Friday, April 23, 2021

வாசிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? என்னமாதிரி விஷயங்களை வாசிப்பீர்கள்?

இன்றைக்கு உலக புத்தக தினம்! முன்பு வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் பலர் முகநூல் மட்டுமே உலகம் என்று குறுகிப்போய், தங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியைப் படம் பிடித்துப்போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவர் ஒருவராவது அண்மையில் தாங்கள் வாசித்த புத்தகத்தைப்பற்றி வாய் திறந்திருக்கிறார்களா என்று பார்த்தால், எவருமே இல்லை என்பது யாருடைய சோகம்? 


இப்படிப் புத்தக தினம் கொண்டாடுகிற எண்ணம் முதலில் ஒரு ஸ்பானிஷ் எழுத்தாளர் விசன்டே க்ளவல் அந்திரேஸ்  Vicente Clavel Andrés என்பவருக்கு உண்டானது. புகழ்பெற்ற  டான் கிவிக்ஹோட் Don Quixote பாத்திரத்தை உருவாக்கிய  ஸ்பானிஷ் எழுத்தாளரான மிகெல் டெ செர்வான்டிஸ் Miguel de Cervantes ஐ கௌரவப் படுத்துகிற விதத்தில் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 7 ஆம் தேதி புத்தக தினமானது. பின்னால் அவருடைய மறைவுநாளான ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு, ஏப்ரல் 23 அன்று வேறு சில எழுத்தாளர்கள் பிறந்த / இறந்த நாளாகவும் இருந்தது என்பதைத்தாண்டி பெரிதான காரணம் எதுவுமில்லை,  

மேலைநாடுகளில் உலகப்புத்தக தினத்தை பள்ளிகள், கல்லூரிகளோடு  பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் சேர்ந்து வாசிப்புப்பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கிற விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். புத்தகக்கண்காட்சிக்குப் போய் கிலோக்கணக்கில் புத்தகங்களை வாங்குகிறார்கள். புத்தகங்களைப்பற்றிப் பேசாமல் டெல்லி அப்பளம் கடித்ததை மட்டுமே  பிரதானமாகப் பகிர்கிறார்கள் என்பதால் நம்மூர் நிலவரத்தை இங்கே பேசாமல் இருப்பதே உத்தமம்.

புத்தகங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிற சில தகவல்கள், இங்கே கேள்விகளாக:

A. புத்தகங்களை எப்படிப் பெறுகிறீர்கள்?  1.நூலகம் 2.நண்பர்களிடம் இரவல் வாங்கி 3. சொந்தமாகவே வாங்குவது 4. இதர வழிகள் (என்னவென்று சொல்லவும்) 

என்வரையில் மதுரை சுப்ரமணியபுரம் கிளைநூலகம் தான் மாணவப்பருவத்தில் எல்லாவிதமான புத்தகங்களையும் அள்ளிக்கொடுத்தது அப்புறம் சிம்மக்கல் மாவட்ட நூலகம், அப்புறம் பல்கலைக்கழக நூலகம் என்று ஆரம்பகாலவாசிப்புக்கு பொது நூலகங்களே வித்திட்டன. நண்பர்களிடமிருந்து இரவல் வாசிப்பு மிகவும் குறைவே. என்னுடைய இரண்டாவது அண்ணன் வடக்கே என்ஜினீயராக இருந்தவர், மதுரைக்கு வரும் நாட்களில் ஏகப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிவருவார் என்பதிலேயே நிறைய ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். சொந்தமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபிறகு நூலகங்களை பயன்படுத்துவது குறைந்து போனது. சில தனியார் நூலகங்களில் பிரபலமான புத்தகங்களை காசுக்கு இரவல் வாங்கிப்படித்ததுமுண்டு. புத்தகத்தின் விலையில் 10% வாங்குவார்கள்.          

B. பொதுநூலகங்கள் / தனியார் நூலகங்கள் பயன் படுத்துவதுண்டா? உங்களுடைய அனுபவம் எப்படி?

மேலேயே இதற்கான பதிலையும் சொல்லிவிட்டேனே! 

C. என்னமாதிரி வாசிப்பை விரும்புகிறீர்கள்?  புனைவு /அபுனைவு  சமூகக்கதை/சரித்திரக்கதை அறிவியல் / தத்துவம் /அரசியல் / இதர தலைப்புக்கள் (என்னவென்று குறிப்பிடவும்)

பொதுநூலகங்களில் கிடைத்த புத்தகங்கள் அத்தனையையும் வாசித்த மாணவப்பருவம் என்னுடையது. தாகூரின் கோரா நாவலை தமிழில் படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு அதை சீந்தக்கூட மாட்டேன். தமிழில் ஐசக் அசிமாவ்  எழுதிய அறிவியல்நூல்கள் அனைத்தையும் படித்தநாட்கள் அவை. தோல்ஸ்தோய் அ லெ நடராஜன், ரா க்ருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பில் மிக சரளமாக அறிமுகமானார். அரசியல், தத்துவம் என்று எல்லா விஷயங்களையும் படித்தே ஆகவேண்டுமென்று மிகத் தீவீரமாக  வாசித்த நாட்கள்! நூலகர்கள் அந்தநாட்களில் இதைப்படி, அதைவிட இது இன்னும் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தே வாசிப்பு வேள்வியை எனக்குள்  வளர்த்தார்கள்.        

சராசரியாக ஒருநாளைக்கு /ஒருவாரத்தில் எவ்வளவு பக்கங்கள் வாசிப்பீர்கள்?.

ஆரம்ப நாட்களில் ஒருநாளைக்கு இருநூறு முதல் முன்னூறு பக்கங்கள் வாசிக்கும் வழக்கம் இருந்தது. இப்போதும் ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து விட்டால் அதை அதிகபட்சம் மூன்று தவணைகளுக்குள் வாசித்து விடுவேன். கடந்த டிசம்பரில் சாண்டில்யன் கதைகளை ஒரு மீள்வாசிப்பு செய்தேன். சுமார் 7600 பக்கங்கள்.    

இந்தவருடத்தில் படித்த/படிக்க எடுத்துக்கொண்ட புத்தகங்கள் என்னென்ன? நூல் பெயர் மற்றும் நூலாசிரியர் பெயருடன்

பழையதும் புதியதுமாக ஒரு பட்டியலே இருக்கிறது. படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்காமல் இருக்கிற ஒரு புத்தகம் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் NSA வாக இருந்த ஜான் போல்டன் எழுதியது. அலுப்புத்தட்டுகிற மாதிரி இருந்ததால் முதல் 250 பக்கங்களை ஒட்டி அப்படியே நிற்கிறது.   

நீங்கள் வாசித்ததிலேயே மிகவும் பிடித்ததான புத்தகம் எது? எதனால் பிடித்தது என்பதைச் சொல்ல முடியுமா?

தி ஜானகிராமனின் அன்பே ஆரமுதே, செம்பருத்தி, உயிர்த்தேன், நளபாகம், அப்புறம் சிறுகதைகள். 

ஜெயகாந்தனின் கதைகளை இன்னொருமுறை மீள்வாசிப்புக்காக எடுத்திருக்கிறேன். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் முழுதும். இவர்களுடைய எழுத்துநடை வித்தியாசமானது, கதைக்களம், கதை சொல்கிற உத்தி எல்லாமே வித்தியாசமானவை.இது ஒரு சிறு fraction மட்டும்தான். ஆங்கிலத்தில் படிப்பதற்கு ஏராளமான எழுத்தாளர்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டர் டூமா, சார்லஸ் டிக்கென்ஸ் போன்ற பழைய எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும்.           

மீண்டும் சந்திப்போம்.                 

17 comments:

  1. ஆனந்த யாழ் என்ற கட்டுரைகள் புத்தகம் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் அட்டையில் மனதை நனைக்கும் கண்ணீர் மழை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல என்பது புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே புரிகிறது. மிகவும் மனதை கனக்கச் செய்யும் புத்தகம் இது. (நா.முத்துக்குமார் - அவரைப்பற்றி பலரும் எழுதிய நினைவலைகள் கொண்ட கட்டுரை தொகுப்பு)

    ReplyDelete
    Replies
    1. சௌகரியமாகக் கடைசிக் கேள்விக்கு மட்டும் பதிலெழுதிவிட்டு மற்றதை சாய்ஸில் விட்டுவிட்டீர்களோ சரவணன்? நான்குவரிகளுக்குள் உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகம் செய்திருக்கிறீர்கள் நன்றி

      கொஞ்சம் மற்றக்கேள்விகளுக்கும் விடைசொல்ல முன்வந்தால் மகிழ்வேன்

      Delete
    2. பல் வலி, அதனால் ஏற்பட்ட காய்ச்சல் என்று அவதியுற்றுக் கொண்டிருக்கிறேன். உடல்நிலையை சரி செய்து கொண்டு தங்களது மற்ற கேள்விகளுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன்...

      Delete
    3. உடல் நலம் நன்றாகத் தேறியபின்பு உங்களுடைய பார்வை என்ன என்பதை எழுதுங்கள் சரவணன்! அவசரமே இல்லை.

      Delete
  2. 1)  காசு கொடுத்து வாங்குவது அதிகம்.  ஏற்கெனவே அப்பாவின் கலெக்ஷன் வேறு இருக்கிறது.  அதைத்தவிர pdf வகையறா...

    2)  நூலகங்கள் - 1980 களில் சென்றது!  தொண்ணூறுகளில் கொஞ்ச காலம்!

    3)  முன்பு கதைகள் படித்ததுண்டு.  சுஜாதா, சாண்டில்யன், கல்கி, பாபா என்று எல்லா வகையிலும்..  இப்போது சரித்திரம் சம்பந்தப்பட்ட மற்றும் கொஞ்சம் அரசியல் கலப்பிலான புத்தகங்கள் 

    4)  புத்தகத்தைப் பொறுத்து.  மூவாயிரத்து ஐநூறு பக்கங்கள் கொண்ட அந்திமாலை தேவனை ஒரு மாதத்தில் முடித்தேன்.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட சில புத்தகங்கள் பக்கம் பக்கமாக..  மெதுவாக...

    கடைசிக் கேள்விக்கு பதில் "கஷ்டங்க..."

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! கடைசிக்கேள்விதான் இருப்பதிலேயே மிக எளிமையானது. ரசித்துப்படித்த புத்தகம் என ஒன்று இருக்குமானால், அதைப்பற்றி அதிகம் வேண்டாம், ஒரு நாலுவரி கருத்துரை சொல்லக்கூடவா முடியாது?

      Delete
    2. புத்தகங்கள் எவைகுறித்தவை என்பதை விட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதில் தான் வாசிப்பின் அருமை இருக்கிறது என்பது என்னுடைய அனுபவம் ஸ்ரீராம்! தாலிபன் பிரச்சினையைப் புரிந்து கொள்ள நான் படித்தவை மேலும் மேலும் குழப்பின. பாகிஸ்தானில் உள்ள மாகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் பிரத்யேகமான பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்துகொண்டபிறகுதான் தாலிபன்களை பாகிஸ்தான் ஏன் அத்தனை செலவு செய்து கொம்புசீவிவிடுகிறது என்பதே ஒருவாறாகப் புரிந்துகொள்ள முடிந்தது. சமீபகால வரலாற்றை பிரிட்டிஷ்காரர்கள் நன்றாகவே குழப்பிவைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டபிறகு எனக்கு நம்மூர் சரித்திரக்கதையாளர்கள் பலரும் சலித்தே போனார்கள்!

      Delete
    3. எந்தப் புத்தகத்தை, எந்த புத்தக ஆசிரியரை நம்புவது என்றும் குழப்பம் வந்துவிடும் , அவரவர் மன எண்ணங்களுக்கு ஏற்ப வரலாற்று நிகழ்வுகளை எழுதினால்!  ஆனால் ஒரு பொதுவான அவுட்லைன் புரியும்.  சசி தரூர் புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன், படிக்கத்தான் ஓடவில்லை.  அழகிய மரம் வாங்கி வைத்திருக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவில்லை.  ரொம்ப விரும்பி வாங்க நினைத்த விலை உயர்ந்த புத்தகம் ஒன்று பரிசாக வந்தது.  ஆனால் அதை ஓரளவுக்குமேல் படிக்க முடியவில்லை!

      //ரசித்துப்படித்த புத்தகம் என ஒன்று இருக்குமானால், அதைப்பற்றி அதிகம் வேண்டாம், ஒரு நாலுவரி கருத்துரை சொல்லக்கூடவா முடியாது//

      நாலுவரி என்ன, பதிவே எழுதி இருந்தேன்.  சமீபத்தில் ரசித்துப் படித்த புத்தகம் அத்திமலைதேவன் ஐந்து பாகம்!  ஆனால் ரசனைகளை, பிடித்ததை சட்டென ஒரு புத்தகத்தில் முடித்துவிட முடியுமா?

      Delete
    4. விரிவான பதிலுக்கு நன்றியும் சந்தோஷமும் ஸ்ரீராம்!

      ஒரு நூலாசிரியருடைய நம்பகத்தன்மை பெரும்பாலான தருணங்களில் அவர் எழுத்திலேயே வெளிப்பட்டுவிடும் ஸ்ரீராம்! எல்லாவற்றையும் நம்பித்தான் ஆகவேண்டுமென்கிற கட்டாயம் இருக்கிறதா என்ன? காவல்கோட்டத்தை வாங்கிப் பொறுமையாகப் படிக்க முடியவில்லை. இந்தலட்சணத்தில் வேள் பாரி இரண்.டு பாகத்தையும் மகன் வாங்கி அனுப்பினான். எழுத்தின் லட்சணம் தெரிந்ததனால் புரட்டிக்கூடப்பார்க்கவில்லை. இதெல்லாம் நிறைய வாசிப்பதனால் வாசகரே தன்னனுபவத்தில் தெரிந்து சொல்லக்கூடியதுதான்!

      காலச்சக்கரம் நரசிம்மா எழுதுவதை விரும்பி ரசித்து எபியில் நீங்கள் எழுதியதை மட்டுமல்ல முகநூலிலும் அவ்வப்போது குறிப்பிடுவதை, அவருடைய FB பக்கங்களில் கமெண்ட் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன் ஆனாலும் அவருடைய புத்தகம் எதையும் வாசிக்க விருப்பம் எழுந்ததில்லை.

      ஆனால் நான் புத்தகங்களை எந்த அளவுக்கு வாசிக்கிறேன், நேசிக்கிறேன் என்பதை சு வெங்கடேசன் காலச்சக்கரம் நரசிம்மா போன்றவர்கள் தீர்மானிப்பதில்லை.

      Delete
    5. ஒருவருடைய விருப்பம் இன்னொருவருக்குப் பொருந்தாது.  ஆயினும் காலச்சக்கரம் நரசிம்மாவின் படைப்புகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.  இது என் யோசனை மட்டுமே.   குறிப்பாக காலச்சக்கரம், குபேரவனக்காவல், போன்றவை.

      காவல்கோட்டம், அப்படி என்னதான் இருக்கிறது என்று முழுவதும் படித்தேன்.  அந்த நூல் பற்றி எஸ்ரா சொன்னது நாகரீகம் இல்லை என்றாலும் அதில் ஓரளவு உண்மை இருந்தது.  வேள்பாரி படிக்கும் துணிவெல்லாம் இல்லை.

      இதைத்தான் படிக்கவேண்டும் என்கிற சுவாரஸ்யங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன.  நிலையாக எதிலும் சுவாரஸ்யம் இருக்காது. 

      படைப்புகளின் நம்பகத்தன்மை நமக்கே படிக்கப் படிக்கப் புரியும்.  

      Delete
    6. ஸ்ரீராம் ! எல்லோருக்கும் ஒரேமாதிரியான விருப்பம் என்றிருந்தால் போரடித்துவிடும்! லோகோ பின்ன ருசி என்று தெரியாமலா சொன்னார்கள்? !!

      என்னுடைய வாசிப்புப்பட்டியலில் ஒரு நீண்டபட்டியலே காத்திருக்கையில் பழங்கதையை இன்னொரு வித்தக கந்தலாக எழுதுகிறவரிடம் வீணடிப்பதற்கு என்னிடம் நேரமில்லை . ஆயிரம் பக்க அபத்தம் என்று எஸ்ரா சொன்னதுதான் நிஜம்! எஸ்ரா அப்படிச் சொன்னதற்காகவே, நூலை ஆதரித்து. எழுதின ஜெமோவை என்னவென்று சொல்வீர்கள் ஸ்ரீராம்?

      Delete
  3. Kindle Unlimited -இல் iPad மூலம் படிக்கிறேன். எந்த சமயத்திலும் பத்து புத்தகங்கள் எடுத்துக்கொள்ளும் வசதி. இப்போது படித்துக்கொண்டிருப்பது தெய்வத்தின் அருள் - பெரியவாவிடம் பக்தர்கள் அனுபவங்கள், நாரத புராணம், பைரப்பாவின் உத்தரகாண்டம், ரமணர் அருளிய நான் யார், தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் தொழில் முறை புத்தகங்கள்.

    பல பல வருடங்களுக்கு பிறகு iPad மற்றும் Kindle Unlimited மூலம் தொடர்ந்து படிக்கிறேன்.

    சென்னையில் சிலவருடங்கள் இருந்த மொபைல் லெண்டிங் லைப்ரரி மிகவும் அனுபவித்தேன். தென் சென்னையில் 1990 களில் , மாதம் 200 ரூபாய் என நினைக்கிறேன். 2 தமிழ், 3 ஆங்கிலம் வார மாத இதழ்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள். வாரம் இரு முறை. சுழற்சி முறையில். நான் நிறைய படித்தது அப்போது தான்!

    தினம் ஒரு பத்து முதல் இருபது பக்கங்களாவது படித்துவிடுவேன்.

    பிடித்த எழுத்தாளர் பைரப்பா. பிடித்த புத்தகங்கள் பருவம் மற்றும் ரமணர் அருளிய நான் யார் - பேரா க மணி அவர்களின் விளக்க உரையோடு வேகமாக படித்தது - பருவம் - சென்னையிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையான 24 மணி நேர பயணத்தில் கிட்டதட்ட 12 மணிநேரம் படித்தேன். தொடர்ந்து அதிகம் படித்தது அப்போதுதான்!

    கதைகளில் விருப்பம் குறைந்துவிட்டது. தத்துவம் மற்றும் புராணங்கள் மட்டுமே அதிகம் படிப்பது. பங்கு சந்தை பற்றியும் படிப்பேன். நடு நடுவே அரசியல்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து! பொறுமையாக எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

      கிண்டில் வாசிப்பு இப்போது வாச்கர்களுடைய எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது என்று நன்கு புரிந்தாலும், எனக்கென்னவோ இன்னமும் கிண்டில் வாசிப்பு கைகூடவில்லை!

      தெய்வத்தின் குரல் தொடராக வந்துகொண்டிருந்த நாட்களில் படித்தது ரமணருடைய நான் யார் என்கிற விசாரம், நேதி நேதி இது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டே வந்து, கடைசியில் கழிக்கமுடியாமல் ஏதுமிஞ்சுகிறதோ அதுவே நான் என்கிறமாதிரி ஒரு கடினமான மலைப்பாதை. எல்லோருக்குமானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஏகப்பட்ட காலமாயிற்று. பைரப்பா இனிமேல்தான் படிக்க வேண்டும். தேவன் எழுத்துநடை மிகவும் எளிமையானது இன்றைக்கும் வாசிப்பவரை வசீகரிப்பது. மிகவும் நல்லதேர்வைச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம்.

      Delete
  4. புத்தகத்தை நான் விலைக்கு வாங்கிப் படிப்பேன். சிலசமயங்களில் வாங்கின புத்தகம் திராபையாக இருந்தால் (விகடன் வெளியீட்டில் எம்பி ஒருவர் மொழிபெயர்ப்பு படு கேவலமாக இருந்தது... என் காசு வேஸ்ட்) பதிப்பகத்தைத் திட்டுவேன், ஏமாற்றி காசை அபேஸ் செய்யறாங்களேன்னு.

    நான் சின்னவனாக இருந்தபோது பொது நூலகம் பயன்படுத்தியிருக்கேன்.

    எனக்கு தன் அனுபவங்கள் போன்ற புத்தகங்கள்தான் பிடிக்கும், ஆன்மீகமோ இல்லை வாழ்வியல் அனுபவமோ. கவிதை பக்கமே போகமாட்டேன்.

    நான் வேகமாகப் படிப்பவன். தமிழ் என்றால் 200 பக்கங்கள்லாம் சர்வ சாதாரணமாகப் படிப்பேன், புத்தகம் ரசனைக்குரியதாக இருக்கடும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே பெரும்பாலான எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தகங்களைப் பற்றிய நேர்மையான சிறுகுறிப்பைக்கூடத்தருவதில்லை. நேர்மையான விமரிசனங்களை விரும்புவதுமில்லை. சரக்கில் சரமிருக்கிறதோ இல்லையோ, வாசிப்பவன் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்பது உண்மைதான் நெல்லைத்தமிழன் சார்!

      பொது நூலகங்கள் வாசிப்பை ஊக்குவிப்பதில் மிகவும் முக்கியமானவை. இங்கே உள்ள அரசியல் சூழல் நூலகத்துறையை.க் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறது.

      புத்தகங்கள் செய்கிற மாயமே நம்முடைய ரசனையை மேம்படுத்திக்கொண்டே இருப்பதுதான்!

      Delete
  5. என் ஆல் டைம் ஃபேவரைட், ஶ்ரீ எம் எழுதிய இமயமலையில் ஒரு இதய குரு, சுவாமி ராமாவின் புத்தகம், அவரைப்பற்றி இன்னொருவர் எழுதிய புத்தகம்.

    இது தவிர தங்கள் வரலாற்றை எழுதிய வாலி, சிவகுமார், என்று பெரிய லிஸ்ட் உண்டு, ஆட்டோ சங்கர் உட்பட

    ReplyDelete
    Replies
    1. இந்தப்புத்தகத்தைக்குறித்து எங்கள்blog இல் நீங்கள் எழுதிய அறிமுகக்குறிப்பை வாசித்திருக்கிறேன், அதற்குப்பின்னூட்டமும் எழுதியிருக்கிறேன். தன்வரலாறு சுயமாக எழுதத்தெரிந்த நிறையப்பேரை வாசித்திருக்கிறேன். நல்லவேளையாக ஆட்டோசங்கர் மாதிரியானவர்கள் வரலாறெல்லாம் என்னுடைய வாசிப்பில் இருந்ததில்லை.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)