பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Thursday, May 21, 2020
ச்சும்மா ஜாலிக்கு! விண்ணைத்தாண்டி வருவாயா? விடலைத்தனமான காதல்!
Monday, May 11, 2020
ச்சும்மா ஜாலிக்கு! ஓடாத படத்துக்கு ஒரு இரவல் வாங்கின விமரிசனம்!
சுட்டுப் பிடிக்க உத்தரவு - கபட நாடகம்
கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.
ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.
இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.
பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.
படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.
இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் - ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!
தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.
Friday, May 8, 2020
#கொரோனாடைம்ஸ் டைம் பாசுக்கு என்ன செய்வது? டாவின்சி கோட்! விஷ்ணுபுரம்!
Saturday, May 2, 2020
பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!
குட்டி தமிழ்வாணன்
ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.
அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?
கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.
“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.
The advise you tell others is the advice you need to follow.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .
அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலா...
-
எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு...
-
நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான...
-
புதன்கிழமை என்றால் எங்கள்Blog இல் கேள்விபதில் பதிவு கௌதமன் சாருடைய தனிக்காட்டு ராஜாங்கம் என்பதோடு கொஞ்சம் சுவாரசியமான விஷயங்களும் இருக்கும்...
-
என் சுவாசக் காற்றே......! உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா? அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வா...
-
யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்...
-
மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உ...
-
முந்தின பதிவில் ஒரு பாடலைக் கொடுத்து அதில் சரித்திரம் எந்த அளவு இருக்கிறது, புனைவு எந்த அளவு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இ ருந்தது ...
-
நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வ...