யாரும் எதிர்பாராவண்ணம் மிகபெரிய அதிரடி அஸ்திரத்தை பறக்கவிட்டுவிட்டார் சுவாமி ஆம்!
ஜெகத்கஸ்பர் எனும் பாதிரி சர்ச்சில் திருப்பலி வைப்பதை தவிர எல்லா இந்திய பிரிவினைகளுக்கும் கொடிபிடிப்பவர் என்பது உலகறிந்தது புலிகளின் மிக நெருங்கிய நண்பரான இவர் முன்பு பிலிப்பைன்ஸில் சர்ச்சைகுரிய வானொலியில் பணியாற்றியதும் பின் இலங்கைக்கு சென்று புலிகளோடு பழகியதும் பின்னாளில் லண்டனிலும் தமிழகத்திலும் புலிகளின் அறிவிக்கபடாத பினாமியாக சுற்றிவந்ததும் எல்லோரும் அறிந்தது. அன்னார் கனிமொழி முகாமில் மகா முக்கிய புள்ளி என்பது உலகறிந்தது
அன்னாரின் புலி ரகசியங்களையும், 2006ல் புலிகளை அமெரிக்கா தடை செய்தபொழுது பொழுது வெளியிடப் பட்ட ஆவணங்களையும் இப்பொழுது வெளியிடுகின்றார் சுவாமி. இதுகாலமும் மத்திய அரசு இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை என்றால் இதெல்லாம் சர்வதேச விவகாரங்கள், சில நாடுகளின் அனுமதியில்லாமல் பல விஷயம் சாத்தியமில்லை. இப்பொழுது எங்கோ அனுமதி கிடைத்துவிட்டது, ஜெகத் கஸ்பரை டெல்லி மேலிடம் குறிவைத்தாயிற்று, சாமி சரியாக அம்பை வீசிவிட்டார்.
புலிப் பாதிரி, புலித் தந்தை கெஸ்பருக்கு இனி போதாத காலம், விஷயம் எங்கெல்லாமோ சுற்றத் தொடங்கி விட்டது. சரி, இவ்வளவு காலமும் இல்லா சிக்கல் இப்பொழுது கஸ்பர்மேல் ஏன் விழுகின்றது என்றால் சுவாமியினை களத்துக்கு இழுத்து வந்த அந்த சேஷாத்திரி பள்ளிக்கும் பாதிரிக்கும் ஏதோ வில்லங்கம் என்பது மட்டும் புரிகின்றது.
ஆக, "பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, அந்த புலிபாதிரியினை மன்னிக்காதேயும், இந்தியத் திருநாட்டை குழப்ப வந்து தமிழக மக்களிடம் பிரிவினையினை வளர்க்கும் அந்த புலித் தந்தையின் தோலை சுப்பிரமணியன் சாமி எனும் இறைவாக்கினர் வழியாக நீர் உரித்ததற்கு கோடான கோடி நன்றி தகப்பனே! கோட்டான கோடி நன்றி..." என்று முகநூலில் நன்றி பாராட்டுகிறார் ஸ்டேன்லி ராஜன்.
He (Dr.Swamy) also states “One correction.Father Gasper Raj of Christian Church (no surprise since LTTE was patronised by Vatican and hence TDK complicity),is that he formed Chennai Sangamam with Kanimozhi and BC to hold “cultural festivals”. The two cheated Kanimozhi of funds collected so she has quit him”
These are the reasons one can’t fully abandon Subramanian Swamy and we need him for some hot cases. There is not a good bad terrorist or bad bad terrorist. Whoever oppose and condemn terrorism must be backed as long as they genuinely fight for.
But having said that hope this is not an another hit and run or miss case என்கிறார் Raaman CK
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை ஏதோ காரணங்களுக்காக இங்கே ஒருவர் மிகவும் விரும்பலாம் அல்லது வெறுக்கவும் செய்யலாம். கட்டுப்பாடில்லாத loose gun என்று பழிக்கவும் செய்யலாம். ஆனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாதவராக, இந்த மாதிரி விஷயங்களை அம்பலப்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவர டாக்டர் சுவாமி அவசியமானவராகிறார் என்ற என்னுடைய கருத்திற்கு இந்த இரு நண்பர்கள் பகிர்வுகளும் வலுசேர்க்கின்றன.
வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில் ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகப் பதவி தரவில்லை என்பதே சர்ச்சையாக எழுந்து சற்றே அடங்கி இருக்கிற நேரத்தில், மலையாளக்கவிஞன் நினைவாகக் கொடுக்கப் படும் விருதை வைரமுத்துவுக்கு அறிவித்ததே ஒருவித அரசியல்தான்! #MeToo புகார்களில் சிக்கிய காமுகனுக்கு விருதா என்று கேரளத் திரைப்பட நடிகைகள் பலரும் கொதித்தெழுந்து கடுமையாக எதிர்த்ததில் ONV கல்சுரல் அகாடெமி ஜகாவங்கியதும், விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அறிவித்ததுகூட தற்காப்பு அரசியல் தான்!
காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால் இப்படி என்று நொந்து கொள்ளும் வைரமுத்து, உன்னுடைய விருதைத் திருப்பிக்கொடுத்துவிடுகிறேன், மேற்கொண்டு இரண்டுலட்சரூபாய் போட்டுக்கொடுத்து விடுகிறேன், ஆளை விட்டால் போதுமையா சாமியென்று கதறுவது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கிறது. துதிபாடியோ lobby செய்தோ விருதுகள் வாங்கியே பழக்கப்பட்டவருக்கு இது மிகவும் வேதனையான அனுபவம் தான்! ஆனால் ராமன் பட்டாபி போன்ற முகநூல் நண்பருக்கோ இதைக் காவியமாக எழுதிப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு!
இங்கே ஒரு 34 நிமிட விவாதத்தில் நாச்சியாள் சுகந்தி, அஜயன் பாலா இருவருடனும் நிஜந்தன் விவாதிப்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது.
அவரை விதைத்தால் துவரை முளைக்குமா? ஆரம்பப் பள்ளிக்கூட மாணவனுக்குக் கூடத் தெரிந்த விஷயம் தான்! ஆனால் கழகங்களுக்குப் பட்டாலும் புரியாது, திருந்தாது என்பதும் கூடத் தெரிந்த வரலாறுதான்!
கொங்குமண்டலத்தைப் புறக்கணித்துவிட்டு, இப்போது விளம்பரத்துக்காக கோவைக்குப்போனார் இசுடாலின். #GoBackStalin என்று ஜனங்கள் ட்வீட்டரில் அவர் முன்பு செய்த பாணியிலேயே வரவேற்புக் கொடுத்ததில் இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் ஆறாவது இடத்திலும் #GoBackStalin ஹேஷ்டாக் இன்றைக்குப் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது
ஆக ...ஆக .....ஆக என்று காமெடிகள் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. திகட்டுமுன் நிறுத்திக் கொள்வது தமிழக ஆரோக்கியத்துக்கு நல்லது!
மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள் மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?
சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி! 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி. அதுமட்டும் தானா?
இந்தமாதிரி வக்கிரமான பாடல் எழுதுகிறவருக்கு விருது! முதல்வர் பாராட்டு என்பதெல்லாம் தமிழகத்தின் சோகம்.
சிரிப்புத்தான் வரு.குதையா! இடுக்கண் வரும்போது சிரித்துத்தான் சமாளித்தாக வேண்டும்! வேறென்ன செய்ய? மேலே உள்ள ஸ்க்ரீன் ஷாட் நாச்சியாள் சுகந்தி என்பவருடைய முகநூல் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக் கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல நிறையவே வினோதமான விஷயம்!
ஒரு எழுத்தாளன் மற்றவர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறான்? அதையே இன்னொருவிதமாகக் கூட மாற்றிக் கேட்கலாம். எதனால் ஒரு எழுத்தாளன் மிகவும் கொண்டாடப்படுகிறான்? லியோ தோல்ஸ்தோயைப் பற்றி ஒரு பிரபலம் சொன்னதாக இப்படிச் சொல்லப் படுவதுண்டு::: வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாக தன்னுடைய எழுத்தில் பிரதிபலித்தவர் தோல்ஸ்தோய்!சமீப கால எழுத்தாளர்களில் எவரையாவது அப்படிச் சொல்ல முடியுமென்று நினைக்கிறீர்களா? இங்கே தமிழில் அப்படித் தான் வாழ்கிற காலகட்டத்தின் கண்ணாடியாக இருக்க முயற்சித்த எழுத்தாளர் என்று எவரையாவது சொல்ல முடியுமா? இப்படியான பல கேள்விகள் எனக்குள் அவ்வப்போது வந்துபோகும்
இந்துதமிழ் திசையில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கி. ரா. என்கிற கி.ராஜநாராயணன் அவர்களுக்கு படையலாக ஒரு 31 நிமிட ஆவணமாக கி.ராவுடன் நடத்திய நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தோல்ஸ்தோயைப் பற்றிச் சொன்னமாதிரி தான் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாக கி ராஜநாராயணன் இருந்தாரென்று சொல்ல முடியாதுதான்! ஆனால் எழுத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல இயல்பிலேயே பாசாங்கற்ற எழுத்தாளராக, தன்னைக்குறித்த சுயமோகம் இல்லாத வெள்ளந்தி மனிதராகவும் வாழ்ந்தவர் என்பதை இந்த நேர்காணலில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகனாக கி.ராவை மதிப்பிட எனக்குத் தகுதி எதுவும் இல்லை என்றாலும் தேர்ந்த வாசகரும் பத்தி எழுத்தில் தனக்கு இணையில்லாதவருமான R.P. ராஜநாயஹம் எழுதிய பகிர்வை அவருக்கு நன்றி தெரிவித்து இங்கே பார்க்கலாமா?
பெரிய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை, எழுதுவதைக் கேட்க ஆசைப்படுவார்கள்.
தன்னைப்பற்றிய சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். கி. ரா பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னே 'என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்' என்று நான் அவருக்கு போன் போட்டு பேசும் போது ஆரம்பித்தார். ஆரம்பித்தார் என்று நான் சொல்லக் காரணம், அவருக்கு அடுத்தடுத்து போன் போட்ட போதெல்லாம் அவர் இதை தொடர்ந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்தார்.
கே. எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிடப் போகும் 'கி. ரா. எனும் கதை சொல்லி - 85' எனும் நூலில் நான் எழுதும் ஒரு கட்டுரையும் சேர்க்க தான் விரும்புவதாக விளக்கினார். நடிகர் சிவகுமார் கூட ஒரு கட்டுரை எழுதித் தந்து விட்டார் என்றார்.
1990 துவங்கி 2005 வரை ஒரு இருபது கட்டுரைகள் இலக்கிய சம்பந்தமாக ' மேலும் ', கணையாழி, காலச்சுவடு, சௌந்தர சுகன், கனவு பன்முகம் , இணைய இதழ்கள் என்று பத்திரிக்கைகளில் சொற்பமாக எழுதியதுண்டு. அதற்கே ஒரு திரைப்பட இயக்குநர் 'ராஜநாயஹம் பேனாவை எடுக்க மாட்டார். எடுத்தா பூகம்பம் தான்' என்றாராம். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை'யெல்லாம் அந்த கணக்கில் தான்.
நான் அதிகம் எழுதுபவன் அல்ல என்பதோடு என்னுடைய வேலைப்பளு, சொந்த வாழ்க்கை பொருளாதார துயரங்கள் அப்போது எழுதுகிற ஆர்வத்திற்கு பெருந்தடை. புத்தக வாசிப்பு எப்போதும் போல உச்சத்தில் தான் இருந்தது.
"ஆன வயதிற்கு அளவில்லையெனினும் தெளிவே வடிவாம் கி. ரா"'என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்தேன்.
இப்போது நினைத்துப் பார்க்க விசித்திரமாக இருக்கிறது. வாரம் ஒரு பத்து வரி எழுதுவது பெரும்பாடாக இருந்தது. ஒரு பாதி எழுதிய நிலையில் திருப்தியின்றி தூக்கிப் போட்டு விட்டேன்.மனசுக்கு சங்கடமாயிருந்தது.
கி. ரா கதைசொல்லி பத்திரிகையில் அப்ப மூனு வருஷத்துக்கு முன் ராஜநாயஹம் பற்றி டைரியில் ஒரு பக்க குறிப்பு எழுதியிருந்தார். பதிலுக்கு நான் அவர் பற்றி எழுத வேண்டாமா என்று மனசாட்சி தொந்தரவு செய்தது.
கி. ரா "என்னய்யா ராஜநாயஹம், சீக்கிரம் அனுப்புங்க. என்னய பத்தி சீக்கிரமா எழுதி அனுப்புங்க" என்றார்.
ஒரு வழியாக மீதியையும் எழுதி முடித்து, எழுதியதில் ஒரு திருத்தம் கூட செய்யாமல் அவருக்கு அனுப்பி வைத்தேன். படித்து விட்டு அவர் சந்தோஷமாக சொன்னார் ' ஒங்க கட்டுரை ரொம்ப நல்லா வந்துருக்குய்யா'
' கி. ரா எனும் கதை சொல்லி- 85' நூலில் ராஜநாயஹம் எழுதியதும் 2007ல வெளி வந்தது.அந்த கட்டுரை கீழே :
"ஆன வயதிற்களவில்லை எனினும் தெளிவே வடிவாம் கி. ரா. "
மதுரை ரீகல் தியேட்டர் அருகிலிருந்த சர்வோதய இலக்கியப் பண்ணையில் தி.ஜானகிராமனின் ‘மரப்பசு' நீலபத்ம நாபனின் ‘பள்ளிகொண்ட புரம்' இரண்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டு கிளம்பவிருந்த நேரம்
அங்கே புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு நின்றிருந்த ஒருவர் ‘கி.ராவின் கதவு' சிறுகதைகள் நூலையெடுத்து ” இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் “ என்றார்.”கதவு கதையை முதலில் படித்துப் பாருங்கள், அதன்பின் வாங்குங்கள் "
இத்தனைக்கும் அந்த நபர் புத்தகக் கடையோடு சம்பந்தப்பட்டவரும் அல்ல.நான் அந்தக் கடையில் புத்தகங்கள் பார்த்து வாங்கிய நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருந்தவர் அந்த மனிதர். நான் புன்னகையுடன் கதவு சிறுகதைகளுக்கும் பில் போடச் சொன்னேன்.” வாங்க காலேஜ் ஹவுஸில் காப்பி சாப்பிடுவோம்” என்று 'கதவை' சிபாரிசு செய்த நபரை அன்போடு அழைத்தேன்.
என் பெயர் கோணங்கி. நான் ஒரு எழுத்தாளன்”.'தச்சன் மகள்' ஞாபகத்திற்கு வந்தது.”அந்தக் கதையை நீங்கதானே எழுதியிருக்கீங்க” “ஆமாம்”
டிபன், காப்பி சாப்பிட்டு விட்டு விடைபெற்றார் கோணங்கி.கோணங்கி அறிமுகமான அதே நாளில்தான் கி.ராவையும் எனக்கு தெரிய வந்தது.
தொடர்ந்து கி.ராவின் அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டு என் நண்பன் சரவணன் மாணிக்கவாசகத்திடம் சொன்னேன். 'தி.ஜானகிராமனுக்கும் கி.ராஜ நாராயணனுக்கும் ஒரே மாதிரி மனவார்ப்பு. இரண்டு பேருமே வாழ்க்கையின் ரசிகர்கள்.'
அ. மாதவன் கதைகளுக்கு சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரையில் கி.ரா.வை தி.ஜா.வின் குடும்பத்தைச் சேர்ந்தவராக குறிப்பிட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.கதை சொல்லுவதில் கி.ரா. மன்னன்.
கி.ரா. கதை சொன்னால் பிரமாதமாயிருக்கிறது. கி.ரா.வின் எழுத்துமுறையே ‘ கதை சொல்லுவது ‘ தான்.
1984ம் ஆண்டு கி.ராவுக்கு மதுரையில் அவருக்கு அறுபது வயது நிறைந்ததையொட்டி விழா எடுக்கப்பட்டது.
அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து நன்கொடைஅனுப்பினேன்."விழாவுக்கு வர இயலவில்லை. கி.ரா. வை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்தேன்" என்று எழுதியிருந்தேன்.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இடைசெவல் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நனவாகவில்லை.
காலத்தின் கணக்கு எப்போதும் வேறாக இருக்கிறது. 1989ம் ஆண்டு புதுவையில் தொழில் நிமித்தமாகக் குடியேறிய போதுதான் கி.ரா.வைப் புதுவைப் பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியராக அவருடைய அலுவலகத்தில் சந்தித்து தடாலென்று காலில் விழுந்தேன். கி.ரா. தன் சட்டைப் பையைத் தடவி
” காசு எதுவும் என்னிடம் இல்லையே ” என்றார்.” காசு எனக்கு வேண்டாம். ஆசிர்வாதம் வேண்டும் ” என்றேன்.
அவ்வப்போது அவருடைய அலுவலகத்திற்குப் போய் அவரைச் சந்தித்து வந்தேன். ஒரு நாள் மாலை “ வாங்க என் வீட்டுக்குப் போவோம் “ நான் சந்தோஷமாக அவருடன் சென்றேன்.வீட்டில் மகாலட்சுமி மாதிரி கணவதியம்மா. “ இவர் தான் ராஜநாயஹம் “ கி.ரா அறிமுகப்படுத்தினார். சற்றே ஆச்சரியத்துடன், “இவர்தானா ராஜநாயஹம் ” கணவதியம்மா கேட்டார்கள். ” இவரைப் பத்தி நான் என்ன சொன்னேன் சொல்லு “ என்றார் கி.ரா.” ராஜநாயஹத்தைக் கூட்டிக் கொண்டுபோய் டிரஸ் எடுக்கணும்னு சொன்னீங்க “
என்னுடைய உடைகளைக் கி.ரா. ரசித்திருக்கிறார். என்னுடைய பேச்சையும் ரசித்திருக்கிறார் என்பதைப் பதினைந்து வருடங்கள் கழித்து 2004ல் ' கதை சொல்லி ‘ கி.ரா டைரியில் குறிப்பிட்டார்.கி.ராவைப் பற்றி எழுத எண்ணும் போது தி.ஜாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. ' தவளைகளை தராசில் நிறுத்தி எடை போடுவது போல ‘ சிரமமான விஷயம்தான்
.வற்றாத ஊற்று போல அவருக்குச் சொல்லவும் எழுதவும் நிறைய நிறைய இருக்கிறது. அப்போது கூட கணவதியம்மாவிடம் ஏதேனும் ஒரு விஷயம் சொல்லும்போது ‘ இவ்வளவு நாளா நீங்க அதை சொன்னதேயில்லையே ‘ அம்மா பிரமிப்புடன் சொல்வார்களாம். அவரோடு ஐம்பத்தைந்து வருடம் குடும்பம் நடத்தும் அம்மாவுக்கே புதிதாய்ச் சொல்ல இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.சுவாரஸியமாகக் கதை சொல்வதைக் கி.ரா பாங்கியம் வீரபாகுவிடம் கிரகித்ததாக சொல்லியிருக்கிறார். கி.ரா. சிறுவனாயிருக்கும் போது இந்தப் பாங்கியம் வீரபாகு என்ற கதை சொல்லி இடைசெவல் கிராமத்திற்கு வருவார்.
ஊரார் கூடிக் கதை கேட்பார்களாம். பாங்கியம் என்பது ஒரு தாள வாத்தியம். தோலினால் மூடப்பட்ட வெங்கலத்தினால் ஆன மரக்கால். தோலில் நடுவில், எருமை நரம்பில் முடுக்கப்பட்டிருக்கும்.
தவுல் குச்சியால் பிடித்துக் கொண்டு வலது கையால் விரல்களால் மீட்டிக் கொண்டே பாடி வீரபாகு கதை சொல்லும்போது கி.ராவுக்குக் கதை சொல்லுவது எப்படி என்பது பிடிபட்டிருக்கிறது.அதனால்தான் அவரது எழுத்துமுறையே கதை சொல்லுவதாய் ஆகிப் போனது.
ஆசிரிய நடையைப் பேச்சு நடையில் எழுதக் கூடாது ‘ என்று ரகுநாதன், கு.அழகிரிசாமி துவங்கி சிவபாத சுந்தரம் வரை பலரும் கடுமையாக ஆட்சேபம் செய்த போதும் கூட கி.ராவிடம் பலிக்கவில்லை.
சந்தோஷ் குமார் 'விமர்சனம் இணைய தளம்' இன்று வெளியிட்டுள்ள R. P. ராஜநாயஹம் பதிவு
ஒரு நல்ல கதைசொல்லிக்கு இன்னொரு எழுத்தாளர் இதைவிட சிறப்பாக நினைவுகளால் அஞ்சலி செய்து இருக்கமுடியாது.
ஒருவழியாக கேரளத்தில் இரண்டாவது முறையாக இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் இன்றைக்குப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் கேரளம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மந்திரிசபை பதவியேற்பு நடந்து விட்டது. 140 இல் 99 இடங்களைப் பிடித்தவர்கள், மந்திரிசபையை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்கள் ஆனது ஏன் என்ற கேள்வி இருந்தது. மந்திரிசபையில் யார்யார் என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதை விட பழைய முகங்கள் எவரும் வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கே இத்தனை காலமாகி இருக்கிறது. முந்தைய மந்திரிசபையில் மிகவும் திறமையாகப் பணியாற்றி எல்லோராலும் அபிமானிக்கப் பட்ட K K ஷைலஜாவுக்கு மந்திரிசபையில் இடமில்லை என்பதே பினரயி விஜயன் மீது கேரளத்தில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
எது எப்படியானால் தான் என்ன? தமிழக அரசியலின் கபட வேடதாரிகளுடைய வாழ்த்தும் வரவேற்பும் பினரயி விஜயனுக்கு இருக்கிறதே! அது போதாதா என்ன?
*******
ஆந்திர அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தே நீண்டகாலமாகி விட்டதல்லவா? சந்திரபாபு நாயுடு கொஞ்சம் மாநிலத்தைத் தாண்டி அரசியல் செய்ய முயன்று YSR காங்கிரசிடம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிற பரிதாபத்தைக் கடைசியாகப் பேசிய நினைவு. ஆனால் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்கிற விதம் மிகவும் விபரீதமானதாக இருக்கும் போலத் தெரிகிறதே!அவரை எதிர்த்தோ விமரிசித்தோ எவரும் வாயைத் திறக்கக் கூடாதென்ற ரீதியில் அப்படியான செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறவர்கள் எவராயினும் அவர்கள் மீது Sedition தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அவருடைய கட்சி MP ஒருவர்மீதே அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார்மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதி மன்றம், அவருக்கு ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. கருத்து சுதந்திரம் என்று கம்பு சுற்றிக் கொண்டிருந்த போராளிகள் எவர் கண்ணிலும் இது ஏன் படவே இல்லை என்கிற அனாவசியமான கேள்வியை நான் கேட்கப்போவதே இல்லை!
இப்படிப்போற்றிப்பாடப்பட்டதெல்லாம் மிகவும் பழைய கதை! Telugu media outlet TV5 News has moved the Supreme Court seeking quashing of an First Information Report (FIR) in a sedition case in Andhra Pradesh. Shreya Broadcasting Pvt Ltd, which owns TV5, has contended in its plea that the state government "intends to silence" critics and the media by filing a "vague FIR" and abusing the process of law. "It is humbly submitted that the continuance of the FIR is likely to cause a chilling effect on the media in such crucial times of the pandemic, when truthful and fearless reporting is the need of the hour," said the plea என்கிறது செய்தி.ஆட்சி அதிகாரம் கண்ணை மறைக்கிற தருணங்களில் வீழ்ச்சியும் சேர்ந்தே வரும் ரன்பது வரலாறு சொல்கிற அனுபவம்!
*******
எம்ஜியார் படப்பாடல் வரிகளோடு காட்சி தருகிற கமல் காசர் அது தனக்கே பாடமாகிப் போகும்
என்பதை ஏனோ மறந்துவிட்டார்!
கமல் காசர் கட்சியிலிருந்து இன்னொரு முக்கியப்புள்ளி CK குமரவேல் இன்றைக்கு விலகியிருக்கிறார் என்பது சிலகாலம் முன்புவரை இங்கே சென்னை விமானநிலைய மேற்கூரை மீண்டும் மீண்டும் பெயர்ந்து விழுந்த கதை மாதிரியான சுவாரசியமற்ற செய்தியாகிக் கொண்டு வருகிறது என்பது இந்த நாளுடைய விசேஷம். நேற்றைக்கு முருகானந்தம் என்ற புள்ளி விலகினாராம்! விலகியதற்கு குமரவேல் சொன்ன காரணம் விசித்திரமானது. Kumaravel told TNM that Kamal Haasan disappointed them as he made it clear that MNM is a leader based party and not a cadre based party என்கிறது இந்தச்செய்திஅவர் சொல்கிற மாதிரி cadre based party இங்கே எத்தனை இருக்கிறது என்பது தெரியுமா? cadre based party என்பதன் பொருள் புரிந்துகொள்ள முடிகிறதா? சொல்லுங்களேன்!
BIGG BOSS அலட்டல் புகழ் கமல் காசரை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அரசியல் பேச வேண்டி வரும் என்பதைக் கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததே இல்லை! கமல் காசர் யாருடைய B டீம்? யாருடைய வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பார்? யாருடைய வாக்குகளைப் பிரிப்பார்? இத்தனை கேள்விகளுக்கும் கமல் காசர் கட்சிக்குள் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே விடை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ரங்கராஜ் பாண்டே இந்த 22 நிமிட வீடியோவில் கமல் காசர் கட்சிக்குள் நடப்பதென்ன, கரைசேருவாரா என்று கொஞ்சம் சொல்கிறார். வெறும் மூன்றே மூன்று நபர்கள் தானே விலகியிருக்கிறார்கள்? அதற்குள்ளாகவே கட்சி கலகலத்துவிட்டதாக, கரைந்து விட்டதாக எல்லோருமே இத்தனை பரபரப்பாகப் பேசுவானேன்? சமீபத்தில் விலகிய நிர்வாகி சந்தோஷ்குமார் தொகுதிப்பக்கம் அதிகமாகத் தலைகாட்டாமல் 22000+ வாக்குகள் வாங்கினாரே! விலகிய அந்த மதுரவாயல் வேட்பாளர் 33000+ வாக்குகள் வாங்கினாரே! அதெல்லாம் சொல்வது என்ன? கமல் கட்சிக்கு மவுசு இருக்கிறது என்பதையா?
சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் Felix இவர்களைக்கூட நான் சட்டை செய்வதில்லைதான்! அதற்காக இந்த 26 நிமிட காமெடியை ரசிக்காமல் இருக்க முடியுமா? சவுக்கு சங்கர் அவிழ்த்து விடுவதெல்லாம் உண்மையல்ல என்பதை இங்கே அழுத்தமாகப்பதிவு செய்கிறேன்.
ரங்கராஜ் பாண்டேவும் சவுக்கு சங்கரும் தலா இருபது நிமிடத்துக்கும் மேலாகப்பேசியும் முடிவுக்கு வரமுடியாத விஷயத்தை வெறும் ஒருநிமிட வாசிப்பிலேயே இங்கே சொல்லி விடுகிறார் என்றால் ........
கேரள அரசியலில் மிக நீண்டகாலம் பயணித்த இடதுசாரி திருமதி கே ஆர் கௌரி அம்மா தனது 102 வது வயதில் முதுமை காரணமாக நேற்றைக்கு காலமானார் என்ற செய்தியைப் படித்த போது நிறைய விஷயங்கள் நினைவில் வந்துபோயின. கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாத கொள்கைப்பிடிப்புடன் கடைசி வரை வாழ்ந்த சிங்கப்பெண் என்றால் அது கௌரி அம்மா மட்டும் தான்! எமெர்ஜென்சி தருணத்தில் சிறையில் அடைக்கப் பட்ட கௌரி அம்மா போலீஸ் சித்திரவதை பற்றிச் சொன்னது கேரளத்தில் மிகவும் பிரசித்தம்! "அந்த லத்திகளுக்கு மட்டும் வீரியம் இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கில் லத்திகளைப் பிரசவித்திருப்பேன்"
இந்த நேர்காணலில் நெறியாளர் கரயாத்த கௌரி தளராத்த கௌரி கலிகொண்டு நிந்நால் அவள் பத்ரகாளி இதுகேட்டு கொண்டே செறுபால்யமெல்லாம் பதிவாயி ஞங்ஙள் பயமாற்றி வந்நு என்ற பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை வரிகளைச் சொல்லி ஆரம்பிக்கிறார். 1987 இல் இடது சாரி அரசின் முதல்வராக வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகளால் E K நாயனார் முதல்வர் ஆனார். 1994 இல் கட்சிவிரோத செயல்பாடுகளுக்காக என குற்றம் சாட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அந்தத் தருணத்தில் எழுதப் பட்ட கவிதை அது. 4 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட இந்த நேர்காணலில் நெறியாளர் நினைவு படுத்திச் சொல்கிற அளவுக்கு அது பிரபலமான பாடலாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல 2019 இல் கௌரி அம்மாவின் 101வது பிறந்தநாளின் போது கேரள முதல்வர் பினரயி விஜயனே அந்தப்பாட்டை முழுதுமாகச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்ததாக செய்திகளும் உண்டு.
1994 இல் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்ட கௌரி அம்மா தனியாக ஜனாதிபத்ய சம்ரக்ஷண சமிதி JSS என்ற அமைப்பைத் தொடங்கி காங்கிரஸ் தலைமையிலான UDF உடன் கூட்டணி வைத்து அரசியல் பயணத்தைக் தொடர்ந்ததில் 2001 A K அந்தோணியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றாலும், 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்கே வீடு திரும்ப நினைத்தார். ஆனாலும் CPIM - JSS இணைப்பு நடக்கவே இல்லை. ஆனால் இடதுமுன்னணியுடன் கூட்டணி மட்டும் வைத்துக் கொள்ளப் பட்டது.
கௌரி அம்மாவின் திருமண வாழ்க்கையும் அப்படிச் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. T V தாமஸ் என்கிற சக அமைச்சரைத் திருமணம் செய்து கொண்டதிலும் கட்சி வாழ்க்கை குறுக்கே வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி CPI, CPI M என்று உடைந்ததில் கணவர் முன்னதிலும் மனைவி பின்னதிலுமாக. அதிகாரப் பூர்வமாக பிரியவில்லை என்றாலும் கடைசி வரை ஒட்டவே இல்லை என்பது இன்னொரு சோகம்.
Kerala's Iron Lady KR Gowri Amma passed away Monday. She was a different breed of communist - totally incorruptible and loaded with self respect. Below is a translation of the words in the image.
//At CPM meetings instead of using the word Saghav (Comrade), she used to address party leader EMS Namboodiripad as Mr EMS. This style of addressing pissed of Namboodiripad's son EM Sreedharan so much that he got up from his seat and shouted a caste slur at Gowri: "Gowri Chothy, sit down right there."
Even the great VS Achudanandan (future Chief Minister and an Ezhava) who was present in the meeting remained silent.
At that cursed moment, Gowri Amma would have understood how Draupadi was treated and humiliated in the Kaurava Sabha.//
For those not in the loop, Chovan is a caste slur used by some people in Kerala to mock the majority Ezhavas/Thiyyas. Chothy is the female equivalent.
Now think how many Ezhavas are having their moment of schadenfreude. I don't know if EM Sreedharan is alive but he must have watched in agony as first VS Achudanandan and now Pinarayi Vijayan are ruling Kerala, the land his family ruled for centuries.
In fact, Pinarayi might rule for another 10 years. He may be a remorseless killer but many people don't care. You see, this is why he wins. As long as there are people like EM Sreedharan in Kerala, there will be Pinarayi Vijayans too.
As long as Namboodiripad lived, no Ezhava leader could become the Chief Minister of Kerala despite Ezhavas being close to a third of the population of the state. In the 1987 elections, he pitched Gowri as the CM candidate and after winning he made EK Nayanar, a retired communist, as CM. Namboodiripad also ensured the defeat of Achudanandan so that the party could easily select Nayanar.
Moral of the story is Ezhavas are the biggest losers by supporting the CPM. Today, they have 27 MLAs in a house of 140, but both the Education and Finance portfolios are with Christians and Muslims. Despite so many MLAs the community gets zilch gains.
CPM's Hindu MLAs anyway do nothing for Hindus, let alone for their own castes.
Nairs, the second largest Hindu caste, are in a similar situation. After supporting Christians for decades, all that they got was extension of the charitable status of their association, the Nair Service Society. They had a caste based party named Nair Democratic Party but it's dissolved now because Christians no longer need Nair votes.
Christians and Muslims are very smart in creating or being part of political alliances in which they corner all the benefits - jobs, land, ministries.
On the other hand, Hindus in Kerala have been totally duped. Once Ezhavas are down to 15% and Nairs to 8%, their fate will be the same as that of the Hindus of Bengal under TMC.
The only Hindu caste that has always been with the RSS is the Arayan (fisherman) community. They are around 6%. They are in truth the only brave community of Kerala. Harmfuls really fear them.
அந்தநாட்களில் தயிர்வடையைச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் சொல்வார் --ஒரு CPI மாவட்டச் செயலாளர் சொன்னதாக:: "கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்ததே தப்பு. கட்சியை விட்டு வெளியே போவது அதைவிடப் பெரிய தப்பு"
லட்சியவாதம் பேசிக்கூட வீணாய்ப்போக முடியும் என்பதற்கு தோழர் கௌரி அம்மா வாழ்க்கையும் ஒரு நல்ல உதாரணம்.
டிஸ்கி:
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அஞ்சலிப்பதிவை இப்போதுதான் வாசித்தேன்.
2010 ஜூனில் அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எழுதிய The Hades Factor புதினத்தை அறிமுகப்படுத்துகிற மாதிரி என்று கூடச் சொல்லமுடியாது, முழுக்கதையையும் பதிவில் சொல்லியாயிற்று.
திடீரென்று பன்னாட்டு ஊடகங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் கொரோனா விவகாரத்தில் ஒரே குரலில் மோடி மீது சேற்றை வாரி இரைப்பதன் பின்னணி?
கிட்டதட்ட ஒரு வருடம் முன்பே ஃபைசர், மாடர்னா ஆகிய இரு அமெரிக்க கம்பெனிகளும் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துவிட்டன.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்திய தயாரிப்பான கோவாக்ஸினும் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக கண்டுபிடிப்பான இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டும் பரிசோதனைகள் முடியும் நிலைக்கு வந்தன.
பொதுவாக மருத்துவ துறையில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேடண்ட் செய்யப்பட்டு கொள்ளை லாபத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே இந்தியா போன்ற நாடுகளுக்கு தயாரிக்கும் உரிமை வழங்கப்படும்.
அப்படி இருக்கும்போது சம காலத்தில் இந்தியா தயாரானதை மேற்கத்திய உலகம் ஏற்குமா?
இங்கிருக்கும் அவர்கள் கைக்கூலிகள் மூலம் இந்திய வாக்ஸின் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள்.
முதலில் மேற்கத்திய உலகிற்கே முன்னுரிமை கொடுக்க நினைத்த அமெரிக்க கம்பெனிகளுக்கு இடியாக இறங்கியது ஐரோப்பிய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் சிங்கிள் டோஸ் வாக்ஸின்.
அமெரிக்கா தொடங்கி அத்தனை வளர்ந்த நாடுகளும் இந்த புதிய வாக்ஸின் பக்கம் பார்வையை திருப்ப பல நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை பரப்பியிருந்த அமெரிக்க நிறுவனங்கள் அதிர்ந்தன.
132 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய நாட்டின் சந்தை அவர்கள் கண்களை உறுத்தியது.
ஒரு வாக்ஸின் ₹500/- என்று வைத்தாலும் இரண்டு டோஸ் மருந்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்தி முப்பத்திரெண்டு ஆயிரம் கோடி!
விடுவார்களா?
ஃபைசர் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சனின் தயாரிப்பால் ஏற்பட்ட நெருக்கடியினால் பெரிய மனதுடன் இந்தியாவிற்கு தன் மருந்தை தர இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணுகியது.
பொதுவாகவே சுதேசி எண்ணம் கொண்ட மோடி அரசு இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் ஃபைசர் நிறுவனத்திற்கு சில நிபந்தனைகள் விதித்தது.
அவ்வளவுதான்! மோடி அரசு மீது தங்கள் முழு பலத்துடன் சேற்றை வாரி இறைக்கத் தொடங்கின இந்த பன்னாட்டு நிறுவனங்கள்.
இதற்கு ஒரு தெளிவான சான்று, இன்று வந்திருக்கும் லான்செட் என்கிற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டிருக்கும் கட்டுரை.
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த கொடூர நிலைக்கு மோடி மட்டுமே காரணம் என்பதோடு நிறுத்தாமல் இந்தியா உடனடியாக வாக்ஸினை இறக்குமதி செய்து நிலமையை சீராக்க வேண்டும் என்றும் யோசனையை முன்வைக்கிறது.
மேற்கத்திய நாடுகள் சீனாவை கட்டுப்படுத்த மோடியை ஆதரித்ததும், மோடியின் பாய்ச்சலினால் தங்கள் பொருளாதாரத்திற்கே பாதகம் ஏற்படும் நிலையில் அதே மோடியை வீழ்த்த முனைவதும் மருந்து கம்பெனிகளின் lobbying சக்தியை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்காது.
சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் விஷயத்தின் ஆணிவேரை மிகவும் சரியாகவே பிடித்திருக்கிறார். கொஞ்சம் மசாலா சேர்த்துத்தான் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கிற இணைப்பில் உள்ள கதைச்சுருக்கத்தை படிப்பதொன்றுதான் வழி!
உயிர்காக்கும் மருந்தைத் தயாரிப்பவர்கள் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, போட்டியாளர்களை ஒழிப்பது முதல் படுகொலைகளைச் செய்வதிலும் கூட வல்லவர்கள் என்பது பொய்யல்ல! யாரோ ஒரு எழுத்தாளனின் கற்பனை, அல்லது எத்தனையோ கான்ஸ்பிரசி தியரி, அதில் இதுவும் ஒன்று என்று புறந்தள்ளிவிட்டுப்போவது உங்களுடைய சாய்ஸ்.
It's an admitted fact that Wuhan Institute of Virology, with US funding, worked on manipulating coronaviruses. Now The Australian daily claims US has obtained a 2015 document written by PLA scientists that discussed weaponizing a coronavirus. So why is China still being shielded?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குஜராத் சூரத் நகரில் Plague நோய் செயற்கையாகப் பரப்பப்பட்டதில் அமெரிக்கர்களுடைய கரங்கள் பின்னணியில் இருந்ததாகச் செய்தி வந்ததே, நினைவிருக்கிறதா?