பலின் காப்டன் முல்லர், துணை அதிகாரி முக்கே என்று சரித்திரக் கதாபாத்திரங்களையும், சென்னையில் குண்டு வீசியபிறகு எம்டன் பயணம் செய்த பாதை, இடங்கள் என்று கதைக்களம் விரிகிறது.
அதற்கும் சுமார் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன், சிவபாதசேகரன் என்ற பெயருடன் சிவனடிக் கீழ் புகும் களம் அடுத்து விரிகிறது. சித்தர் வழிபாட்டுமுறையில் என்று ஆரம்பித்து, ஒரு ஆன்மீகக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் ஆசிரியர். எம்டன் கப்பலில் கதாநாயகன் எதிர்கொள்ளும் விரோதமான சூழ்நிலைகளைக் கதாநாயகன் எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறான் என்று ஒரு ட்ராக்கில் சொல்லிக் கொண்டே, ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் இந்தக் கதைக்குள் எப்படி வருகிறார்கள், அன்று நடந்தது என்ன என்பதை இன்னொரு ட்ராக்காகச் சொல்லிக் கொண்டு, இந்த இரண்டையும் நிகழ்காலக்கதா பாத்திரங்களோடு எப்படி ஒருங்கிணைத்து, இரண்டிற்கும் பொதுவான களம் ஒன்றை விரிக்கிறார் என்பது தான் கதை!
இந்த வெவ்வேறு தளங்களைத் தொட்டுத் தனியாகவும், இணைத்துப் பொதுவாகவும் சொல்லும்போது ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மறந்து, ஒரு பேருண்மையை உணருகிற அனுபவமாகவும் படித்துப் பார்த்துத் தான் புரிந்துகொள்ள முடியும்!
எம்டன் கப்பல் பயணிப்பது, அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களை விவரிக்கும்போது சாண்டில்யனின் கடல்புறா ஆசிரியர் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தெரிகிறது. கதாபாத்திரங்கள் உரையாடிக் கொள்ளும் பகுதிகளில், இரண்டு வரிகள் இலக்கணத்தமிழிலும், அடுத்த ஒன்றிரண்டு வரிகள் வழக்குத் தமிழுமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அத்தியாயங்களை இன்னும் கொஞ்சம் விவரங்களோடு எழுதியிருக்க முடியும் என்றாலும் கதையை ரொம்பவுமே நீட்டிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, சுருக்கமாக முடித்திருக்கிறார். ஆகம விஷயங்கள், வாசிப்பவர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவை என்பதை மனதில் வைத்துக் கொண்டாவது, கொஞ்சம் விவரித்துச் சொல்லியிருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கும்போது, ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை! முதலில், இப்படி வேறுபட்ட காலங்களைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சமீப நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் பொருத்தி, ஒரு புதினத்தைப் படைப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்திருக்கும் என்பது ஒன்று! அத்தனை விஷயங்களையும் அப்படியே கொட்டி விடவும் முடியாது. ஒரு மையமான சம்பவத்தை மட்டும் வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், சம்பவங்கள்,அதற்கும் மேலாக ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இருந்து கதையைப் பின்னுவது!
கதை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்! ஒரு மையக் கருத்து! அதைச் சொல்வதற்காகத் தான், காரணத்தைச் சொல்வதற்காகத் தான் காரியங்கள்! நூலாசிரியர் அந்த வகையில், ஒரு நல்ல முயற்சியைப் படைத்திருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார்!
எம்டனுக்கு நிகர் எம்டன் தான்! SMS எம்டன் தனிக்காட்டு ராஜாவாக, இந்தியப் பெருங்கடலில் அதை நிரூபித்தது!
இந்தப் புதினத்தை எழுதியதில், சைவ ஆகமங்களைப் பற்றி, சித்தர் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஒரு சின்ன வெளிச்சக் கீறலை, திரு திவாகர் படைத்திருக்கிறார்! படிப்பவர்கள் பகிர்ந்துகொள்ளத் தந்திருக்கிறார்!
இந்தப் புதினத்தை எழுதியதில், சைவ ஆகமங்களைப் பற்றி, சித்தர் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஒரு சின்ன வெளிச்சக் கீறலை, திரு திவாகர் படைத்திருக்கிறார்! படிப்பவர்கள் பகிர்ந்துகொள்ளத் தந்திருக்கிறார்!
திரு திவாகர் எழுதிய இதர சரித்திரப் புதினங்கள்