என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக? இப்படி ஒரு கேள்விக்கான தேடலாக அந்த நேரத்தில் உந்துதலாக அமைந்த ராஜேஷ் குமார் பாராட்டு விழா இருந்தாலும், கேள்விக்கான விடை அந்த விழா எடுத்தவர்களிடமோ, எழுத்தாளரிடமோ இல்லை என்பதைப் பின்னூட்ட விவாதங்களில் நண்பர்கள் கவனித்திருக்கலாம். கேள்வியைச் சரியாக, இன்னமும் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும் என்ற பாடத்தையும் அது எனக்குத் தந்தது.
இந்த 10 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்! எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்பட்ட பாலகுமாரனை ஞாபகம் இருக்கிறதா? இது சென்ற ஆண்டு அவர் காலமாவதற்கு முன்னால் எடுக்கப்பட்டது. நேர்காணல் என்று கூட சொல்ல முடியாது, அவர் மட்டும்தான் பேசுகிறார். இதில் யாரென்று பாலகுமாரனைத் தெரிந்து கொள்ள முடிகிறதா? முடியாவிட்டால் பரவாயில்லை. இன்னொரு வீடியோ 43 நிமிடம் இந்த வருடம் மே மாதம் வெளிவந்ததில் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்கிற மாதிரி! முதல் வீடியோவைப் பார்க்காவிட்டாலும் போகிறது, இரண்டாவதாய்க் கீழே இருக்கும் வீடியோவைத் தவற விட வேண்டாம்!
இந்த வீடியோத் தொகுப்பில் பாலகுமாரனுடைய வாழ்க்கையை, எழுத்தை, வாசகர்கள் கொண்டாடிய விதம், சினிமாப படங்களுக்கு வசனம் எழுதியது, ஆன்மீக நாட்டம், வாசகர்கள் அவரை குருவாகவே ஏற்றுக்கொண்டது இவைகளை மிக நேர்த்தியாக, பிரபலங்கள் + வாசகர்கள் சொல்வதை வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள்.ஆனால் பாலகுமாரனை மதிப்பிட அவருடைய எழுத்தை வாசித்திருக்க வேண்டும். அந்த எழுத்தில் எது தன்னைக் கவர்ந்த அம்சமாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.
இளம் வயதில் முடிவெட்டிக் கொள்ளப்போகிற சலூனில் தினத்தந்தியில் வெளியான கன்னித்தீவு படக்கதை அழகாக பைண்ட் செய்துவைத்து, என்னைமாதிரி சிறுவர்கள் படிப்பதற்கு கொடுப்பார்கள். வெளிவர ஆரம்பித்த நாளிலிருந்து ஒருபத்துப் பன்னிரண்டு வருடக் கன்னித்தீவு கதையை அந்தநாட்களில் படித்திருக்கிறேன்.அதற்கும் கூடத்தான் வாசகர்கள் இருந்தார்கள். கன்னித்தீவும், ராஜேஷ் குமார் கதைகளும் ஒன்றா? வெறும் நேரவிரையம், timepass என்பதற்கு மேல் அவற்றில் உங்களுக்குப் பிரயோசனமான அல்லது இன்னமும் மனதில் நிற்கிற மாதிரி ஏதேனும் அந்த எழுத்தில் இருந்ததா?
பாரதி பாஸ்கரின் நேர்காணல் தொடரும் 2வது பகுதி வீடியோ 46 நிமிடம்! நேரமிருந்தால் அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.
பாலகுமாரன் சிறிதும் பெரிதுமாக 278 நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றில் எதையெல்லாம் படித்திருக்கிறீர்கள்? எந்தெந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் மனதுக்கு இன்றைக்கும் நெருக்கமாக இருக்கிறார்கள்? பாலகுமாரன் எழுத்தைப் பற்றி உங்கள் மதிப்பீடு ஏதாவது இருக்கிறதா? சொல்லுங்களேன்!
தொடர்ந்து பேசலாம். மீண்டும் சந்திப்போம்.
இளம் வயதில் முடிவெட்டிக் கொள்ளப்போகிற சலூனில் தினத்தந்தியில் வெளியான கன்னித்தீவு படக்கதை அழகாக பைண்ட் செய்துவைத்து, என்னைமாதிரி சிறுவர்கள் படிப்பதற்கு கொடுப்பார்கள். வெளிவர ஆரம்பித்த நாளிலிருந்து ஒருபத்துப் பன்னிரண்டு வருடக் கன்னித்தீவு கதையை அந்தநாட்களில் படித்திருக்கிறேன்.அதற்கும் கூடத்தான் வாசகர்கள் இருந்தார்கள். கன்னித்தீவும், ராஜேஷ் குமார் கதைகளும் ஒன்றா? வெறும் நேரவிரையம், timepass என்பதற்கு மேல் அவற்றில் உங்களுக்குப் பிரயோசனமான அல்லது இன்னமும் மனதில் நிற்கிற மாதிரி ஏதேனும் அந்த எழுத்தில் இருந்ததா?
பாலகுமாரனும் பட்டிமன்றப்பேச்சாளராக அறியப்படும் பாரதி பாஸ்கரும் உரையாடுவதன் முதற்பகுதி வீடியோ 37 நிமிடம்