டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது காலம் கடந்ததுதான்! ஆனாலும் அமெரிக்க அரசியலில் டொனால்ட் ட்ரம்ப்பின் தாக்கத்தை டெமாக்ரட்டுகளால் முழுக்க முழுக்கப் புறம் தள்ளிவிட்டுப் போய்விடமுடியாதபடி வளைகுடா நாடுகளில் ட்ரம்ப் சாதித்திருக்கிற பலவிஷயங்களில் கத்தார் மற்றும் இதர வளைகுடா நாடுகளுக்கிடையிலான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பது. வீடியோ இரண்டரை நிமிடம்.
இதிலென்ன பிரமாதம் என்கிறீர்களா? சவூதி உட்பட அரபுநாடுகள் பலவும் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டிருப்பது, அமெரிக்காவின் எதிர்காலக் கொள்கை எப்படியிருக்குமோ என்பதைப்பற்றிக் கவலைப் படாமல், ஈரானுக்கு எதிரான நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருப்பது முதலாவது! இஸ்ரேலுடன் உரசும் போக்கைக் கைவிட்டுவிட்டு, இணக்கமான உறவையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதுதான்! ஜோ பைடன், வரும் நாட்களில் ஈரானுடன் என்னமாதிரி முடிவெடுப்பார் என்ற கேள்விக்கு, பதிலை முந்திக்கொண்டு சொன்ன மாதிரி இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் இருந்த மாதிரி ஜோ பைடன் நிர்வாகம் இருக்காது என்பதால். இப்படி சவூதி அரேபியாவும் இதர அரபுநாடுகளும் முந்திக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிற விஷயம்!
சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் கத்தாருக்கும், இதர அரபு நாடுகளுக்கும் மூன்றரை வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உரசல் இப்பொது எப்படி சரிசெய்யப் பட்டிருக்கிறது என்பதை விளக்குகிறார்.
#அக்கம்பக்கம்என்னசேதி தளத்தில் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்திருந்த விஷயம் இங்கே சுருக்கமாக! இந்த ஜனவரி கடைசி வாரத்தில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யப்போகிற இந்த வலைப்பக்கங்களுக்கு இதுவரை 5100+ பார்வைகளே கிடைத்தன என்பது எழுதுகிறவனுக்கு மிகவும் அவமானகரமான விஷயம்.
மீண்டும் சந்திப்போம்.