குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.
பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Monday, January 25, 2021
ஊதிப் பெரிதாக்கப்படும் சசிகலா புராணம்!
Saturday, January 23, 2021
அட, வாங்க ஒரு கை பாப்போம்! இது சோனியா காங்கிரசோட வாய்ச்சவடால்!
இன்றைக்கு காலையில் மிகவும் ரசித்துப் பார்த்த அரசியல் காமெடி, செய்தி சோனியா காங்கிரசின் தமிழகக்கிளை ஏற்பாடு செய்திருக்கிற வாங்க ஒரு கை பாப்போம் என்கிற வாய்ச்சவடால் நிகழ்ச்சிதான்!
ராகுலோட ஒண்ணா கை கோர்ப்போம் - அட வாங்க ஒரு கை பாப்போம் என்று சொல்கிறார்களே, யாரை ஒரு கை பார்க்கப்போகிறார்களாம்? இவர்கள் கூட்டணி வைத்திருக்கிற திமுக, தனியாகவே தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்துவிட்டது.புதுச்சேரியில் ஜெகத் ரட்சகனை வைத்துக் கொளுத்திப்போட்ட விஷயத்தை திமுக, அப்படியே உல்டாவாக மாற்றிவிட்டது ஆனாலும் அதிக சீட் கேட்க, வேண்டாம், செரிமானமாகாது என்று எச்சரிக்கை கொடுத்தாகி விட்டது 2011 இல் கருணாநிதி 63 தொகுதிகள் கொடுத்தார், 2026 இல் 41 சீட் கிடைத்தது என்ற பழங்கணக்கெல்லாம் வேண்டாம், ஒரு 15 சீட் வேண்டுயுமானால் கொடுக்கலாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் ராகுல் காண்டி இன்றைக்கு கோவை வருகிறார்! ஷோ காட்டப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது என்ன ஷோ, ஜனங்களிடம் எடுபடுமா என்பதைவிட திமுகவிடம் ஜம்பம் பலிக்குமா என்பது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! தனி ஆவர்த்தனம் செய்யலாம் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்களே அதற்காகவே சோனியா காங்கிரசின் தமிழ்நாடு கிளையைப் பாராட்டலாம்! ஆனால் இந்திராவிடமிருந்து பிரிந்து போன காமராஜர் படத்தை? எதற்காகப் பயன் படுத்துகிறார்களாம்?
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இப்படி அரசியல் செய்யத் தெரியுமா? பாட்டாளி மக்கள் கட்சி இதோ நாங்களும் இருக்கிறோமே என்று அவர்கள் பங்குக்கு அதிமுகவுக்கு கொஞ்சம் மிரட்டலாகவே பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நோட்டு விஷயம் ஓகே, சீட்டு எவ்வளவு என்பதை நாங்கள்தான் முடிவுசெய்வோம் என்று அதிமுக கறாராக இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.அப்படியானால் 2015 போலத் தனித்தே களம் இறங்குவோம் என்று சொல்வதாக வெளிவரும் செய்திகள்??
மருத்துவர் ராமதாசை நன்றாக அறிந்த எவரும் அந்தச் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை! ஆக தேர்தல் களத்தில், கழைக்கூத்தாடிகள் வித்தை காட்டுவதுபோல, காங்கிரஸ், பாமக போன்ற உதிரிக்கட்சிகள் இப்படியுமல்லாமல் அப்படியும் இல்லாமல் வெறும் ஷோ காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி தமிழகத் தேர்தல் களம் இன்னமும் களைகட்ட ஆரம்பிக்கவில்லை!
மீண்டும் சந்திப்போம்
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்ல...
-
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
-
சி ல மாதங்களுக்கு முன்பாக உடுமலைடாட்காமில் தி.ஜானகிராமன் புத்தகங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஆர்டர் கொடுத்ததில், மலர் மஞ்சம்...
-
இன்றைக்கு உலக புத்தக தினம்! முன்பு வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் பலர் முகநூல் மட்டுமே உலகம் என்று குறுகிப்போய், தங்கள் வீட்டில...
-
வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில...
-
என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக? இப்படி ஒரு கேள்விக்கான தேடலாக அந்த நேரத்தில் உந்துதலாக அமைந்த ராஜேஷ் குமார் பாராட்டு விழா ...
-
2500 கோடி ரூபாய் செலவில் சென்னையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பூங்காக்கள் அவசி...
-
"வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில் அதிசயமில்லை!. கல்கிக்கு முன்னால் எத்தனை பேர் ...
-
சமீபநாட்களில் அச்சுப்புத்தகங்களை எடுத்து வாசிப்பது அனேகமாகக் குறைந்தே போய்விட்டது. சினிமா, வெப் சீரீஸ்களிலும், இங்கே நடந்து கொண்டிருக்கும் ...