சால்வை அழகர் பானாசீனாவுக்கு ஒருவழியாக நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு ஜாமீன் வழங்கி இருக்கிறது. இரண்டுவழக்குகளிலும் ஜாமீன் வழங்கப் பட்டுவிட்டதால் சீனாதானா இனி சுதந்திரப்பறவை தானா? டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறாராம்?
இந்த இரண்டுமட்டும்தானா? இன்னும் பல வழக்குகள் இருக்கின்றனவே! அவைகளில் கைது செய்வதற்கு எந்தத் தடையுமில்லையே! உள்ளே வெளியே உள்ளே என்று சிறைக்குப் போய்வந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார் டாக்டர் சுவாமி. கேட்கவே கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது!
திஹார் ஜெயிலுக்குப் போய் பெயில் கிடைத்து வெளியே வந்தால் மானாட மயிலாடத் தாரைதப்பட்டை கிழிய வரவேற்பெல்லாம் கிடையாதா? வெறுமனே ஹோய் ஹோய் கூச்சல் போடுகிற கூட்டம் மட்டும் தானா? வீடியோ 14 நிமிடம்.
பாலச்சந்திரன் சு
ஏன் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா மற்றும் வதேரா இவர்களுக்கு
SPG பாதுகாப்பு தேவையில்லை என்று விளக்கப்பட்டது...இவர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கை மூலம் தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று SPG பாதுகாப்பை அலட்சியம் செய்து நடந்து வந்தது மட்டுமே காரணம்...
SPG பாதுகாப்பு தேவையில்லை என்று விளக்கப்பட்டது...இவர்கள் அனைவரும் தங்களது நடவடிக்கை மூலம் தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று SPG பாதுகாப்பை அலட்சியம் செய்து நடந்து வந்தது மட்டுமே காரணம்...
இதைக் குறிப்பிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா...
* சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ஒருவர் இரவு கடந்த நேரங்களில் லுட்டின்ஸ் வீதிகளில் மணிக்கு 100 கிமீ க்கும் மேல் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து ஓட்டிச் செல்பவரை துரத்தி துரத்தி பாதுகாப்பு தர வேண்டிய நிலைக்கு SPG பாதுகாப்பு படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அப்படி சென்றவர் யார் என்பதை உங்களுக்கு விட்டு விடுகிறேன் என்று விடுகதை போட்டு அமித் ஷா பேசுகையில் நிறுத்திய போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கூச்சல் போட்டனர்...இப்படி நள்ளிரவு நேரத்தில் சென்றவர் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது...
* 2015 முதல் ராகுல் காந்தி...247 வெளி நாட்டு பயணத்தில்...1892 உள் நாட்டு பயணத்தில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
* சோனியா காந்தி...29 முறை வெளிநாட்டு பயணத்தில்...50 முறை டெல்லியில்...
13 முறை உள்நாட்டு பயணத்தில் SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை...
13 முறை உள்நாட்டு பயணத்தில் SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை...
* பிரியங்கா வதேரா....94 வெளிநாட்டு பயணத்தில்...339 முறை டெல்லியில்...
64 முறை உள்நாட்டில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
64 முறை உள்நாட்டில்...SPG பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கவில்லை....
காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங்க்கு SPG பாதுகாப்பு விலக்கப்பட்ட போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு அளிக்கும் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதே தவிர வாபஸ் பெறவில்லை...Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் அமித் ஷா...
இவர்களது நடவடிக்கை அனைத்தும் SPG பாதுகாப்பு படையினரை அவமதிப்பு செய்து தங்களது பின்னால் அவர்கள் ஓடி வர வேண்டும் என்று கேவலமான முறையில் சோனியா குடும்பத்தினர் நடந்து கொண்டது தான்...
இன்னமும் சோனியா குடும்பத்தினர் திருந்தவே இல்லை மற்றும் டெல்லி சுல்தான்கள் போல நடந்து வருகின்றனர்.இவர்களது நடவடிக்கைகளே தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது போலவும் தங்களுக்கு SPG பாதுகாப்பு தேவையில்லை என்பது போலவும் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது....
பிரியங்கா வதேரா நாடகம்...மீண்டும் SPG பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பிரியங்கா வதேரா வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்...
நான்கு தினங்களுக்கு முன் தனது வீட்டிற்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்து விட்டது என்று புகார் தெரிவித்தார் பிரியங்கா வதேரா...
என்ன நடந்தது என்றால் காலை 9 மணிக்கு கருப்பு நிற SUV காரில் ராகுல் காந்தி வருவதாக பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தரப்பட்டது. எனவே ராகுல் காந்தியின் கார் சோதனை இல்லாமல் உள்ளே அனுமதி தருவது நடைமுறையில் உள்ளது...
இதை தவறான முறையில் பயன்படுத்தி கறுப்பு நிற SUV காரில் மீரட் காங்கிரஸ் கட்சி தலைவர் சாரதா தியாகி அதே 9 மணிக்கு வந்ததும் காரை உள்ளே செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது என்ற உண்மை தற்போது வெளியே வந்து விட்டது...
பிரியங்கா வதேரா நாடகம் அம்பலமானது...
பிரியங்கா வதேரா நாடகம் அம்பலமானது...
டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்ய சபாவில் பேசுகையில்....SPG பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவருடன் உள்ள உடனடியாக உள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது...ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியவர்களுக்கு SPG சட்டத்தை திருத்தம் செய்து பாதுகாப்பு தரப்பட்டுள்ளது..இந்திரா காந்திக்கு தனது மெய் காவலர்கள் மூலம் உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை புறக்கணித்து விட்டதால் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
ராஜிவ் காந்தியை படுகொலை செய்த 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று திமுகவின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டது...
மேலும், கொலை குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறைகளை மீறி பிரியங்கா வதேரா நளினியை சிறையில் சென்று சந்தித்து பேசினார்..இதனால் விடுதலைப் புலிகள் மூலம் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்...
மேலும் தனக்கே உரித்தான பாணியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அவர் மீது உள்ள ஊழல், முறைகேடுகள் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் தண்டனை விதித்து சிறையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி....
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் மற்றும் அவரது வசிக்கும் உடனடி குடும்பம் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு பதவி விலகிய பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கப்படும் என்ற SPG சட்டத் திருத்தம் நிறைவேறியது....
மீண்டும் சந்திப்போம்.


