திமுக ஆட்சியின் 30 நாள் சாதனை என்ன? நிதி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சர்ச்சைக்குரியவர்கள் திமுகவினை தெருவில் இழுத்து விடுவார்கள் என்பது 30 நாளிலே தெரிகின்றது. திமுக ஆட்சியின் உச்சபட்ச சாதனை என்னவென்றால் யூடியூபில் பேசிகொண்டிருப்பவனெல்லாம் அரசு பணிக்கு வரமுடியும் எனும் அதிசயத்தை செய்தது. மற்றபடி நீட் ரத்து, நகைகடன் ரத்து, குடியுரிமை ரத்து, காஷ்மீர் சட்ட ரத்து,மதுகடை ரத்து இன்னும் எதை எல்லாம் ரத்து செய்வோம் என சொன்னார்களோ அந்த கோரிக்கை எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டார்கள், அதுதான் ஆகசிறந்த சாதனை
மணல் குவாரி தொடங்கி +2 தேர்வே இல்லா கல்லூரி அனுமதிவரை அனுமதிக்கப் படுகிறது, இது மிகபெரிய சுரண்டலை, வசூலை அவர்களுக்கு கொடுக்கும். இன்னும் என்னென்ன வகையில் அள்ள முடியுமோ அவ்வளவு வகையிலும் வாரி சுருட்டுவார்கள் இனி 5 வருடம் இதுதான் நடக்கும். ஆடாத ஆட்டம் ஆடி அடங்கிய சசிகலா கும்பல் போல் இனி இன்னொரு கும்பல் ஆட ஆரம்பிக்கும். ஆடட்டும், அவர்களுக்கு குறித்த காலம் முடியும் வரை ஆடட்டும். அதுவரை இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர யார் என்ன செய்துவிட முடியும்? ஆனால் காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருகிறது, அந்த கணக்கு நிறைவேறும் பொழுது எல்லாம் மாறும், நிச்சயம் மாறும் என்று முகநூலில் தமிழகத்தில் ஆட்சி மாறிய 30 நாள் சாதனையை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஸ்டேன்லி ராஜன்.
காவல்துறையினரை பெண் வழக்கறிஞர் மிரட்டுகிறார். ஆட்டோ டிரைவர் மிரட்டுகிறார். இன்னும் யார் யார் மிரட்டுகிறார்கள் என்று பார்த்தால் வீடியோ லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதையும் சாதனை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா?
சொல்லாமல் செய்து கொண்டிருக்கும் சாதனைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?
திமுக தன் சொந்தக்காசில் பிரியாணி போடவில்லை. ஹிந்துக்கோவில் சொத்திலிருந்துதான் என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
யாருமே வாங்கிப்படிக்காத முரசொலிக்கு ஆண்டு சந்தா கட்ட 12524 ஊராட்சிகளுக்கும் உத்தரவு. வருட சந்தா ரூ.1800 தான் என்றால் அவ்வளவாகப் புரியாதுதான்!
1800X 12524X 5 ஆண்டுகள் = ரூ. 11.27,16000 பதினோரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினாராயிரம் ரூபாய் முரசொலிக்கு அரசிடமிருந்து அனாமத்து வருமானம். இன்னும் நூலகங்கள், அதுஇது என்று மேல்வரும்படிக்கு வழி செய்துவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் சாதனை லிஸ்டில் அவர்களே சேர்க்கமாட்டார்கள்!
இதெல்லாம் சாதனை லிஸ்டில் சொல்லாமல் விடுபட்ட சில துளிகள் தான்! இன்னும் அவர்கள் சொல்லிச் செய்தது, சொல்லாமல் செய்தது என்று நிறைய இருக்கிறது. கொஞ்சம்கொஞ்சமாக வரும்.
கருத்துசுதந்திரம் பற்றி வாய்கிழியப்பேசும் தமிழகப் பிரபலங்கள் பலருடைய முகமூடியை ஒரு வெப் சீரீஸ் கிழித்தெறிந்திருக்கிறது. அமேசான் பிரைமில் நேற்று முன்தினம் வெளியான The Family Man 2 சீரீசைத் தடை செய்யவேண்டும் என்ற கூக்குரல் முதலில் நாம் தமிழர் கட்சி சீமானிடமிருந்து, அடுத்து வேலைவெட்டி இல்லாமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் வைகோ இவர்களிடமிருந்து ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தக் கூக்குரல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிரபலங்கள் மற்றும் அனாமதேயங்களிடமிருந்து கிளம்பின. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் சீரீசின் ட்ரெயிலரை மட்டுமே பார்த்துவிட்டு இந்த அறிவுக்கொழுந்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.
ஒன்பது பகுதிகளாக ஸ்ட்ரீமிங் வீடியோவாக OTT தளத்தில் அறிவிக்கப்பட்டபடியே ஜூன் 4 அன்று The Family Man 2 வெளியாகிவிட்டது. வெள்ளிக்கிழமை முதல் 4 பகுதிகளையும் நேற்றைக்கு மிச்சம் 5 பகுதிகளையும் பார்த்து முடித்ததில் ஈழத்தமிழரை இழிவுபடுத்தும் இந்த சீரீசை அனுமதிக்கமாட்டோம், மத்திய அரசே உடனே தடை செய் என்றெல்லாம் இங்கே உள்ள கோமாளிகள் சிலர் எதற்காகக் கூவினார்கள் என எனக்கு மட்டுமல்ல எவருக்குமே சுத்தமாகப் புரியவில்லை! இந்த லட்சணத்தில் தமிழ்நாடே The Family Man 2 வை எதிர்த்துக் கொந்தளித்ததாகவும், மத்திய அரசுக்கு வைகோ உள்ளிட்ட சிலர் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் செய்திகள்! செய்திகள் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உங்கள்பக்கத்தில் உணர்ந்தீர்களா என்ன!!
சைமனும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் இன்னும் சிலரும் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியஸ் விடுதலை புலிகளை கொச்சைபடுத்துவதாக கிளம்பிவிட்டனர். புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா ஏன் ஐரொப்பிய யூனியனில் கூட தடைசெய்யபட்ட இயக்கம் என்பது உண்மை
என்ன சொல்லி தடை செய்தார்கள்?
மிக மோசமான தற்கொலை போராளிகள் என்பது முதல் சொந்த இனமான லட்சுமண் கதிர்காமர் எனும் தமிழரை கொன்ற இயக்கம் என ஏகபட்ட குற்றசாட்டுகள். அதுவும் 2005ல் நார்வே தூதுகுழு புலிகளை சாடிவிட்டு வெளியேறியதும், ஆனானபட்ட அமெரிக்க தூதர் "புலிகள் மோசமான தோல்வி நோக்கி நகர்கின்றார்கள்" என்பதும் பெரும் குற்றசாட்டு.
பிரபாகரன் தனக்கு தானே வைத்து கொண்ட சூனியம் 2002 கிளிநொச்சி மாநாடு, அதில் உலகம் ஒப்புகொண்ட விஷயம் இந்த கோஷ்டி மொத்தமாக ஒழிக்கபட வேண்டியது மற்றபடி ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள் என்பதே! புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிக்கும் தொடர்பு உண்டா என்றால் நிச்சயம் உண்டு என்பதற்கு ஆதாரம் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மேலான துப்பாக்கி சூடு
அப்பொழுது இலங்கை அரசு புலிகள் மேல் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது, அப்பொழுது பாகிஸ்தானிலில் இலங்கை வீரர்களின் பேருந்து தாக்கபட்டபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு உலகுக்கே தெரிந்தது.
இது ஆச்சரியமல்ல, ஒரு தீவிரவாத இயக்கம் இன்னொரு இயக்கமில்லாமல் வளரமுடியாது இயங்க முடியாது
அவ்வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு அல்ல, பின்லேடனின் சில தீவிரவாதிகள் உலகமெல்லாம் சுற்ற புலிகள் உதவினர் எனும் வகையில்தான் அமெரிக்கா அவர்களை கட்டம் கட்டியது. சக போராளி குழுக்களை கொன்றது, ராஜிவ் பிரேமதாசாவினை கொன்றது கடைசியிலும் திருந்தாமல் லட்சுமண் கதிர்காமரை கொன்றது உலகெல்லாம் தீவிரவாதிகளுடன் வலம் வந்தது என புலிகள் செய்த அட்டகாசம் ஏராளம்.
அதைத்தான் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியல் சொல்கின்றது, அதில் உண்மையினை தவிர ஏதுமில்லை
இதனால் தமிழருக்கு அவமானம் என கிளம்ப அவசியமில்லை அது முட்டாள்தனம். ஈழதமிழருக்கு கிளம்பிய போராட்ட குழுக்கள் சுமார் 40, அதில் 4 கடைசியாக தேறியது அதில் 3ஐ ஒழித்து ஒரே பிரதிநிதி என தன்னை சொல்லிகொண்டனர் புலிகள். ஆனால் உலகம் அதை ஏற்கவில்லை, எனினும் பேசிபார்க்கலாம் என வந்த மேல்நாட்டு குழுவும் இது திருந்தாத கட்ட பஞ்சாயத்து கோஷ்டி என ஓடிவிட்டது.
ஆக இது இந்திய தமிழருக்கான அவமானம் அல்ல, இந்திய தமிழரின் ஒரே அவமானம் திமுக அதை தவிர ஏதுமில்லை. மாறாக இந்த சீரியல் வந்தால் இலங்கையில் இப்படி ஒரு அடாவடி இருந்தது எனும் உண்மையில் ஒவ்வொரு ஈழ தமிழனும் தலைகுனிய வேண்டும்.ஈழதமிழனின் மானம் காற்றில் பறக்க கூடாது என அங்கிள் சைமன் குதிக்கின்றார், ஆனால் அது என்றோ கிழிந்து உலகம் எல்லாவற்றையும் கண்டு விட்டது என்பது அங்கிளுக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் புரியவில்லை, பரிதாபம்! இப்படி முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சுருக்கமாகச் சொல்லி பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டாரே! அதுவும் 15 நாட்களுக்கு முன்பே!
ராஜீவ் காண்டியைக் கொலைசெய்ததில் விடுதலைப் புலிகள் மீது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மீதுமே இருந்த ஆதரவு, அனுதாபத்தைப் பெரும்பாலான தமிழக மக்கள் துடைத்தெறிந்து விட்டார்கள். வெறுமனே கூவிக்கொண்டு இருப்பவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரம் செய்கிற ஆசாமிகள் மட்டும்தான் என்பதையும் தமிழக மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
அது போகட்டும்! The Family Man 2 எப்படியிருக்கிறது?
ஒரு உளவாளியின் கதை என்பதில் குடும்பம் கொஞ்சம், தொழில் ரீதியாக எதிரிகள் கொஞ்சம் என இரண்டையும் கதாநாயகன் எப்படி சமாளிக்கிறார்? இதுதான் கதை முடிச்சு! முதல் சீசனும் சரி, இரண்டாவது சீசனும் சரி கதாநாயகன் ஸ்ரீகாந்த் திவாரி என்கிற NIA வின் ரகசியக் குழு உளவாளி எப்படி தன்னுடைய குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுடன், தொழில்ரீதியாக தேசத்துக்கு ஏற்படும் தீவிரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்கிறார் என்பது மட்டும் தான் மெயின். முதல் சீசனில் வில்லன் ரசாயன ஆலையில் விஷவாயுவைக் கசிய விட முயல்வதைத் தடுப்பது, இரண்டாவது சீசனில் இந்திய இலங்கை பிரதமர்கள் செய்துகொள்ள இருக்கிற ஒப்பந்தத்தைத் தடுக்க முயற்சிக்கும் தற்கொலைப் போராளி ஒருத்தியை, கதாநாயகன் எப்படி முறியடித்து தேசத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சீரீஸ் விறுவிறுப்பாக நகர்வதில் அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை.
6/10
இந்திய இலங்கைப் பிரச்சினை என்றால் ஈழப் போராளி இல்லாமலா? ஈழப்போராளியாக சமந்தா நடித்ததில் அவரையும் தமிழின விரோதியாகச் சித்தரித்து, நம்மூர் கோமாளிகள் காமெடி செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்றாலே கோமாளிகள் அரசியல் முதல் எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்புகிற பிரதேசம் என்றாக்கிவிட்டார்கள். இந்த வெப் சீரீசை மட்டும் விட்டுவைப்பார்களா?