இன்று டிசம்பர் 13, நா.பார்த்தசாரதி நினைவுதினம்
திருப்பூர் கிருஷ்ணன் தினமணி நாளிதழில் முன்பெழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சொல்கிறார்:
தற்கால இலக்கியவாதிகளில், நா.பா.வின் தனித்தன்மை அவரது எழில் கொஞ்சும் நடைதான். "அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்தது என்றால், அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது' என்பதுபோல வார்த்தைகளை மடக்கிப்போட்டு அழகிய வாக்கியங்களை அவரால் எழுத முடிந்தது. கதாநாயகியின் பாதங்களில் மருதோன்றிச் சுவடு தென்பட்டதைப் பற்றிச் சொல்லும்போது, ""சிவப்பு மையால் அடிக்கோடிட்டதுபோல'' என்று எழுதினார் அவர். அழகிய கையெழுத்தைப் பற்றி எழுதும்போது, ""தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி'' என்று எழுதினார். இப்படி இதுவரை யாரும் சொல்லாத புத்தம் புதிய உவமைகளை எழுதும் அவரது ரசனை மிகுந்த மனம் பலரையும் கவர்ந்தது.
அவர் நாவல்களின் இடையே எழுதிய வாக்கியங்கள் அந்த இடத்தில் மட்டும் பொருந்துவதோடு நிற்காமல் தனியே எடுத்துப் பார்த்தாலும் உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய பொன்மொழிகளாக விளங்கின. அவற்றை அந்தந்த அத்தியாயங்களின் முகப்பில் கட்டம் கட்டி வெளியிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார். நாவல்கள் புத்தகமான போதும் அத்தகைய வரிகள் அத்தியாய முகப்பில் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார்.
வரலாற்றுக்கதைகள் எழுதுவதற்கு அதை எழுதுபவன் நிறைய உழைத்தாக வேண்டும். ஆதாரங்களைத் தேடுவதோடு அவைகளைப் பகுத்தாராய்ந்து கதைக் களத்தை நிறுவியாகவேண்டும். அந்தவகையில் சரித்திரக் கதைகளை வலுவான ஆதாரங்களோடு தமிழில் எழுதியவர்களில் முதன்மையானவர் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் சாண்டில்யன்!
அடுத்து ....! என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தான்! இப்படிச் சொல்வதற்கும் ஒரு வலுவான காரணம் உண்டு. அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தை எடுத்துக் கொண்டு ஒரு கதை புனைவது என்பது மெத்தக்கடினம். கொஞ்சம் பிசகினாலும் வாசகர்களால் நிராகரிக்கப்படுவது நிச்சயம்.
தமிழகத்தின் இருண்டகாலமாகச் சொல்லப்படுவது களப்பிரர் காலம். கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்தது. நாடுமட்டுமா?
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். என்ற முன்னுரையோடு நா.பார்த்தசாரதி எழுதிய புதினம் நித்திலவல்லி
சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகி இருக்கிறது என்று நா.பார்த்தசாரதி தன் முன்னுரையில் சொல்லியிருப்பது இன்னமும் கல்கியின் பொன்னியின் செல்வனைத் தாண்டிவர முடியாத பலருக்கும் மிகவும் பொருத்தம். சரித்திரம் என்பது சோழர்களுடைய 343 ஆண்டுகால மகோன்னதம் மட்டுமல்லவே!
மூன்று பகுதிகளில் 84 அத்தியாயங்களுடன் நித்திலவல்லி ஆனந்தவிகடனில் தொடராக வந்து படித்த போதும் சரி இப்போது மீள்வாசிப்பாக படிக்கும் போதும் சரி, நா.பா வின் தமிழ்நடை நெஞ்சைக் கொள்ளைகொள்வதாகத்தான் இருக்கிறது. நல்ல தமிழில் கதையெழுதுவதில் நா.பா பெரும் வித்தகர்.
செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப் பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால், வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக் கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்து விட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும், கோபமுமே என்னைக் கொல்கின்றன. என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள், தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப் பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடி சூடி, அரியணை ஏறும் காலத்தில், இந்தச் சிறப்புப் பெயர்களும் குடிப் பெயர்களும் அவர்கள் இயற் பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக, என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும், கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடி சூட்டு விழாக் காலத்துப் பெயர் மங்கலமாக, எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால், ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன் இப்படிக் கதையின் நாயகி உருகுகிறாள். அரியணையேறி முடிசூட்டிக் கொள்ளும் நாயகனோ “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே, எனக்குப் ‘பாண்டிய கடுங்கோன்’ என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும், உங்களிடம் யாரென்று கூற முடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப் ‘பாண்டியன் கடுங்கோன்-என்று அழைப்பார்களாயின், அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன்” என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறான். நா.பா வின் கதைகளில் நாயகி நாயகன் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சிநிற்கும் நயத்தகு கற்பனை பொதுவான அம்சம்.
நித்திலவல்லி இணையத்தில் வாசிக்கவோ தரவிறக்கி சேமித்துக் கொள்ளவோ வசதியாக இந்த விக்கிபக்கங்களில்
ஒரு நல்ல எழுத்தாளரை நினைவுகூர்வதென்பது அவரது படைப்புக்களை அனுபவித்து வாசிப்பதில் தான் இருக்கிறது என்பது என்னுடைய அனுபவம்.

No comments:
Post a Comment