Sunday, December 30, 2018

செய்திகள்! கொஞ்சம் வேடிக்கை! நிறைய சுவாரசியம்!

The Accidental Prime Minister என்று மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரூ எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா வருகிற ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாகிறது. காங்கிரஸ் கட்சி இப்போதே கதற ஆரம்பித்து விட்டது. ஏனென்று புரிந்துகொள்ள உதவியாக ஒரு வீடியோ பேட்டி!


சௌகார் ஜானகி பொதுவாக அரசியல்வாதிகளின் biopic எடுத்தால் என்னாகும் என்றுதான் சொல்கிறார். ஆனால் இருவர் படத்தை மணிரத்னம் எடுத்த சமயம் கருணாநிதி "ஏன்,அவரு அண்ணன் தம்பி (சொந்த) கதையவே படமா எடுத்திருக்கலாமே" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூட செய்திகள் வந்தன.  

அரசியல் என்றாலே வேடிக்கை, சுவாரசியம் எல்லாம் நிறைந்த காமெடிக்கொடுமை தானே!


நடிகையர் திலகம் சாவித்ரி biopic பற்றி நடிகர் ராஜேஷ் பேட்டி தற்செயலாகக் கண்ணில்பட்டது மேலே.  

*******
எலி கடிக்கும்! குடிக்குமா?  


உத்தரப்பிரதேசம், பரேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரம் லிட்டர் மதுவையும் எலி குடித்துவிட்டதாக போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன் பிஹார் மாநிலத்திலும் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர், கஞ்சாவை தின்றுவிட்டதாக ஜார்கண்ட் போலீஸாரும், ரூபாய் நோட்டுகளைச் சேதப்படுத்தியதாக அசாமிலும் எலி மீது பழிபோட்டு தப்பித்திருந்தது கவனிக்கத் தக்கது. முழுச்செய்தியும் இங்கே   

ஆங்கிலப் புதுவருட பிறப்பன்று சந்திப்போம்!

         

Friday, December 28, 2018

திரைப்படங்களில் வரலாறு! ஒரு பார்வை!

சில வரலாற்றுக்கதைகள் திரைப்படங்களாக வெளி வந்திருக்கின்றன என்பதனாலேயே நமக்கெல்லாம் வரலாற்றுப்பிரக்ஞை வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியுமோ? அல்லது அவைகளில் தான் நிஜ வரலாறு பிரதிபலிக்கப்பட்டதாகச் சொல்லிவிட முடியுமா? ஆனால்  காங்கிரஸ் கட்சிக்கு அதன் பழைய கதை வரலாறு என்று யாராவது சொல்ல வந்தாலேயே கிலி பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிடும்! 


இத்தனைக்கும் இதே தலைப்பில் சஞ்சய் பாரூ எழுதி புத்தகமாகவும் வந்ததுதான்! அப்போது கூட இத்தனை கூக்குரல்கள் எழுந்ததில்லை. ஆனால் ஜோவியர் மோரோ என்பவர் எழுதிய சிவப்புச் சேலை புத்தகம் இந்தியாவில் வெளியாகாதபடி முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் பார்த்துக் கொள்ளப் பட்டது. படிப்புவாசனை அற்ற இந்திரா மற்றும்  வாரிசுகளுக்கு அவர்களைப் பற்றி புத்தகங்கள் என்றால் அத்தனை அலர்ஜி, பயம்! 

Twitter Reacts to the Accidental Prime Minister Trailer: The Good, The Bad, The Funny என்று நக்கலாகச் சொல்கிறது இந்தச்செய்தி  

  

  
மன்மோகன்சிங் பழையபடி மௌனசிங்காக மாறி
விட்டார்.  படத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்ல மறுத்து வேகமாகச் செல்லும்  காட்சி ஊடக!ங்களில் தலைப்புச் செய்தியாக! 2019 ஜனவரி 11 இல் ரிலீசாம்! 

=====================

இந்திரா, மௌன சிங்குக்கு பால் தாக்கரே எந்த வகையில் குறைந்தவராம்? அவருடைய வாழ்க்கையும் திரைப்படமாக! 2019 ஜனவரி 23 இல் ரிலீசாம்!


The conveniently un-subtitled trailer of . So much hate sold with such romance and heroism (Music, tiger roars, applause, jingoism). No solidarity shown to millions of South Indians and immigrants who make great. ! என்று தன் வருத்தத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.

திரைப்படங்களில் நிஜ வரலாறு சொல்லப்படுகிறதோ இல்லையோ அரசியல் மட்டும் இருக்கிறது.


என்ன சொல்கிறீர்கள்?




Tuesday, December 25, 2018

தமிழில் வெப் சீரீஸ்! ஒரு வழியாக மெகா சீரியல்களில் இருந்து விடுதலை!

த்தனை நாட்களுக்குத்தான் நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றும் #ரட்சகர் களாக மார்வெல் கதா பாத்திரங்களையே நம்புவதென்று #Netflix காரர்கள் நினைத்தார்களோ என்னவோ? (ஓனர் டிஸ்னி தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்திருப்பதாலோ?) இஸ்தான்புல் (துருக்கி) நகரைக் காப்பாற்ற முனையும் ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து #TheProtector வெப் சீரீஸின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். ஆங்கில சப்டைட்டில்களுடன் 10 எபிசோடுகளை நேற்று பார்த்து முடித்தாயிற்று.

கொஞ்சம் கூடத்தொய்வில்லாமல் ஒரு கதைக் களத்தைத் தேர்வு செய்து பத்து அல்லது 12, 13 எபிசோடுகளில் அந்தந்த பாகத்தை எந்த இடத்தோடு நிறுத்திக் கொள்வது என்பதை நம்மவர்கள் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனை காலமாகுமோ?

மிழில் பார்த்தவரை #வெள்ளராஜா சுமார் தான்! இதற்கு முன்னால் பார்த்த #நிலாநிலாஓடிவா நன்றாக இருந்த போதிலும் வாம்பயர்(vampire) கதைகள் தமிழோடு அத்தனை ஒட்டவில்லையோ என்கிறமாதிரி ஒரு ஐயம்! #வாட்சப்வேலக்காரி நல்ல காமெடியாக ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று புரியாமல் முடித்த மாதிரி! இன்னும் சில குறுந்தொடர்களை சொல்லலாம் என்று பார்த்தால் ஒன்றும் மனசைக் கவ்வுகிற மாதிரித் தேறக் காணோம்!

ப்போதைக்கு #Zee5 தான் வெப் சீரீஸ் விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது. குட்டி பத்மினி கூட வெப் சீரீஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டார். #Netflix #amazonprime இரண்டும் ஹிந்தியில் சாதித்த அளவுக்குத் தமிழில் தொடவில்லை.



ப்படி சுருக்கமாக வெள்ளராஜா சுமார்தான் என்று கூகிள் பிளஸ்சில் சொல்லி ஒரு வாரகாலம் கூட ஆகவில்லை. அதற்கு ஒரு ப்ரொமோ வீடியோ பேட்டி ஒன்றைப் பார்த்த பிறகு சுமார் என்று சொன்னதே கூடக் கொஞ்சம் அதிகம் தான் என்றாகிவிட்டது.



பேசும்போது எலக்கணமாப் பேசு! எழுதும்போது கோட்டைவிட்று என்று நாகேஷ் வசனம் மாதிரித்தான் ப்ரொமோவில் அதிகம் பேசுகிறார்கள்.

ரு பழைய லாட்ஜ். அதற்கு ஒவ்வொரு கதா பாத்திரமாக வந்து சேருகிறார்கள்! அதற்கு முன்பு அவர்களைப் பற்றி அறிமுகம் செய்கிற காட்சிகள் என்று ஒவ்வொரு எபிசோடிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு டிராக். அறிமுகமாக இது என்னோட 25 வது transfer என்று ஒரு நாணயமான பெண்போலீஸ் அதிகாரி, அப்படியே போதைமருந்து வியாபாரம். ஒரு தீவிபத்தில் மொத்தமாகக் காணாமல் போன கோகைன், பின்னணியில் யார் என்ற கேள்வியோடு வில்லத்தனமான நாயகன் அறிமுக டிராக்.

ந்த இரண்டு ட்ராக்கையும் ஒன்றிணைப்பது தான் #கதைக்களம் எதிலும் முழுமைபெறாத காட்சிகள், நிறைவில்லாத பாத்திரங்கள் என்றே போய்க் கொண்டிருந்தால் முடிக்கிற இடம் #முட்டுச்சந்து

நல்ல நடிகர்களை வைத்து இவ்வளவு சொதப்பமுடியும் என்பதற்கு இந்த #வெள்ளராஜா ஆகச்சிறந்த உதாரணம்.

#TheProtector வெப் சீரீஸைப் பார்த்து இங்கே கொஞ்சம் கதைக் களம், பாத்திரபடைப்பு, பாகம் 2 எடுக்கிறார்களோ இல்லையோ, முதல் பாகத்தில் கதையை, கதா பாத்திரங்களை எங்கே நிறுத்துவது என்று தெளிவாக முடிவு செய்தபிறகு தான் ஷூட் செய்யப் போவது என்ற விஷயத்தை நம்மவர்கள் எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ என்று ஆதங்கப்பட்டது தான் மிச்சம் போல!

ஆனால் இனிவரும் காலங்களில் 1800 வது எபிசோட் எனக் கூவிக் கழுத்தறுக்கும் மெகாசீரியல்கள் ஓயும் காலம் நெருங்குகிறதென்பது மட்டும் நிச்சயம்!

Friday, December 21, 2018

வானம் வசப்படும்! எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அஞ்சலி!

எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். 
(தோற்றம் ஏப்ரல் 27, 1945 - மறைவு டிசம்பர் 21, 2018)

எல்லோருமாகச் சேர்ந்து எழுத்துலகில் பிரபஞ்சன்55  என சென்றவதோற்றம் ருடம் கொண்டாடிய நிகழ்வின் காணொளி


எழுத்துலகில் பிரபஞ்சனைக் கொண்டாடாதவர்கள் அனேகமாக இல்லையென்றே சொல்லிவிடலாம்.    

பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் நாவலுக்காக சாஹித்ய அகாடெமி விருது வழங்கியது. இந்த நாவலைப் பற்றி GoodReads தளத்தில் K ஜகன் என்ற வாசகர் 2016 இல் எழுதிய வரிகளையே இங்கு பிரபஞ்சன் மறைவுக்கு அஞ்சலிப் பதிவாக:

பிரபஞ்சனின் படைப்புகளில் நான் வசித்த முதல் நாவல் வானம் வசப்படும். 1740-50ல் புதுச்சேரி பிரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்த சமயத்தில் இந்நாவலின் களம் அமைந்துள்ளது. புதுச்சேரியின் கவர்னரான (இவரை குவர்னர் என்றுதான் எழுதுகிறார் பிரபஞ்சன். ஏன் என்று தெரியவில்லை) துய்ப்ளெக்ஸ் மற்றும் அவரின் சட்ட ஆலோசகராகவும், (கிட்டத்தட்ட) அமைச்சராகவும் (இப்பதவியை துபாஷ் என்று நாவலில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்) இருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை இருவருடைய உறவைப் பற்றி இந்நாவல் விரிவாக பல சம்பவங்களைக் கொண்டு சித்தரிக்கிறது.

மக்குத் தெரிந்த சரித்திரத்தின் படி துய்ப்ளெக்ஸ் ராபர்ட் கிளைவின் எதிரி என்பதும் புதுச்சேரியில் பிரெஞ்சு அரசை ஸ்தாபிப்பதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் என்பதும் தெளிவு. இந்திய சிற்றரசர்களுடன் இவர் கொண்ட நிலையான உறவும், ஹைதர் அலியுடன் ஏற்பட்ட நட்பும் இவரது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியதாகவும் அது பிரித்தானியர்களை கலங்கடித்தாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த ராஜதந்திரங்களுக்கு பின்னே ஆனந்தரங்கப் பிள்ளையின் பெரும்பங்கு இருந்தது என்பதை நிறுவுவதே இப்படைப்பின் முக்கிய குறிக்கோள்.

"துய்ப்ளேக்ஸுக்கும் அவருக்கு பின்னரும் புதுச்சேரி அரசின் துபாஷாக இருந்த தமிழர் ஆனந்தரங்கப் பிள்ளை, குவர்னருக்கு அடுத்த அந்தஸ்த்தில் இருந்த பெரிய அதிகாரி. தமிழ் இலக்கிய நேயர். புலவர்களை ஆதரித்த பிரபு. இது அன்று அவரது பெருமை. தம் காலத்து அரசியல், சமூக நிகழ்ச்சிகளை 'டயரி'யாகச் சுமார் 25 வருஷ காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே அவரது பெருமை. 18ம் நூற்றாண்டு வெளிச்சம் பெற்றது, இந்த ஆனந்தரங்கப் பிள்ளையாலும், அவருக்கு அடுத்த வீரா நாயக்கராலுமே, ஆகும்." என்று முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார். இந்த முன்னுரையிலேயே இது ஆனந்த ரங்கரின் கீர்த்தியையும், சாதுரியத்தையும் துதிபாடும் படைப்பாக இருக்கக் கூடும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆனந்த ரங்கரே அதிகமாகத் தெரிகிறார். கடினமான அரசியல் சிக்கல்களை தன அறிவுத்திறனால் தீர்த்து வைக்கிறார். துபாஷ் என்ற தனது பொறுப்புணர்ந்து, நீதி தவறாமல் நெறி வழுவாமல் குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு பணி புரிகிறார். இந்த ஒற்றை வரியை உணர்த்துவதற்காக பல்வேறு தனிப்பட்ட சம்பவங்கள் நாவலின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப் படுகிறது. சில இடங்களில் இது அலுப்பு தட்டவும் செய்கிறது. இது அத்தனைக்கும் அடித்தளமாக இருப்பது அவர் எழுதிய டயரிக் குறிப்புகள். 

யரிக் குறிப்புகள் ஒரு தனி மனிதனின் பார்வையில் எழுதப்பட்டாலும் அது ஒரு வரலாற்று ஆவணமாக ஆவதை நாம் பல முறை கண்டிருக்கிறோம். அதற்கு உதாரணமாக ஆன் பிரான்க், சாமுவேல் பீப்ஸ், சார்லஸ் டார்வின் போன்ற பலரின் குறிப்புகளை கூறலாம். அவ்வகையில் வைக்கப் பட வேண்டிய முக்கிய ஆவணமாக ஆனந்த ரங்கரின் டயரி இருக்கக் கடவது. அக்கால பண்பாட்டு சூழலையும், மக்களின் நடத்தைகளையும் துல்லியமாக விவரணை செய்ததற்காகவே இப்படைப்பை நாம் படிக்கலாம்.

க்காலத்தில் பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் மதமாற்றம் எந்த அளவு மக்களின் மேல் திணிக்கப் பட்டது என்பதை பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் ஜாதி பேதங்கள் இருப்பதை காரணம் காட்டி விளிம்பு நிலை மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்ய விரும்பும் பிரஞ்சு பாதிரிகளையும், ஆனால் அதே போல் மதம் மாறிய உயர் ஜாதிக்காரர்கள் கிறித்தவத்திலும் ஜாதி பேதங்களை கொண்டு வந்ததையும் பல இடங்களில் இப்படைப்பில் காண முடிகிறது. இது ஒரு காலத்தின் போக்காக, வழக்காக நாம் கருத வேண்டும்.

குவர்னரின் மனைவியான ழான் (இதை படித்தாலே எரிச்சல் வருகிறது. அவள் பெயர் ஜ்ஷான் என்ற ரீதியில் சொல்லப் பட வேண்டியது. அனாவசியமான ஒரு "ழ"கரத்தை எப்போதும் நுழைத்து விடுகிறார்கள்) பிள்ளைக்கு எதிராக செயல்படுகிறார். அவள்தான் இந்தக் கதையின் வில்லி என்று பொருள் படுத்துக் கொள்ளலாம். ழானின் கொள்கை கிறித்தவத்தை இந்தியர்களிடம் பரப்புவது. கிறித்தவர்களுக்கு மட்டுமே அரசு ரீதியில் சலுகைகளும், கௌரவங்களும் தரப்பட வேண்டும் என்பது. அதற்காகவே இவள் ஒரு தனி அரசாங்கத்தை நடத்துகிறாள் சில அடிப்பொடிகளைக் கொண்டு.

நாவலின் பல இடங்களில் ழானை எல்லா கதா பாத்திரங்களும் சரமாரியாக ஏசுகிறது. தங்களுக்கு நேரும் துன்பங்கள் அனைத்திற்கும் ழான் தான் காரணம் என்றும் அவளின் பேச்சைக் கேட்டுதான் குவர்னர் ஆடுகிறார் என்றும் மக்கள் அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதுவுமல்லாது எப்போதும் அவளை "முண்டை" என்று எல்லோரும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஒரு காழ்ப்பு அவள் மேல் இருப்பதாக நாவலில் கூறப் படுகிறது. 

வை அனைத்தும் பிள்ளையின் டயரி குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த ரங்கர் ஒரு உயர் ஜாதி இந்து. யாதவர்கள் என்று அழைக்கப் படும் வைணவ மரபை சார்ந்தவர். செல்வந்தர். அவர் குடும்பமே செல்வ செழிப்புடன் இருந்த குடும்பம். பரம்பரை பரம்பரையாக அரசாங்க துபாஷ் வேலை செய்து வருபவர்கள். அவ்வகையில் அவரது டயரியில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களும், அது கூறப்பட்டுள்ள தொனியும் அக்காலத்திய மனிதரின் ஒரு மன நிலை நின்று காண வேண்டும். மத மாற்றத்தின் மேல் அவருக்கு இருந்திருக்கக் கூடிய இயல்பான துவேஷமே அதில் பதிவாகியிருக்க முடியும் என்பது என் துணிபு.

தேபோல் பெண்கள் வீட்டு வேலை செய்து கொண்டு கணவனுக்கு அனுங்கிப் போவதையே விரும்பும் ஒரு மனிதரால் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க விழையும் ஒரு பெண் திமிர் பிடித்தவளாகவும் "முண்டை"யாகவும் தெரியக் கூடும். இதுதான் பிள்ளைக்கு ழானின் மேல் ஏற்படும் ஒரு காழ்ப்புணர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். செல்வ செழிப்புள்ள ஒரு மனிதர், மேன்மை பொருந்திய தியாகச் செம்மலாக மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்பதும் ஏற்புடையதாக இல்லை. ஆனந்த ரங்கரின் மறுபக்கம் என்ன என்பது நமக்கு தெரியாமலேயே இருக்கிறது. நாவலும் அவருக்கு நாயகன் அந்தஸ்தை கொடுத்து உயர்த்திக் கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு இடத்தைத் தவிர. வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப் படும்போது மட்டுமே ஆனந்த ரங்கரின் வைணவ சார்பு பற்றிய கேள்வி எழுகிறது. ஒற்றை வரி மட்டுமே. அதற்கு மேல் அதை பெரிது படுத்தவில்லை எழுத்தாளர்.

வானம் வசப்படும் என்ற படைப்பு ஆனந்த ரங்கப் பிள்ளையின் டயரிக் குறிப்பை நகல் எடுத்தார் போல் அமைந்திருக்கிறது. தனித் தனியாக தொங்கிக் கொண்டிருக்கும் சம்பவங்களும், இடையிடையே புகுத்தப் படும் துணுக்குச் செய்திகள் போன்ற கதைகளும் நமக்கு இதையே மீண்டும் உணர்த்துகிறது. முக்கியமாக எவ்வொரு (பின் நவீனத்துவமல்லாத) நாவலுக்கும் உண்டான ஒரு மையக் கரு இந்நாவலில் இல்லை. சீரான அமைப்பின் மூலம் ஒரு புள்ளியை நோக்கிக் குவியாது எங்கெங்கோ சிதறிக் கொண்டே இருக்கிறது. கூடவே நமது கவனத்தையும் சிதறடிக்கிறது.

நாவலில் குறிப்பிடும் படி எந்த ஒரு உச்ச கட்டமோ, முடிவோ இல்லை. முக்கியமாக ராபர்ட் கிளைவ் வருகின்ற இடங்கள் நாவலின் உச்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வந்த வேகத்தில் கிளைவ் மறைந்து போய் வேறொரு சம்பவத்திற்குள் நாம் போய் விடுகிறோம். ஒரு அடிப்படை கதைக் கட்டு கொண்டு அமைந்திருந்தால் இந்த நாவல் படிக்க மேலும் ஏதுவாகவும், ஏன், அதி சுவாரசியமாகவும் இருந்திருக்கும். 

மொழி சார்ந்த எந்த ஒரு அழகோ, நுண்ணுணர்வோ இந்த நாவலில் இல்லை. எந்த ஒரு கதாபாத்திரத்தின் அக உணர்வோ, சிந்தனை ஓட்டமோ நாவலில் சித்தரிக்கப் படவில்லை. ஏட்டில் வெறும் எழுத்துக்களாய் இருக்கிறார்கள். இதுதான் இந்நாவலுக்காக எடுத்துக் கொண்ட பிரத்யேக மொழிபா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் எவ்வொரு நுண்ணுணர்வும் காணக் கிடைக்காதது வருத்தத்திற்குரியது. ஆனந்த ரங்கரின் டயரியை அப்படியே நவீனத் தமிழில் மீள் பதிவு செய்தது போல் உள்ளது. 

ரலாறும் மாற்று வரலாறும் எவ்வொரு சூழலுக்கும் அதி முக்கியம் என்பது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றே. வரலாற்றுக் குறிப்புகளாய் விளங்கக் கூடிய படைப்புகளின் மூலம் ஒரு தொலைந்து போன சமூகத்தின் வாழ்கை முறை, அற நெறிகள், கலாச்சார குறியீடுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சமூகத்தில் மனிதர்களாய் நாம் அடைந்திருக்கும் (முழுவதாக அடைந்திருக்கிறோமா என்பது சந்தேகமே) பரிணாம முதிர்ச்சியை வரலாற்றை பின்னோக்கி பார்க்கும்போதே உணர முடிகிறது. அவ்வகையில் வானம் வசப்படும், நாவலுக்கு உண்டான அமைப்போ இலக்கியத்திற்கு உண்டான நுண்ணுணர்வோ இல்லாவிடிலும், நம் வரலாற்றின் ஒரு பக்கத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் முக்கியமான படைப்பாக கருத வேண்டும். 

இப்படி வாசகனின் பார்வையில், தன் எழுத்துக்களில் வாழ்கிற ஒருவரை மறைந்தார் என்று  எப்படிச் சொல்வது?    

Thursday, December 13, 2018

நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி

இன்று டிசம்பர் 13, நா.பார்த்தசாரதி நினைவுதினம்  

திருப்பூர் கிருஷ்ணன் தினமணி நாளிதழில் முன்பெழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சொல்கிறார்: 

தற்கால இலக்கியவாதிகளில்நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால்அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்ததுஎன்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, ""சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, ""தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.
அவர் நாவல்களின் இடையே எழுதிய வாக்கியங்கள் அந்த இடத்தில் மட்டும் பொருந்துவதோடு நிற்காமல் தனியே எடுத்துப் பார்த்தாலும் உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய பொன்மொழிகளாக விளங்கின. அவற்றை அந்தந்த அத்தியாயங்களின் முகப்பில் கட்டம் கட்டி வெளியிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார். நாவல்கள் புத்தகமான போதும் அத்தகைய வரிகள் அத்தியாய முகப்பில் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார்.

வரலாற்றுக்கதைகள் எழுதுவதற்கு அதை எழுதுபவன் நிறைய உழைத்தாக வேண்டும். ஆதாரங்களைத் தேடுவதோடு அவைகளைப் பகுத்தாராய்ந்து கதைக் களத்தை நிறுவியாகவேண்டும். அந்தவகையில் சரித்திரக் கதைகளை வலுவான ஆதாரங்களோடு தமிழில் எழுதியவர்களில் முதன்மையானவர் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் சாண்டில்யன்!

அடுத்து ....! என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தான்! இப்படிச் சொல்வதற்கும் ஒரு வலுவான காரணம் உண்டு. அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தை எடுத்துக் கொண்டு ஒரு கதை புனைவது என்பது மெத்தக்கடினம். கொஞ்சம் பிசகினாலும் வாசகர்களால் நிராகரிக்கப்படுவது நிச்சயம்.

தமிழகத்தின் இருண்டகாலமாகச் சொல்லப்படுவது களப்பிரர் காலம். கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்தது. நாடுமட்டுமா?

தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன்.  என்ற முன்னுரையோடு நா.பார்த்தசாரதி எழுதிய புதினம் நித்திலவல்லி   

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகி இருக்கிறது என்று நா.பார்த்தசாரதி தன் முன்னுரையில் சொல்லியிருப்பது இன்னமும் கல்கியின்  பொன்னியின் செல்வனைத் தாண்டிவர முடியாத பலருக்கும் மிகவும் பொருத்தம். சரித்திரம் என்பது சோழர்களுடைய 343 ஆண்டுகால மகோன்னதம் மட்டுமல்லவே!  

மூன்று பகுதிகளில் 84 அத்தியாயங்களுடன் நித்திலவல்லி ஆனந்தவிகடனில் தொடராக வந்து படித்த போதும் சரி இப்போது மீள்வாசிப்பாக படிக்கும் போதும் சரி, நா.பா வின் தமிழ்நடை நெஞ்சைக் கொள்ளைகொள்வதாகத்தான் இருக்கிறது. நல்ல தமிழில் கதையெழுதுவதில்  நா.பா பெரும் வித்தகர்.

செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப் பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால், வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக் கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்து விட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும், கோபமுமே என்னைக் கொல்கின்றன. என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள், தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப் பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடி சூடி, அரியணை ஏறும் காலத்தில், இந்தச் சிறப்புப் பெயர்களும் குடிப் பெயர்களும் அவர்கள் இயற் பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக, என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும், கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடி சூட்டு விழாக் காலத்துப் பெயர் மங்கலமாக, எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால், ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன் இப்படிக் கதையின் நாயகி உருகுகிறாள். அரியணையேறி முடிசூட்டிக் கொள்ளும் நாயகனோ  “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே, எனக்குப் ‘பாண்டிய கடுங்கோன்’ என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும், உங்களிடம் யாரென்று கூற முடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப் ‘பாண்டியன் கடுங்கோன்-என்று அழைப்பார்களாயின், அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன்” என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறான். நா.பா வின் கதைகளில் நாயகி நாயகன் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சிநிற்கும் நயத்தகு கற்பனை பொதுவான அம்சம்.       

நித்திலவல்லி   இணையத்தில் வாசிக்கவோ தரவிறக்கி சேமித்துக் கொள்ளவோ வசதியாக இந்த விக்கிபக்கங்களில்       

ஒரு நல்ல எழுத்தாளரை நினைவுகூர்வதென்பது அவரது படைப்புக்களை அனுபவித்து வாசிப்பதில் தான் இருக்கிறது என்பது என்னுடைய அனுபவம்.   

Saturday, December 8, 2018

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய



பகவான் ஸ்ரீ அரவிந்தர் Supramental Light பூமியில் இறங்கி வருவதற்காக தன்னுடலைத் தியாகம் செய்த நாள் டிசம்பர் 5. ஸ்ரீஅரவிந்தர் உடலில் அதிமானச ஒளி ஐந்து நாட்கள் தங்கியிருந்தது.
டிசம்பர் 5 ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் தரிசனநாள் செய்தி



ஸ்ரீ அரவிந்த அன்னை ஆத்மசமர்ப்பணமாக எழுதிய பிரார்த்தனை சமாதியில் பதிக்கப்பட்டிருக்கிறது 


ஸ்ரீஅரவிந்தரும் ஸ்ரீஅரவிந்த அன்னையும் Service Tree  என்றழைக்கப்படும் மரநிழலில் சமாதிநிலை 

Om SriAurobindo Mirra
Open my mind,my heart, my life
to Your Light YourLove Your Power
In all things may I see the Divine 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)