Showing posts with label தெலங்கானா. Show all posts
Showing posts with label தெலங்கானா. Show all posts

Friday, December 4, 2020

அடுத்த வீடு! தெலங்கானா தேர்தல் களம்! GHMC தேர்தல் முடிவுகள்!

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் அதிகாரப் பூர்வமாக பிரிக்கப் படுவதற்கு (2014 ஜூன்) இரண்டு மாதங்களுக்கு முன்பே தெலங்கானாவின் 119 சட்டசபைத் தொகுதிகளுக்குத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அது வரை காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கே சந்திரசேகர ராவ், கடைசி நிமிடத்தில் காங்கிரஸைக் கைகழுவிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது மிகச் சமீபத்திய நிகழ்வுதான்! ஆனால் நேற்றைய நிகழ்வுகளையே மறந்து விடுகிற வியாதி திருவாளர் பொதுஜனத்துக்கு இருப்பதால் தான் நம்மூர் அரசியல்வாதிகள் #ஏய்ப்பதில்கலைஞன்  என்றாகி விடுகிறார்கள்! 

அடுத்த சட்டசபைத் தேர்தல் 2019 இல்தான் என்றாலும், சந்திரசேகர ராவ் ஓராண்டுக்கு முன்னாலேயே 2018 இல் சட்டசபை தேர்தல்களை நடத்தினார். கூடுதல் இடங்களுடன் மறுபடியும் வென்றார். ஆனால் அந்த வெற்றியை நீண்டநாட்கள்  தக்கவைத்துக் கொள்ள முடியாது, பிஜேபிக்கு ஆதரவான வாக்குவங்கி வளர்ந்து வருகிறது   என்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அடுத்து நடந்த சட்டசபை இடைத்தேர்தலிலும் KCR புரிந்து கொள்ள வேண்டி வந்தது. அதனால்  அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற வேண்டிய Greater Hyderabad Municipal Corporation  ஹைதராபாத் பெருநகர உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார். அரசியலே ஒரு சூதாட்டம் தான்! அதிலும் KCR ஒரு குள்ளநரித்தனமான சூதாடி! சூதாடிகளும் தோற்கிற தருணம் உண்டென்பதை GHMC தேர்தல்கள் நிரூபித்திருக்கிறது.

  

இந்தத் தேர்தல் முடிவுகள் 2023 இல் தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களுக்கான முன்னோட்டம் என்பதை, தேர்தல் பிரசாரத்துக்கு அமித் ஷா, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பிஜேபி பிரபலங்கள் முன்னிறுத்தப்பட்டதே தெளிவாக்கியிருக்கிறது.

அசாதுதீன் ஒவைசியின் AIMIM இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதால் 2016 தேர்தலில் பெற்ற இடங்களைவிட சற்றுக் குறைவாகவே பெற்றிருக்கிறது. ஒவைசியுடன் கடந்த ஜனவரியில் உறவை முறித்துக் கொண்ட சந்திரசேகர ராவ் கட்சி பலத்த அடி வாங்கியிருக்கிறது. தெலங்கானா ஆட்சியைப் பிடித்ததும் ஹைதராபாத் நிஜாம் போலவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற சந்திரசேகர ராவ் இனிமேல் தாக்குப்பிடிப்பது கடினம்தான்! 

தென்னிந்தியாவில் எங்குமே காலூன்ற முடியாத வடவர் கட்சி என்று கருதப்பட்ட பிஜேபி தெலுங்கானாவில் வலுவாகக் காலூன்றி இருக்கிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருந்தாலும், அது இன்னமும் பலவீனமானதாகத் தான் இருக்கிறது. 

பிஜேபியின் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தடுத்து மறுபடியும் 2021 இல் ஆட்சியைப் பிடிக்க மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி என்ன பாடுபடுகிறார், என்னென்ன ஏழைப்பங்காளர் வேஷம்  போடுகிறார் என்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

கே சந்திரசேகர ராவ் என்னென்ன குட்டிக்கரணங்கள் அடிக்கப்போகிறார் என்பதை அடுத்துவரும் காலத்தில் பார்க்கத்தானே போகிறோம்!

அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருவது எத்தனை சுவாரசியமானது!! மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)