The Accidental Prime Minister என்று மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரூ எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா வருகிற ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாகிறது. காங்கிரஸ் கட்சி இப்போதே கதற ஆரம்பித்து விட்டது. ஏனென்று புரிந்துகொள்ள உதவியாக ஒரு வீடியோ பேட்டி!
சௌகார் ஜானகி பொதுவாக அரசியல்வாதிகளின் biopic எடுத்தால் என்னாகும் என்றுதான் சொல்கிறார். ஆனால் இருவர் படத்தை மணிரத்னம் எடுத்த சமயம் கருணாநிதி "ஏன்,அவரு அண்ணன் தம்பி (சொந்த) கதையவே படமா எடுத்திருக்கலாமே" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூட செய்திகள் வந்தன.
அரசியல் என்றாலே வேடிக்கை, சுவாரசியம் எல்லாம் நிறைந்த காமெடிக்கொடுமை தானே!
நடிகையர் திலகம் சாவித்ரி biopic பற்றி நடிகர் ராஜேஷ் பேட்டி தற்செயலாகக் கண்ணில்பட்டது மேலே.
*******
எலி கடிக்கும்! குடிக்குமா?
உத்தரப்பிரதேசம், பரேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரம் லிட்டர் மதுவையும் எலி குடித்துவிட்டதாக போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன் பிஹார் மாநிலத்திலும் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர், கஞ்சாவை தின்றுவிட்டதாக ஜார்கண்ட் போலீஸாரும், ரூபாய் நோட்டுகளைச் சேதப்படுத்தியதாக அசாமிலும் எலி மீது பழிபோட்டு தப்பித்திருந்தது கவனிக்கத் தக்கது. முழுச்செய்தியும் இங்கே
ஆங்கிலப் புதுவருட பிறப்பன்று சந்திப்போம்!
No comments:
Post a Comment