மேற்கு வங்காளத்தில் இன்னமும் கணிசமான செல்வாக்குடன் இருக்கும் இடதுசாரிகள் காங்கிரஸுடன் இணைய ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், காங்கிரஸ் இறங்கி வரவில்லை. ‘பி.ஜே.பி இங்கு மம்தாவுடன் ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டிருக்கிறது. நாமும் பிரிந்து நின்று நான்குமுனைப் போட்டியை உருவாக்க வேண்டாம். குறைந்தபட்சப் புரிந்துணர்வையாவது செய்துகொள்வோம். இப்போது காங்கிரஸ் வசமுள்ள மற்றும் செல்வாக்குள்ள தொகுதிகளில் நாங்கள் வேட்பாளரை நிறுத்த மாட்டோம். கம்யூனிஸ்ட்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நீங்கள் வேட்பாளரை நிறுத்தாதீர்கள்’ என்று கம்யூனிஸ்ட்கள் கேட்கிறார்கள்.
ஆனால், மேற்கு வங்காளத்தில் ராகுலுக்கு நல்ல கூட்டம் கூடுவதால், அதீத நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ், இதற்குக்கூட இறங்கி வரவில்லை என்று காங்கிரஸ் வலிய வந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக விகடன் தளம் குறைப்பட்டுக்கொள்கிறது இந்தச் செய்தியைக் கொஞ்சம் படித்துப் பார்க்க முடியுமானால் காங்கிரஸ் தலைமை ஒருவிதமான கற்பனா உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!
இங்கே தமிழக அரசியல் களேபரங்களைக் கண்டுகொள்ளாமல் போய் விடலாம் என்று நினைத்தால் கூட விடமாட்டேனென்று சுற்றிச் சுற்றி ரெண்டுமுருகன் IT ரெய்டு விவகாரம் வந்துகொண்டே இருக்கிறது, ஆ. விகடன் காசுக்கு கூவுகிற ஊடகம் என்று 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாட்களிலேயே தெரிந்தாலுமே கூட முழுக்கத் தவிர்க்க முடியாதபடி, இது மாதிரி இரண்டுபக்கமும் ஆடுகிற ஆட்டங்கள் இருக்கின்றன.
IT ரெய்டு பற்றிப்புலம்புகிற திமுக தன்னளவில் எவ்வளவு யோக்கியமாக இருக்கிறது? பொய்யான செய்திகளைப் பரப்புவதில் முன்னோடிகளை அவ்வளவு எளிதில் நம்பி விட முடியுமா? இங்கே ஜெயக்குமார் சொன்னார் என்பதற்காகவே இல்லை, எவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை எவ்வளவாக இருக்கும் என்பதை மதிப்பிடப் பழக வேண்டாமா?
ஆனால், மேற்கு வங்காளத்தில் ராகுலுக்கு நல்ல கூட்டம் கூடுவதால், அதீத நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ், இதற்குக்கூட இறங்கி வரவில்லை என்று காங்கிரஸ் வலிய வந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக விகடன் தளம் குறைப்பட்டுக்கொள்கிறது இந்தச் செய்தியைக் கொஞ்சம் படித்துப் பார்க்க முடியுமானால் காங்கிரஸ் தலைமை ஒருவிதமான கற்பனா உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்!
IT ரெய்டு பற்றிப்புலம்புகிற திமுக தன்னளவில் எவ்வளவு யோக்கியமாக இருக்கிறது? பொய்யான செய்திகளைப் பரப்புவதில் முன்னோடிகளை அவ்வளவு எளிதில் நம்பி விட முடியுமா? இங்கே ஜெயக்குமார் சொன்னார் என்பதற்காகவே இல்லை, எவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மை எவ்வளவாக இருக்கும் என்பதை மதிப்பிடப் பழக வேண்டாமா?
That தமிழ் தேசியமே காறித்துப்புன மொமன்ட் இது!
பாவம்....பப்பு!
ஒரு கோவிலில் அபிஷேகத்துக்கான பாலுக்கு ஒரு பெரிய குடம் வைத்திருந்தார்கள். கிராமத்துமக்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு கிண்ணம் பால் விடவேண்டுமென்பது விதி. எல்லாரும் விட்டார்கள். மாலையில் பூசாரி பார்த்தபோது, குடம் நிறைய தண்ணீர் இருந்தது. மற்றவர்கள் எல்லாம் பால் விடும்போது தான் மட்டும் ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டால் தெரியவா போகிறதென்று எல்லோரும் நினைத்ததன் விளைவு!
அமேத்தி மக்கள் ஜெயிக்கவைப்பார்களென்று வயநாடு ஓட்டர்களும், 'நம்ம மேலே நம்பிக்கையில்லாமெத்தானே திடீரென்று கேரளாவுக்கு ஓடினார்...அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று அமேத்தி மக்களும் நினைத்துவிட்டால்?........பாவம் பப்பு!
அதானே!
கண்ணடித்த ப்ரியா வாரியர் படம் ஓடவில்லை!
காப்பியடிக்கும் ராகுல் காண்டி கதை மட்டும் ஓடணுமா?