இந்தப்பக்கம் இன்றைக்கு என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என்னைப் பற்றி எழுதேன் என்று ஒரு திரைப்படக் காட்சித்துணுக்கு முன்னுக்கு வந்து நின்றது. அதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்!
திருமுருகன் காந்தி என்பது தான் இந்த ஆசாமியின் உண்மைப் பெயரா? எனக்கு அது தெரியாது, அக்கறையும் இல்லை! ஆனால் இது மாதிரி இன்ஸ்டன்ட் போராளிகள் தமிழ் நாட்டின் standup comediians ஆவதற்கு போட்டிபோட்டுக் கொண்டு அரசியல் பேசுவதைவிட சுவாரசியமான காமெடி இருக்கிறதா?
பசங்க படத்தில் வரும் ஒரு அருமையான காட்சி இது. இன்று பார்க்கும்போது கூட மனதைத்தொடும் காட்சியாக! தனது அனுபவத்தையே கொஞ்சம் விவரித்து, இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான் உங்களுக்கான உபதேசம் கிடையாது என்று சொல்கிற இடம்! கொஞ்சம் பார்த்துவிட்டு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்களேன்!
ஒரு சவூதி, ஒரு இந்தியன், ஒரு ஈரானியன் என்று இந்த மூவரும் கத்தாருக்குப்போனால் அதுவும் ஒரு bar என்றால் எப்படி இருக்கும்? ஏழுவருடங்களுக்கு முந்தைய வீடியோதான்! ஆனால் 115 லட்சம் முறை பார்க்கப் பட்ட ஒரு 7 நிமிட வீடியோ என்கிறது யூட்யூப் தளம்! Standup Comedy க்கு நாம் அதிகம் பழகவில்லை, இல்லையா? சிரிக்க முடிகிறதா என்று கொஞ்சம் பாருங்களேன்!
வீட்டுக்கு வீடு! 1970 சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த ஒரு
நகைச்சுவைப் படம். ஜெய்சங்கர் லட்சுமி ஜோடி, ஸ்ரீதர் படக்கம்பெனியின் ஆஸ்தான நடிகராக இருந்த முத்துராமனும் இருக்கிறார், நாகேஷ் வி கே ராமசாமி காமெடி கலக்கல் என்றால் கீழே நாகேஷுக்காக நடிகர் TS பாலையாவின் மகன் சாயி பாபா பாடிய அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ பாடல் இன்னும் சூப்பர் கலக்கல்!
கொஞ்சம் ரசிக்க முடிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.