சில வரலாற்றுக்கதைகள் திரைப்படங்களாக வெளி வந்திருக்கின்றன என்பதனாலேயே நமக்கெல்லாம் வரலாற்றுப்பிரக்ஞை வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியுமோ? அல்லது அவைகளில் தான் நிஜ வரலாறு பிரதிபலிக்கப்பட்டதாகச் சொல்லிவிட முடியுமா? ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதன் பழைய கதை வரலாறு என்று யாராவது சொல்ல வந்தாலேயே கிலி பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிடும்!
இத்தனைக்கும் இதே தலைப்பில் சஞ்சய் பாரூ எழுதி புத்தகமாகவும் வந்ததுதான்! அப்போது கூட இத்தனை கூக்குரல்கள் எழுந்ததில்லை. ஆனால் ஜோவியர் மோரோ என்பவர் எழுதிய சிவப்புச் சேலை புத்தகம் இந்தியாவில் வெளியாகாதபடி முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் பார்த்துக் கொள்ளப் பட்டது. படிப்புவாசனை அற்ற இந்திரா மற்றும் வாரிசுகளுக்கு அவர்களைப் பற்றி புத்தகங்கள் என்றால் அத்தனை அலர்ஜி, பயம்!
Twitter Reacts to the Accidental Prime Minister Trailer: The Good, The Bad, The Funny என்று நக்கலாகச் சொல்கிறது இந்தச்செய்தி
மன்மோகன்சிங் பழையபடி மௌனசிங்காக மாறி
விட்டார். படத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்ல மறுத்து வேகமாகச் செல்லும் காட்சி ஊடக!ங்களில் தலைப்புச் செய்தியாக! 2019 ஜனவரி 11 இல் ரிலீசாம்!
=====================
இந்திரா, மௌன சிங்குக்கு பால் தாக்கரே எந்த வகையில் குறைந்தவராம்? அவருடைய வாழ்க்கையும் திரைப்படமாக! 2019 ஜனவரி 23 இல் ரிலீசாம்!
The conveniently un-subtitled #Marathi trailer of #Thackeray. So much hate sold with such romance and heroism (Music, tiger roars, applause, jingoism). No solidarity shown to millions of South Indians and immigrants who make #Mumbai great. #HappyElections! என்று தன் வருத்தத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
திரைப்படங்களில் நிஜ வரலாறு சொல்லப்படுகிறதோ இல்லையோ அரசியல் மட்டும் இருக்கிறது.
என்ன சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment