Tuesday, April 28, 2020

கார்டூனிஸ்ட் மதி துக்ளக்கில் எழுதிய கட்டுரை! என்ன செய்யப் போகிறோம்?

ஒரு கார்டூனுக்காகக் கொதித்தெழுகிறவர்கள் என்னமாதிரியான அரசியல் செய்பவர்கள் என்பது இங்கே பரவலாக எல்லோருக்குமே தெரிந்தது தான்! திராவிடம் என்பதே ஒரு சகிப்புத் தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம்தான்  என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிற மாதிரி கார்டூனிஸ்ட் தினத்தந்தியில் கொரோனா விழிப்புணர்வுக்காக வரைந்த ஒரு கருத்துப்படம் மீதான வசைகள் தாக்குதல்கள் நிரூபித்திருக்கிறது.



கருத்துச் சு’தந்திரம்’!
தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
அதில் முதல் கார்ட்டூனுக்கு வருவோம்! ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையின் தலையை மறைத்து வைரஸ் சித்திரத்தை வரைந்து கொச்சைப்படுத்தி இருக்கிறேன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தினத்தந்தி நாளிதழ் அதிபருக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார்!
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதில் சிறிது நகைச்சுவை உணர்வைக் கலந்து கொடுப்பதற்கும் எனக்கு ஒரு சிலை தேவைப்பட்டது. அவ்வளவுதான்! அதைத்தான் அந்த கார்ட்டூனில் நான் வரைந்து இருந்தேன். பொதுவாகவே உலகிலுள்ள தலைவர்களின் சிலைகள் பெரும்பாலும் கையை உயர்த்திக் கொண்டு அல்லது நீட்டிக்கொண்டு இருப்பது போல்தான் அமைக்கப்படும். அது தலைவர்களின் ஆளுமையை காட்டுவதற்காகவா அல்லது சிலையின் அழகைக் கூட்டுவதற்காகவா என்பது எனக்கு தெரியாது. இக்கட்டுரையோடு வெளிவந்துள்ள புகைப்படங்களைப் பார்த்தால் ( படங்கள் அல்ல பாடங்கள்! ) உங்களுக்கு நன்றாகவே புரியும். அப்படி ஒரு சிலையைத்தான் நான் எனது கார்ட்டூனில் பயன்படுத்தி இருந்தேன்! தமிழகம் என்பதால் அந்தச் சிலைக்கு வேட்டி துண்டு அணிவித்திருந்தேன். அவ்வளவே!
அந்தச் சிலைக்குள் அண்ணா எப்படிப் புகுந்தார் என்பது எனக்கு இன்றும் புரியாத புதிர்! தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க. என்ற கட்சியை அண்ணா தோற்றுவித்த போது, மத நம்பிக்கைகளுக்கு எதிரான பெரியாரின் திராவிடர் கழகத்தின் கோஷங்கள் பெரிதும் தடையாக இருந்தது. அது தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சிக்கு பேராபத்தாக முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் தி.க.வின் இறைமறுப்புக் கொள்கைக்கு எதிராக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று புதிய கொள்கை விளக்கம் ஒன்றை அண்ணா கொடுத்தார்.
ஏனென்றால் அன்றைய தி.க. இறைமறுப்புக் கொள்கை என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் ஏளனம் செய்தது! அவற்றை சுவர்களில் எழுதியது! பிரச்சாரங்களில் பேசியது! இது தமிழக அரசியலை தி.க.வின் வரலாற்றை சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்! பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் அது இந்து மத உணர்வுகளை மட்டுமே காயப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது!
எனவே அவரின் இந்தப் புதிய சித்தாந்தத்தை விளக்கும் வண்ணமாக அண்ணா தனது வலது கையை உயர்த்தி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைக் குறிக்கும் வண்ணமாக தனது ஆள்காட்டி விரலை ஒன்று என்பதுபோல் காட்டுவதாகஉருவாக்கப்பட்டதுதான் அந்தச் சிலை! எம்ஜிஆரால் நிறுவப்பட்டது. கிட்டத்தட்ட அது கிரிக்கெட் ஆட்டத்தில் அம்பயர் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுப்பது போல தனது வலது கையை மேலே உயர்த்தி ஆள்காட்டி விரலைக் காண்பித்து இருக்கும்!
நான் சிலையில் வரைந்து இருந்தது இடது கை. அதுவும் ஏதோ ஒரு திசையை காட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும். அண்ணா சிலையில் உள்ளதுபோல வானத்தை சுட்டிக் காட்டுவது போல் இருக்காது! மேலும் நான் வரைந்த கார்ட்டூனில் சிலையில் உள்ள துண்டு இடது தோளில் இருக்கும்! ஆனால் நிஜமான அண்ணா சிலையில் துண்டு அவரது வலது தோளில் தான் இருக்கும்! பகுத்தறிவு இதையெல்லாம் ஆராயாமல் விட்டது ஏனோ!? அவர்களின் நோக்கம் ஒன்றுதான்!
இம்மாதம் 14ஆம் தேதி தினத்தந்தி நாளிதழில் வந்த ஒரு புகைப்படத்தையும் இக்கட்டுரை உடன் இணைத்துள்ளேன். படக் குறிப்பு உங்களுக்கு விஷயத்தை உணர்த்தும்!
மெக்சிகோவில் விழிப்புணர்வுக்காக இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்! இப்படி ஒரு நிகழ்வு நம் நாட்டில் நிகழ்ந்திருந்தால் கற்பனை கூட செய்ய முடியாத சேதங்களை ஒரு பெரிய கூட்டம் அரங்கேற்றி இருக்கும்!

ஆனால் படத்தைப் பார்த்தால் ஒன்று புரிகிறது... மெக்சிகோ போன்ற மேலை நாடுகளில் பகுத்தறிவை போதிக்கும் தலைவர்கள் இல்லை! பகுத்தறிவு இன்னும் பிறக்க கூடவில்லை என்பதையே காட்டுகிறது!

ஏதோ ஒரு சிலையை வரைந்து விழிப்புணர்வை ஊட்டுவதற்காக அதன் தலையில் கொரோனாவை வரைந்ததை குற்றமென்று பார்ப்பவர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து, அதன் மூலம் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பணயம் வைத்து, சமூகத்தைக் காப்பதிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பல முயற்சிகள் செய்து வரும் தமிழக காவல்துறையினர் பலர், தங்களது முகங்களில் கொரோனா போன்ற மாஸ்க்கைப் போட்டு மூடி மறைத்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்களே..! அவர்கள் என்ன கோமாளித்தனமா செய்கிறார்கள்? அதையே ஒரு சிலை மூலம் செய்தால் என்ன தவறு? அதுவும் ஒரு கார்ட்டூன் மூலமாக!
'கொரோனா முன்னேற்றக் கழகம்' என்று இந்தக் கார்ட்டூனில் குறிப்பிட்டிருந்தேன். பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வந்த புகைப்படங்கள் தான் இத்தகைய கார்ட்டூனை நான் வரைவதற்குக் காரணமாக இருந்தது. வழக்கம்போல் எனது பணியைத்தான் நான் செய்தேன். சமூக இடைவெளியை நாம் பின்பற்றாவிட்டால், கொரோனா நோய்த் தொற்று குறைவதற்குப் பதிலாக முன்னேறுவதற்கு தான் வாய்ப்பு அதிகம் என்பதை மனத்தில் கொண்டு கொரோனா முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரிசையில் இதோ சமீபத்தில் தோன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரை தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொண்டதுதான். ஆனால் நான் குறிப்பிட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை திரித்து கார்ட்டூன் போட்டதாக அதன் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். மற்ற எந்தக் கட்சிக்குமே தோன்றாத இந்த சந்தேகம் ஸ்டாலினுக்கு மட்டும் எப்படி வந்தது? அல்லது இவ்விஷயத்தில் அவருக்கு ஏதேனும் குற்ற உணர்ச்சி இருக்கிறதா? எனக்கே புரியவில்லை!
ஆக மொத்தம் இரண்டு கார்ட்டூன்களிலுமே எனக்கு எள்ளளவும் எந்த உள்நோக்கமும் இல்லை. திரித்துக் கூறியது திமுக.,வும் அவர்களை அண்டி வாழும் சில பகுத்தறிவுவாதிகளும்தான்!
எனது 21 வயதில் கார்ட்டூன்கள் போட ஆரம்பித்தேன். துக்ளக், சாவி, கல்கி, நியூஸ் டுடே, கதிரவன், இதயம் பேசுகிறது, தினமணி... என பல்வேறு பத்திரிகைகளில் இதுவரை 17,000 கார்ட்டூன்கள் வரைந்து இருக்கிறேன்.
சுமார் 28 ஆண்டுகள் பணிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வு எனக்கு தேவைப்பட்டது. பல வருடங்கள் தள்ளிப் போட்டு இருந்த எனது சொந்தப் பணிகள் பலவற்றை செய்து முடிக்க வேண்டும் என்பதும் அதற்குக் காரணம்!
ஆனால் சுமார் 400 கோடி மக்களை உலகம் முழுக்க வீட்டில் முடங்கி இருக்கச் செய்திருக்கிறது கொரோனா கிருமி! மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை! மக்கள் அனைவருமே ஒருவித மன இறுக்கத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்! ஒருபுறம் வருமான இழப்பு; மறுபுறம் இந்த நோயின் பேராபத்து. இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
விரைவில் இதிலிருந்து வெளியே வரவேண்டும்! இந்நோய் உலகைவிட்டு விலக வேண்டும்! அதற்கான விழிப்புணர்வை எனது கார்ட்டூன்கள் மூலம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்! இந்த நேரத்தில் நான் எனது பணியைச் செய்யாமல் இருக்கக் கூடாது என்றுதான் விழிப்புணர்வு சம்பந்தமான கார்ட்டூன்கள் மட்டும் போடலாம் என்று ஆரம்பித்தேன்! இது எத்தனை பேரைச் சென்றடைவது சாத்தியமோ அத்தனை பேரைச் சென்றடைவது நல்லது என்று நினைத்ததால் தினத்தந்தி நாளிதழ் மற்றும் டி.வி. இல் எனது கார்ட்டூன்களை கொண்டுவர முயற்சி செய்தேன்! சுமார் இரண்டு வார காலம் பெரும் வரவேற்புடன் வந்தது!
இன்று நின்று போனது தினத்தந்தி நிறுவனத்திற்கும் சரி, எனக்கும் சரி... எந்த நஷ்டமும் இல்லை! ஆனால் திரித்துக் கூறும் குயுக்திகளால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து வந்திருக்கிறது! இது நல்லதல்ல! இனி ஒவ்வொரு கட்சிகளும் இத்தகைய பாணியைக் கையாள ஆரம்பித்தால் ஒரே ஒரு விஷக் கிருமியால் உலகமே இன்று ஊரடங்கி இருப்பதுபோல், ஊடகங்களும் விரைவில் அடங்கிப் போகும்!


கார்டூனிஸ்ட் மதி தன்னுடைய தரப்பைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். நமக்கு முன்னாலிருக்கிற ஒரே கேள்வி --  என்ன செய்யப்போகிறோம்? சுபவீ செட்டியார், இசுடாலின் மாதிரியானவர்களுடைய கீழ்த் தரமான அரசியலை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோமா ? இவர்கள் அனுமதிக்கும் செய்திகளை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்பது  தலையெழுத்தா என்ன? இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. புகட்டுவது நம் கைகளில் தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!


தொடர்புடைய பதிவு  

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!



மீண்டும் சந்திப்போம்.      

6 comments:

  1. நடுநிலையாளர்களுக்கு இதிலுள்ள நியாயம் புரியும்..கலர்கண்ணாடி அணிந்தவர்களுக்கு நிச்சயம் சாத்தியமில்லை..அருமையான அவசியமான பதிவு..வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. முதல்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  2. நான் இத்தகைய ஊடகங்கள் சம்பந்தப்பட்ட எதையும் படிப்பதில் விருப்பம் கொள்வதில்லை...

    அவர்களுடைய தொ.காட்சியைக் கூட புறக்கணித்து விட்டேன்...

    எட்டு மணி நேர உழைப்புக்குப் பிறகு சந்தோஷமும் ஓய்வும் தேவை...

    அவை இதுகளால் கெட்டு விடக் கூடாது..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      நீங்கள் சொல்வதில் இருக்கிற நியாயங்களைப் புரிந்துகொள்கிறேன். அதேநேரம் இப்படியானவர்களை யாரும் கண்டிப்பதில்லை என்பதிலேயே தெனாவட்டாக ஆதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஜனங்களுடைய அதிருப்தியும் கோபமும் இவர்களுக்குப் பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்கிற உணர்வைப் புறந்தள்ளிவிட முடியாதே!

      Delete
    2. யதார்த்தவாதி வெகு ஜன விரோதி -
      என்று என் தந்தை அடிக்கடி சொல்வார்...

      பணியாரத்தை நினைத்து விட்டாய் ...
      ஆகவே தண்டம் கொடுத்து விட்டுப் போ!.. என்றொரு வல்லடி வழக்கு தெனாலி ராமன் கதையில் வரும்...

      இது மாதிரி பிரச்னைகளால் நிர்க்கதியான குடும்பங்கள் பலப்பல...

      எனவே தான் பகிரங்கமாக எதிர்த்துப் பேசவோ கண்டிக்கவோ அஞ்சுகின்றனர்...

      இதுவே அவர்களுக்குச் சாதகமாகிறது...

      இந்தத் தடவை கண்டித்து விடுவோம் என்று நம் மட்டும் முடிவெடுத்து ஆவதென்ன!...

      மூட்டைப் பூச்சிகளுக்கும் பயப்பட வேண்டிய காலமாகிப் பேச்சே ஐயா!...

      Delete
    3. நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான் துரை செல்வராஜூ சார்! ஆனால் இப்படி அஞ்சி அஞ்சி என்ன சாதித்துவிட்டோம்? இந்தக் கேள்வியில் இருந்து தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான தெளிவே பிறக்கிறது!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)