எத்தனை நாட்களுக்குத்தான் நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றும் #ரட்சகர் களாக மார்வெல் கதா பாத்திரங்களையே நம்புவதென்று #Netflix காரர்கள் நினைத்தார்களோ என்னவோ? (ஓனர் டிஸ்னி தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்திருப்பதாலோ?) இஸ்தான்புல் (துருக்கி) நகரைக் காப்பாற்ற முனையும் ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து #TheProtector வெப் சீரீஸின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். ஆங்கில சப்டைட்டில்களுடன் 10 எபிசோடுகளை நேற்று பார்த்து முடித்தாயிற்று.
கொஞ்சம் கூடத்தொய்வில்லாமல் ஒரு கதைக் களத்தைத் தேர்வு செய்து பத்து அல்லது 12, 13 எபிசோடுகளில் அந்தந்த பாகத்தை எந்த இடத்தோடு நிறுத்திக் கொள்வது என்பதை நம்மவர்கள் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனை காலமாகுமோ?
தமிழில் பார்த்தவரை #வெள்ளராஜா சுமார் தான்! இதற்கு முன்னால் பார்த்த #நிலாநிலாஓடிவா நன்றாக இருந்த போதிலும் வாம்பயர்(vampire) கதைகள் தமிழோடு அத்தனை ஒட்டவில்லையோ என்கிறமாதிரி ஒரு ஐயம்! #வாட்சப்வேலக்காரி நல்ல காமெடியாக ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று புரியாமல் முடித்த மாதிரி! இன்னும் சில குறுந்தொடர்களை சொல்லலாம் என்று பார்த்தால் ஒன்றும் மனசைக் கவ்வுகிற மாதிரித் தேறக் காணோம்!
இப்போதைக்கு #Zee5 தான் வெப் சீரீஸ் விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது. குட்டி பத்மினி கூட வெப் சீரீஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டார். #Netflix #amazonprime இரண்டும் ஹிந்தியில் சாதித்த அளவுக்குத் தமிழில் தொடவில்லை.
இப்படி சுருக்கமாக வெள்ளராஜா சுமார்தான் என்று கூகிள் பிளஸ்சில் சொல்லி ஒரு வாரகாலம் கூட ஆகவில்லை. அதற்கு ஒரு ப்ரொமோ வீடியோ பேட்டி ஒன்றைப் பார்த்த பிறகு சுமார் என்று சொன்னதே கூடக் கொஞ்சம் அதிகம் தான் என்றாகிவிட்டது.
பேசும்போது எலக்கணமாப் பேசு! எழுதும்போது கோட்டைவிட்று என்று நாகேஷ் வசனம் மாதிரித்தான் ப்ரொமோவில் அதிகம் பேசுகிறார்கள்.
ஒரு பழைய லாட்ஜ். அதற்கு ஒவ்வொரு கதா பாத்திரமாக வந்து சேருகிறார்கள்! அதற்கு முன்பு அவர்களைப் பற்றி அறிமுகம் செய்கிற காட்சிகள் என்று ஒவ்வொரு எபிசோடிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு டிராக். அறிமுகமாக இது என்னோட 25 வது transfer என்று ஒரு நாணயமான பெண்போலீஸ் அதிகாரி, அப்படியே போதைமருந்து வியாபாரம். ஒரு தீவிபத்தில் மொத்தமாகக் காணாமல் போன கோகைன், பின்னணியில் யார் என்ற கேள்வியோடு வில்லத்தனமான நாயகன் அறிமுக டிராக்.
இந்த இரண்டு ட்ராக்கையும் ஒன்றிணைப்பது தான் #கதைக்களம் எதிலும் முழுமைபெறாத காட்சிகள், நிறைவில்லாத பாத்திரங்கள் என்றே போய்க் கொண்டிருந்தால் முடிக்கிற இடம் #முட்டுச்சந்து
நல்ல நடிகர்களை வைத்து இவ்வளவு சொதப்பமுடியும் என்பதற்கு இந்த #வெள்ளராஜா ஆகச்சிறந்த உதாரணம்.
#TheProtector வெப் சீரீஸைப் பார்த்து இங்கே கொஞ்சம் கதைக் களம், பாத்திரபடைப்பு, பாகம் 2 எடுக்கிறார்களோ இல்லையோ, முதல் பாகத்தில் கதையை, கதா பாத்திரங்களை எங்கே நிறுத்துவது என்று தெளிவாக முடிவு செய்தபிறகு தான் ஷூட் செய்யப் போவது என்ற விஷயத்தை நம்மவர்கள் எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ என்று ஆதங்கப்பட்டது தான் மிச்சம் போல!
ஆனால் இனிவரும் காலங்களில் 1800 வது எபிசோட் எனக் கூவிக் கழுத்தறுக்கும் மெகாசீரியல்கள் ஓயும் காலம் நெருங்குகிறதென்பது மட்டும் நிச்சயம்!

No comments:
Post a Comment