அது ஒரு செவ்வாய்க் கிழமை. ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் தலைமை நிர்வாகியும், நிறுவனரின் பேரனுமான பென் ரோசெலி, ஒரு அறிவிப்பை வெளியிட்டது அன்று தான். தூக்கிவாரிப் போடும்படி இருந்த அந்த அறிவிப்பு, சோர்வளிப்பதாகவும் வங்கியின் எல்லாப் பகுதிகளிலும், தாண்டியும் கூடத் திரும்பத் திரும்ப எதிரொலித்தது.
அதற்கு மறுநாள் புதன்கிழமை, ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் கொடிமரம் போல இருந்த நகரக் கிளையில் ஒரு திருட்டு நபர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாது -மூழ்கிப்போகிற அளவுக்கு நிதி நிலைமை, தனி மனிதத் துயரங்கள், மரணம் என்று வரிசையாக.
வங்கித்தலைவரின் அறிவிப்பு எந்த முன்தகவலுடனும் வரவில்லை. முன்கூட்டியே எந்தத் தகவலும் கசியவில்லை. பென் ரோசெலி தன்னுடைய முக்கியமான அதிகாரிகளைக் காலை வேளையிலேயே, சிலரை வீட்டில் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த நேரத்தில், இன்னும் சிலரை வேலைக்கு வந்த பின்னால், அதுதவிர நீண்ட நாட்களாக வேலை செய்து வந்த சிலரை, அவர்கள் அதிகாரிகள் இல்லையென்றாலும் கூட, பென் அவர்களைத் தன நண்பர்களாகக் கருதியது தான், எல்லோருக்கும் ஒரே மாதிரியான செய்தி.
"தயவு செய்து தலைமையகத்தின் போர்ட் ரூமில் காலை பதினோரு மணிக்கு இருக்கவும்."
ஆர்தர் ஹெய்லியின் The Moneychangers கதை இப்படி ஆரம்பிக்கிறது!
ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை! அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத் தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.
ரோஸ்கோவுக்கு, எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்! உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
ஆர்தர் ஹெய்லியின் The Moneychangers கதை இப்படி ஆரம்பிக்கிறது!
ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன்!
ஒரு நடுத்தரமான வங்கி! அதன் தலைமை நிர்வாகி, தன்னுடைய உடல்நலம் நலிந்துகொண்டே இருப்பதை, பொறுப்பை வேறொருவர் விரைவில் ஏற்க வேண்டிவரும் என்று அறிவிக்கிற தருணத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அடுத்து, அந்தப் பொறுப்புக்குத் தகுதியான இரண்டுபேர்கள் இருக்கிறார்கள். வங்கித் தொழிலில் காண முடிகிற நேரெதிரான குணாதிசயம், இந்த இரண்டு பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. அலெக்ஸ் வண்டர்வூர்ட்,ரோஸ்கோ ஹேவர்ட்! இந்த இருவரில் ஒருவர் தான், அடுத்துத் தலைமைப் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலையில், பதவியைப் பிடிப்பதற்கான ஆட்டமாகக் கதை விரிகிறது.
அலெக்ஸ், வங்கித் தொழிலுக்குண்டான மரபுகளை மீறாத, செல்வாக்கைத் தேடுவது எப்படி, எதைக் கொடுத்து எதைப் பெறுவது என்ற நுணுக்கமான ஆதரவு திரட்டும் கலை அறியாதவராக! வங்கித் தொழிலை எப்படிக் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்துவது என்பதை அறிந்தவராக, ஒரு நல்ல வங்கியாளராக ஒவ்வொரு கட்டத்திலும் கதை முழுவதும் அறிமுகமாகிறார்.
ரோஸ்கோ, வங்கியின் இயக்குநர்களுடைய ஆதரவைத் திரட்டுவது எப்படி என்ற கலையை அறிந்தவராக, உச்சிக்குப் போகவேண்டும் என்ற நிறைய ஆசை! அதற்காக சமரசங்கள் செய்துகொள்ளத் தயாராக இருப்பவராக, என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கத் தயாராக இருப்பவராக கதை விரிகிறது. வங்கியின் ஆதாயத்தைக் குறுகியகாலத்திலேயே பெருக்கிக் காட்டுவது, இயக்குநர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, பெரிய கார்பரேட்களின் கணக்கை கொண்டு வருவது, தானும் பெரிய ஆளாவது என்று ரோஸ்கோவுடைய கனவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.
ஒரு பக்கம்,நாணயமான, நிதானமான வங்கியாளர்! இன்னொரு பக்கம் பேராசை பிடித்த வங்கியாளர்!
இரண்டு விதமான போக்குகளைத் தெரிவு செய்தாயிற்று! போட்டி என்று வரும்போது, இந்த இரண்டு நேரெதிரான தன்மைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ சம்பவங்கள் நிகழவேண்டுமே! வரிசையாக ஆரம்பிக்கின்றன!
இங்கே நம்மூர் வங்கிகளில் பார்ப்பது போல 'வாங்க வேண்டுமானால்' பத்துப் பெர்சென்ட் 'கொடுக்கவேண்டும்' என்ற மாதிரி வெகு சீப்பான கற்பனைக்கெல்லாம் போய்விடாதீர்கள்! அமெரிக்க வங்கிகள் இயங்கும் விதமே வேறு! அங்கே பேராசை, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தேடித் தருவது என்ற போர்வையில் ஆரம்பிக்கிறது. ஆதாயம் தேடித் தருகிறேன் என்ற சாக்கில் தங்களும் ஆதாயம் அடைந்துகொள்ளும் நபர்களால், ஏற்பட்ட சரிவை, முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதினது தான், ஆனால், இன்றைக்கும் பொருந்தி வருகிற உண்மைகளாக ஆர்தர் ஹைலி கதையை முன்னெடுத்துச் செல்கிறார்.
ராஜா ராணி கதையாக இருந்தால், கத்திச் சண்டை போட நம்பியார், வீரப்பா மாதிரி வில்லன்களை எதிர்பார்க்கலாம். இதுவோ வங்கித்துறையைப் பற்றியதாயிற்றே! வில்லன் எப்படி இருப்பான்?
கார்பரேட், மெகா கார்பரேட் வடிவத்தைத் தவிர வேறு பொருத்தமான வில்லன் எது? சுனாட்கோ என்ற வடிவத்தில் ஒரு கார்பரேட் வில்லன் கதையில் நுழைகிறது! ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அறிமுகம் செய்து வைக்கிறேன், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று ரோஸ்கோவுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதோடு, சேர்த்துச் சொல்கிறார்.
சொன்னபடியே அந்த இயக்குனரும், ரோஸ்கோவும், சுனாட்கோ நிறுவனத் தலைவரை அவரது சொகுசு விமானத்தில் சந்திக்கிறார்கள். பலமான உபசாரம் நடக்கிறது. அமெரிக்க செனேட்டர் ஒருவரும் (நம்மூர் எம் பி மாதிரி) விமானத்தில் இருக்கிறார். ரோஸ்கோ பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்னரே, ஐந்து கோடி டாலர் கடன் வசதி செய்ய ஏற்பாடு செய்ய ரோஸ்கோவுக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் கூட பரவாயில்லை என்ற கொக்கி விழுகிறது.
சுனாட்கோ நாடறிந்த மிகப் பெரிய நிறுவனம்! அதனுடன் வியாபாரத் தொடர்பு என்பது, லோகல் வங்கியாக மட்டுமே அறியப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி, நாடறிந்த வங்கிகள் வரிசைக்கு வந்து விடும்! கடன் மீது பெறும் வட்டி, வங்கிக்குப் பேராதாயமாக இருக்கும் என்ற கணக்குகளை ரோஸ்கோ மனதிலேயே போட்டுப் பார்த்துவிட்டு, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது தான் என்று முடிவு செய்கிறார். இயக்குனர் குழுவில், பேசிவிட்டு, முடிவைச் சொல்வதாக அந்த உல்லாசப் பயணம் அடுத்த திருப்பத்திற்குத் தயாராகிறது!.

உல்லாசப் பயணத்திற்கு நினைவுப் பரிசாக, அழகான பெண்களும், சுனாட்கோ நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களும் ரோஸ்கோவுக்கு அளிக்கப் படுகின்றன. ரோஸ்கோவுக்கு, கொஞ்சம் குற்ற உணர்வு தலைதூக்கினாலும், மிக அருமையான வாய்ப்பைத் தனது வங்கிக்காக சாதித்திருப்பதாகப் பெருமிதமும், தலைமைப் பொறுப்புக்குத் தன்னைத் தவிர வேறு போட்டியே இல்லாத உச்சத்திற்கு, இந்த டீலிங் கொண்டுபோய்விடும் என்ற சந்தோஷமும் மறைத்து விடுகின்றன.
இயக்குனர் குழுவின் முன் இந்தக் கடன் விண்ணப்பத்தை ரோஸ்கோ எடுத்து வைத்து, அது வரை சிறிய அளவில் மட்டுமே அறியப் பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் மெர்கண்டைல் அமெரிக்கன் வங்கி எப்படி பெரிய வங்கிகளுக்குச்சமமாக வந்துவிடும், எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லும் போது, அலெக்ஸ் ஒருவர் மட்டுமே, அதை எதிர்த்துக் கருத்துச் சொல்லுகிறார்.
இந்த இடத்தில், ஒரு நேர்மையான, திறமையான வங்கியாளன் எப்படியிருக்கவேண்டும் என்பதை அலெக்ஸ் பாத்திரத்தின் வழியாகக் கதாசிரியர் சொல்கிறார். அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து விடாமல், போதுமான எச்சரிக்கையோடு, மரபுவழியிலான வங்கித் தொழிலைச் செய்து வந்தாலே ஆதாயம் தானே வரும், கொஞ்சம் காத்திருக்கவும் தெரிய வேண்டும் என்ற ethical banker வெளிப்படும் தருணம் இது. ரோஸ்கோவுக்கு, எல்லாமே இன்ஸ்டன்ட்- இப்போதே தான்! வங்கித் தொழிலின் மரபுகள், அனுபவப் பாடங்கள் எல்லாவற்றையும் தூரத் தள்ளி வைத்து விட்டு, கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக ஆதாயத்தைப் பெற முடியும்! உச்சிக்கு வரத் துடிக்கும் ஒருவன், அதற்காக, எல்லாக் கோட்பாடுகளையும் இழந்துவிடத் தயாராக இருக்கும் நிலை மிக நுணுக்கமாக வெளிப்படும் தருணமாகவும் இருக்கிறது. இயக்குனர் குழு, இருவருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டு, பேராசையால் உந்தப் படும் ஒரு கூட்டம் எப்படி முடிவு செய்யும் என்பதும் அங்கேயே தீர்மானிக்கப் பட்டும் விடுகிறது.
கார்பரேட் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதென்று முடிவாகி விட்டது, சரி! எங்கே இருந்து? அங்கே தான் கதையின், இன்னொரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது. ஏற்கெனெவே, சிறிய நடுத்தர வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்ட தொகையில் கை வைப்பதில் இருந்து தானே ஆரம்பிக்கும்!?
அந்த சிறிய நகரத்தின் ஜனங்களுக்குத் துணையாக இருந்த வங்கி, திடீரென்று, அவர்களைக் கைகழுவி விடுகிறது. அந்த மக்கள், வங்கி நிர்வாகத்திற்குத் தங்களது எதிர்ப்பை, மிக அமைதியாகத் தெரிவிக்கிறார்கள்.
வங்கிகளோடு வரவு செலவு வைத்துக் கொள்வதைக் கூட நல்லதென்றும், கெட்டதென்றும், பேரழிவுக்கு அச்சாரம் என்றும் மூன்று விதமாகச் சொல்லலாம்! அமெரிக்க நிதித் துறையில் சென்ற வருடம் ஏற்பட்ட சரிவு, பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான்! உடனடி லாபம் அதுவும் அதிகமாக என்ற வங்கி நிதித்துறை நிறுவனங்களின் பேராசையால் எழுந்தது!
The Money Changers!
ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!

அவசியம் படிக்கவேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் புதினம் இது. வெறும் கதை என்ற அளவோடு நின்று விடாமல், நிறைய வங்கித் துறை சார்ந்த தகவல்களை, கிரெடிட் கார்ட் உள்ளிட்டு, மேற்கத்திய வங்கிகள் இயங்கும் விதத்தை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். டாலர் முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகப் பாதுகாப்பானது என்பதை, கதையினூடே, மிகுந்த கவனத்துடன், ஆதாரங்களை வைத்துச் சொல்கிறார்.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த புத்தகம், என்றாலும், இன்றைக்கும் வங்கித் துறையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் புதினம். இங்கே புத்தகக் கடைகளில் 130 ரூபாய்க்குக்கிடைக்கிறது.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த புத்தகம், என்றாலும், இன்றைக்கும் வங்கித் துறையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் புதினம். இங்கே புத்தகக் கடைகளில் 130 ரூபாய்க்குக்கிடைக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு இதை படித்தேன். நாவல் கதை என்பதை விட மிக அருமையான தகவல் பெட்டகம் இந்நூல். மேலும் இறுதியில் வங்கி திவால் ஆகாமல் இருக்க ஹீரோ எடுக்கும் முயற்சிகள் விறுவிறுப்பு. அர்த்தூர் ஹெயில்லியின் நாவல்களில் துறை சார்ந்த பல அருமையான தகவல்கள் பெருகிக்கிடக்கும். அவரது ஏர்போர்ட் நாவல் என்னை இன்னும் அவர் பால் ஈர்த்தது.
ReplyDeleteஎந்த ஒரு கதையாக இருந்தாலும் அதன் பின்னணிக் களத்தைப் பற்றி நுணுக்கமான தகவல்களை, பொருத்தமான இடங்களில் கதையோடு சேர்த்துச் சொல்லும் திறம் ஆர்தர் ஹெய்லியின் தனி முத்திரை.
ReplyDeleteஇந்தக் கதையில், வங்கித்துறையின் பேராசை, அதன் மேற்கத்திய வடிவத்தில் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இங்கே இந்தியாவில் அதே துறை எப்படி பேராசைக்காரர்களால் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க முடிகிறதா?
முப்பது வருடங்களுக்கு முன்னால், இங்கே இந்தியாவில் ஒரு பொதுத்துறை வங்கி, ஒரு பூதத்தை வளர்த்து விட்டது. பூதத்தின் பசிக்கு அந்த ஒரு வங்கியின் நிதி ஆதாரங்கள் மட்டுமே போதவில்லை, இன்னும் ஏழெட்டு வங்கிகளும் சேர்ந்து கொண்டன. பூதம் கொழுத்து வளர்ந்தது, முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் என்று சொல்லிக் கொண்டே என்னென்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்ளவும், இந்தப் புதினம் மிக உதவியாக இருக்கும்..
வங்கி பற்றிய கதை என்பதாலேயே மிகவும் ஒன்றிப் படித்திருப்பீர்கள். இதுவரை படித்ததில்லை.
ReplyDeleteவிசா வின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் ஏர்போர்ட் கதையைத் தழுவி தமிழில் கதை வந்திருக்கிறதோ.. அதற்கு பதிலாக நீங்கள் சொல்லியிருக்கும் பூத விவகாரம் என்ன என்றும் புரியவில்லை!
வங்கிப் பின்னணியை வைத்து முற்றிலும் வேறுபட்ட வகையில் நீங்கள் ஏன் ஒரு புதினம் எழுதக் கூடாது?