ஒரு காலத்தில் உ.பி.யின் முக்கியக் கட்சிகளின் கூட்டணிகளில் தவறாமல் இடம்பெற்றவர்கள் இடதுசாரிகள். இவர்களில், அதிக செல்வாக்கு பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) அதிகபட்சமாக 1967-ல் ஆறு தொகுதி கிடைத்திருந்தது. அதே 6 தொகுதிகள் மீண்டும் 1984-ல் சிபிஐக்கு உ.பி.யில் கிடைத்தது. இதில் கான்பூர் தொகுதியில் சுபாஷினி அலியும் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அக்கட்சிக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் 1991 தேர்தலில் கடைசி வெற்றி கிடைத்தது. இதுவும் தற்போது சரிந்து சிபிஐக்கு 0.1 சதவிகித வாக்குகள் மட்டுமே உ.பி.யில் மீதம் உள்ளன.
The Indian Left, according to its critics, has never been right. When it was time to join the national movement in 1942 it called for support to the "peoples' second world war". Amid the euphoria of freedom, it called for an armed revolution in Telengana during 1948. In the era of crisis during the late '50s and '60s, it went for compromise. Chand Joshi analyses the dilemma of the Left in India in the context of this most momentous year in Indian politics சந்த் ஜோஷி இப்படி அலசிக் காயப்போட்டது அக்டோபர் 2014 இந்தியா டுடே
இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட சிபிஐயின் உ.பி. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது, காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன், பத்து நாட்களுக்கு முன்பாகவே முறிந்தது.
அதேசமயம், மற்றொரு பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வதேரா, உ.பி.யில் செல்வாக்கு இல்லாத கட்சிகளான மஹான் தளம், ஜன் அதிகார், அப்னா தளத்தின் கிருஷ்ணா பட்டேல் பிரிவு ஆகியவற்றுடன் பேசி கூட்டணி அமைத்துள்ளார். இதற்கு பாஜகவை போல் காங்கிரஸும் உபியில் இடதுசாரி கட்சிகளை வளர்க்க விரும்பவில்லை என்பது காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி பேப்பரில் The Necessary Alternative என்றால் போதுமா? இடதுசாரிகளை ஆதரித்துக் கட்டுரை எழுதினால் மட்டும் சரியான மாற்று என்றாகிவிடுமா?
இப்படி ஒரு பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு வேறு எவரையும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் தவறான அரசியல் நிலைகளே முழுக்காரணமாக இருக்கின்றன. தேர்தல் அரசியலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதில் இங்கே இடதுசாரிகள் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒன்று தேர்தல் அரசியலில் முழுக்க நனைவது அல்லது குறுங்குழுக்களாக உடைந்து சிதறிப்போன நக்சல்கள் மாதிரி தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று ஒதுங்கிப் போவது என்ற மாதிரித்தானா?
தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு சரியான பாதைக்குத் திரும்பவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய இடதுசாரிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அவசர அவசியமாக ஆகியிருக்கிறது. இந்திய சூழலுக்கேற்ற இயக்கமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! தவற விட்டால் இடதுசாரிகளை இனிமேல் திருமாவளவன், திராவிடர் கழகம் போன்ற திருகல் வேலை ஆசாமிகளிடமிருந்து மட்டுமே போகிறபோக்கில் பேசக் கேள்விப்படுகிற மாதிரி மட்டுமே ஆகிவிடும்!
தேர்தல் புறக்கணிப்பு செய்பவர்கள் சரியாக இருக்கிறார்கள்.இந்த பாராளுமன்ற வாதிகள் ஒழுங்காக இல்லை.மக்கள்நலக்கூட்டணி தொடர்ந்து (விஜயகாந்த் போனபிறகு) இயங்கி இருந்தால் கண்டிப்பாக ஏதாவது சில தொகுதிகளை வென்று இருக்கலாம்.
ReplyDeleteபழனிச்சாமி! உங்களுடைய முதல் வரிக்குப் பதில், லெனினுடைய வார்த்தைகளிலேயே தேர்தல் பாதை பழைய சரித்திரம் என்பது பிரச்சார ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம் நடைமுறையில் சரிவராது என்று சொன்னதை இடதுதீவீரவாதம் ஒரு இளம்பருவக் கோளாறு என்ற தலைப்பில் தேடிப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் உடனடி reference இங்கே https://www.marxists.org/archive/lenin/works/1920/lwc/ch07.htm
Deleteமார்க்சிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இங்கே தேர்தல் சந்தையில் தொலைந்தும் போனார்கள் என்பதால் .நக்சல் குறுங்குழுக்கள் தேர்தல்பாதை திருடர் பாதை என்று சொல்வது நியாயமாகிவிடாது. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பாருங்களேன்.