Friday, April 23, 2021

வாசிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? என்னமாதிரி விஷயங்களை வாசிப்பீர்கள்?

இன்றைக்கு உலக புத்தக தினம்! முன்பு வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் பலர் முகநூல் மட்டுமே உலகம் என்று குறுகிப்போய், தங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியைப் படம் பிடித்துப்போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவர் ஒருவராவது அண்மையில் தாங்கள் வாசித்த புத்தகத்தைப்பற்றி வாய் திறந்திருக்கிறார்களா என்று பார்த்தால், எவருமே இல்லை என்பது யாருடைய சோகம்? 


இப்படிப் புத்தக தினம் கொண்டாடுகிற எண்ணம் முதலில் ஒரு ஸ்பானிஷ் எழுத்தாளர் விசன்டே க்ளவல் அந்திரேஸ்  Vicente Clavel Andrés என்பவருக்கு உண்டானது. புகழ்பெற்ற  டான் கிவிக்ஹோட் Don Quixote பாத்திரத்தை உருவாக்கிய  ஸ்பானிஷ் எழுத்தாளரான மிகெல் டெ செர்வான்டிஸ் Miguel de Cervantes ஐ கௌரவப் படுத்துகிற விதத்தில் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 7 ஆம் தேதி புத்தக தினமானது. பின்னால் அவருடைய மறைவுநாளான ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு, ஏப்ரல் 23 அன்று வேறு சில எழுத்தாளர்கள் பிறந்த / இறந்த நாளாகவும் இருந்தது என்பதைத்தாண்டி பெரிதான காரணம் எதுவுமில்லை,  

மேலைநாடுகளில் உலகப்புத்தக தினத்தை பள்ளிகள், கல்லூரிகளோடு  பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் சேர்ந்து வாசிப்புப்பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கிற விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். புத்தகக்கண்காட்சிக்குப் போய் கிலோக்கணக்கில் புத்தகங்களை வாங்குகிறார்கள். புத்தகங்களைப்பற்றிப் பேசாமல் டெல்லி அப்பளம் கடித்ததை மட்டுமே  பிரதானமாகப் பகிர்கிறார்கள் என்பதால் நம்மூர் நிலவரத்தை இங்கே பேசாமல் இருப்பதே உத்தமம்.

புத்தகங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிற சில தகவல்கள், இங்கே கேள்விகளாக:

A. புத்தகங்களை எப்படிப் பெறுகிறீர்கள்?  1.நூலகம் 2.நண்பர்களிடம் இரவல் வாங்கி 3. சொந்தமாகவே வாங்குவது 4. இதர வழிகள் (என்னவென்று சொல்லவும்) 

என்வரையில் மதுரை சுப்ரமணியபுரம் கிளைநூலகம் தான் மாணவப்பருவத்தில் எல்லாவிதமான புத்தகங்களையும் அள்ளிக்கொடுத்தது அப்புறம் சிம்மக்கல் மாவட்ட நூலகம், அப்புறம் பல்கலைக்கழக நூலகம் என்று ஆரம்பகாலவாசிப்புக்கு பொது நூலகங்களே வித்திட்டன. நண்பர்களிடமிருந்து இரவல் வாசிப்பு மிகவும் குறைவே. என்னுடைய இரண்டாவது அண்ணன் வடக்கே என்ஜினீயராக இருந்தவர், மதுரைக்கு வரும் நாட்களில் ஏகப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிவருவார் என்பதிலேயே நிறைய ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். சொந்தமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபிறகு நூலகங்களை பயன்படுத்துவது குறைந்து போனது. சில தனியார் நூலகங்களில் பிரபலமான புத்தகங்களை காசுக்கு இரவல் வாங்கிப்படித்ததுமுண்டு. புத்தகத்தின் விலையில் 10% வாங்குவார்கள்.          

B. பொதுநூலகங்கள் / தனியார் நூலகங்கள் பயன் படுத்துவதுண்டா? உங்களுடைய அனுபவம் எப்படி?

மேலேயே இதற்கான பதிலையும் சொல்லிவிட்டேனே! 

C. என்னமாதிரி வாசிப்பை விரும்புகிறீர்கள்?  புனைவு /அபுனைவு  சமூகக்கதை/சரித்திரக்கதை அறிவியல் / தத்துவம் /அரசியல் / இதர தலைப்புக்கள் (என்னவென்று குறிப்பிடவும்)

பொதுநூலகங்களில் கிடைத்த புத்தகங்கள் அத்தனையையும் வாசித்த மாணவப்பருவம் என்னுடையது. தாகூரின் கோரா நாவலை தமிழில் படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு அதை சீந்தக்கூட மாட்டேன். தமிழில் ஐசக் அசிமாவ்  எழுதிய அறிவியல்நூல்கள் அனைத்தையும் படித்தநாட்கள் அவை. தோல்ஸ்தோய் அ லெ நடராஜன், ரா க்ருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பில் மிக சரளமாக அறிமுகமானார். அரசியல், தத்துவம் என்று எல்லா விஷயங்களையும் படித்தே ஆகவேண்டுமென்று மிகத் தீவீரமாக  வாசித்த நாட்கள்! நூலகர்கள் அந்தநாட்களில் இதைப்படி, அதைவிட இது இன்னும் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தே வாசிப்பு வேள்வியை எனக்குள்  வளர்த்தார்கள்.        

சராசரியாக ஒருநாளைக்கு /ஒருவாரத்தில் எவ்வளவு பக்கங்கள் வாசிப்பீர்கள்?.

ஆரம்ப நாட்களில் ஒருநாளைக்கு இருநூறு முதல் முன்னூறு பக்கங்கள் வாசிக்கும் வழக்கம் இருந்தது. இப்போதும் ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து விட்டால் அதை அதிகபட்சம் மூன்று தவணைகளுக்குள் வாசித்து விடுவேன். கடந்த டிசம்பரில் சாண்டில்யன் கதைகளை ஒரு மீள்வாசிப்பு செய்தேன். சுமார் 7600 பக்கங்கள்.    

இந்தவருடத்தில் படித்த/படிக்க எடுத்துக்கொண்ட புத்தகங்கள் என்னென்ன? நூல் பெயர் மற்றும் நூலாசிரியர் பெயருடன்

பழையதும் புதியதுமாக ஒரு பட்டியலே இருக்கிறது. படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்காமல் இருக்கிற ஒரு புத்தகம் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் NSA வாக இருந்த ஜான் போல்டன் எழுதியது. அலுப்புத்தட்டுகிற மாதிரி இருந்ததால் முதல் 250 பக்கங்களை ஒட்டி அப்படியே நிற்கிறது.   

நீங்கள் வாசித்ததிலேயே மிகவும் பிடித்ததான புத்தகம் எது? எதனால் பிடித்தது என்பதைச் சொல்ல முடியுமா?

தி ஜானகிராமனின் அன்பே ஆரமுதே, செம்பருத்தி, உயிர்த்தேன், நளபாகம், அப்புறம் சிறுகதைகள். 

ஜெயகாந்தனின் கதைகளை இன்னொருமுறை மீள்வாசிப்புக்காக எடுத்திருக்கிறேன். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் முழுதும். இவர்களுடைய எழுத்துநடை வித்தியாசமானது, கதைக்களம், கதை சொல்கிற உத்தி எல்லாமே வித்தியாசமானவை.இது ஒரு சிறு fraction மட்டும்தான். ஆங்கிலத்தில் படிப்பதற்கு ஏராளமான எழுத்தாளர்கள் இருந்தாலும் அலெக்ஸாண்டர் டூமா, சார்லஸ் டிக்கென்ஸ் போன்ற பழைய எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும்.           

மீண்டும் சந்திப்போம்.                 

Saturday, April 17, 2021

பீஷ்மரை விட அத்தனை நல்லவனா சகுனி? ஒரு பார்வை!

மஹாபாரதக் கதை மாந்தர்களில் சகுனி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவன் என்பது தெரிந்ததுதான். உண்மையைச் சொல்லப்போனால் பாரதக்கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவுக்குத் தனித்துவமானது என்று எண்ணத்தோன்றுகிற அளவுக்கு காவியப்படைப்பு அப்படி!

 


தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,

இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.....

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார். கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும்" என்றான். 

அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?".கேட்டான் சகுனி.

"மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை! இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.

"தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.

"மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.  ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள்". என்றான் சுபலன்.

இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். 

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

"தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

"மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.

நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு." எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.

"யாகம் தொடங்கலாமே! சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா?" எனக் கேட்டார். 

"ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத் தான் காத்திருந்தோம்". என்றான் அர்ஜுனன்.

. "யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்?" கேட்டார் கிருஷ்ணர்.

"குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான்" என்றார் தர்மன்.

"வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும்?". என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. 

"என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது?" பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. "ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே!". என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

"பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா?. கேட்டான் அர்ஜுனன்.."அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே!". என்றார் கிருஷ்ணர்.

"பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன். 

"போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும்  இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

"அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே". என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர். "அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய்". என்றார் கிருஷ்ணர்.

"என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார். "கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.

"பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே". பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். "இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான்". என்றார் கிருஷ்ணர்.

"துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே". என்றார் திருதராஷ்டிரன். " இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால், தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.

"என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா". கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.

"அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்."கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே". என்றார் தர்மர் அமைதியாக

."தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?

போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே". என்றார் கிருஷ்ணர்.

"பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா?" கேலியாய்க் கேட்டான் பீமன்.

"பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே! பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு" கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.

"பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும்". என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

"பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன்". என்றான் பணிவுடன்.

"சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே  அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.  என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். "என்னை விரும்பி ஏற்பதோ..விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.  என்னை ஏற்பது என்பது மட்டுமே முக்கியம். அதுபோதும் ஒருவனை நான் ஆட்கொள்ள." என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

இப்படியான ஒரு பார்வையை ஆன்மீகமும் ஜோதிடமும் என்கிற முக. நூல் குழுவில் பார்த்தேன்.சகுனியின் தரப்பிலிருந்து ஒரு பார்வையாக, மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

மகாபாரத மாந்தர்கள் பற்றிய எனது முகநூல் பதிவுகளின் தொகுப்பு புதினமான, "காரணமின்றி காரியமில்லை" புதினத்தில் வரும் கதைகளில், இதுவும் ஒன்று.

இத்தனை நண்பர்களால், விரும்பப் பட்டிருப்பதில் மகிழ்ச்சியும், நிறைவும். 

என்ற பின்னூட்டத்திலிருந்து இந்தப்பார்வை/  கதை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகவும் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, April 15, 2021

#கர்ணன் படத்துக்கு #CSகர்ணன் என வைத்திருந்தால் இன்னும் கனப் பொருத்தம்!

கர்ணன் திரைப்படத்தைக் குறித்து உதயநி!தி தெரிவித்த கருத்தை ஏற்று திரைப்படக்குழுவினர் திருத்தம் செய்து இருக்கிறார்களாம்! ஏனடா திருத்தச் சொன்னோம் என்று உதயநிதியே தலையிலடித்துக் கொண்டு ஜகா வாங்கிய மாதிரி ஆகியிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது பிபிசி தமிழ்.


1997 என்று முதலில் சொன்னதை இப்போது இப்படி மாற்றி சொன்னதால் என்ன ஆகிவிட்டது? எதனால் உதயநிதி இதை இனிமேலும் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறரீதியில் அறிக்கை விட்டாராம்? 

 Murali Seetharaman  மதிப்பீட்டாளர்

 39 நி 
"கர்ணன்" படத்தில் மாரி.செல்வராஜ் - 1990 களின் பிற்பகுதியில் என்று ஒரு கார்டு போட்டாராம்! அதாவது அந்தக் கலவரம் எல்லாம் நடந்தது கலைஞர் ஆட்சியில் என்று அர்த்தம் வருதாம்!
நான் படம் பார்க்கவில்லை -
ஆனால் 1996 ல் கலைஞர் ஒரு மாபெரும் Sweep ல் - தமாகா கூட்டணி, ரஜனிகாந்த் ஆதரவு எல்லாம் பெற்று - ஆட்சிக்கு வந்த அந்த Tenure ல் பல கலவரங்கள் நடந்தன. (1996 - 2001) தென்மாவட்டங்கள் ரத்தக் காடாகக் காட்சியளித்தன.
கலைஞர் ஒவ்வொரு ஜாதியையும், மதத்தாரையும் திருப்தி செய்ய மாவட்டத்துக்கு எல்லாம் தலைவர் பெயரை வைப்பார். ராஜாஜி பார்ப்பனர் என்பதால் அவர் பிறந்த அன்றைய தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும், எத்தனையோ கோரிக்கை வைத்தும் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம்!
1989 ல் ஆட்சிக்கு வந்தவுடன் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என்றார். அதற்கு முன்பு MGR திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்றார் - அதிமுக தோன்றியவுடன் போட்டியிட்டு ஜெயித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பார்லிமெண்ட் தொகுதி இடைத்தேர்தல் என்பதால்!
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் அண்ணாதுரையை திண்டுக்கல்லில் இருந்து பிருஷ்டத்தில் ஒரு உதை விட்டு விரட்டி அவரை - அப்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த - செங்கல்பட்டுக்கு அனுப்பி - "செங்கை அண்ணா மாவட்டம்"- என்றார்! திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் - புதுக்கோட்டை பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் ... இப்படி எல்லாம் ஆனது!
இதன் க்ளைமேக்சாக வீரன் அழகுமுத்துக் கோன் மாவட்டம் என்று தென்காசியைத் தலைநகராகக் கொண்டு கருணாநிதி உருவாக்க முயன்ற போது பெரும் கலவரங்கள் உருவாயின.
பிறகு இனி எந்த மாவட்டத்துக்கும்...
எந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கும்...
தனிநபர்களின் பெயரைச் சூட்டுவதில்லை என்று அரசாங்கமே ஒரு கொள்கை முடிவு எடுத்து...
அதுவரை வைத்த அத்தனை பெயர்களையும் அழிக்கும் அளவுக்கு... தென்மாவட்டக் கலவரங்கள் பெரும் வீச்சை ஏற்படுத்தின. இது கலைஞர் ஆட்சியில் - அதாவது மாரி செல்வராஜ் 'பாஷை'யில் சொல்வதானால்...
1990 களின் பிற்பகுதியில் என்பதை மறுப்பதற்கில்லை!
எனக்கு இந்த மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் வகையறா ஆசாமிகளின் மீதெல்லாம் -அவர்களுடைய கலைப்படைப்புகளை வைத்து - பெரிய மரியாதை கிடையாது!
ஆனால் திமுகவினர் இப்போது அவர்கள் மீது பாய ஆரம்பித்து இருப்பது தமாஷாக இருக்கிறது! அதாவது மாரி செல்வராஜ் "நீல" சங்கியாம்!
திமுக ஆட்சியில் கலவரங்கள் நடந்ததாக காட்டிவிட்டாராம்! தலித் இயக்கத்தவரின் அடையாளம் நீலசட்டை - எனவே "நீல" சங்கி! ஆனால் திமுகவினரின் வரையறைப்படி இன்னும் பல நிறங்களில் "சங்கி" கள் உள்ளனர்!
CPM கட்சி - அதன் ராஜ்ய சபா உறுப்பினர் - "சிகப்பு" சங்கி! ஏனென்றால் பாஜக அரசு கொண்டு வந்த
"ஏழைகளுக்கான 10% ஒதுக்கீடு" (EWS) மசோதாவை CPM ஆதரித்தது அல்லவா? அதை ஆதரித்து 'பார்ப்பனர்' T.K.ரங்கராஜன் பேசியபோது - கனிமொழி குறுக்கே வந்து - "என்னங்க இது அநியாயம்?" - என்று கத்திவிட்டும் போனார் அல்லவா? எனவே திமுக வரையறைப்படி CPM - "சிவப்பு" சங்கி!
வேலூர் இப்ராஹீம் போன்ற முஸ்லீம்கள், இந்துக்களின் நியாயத்தை உணர்ந்து பேசுவதால் அவர் "பச்சை" சங்கி!
கேரளாவில் P.C.ஜார்ஜ் என்ற காங்கிரஸ்காரர்-
"லவ் ஜிகாத் என்பது நிச்சயம் பெருமளவில் நடக்கிறது; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்"- என்று பேசியதால் அவர் கிறிஸ்தவ 'வெள்ளை' சங்கி!
"அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க முன்மொழிந்தார்"- என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே பேசியுள்ளார்! எனவே அவர் நீதிபதி கவுன் நிறத்தால் "கறுப்பு" சங்கி!
இன்னும் சீமான் -"தமிழ் தேசிய" சங்கி!
கமல் - "மய்ய"- சங்கி!
ஆக... ஆக... ஆக...
திமுகவினர் பார்வையில்....



நீல சங்கி, சிகப்பு சங்கி, கதர் சங்கி, கறுப்பு சங்கி, பச்சை சங்கி, தமிழ் தேசிய சங்கி, மய்ய சங்கி...
இப்படிப் பலரும் உண்டு!
உண்மையான RSS சங்கியைத் தவிர இப்படிப்பட்ட கலர் கலரான "சங்கி" கள்தான் அதிகம் போல!
ஆனால் திமுகவினர் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர்! 1999 - 2004 வாஜ்பாய் மந்திரிசபையிலேயே பங்கேற்று காபினெட் மந்திரியாகவே இருந்தாரே - முரசொலி மாறன் - அவர் எந்தவகை "சங்கி"?
ஒருவேளை "திராவிட" சிங்கியோ?

கர்ணன் திரைப்படத்தைவைத்து அதிமுகவை மட்டம் தட்ட நினைத்த திமுகவினரின் சாயம் வெளுத்துப் போனது மட்டும்தான் மிச்சம்! மான்சோலை தேயிலைத் தொட்டது தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது , திமுக ஆட்சியில்தான் என்பதை மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்த கருணாநிதி என்னென்ன செய்தார், பிரச்சினை பெரிதானதும் எப்படியெல்லாம் ஜகா வாங்கினார் என்பதையும் இந்த முகநூல் பகிர்வு கொஞ்சம் சுருக்கமாகச் சொல்கிறது.

பாரதத்துக் கர்ணன் கொடையாளி! அர்ஜுனனுடன் கொண்ட பகைமை, துரியோதனனுடன் கூட்டாளி ஆக்கி வைத்தது. அவ்வளவுதான்.ஆனால் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் வகையறா கர்ணன் பெயரைவைத்துத் தங்களுடைய வன்ம அரசியலை மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர் என்ற முந்தைய கருத்தில் மாற்றமில்லை.

பதிவின் தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? C S கர்ணன் என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

Sunday, April 11, 2021

#கர்ணன் திரைப்படம் சொல்லவருவது என்ன?

இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்றெழுதி நீண்டநாட்களாகி விட்டது என்கிற நினைப்பே, இன்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய ஒரு பகிர்வைப் படித்ததும் தான்,வந்தது. அதுவும் ஒரு திரைப்படம் மீதான விமரிசனம் என்று மட்டுமே இல்லாமல், தமிழ்த்திரை உலகம் போய்க்கொண்டிருக்கிற விதத்தைப் பற்றிய ஆதங்கமாகவும் வெளிப்பட்டிருந்ததை யோசித்ததில் ஒரு பெருமூச்சுடன் தான் கடக்கவேண்டி இருந்தது.


 

2ம.நே 
இந்த சினிமா தயாரிப்பு என்பது சாமான்யம் அல்ல, பெரும் செட்டிகளும் மார்வாடிகளுமே திணறி தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவிட்ட களம் அது
ஏவிஎம் போன்றோரே ஒதுங்கி கொள்ள, குஞ்சுமோன் போன்ற பிரமாண்டங்களே இருந்த இடம் தெரியாமல் போன அளவு அதன் தாக்கம் கடுமையானது
திரைதுரையிலே ஊறிய நடிகர்களும் கவிஞர்களும் கூட, ஏன் டைரக்டர்கள் கூட சொந்தபடம் எனும் சவால் எடுக்க துணியவில்லை. அப்படிபட்ட திரையுலகில் பா.ரஞ்சித்தனார் 6 படம் தொடர்ந்து தயாரிப்பாராம், இதற்கான பணம் எங்கிருந்து யார் கொடுகின்றார்கள் என்பது தெரியாது
சரி, யாரும் கொடுக்கட்டும் ஆனால் இந்த தலித் கும்பல் எடுக்கும் படங்களின் கதை என்ன?
மேல் சாதி கீழ்சாதியினை அடிகின்றது, ஒடுக்குகின்றது எனும் ஜாதிய மோதலை தூண்டும் விதமாகவே இருக்கின்றதே அன்றி உருப்படியாக ஏதுமில்லை
நல்ல தலித்படம் என்றால் படித்தோ உழைத்தோ ஒரு சமூகம் உயர்வதை காட்டலாம் , மாறாக அடி, வெட்டு, குத்து, சிறைக்கு போ என்பதெல்லாம் மிக பெரிய சாதிய வன்ம தூண்டல்
இந்த இடத்தில் பாரதிராஜா, கமல், முத்தையா என அவர்களை இழுத்துவரலாம் ஆனால் பாரதிரஜாவோ கமலஹாசனோ சாதிய சண்டை வராதவரையில் சுய சாதி அல்லது ஒரு சாதியின் கொடும் மனநிலையான இன்னொரு பக்கத்தை காட்டியிருப்பார்கள்
அதற்கு முக்குலத்தோர் சமுதாயம் பொங்கியிருக்க வேண்டும் ஆனால் அவர்களோ நாங்கள் அப்படித்தான் திருந்த வேண்டிய தூரம் நிறைய உண்டு என்பதுபோல் அமைதி காத்தார்கள்
ஆனால் ரஞ்சித்தர், மாரி செல்வராஜ் படங்களெல்லாம் அப்படி பக்குவமான நிலையில் எடுக்கபட்டவை அல்ல, அவர்களிடம் முதிர்ச்சி இல்லை மாறாக ஒருவித வன்மம் மட்டும் மேலோங்கி நிற்கின்றது
வரலாற்றை புரட்டுங்கள்
1300களில் ஆப்கானிய கொள்ளை கும்பல் மதுரையினை ஆளவந்ததில் தமிழ்குடிகளின் அடக்குமுறை ஆரம்பிக்கின்றது, பின் நாயக்கர்கள் வந்தார்கள்
வெள்ளையன் ஆட்சியில் எல்லோரும் அடிமை ஆம் பார்ப்பனன் முதல் தலித் வரை அடிமைகளே
பார்ப்பனருக்கும் சொத்து பத்து மாட மாளிகை என எதுவுமில்லை, ஒரு சில ஜமீன்களும் மிராசுகளும் மட்டும் சொத்து வைத்திருந்தன அதுவும் ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்ட.இந்நிலையில்தான் சுதந்திரம் வந்து நாடு விடுதலையாயிற்று
இதன் பின் காட்சிகள் மாறின, பார்ப்பன சமூகம் முடிந்தால் இந்தியா இல்லையா வெளிநாடு என கல்வியில் அதன்போக்கில் முன்னேறிற்று
இதில் அன்று "குற்றபரம்பரை" என ஆங்கிலேயனால் அடிமையாக்கபட்ட முக்குலத்து சமூகம் கூட விளையாட்டு, கல்வி, தொழில் என மெல்ல மேலெழுந்தது
இன்று காவல்துறை நீதிதுறை உள்ளிட்ட பல துறைகளில் மறவர்கள் ஆதிக்கம் இருப்பதை மறுக்க முடியாது, இவ்வளவுக்கும் குற்றபரம்பரை என ஒடுக்கபட்ட சமூகம் அது
துருக்க படையெடுப்பில் பல இன்னல்களை சந்தித்து ஒடுக்கபட்ட இனமான நாடார் இனம் இன்று உழைப்பால் வியார சமூகமாக உயர்ந்து நிற்கின்றது, தமிழக பொருளாதாரம் அவர்களிடம் இருக்கின்றது
ஆக ஆழ்ந்து கவனியுங்கள்
இதில் தலித்மக்களின் சாதனை என்ன?
இந்த 2000 வருடம் அடக்கினான், ஒடுக்கபட்டோம், தாழ்த்தபட்டோம் என்பதல்ல விஷயம், 1930களில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பு குவிய தொடங்கியது
சுதந்திர இந்தியா அவர்களுக்கான விடியலை இட ஒதுக்கீடு, சட்ட ரீதியான பாதுகாப்பு என வழிவிட்டது
ஆனால் எவ்வளவு தலித் தொழிலதிபர்கள் உருவானார்கள், எவ்வளவு பேர் பெரும் பதவிக்கு வந்தார்கள், எவ்வளவு பேர் தொழில் சாம்ராஜ்யம் இல்லை வேறு வகையில் உருவானார்கள்?
ஒருவருமில்லை
படிப்பு இல்லை என்பது விஷயமல்ல, சென்னையில் உழைத்து கொடிகட்டிய நாடார்களில் பலர் 5ம் வகுப்பு தாண்டாதவர்களே
ஆக கல்வியும் இன்னும் கடுமையான உழைப்புமே ஒரு சமூகத்தை உணர்த்தும் மாறாக அடங்கமறு, வெட்டு, குத்து, கொல் என்பதெல்லாம் ஒரு காலமும் நல்ல முடிவினை தராது
இது ஒரு சில லோக்கல் தாதாக்களை உருவாக்குமே அன்றி சமூகத்துக்கான ஒரு மாற்றத்தையும் கொடுக்க்காது
ரஞ்சித் கோஷ்டி ஒரு மாதிரியான விஷ விதைகளை தமிழகத்தில் விதைக்கின்றது
சுதந்திர இந்தியா எல்லோருக்கும் சமவாய்ப்பு என்று அல்ல, அவர்களுக்கு மிகபெரிய வாய்ப்பினை கொடுக்கும் அளவில்தான் வடிவமைக்கப் பட்டிருக்க்கின்றது
அதில் படித்தோ உழைத்தோ முன்னேறாமல் கற்பனை கதைபேசியே சம்பாதிப்போம் அதற்கு ஒரு சமூகத்தினை வெறியேற்றி புரட்சி செய்வோம் என்பதெல்லாம் சரியல்ல.இதெல்லாம் சமூகம் பற்றி அதன் அமைதி வளர்ச்சி பற்றி கவலைபடாத ஒரு சில பக்குவற்ற தற்குறிகளின் சுயநலம் அன்றி வேறல்ல
கமலஹாசனும் தேவர்மகன் என்றொரு படம் எடுத்தார், அதன் முடிவில் வன்முறை தீர்வாகாது கல்வியும் உழைப்புமே ஒரு சமூகத்தை மேம்படுத்தும் என சொல்லியிருந்தார்
எங்கே "பொடியன்குளம்" என பெயர் வைத்த கோஷ்டி "கீழதூவியூர்" என ஒரு ஊருக்கு பெயர் வைத்து படம் எடுத்துவிட முடியுமா?
எடுத்துவிட்டு கமுதி ராமநாதபுரம் பக்கம் அமைதி நிறுத்திவிட முடியுமா?
இந்த சென்சார் போர்டும் அது சார்ந்த அமைப்புகளும் சாதிய வன்முறையினை தூண்டும் ரஞ்சித்தர் கோஷ்டிகளுக்கு சில கட்டுபாடுகளை விதிக்காவிட்டால்
அதாவது படிக்காதே உழைக்காதே மாறாக அருவாள் தூக்கி அந்த சாதியினை வெட்டி "புரட்சி செய்" என்றெல்லாம் வன்மங்களை விதைப்பதை தடுக்கா விட்டால் பிறிதொரு நாளில் இவர்களால் தமிழக அமைதி மிகபெரிதாக பாதிக்கபடும் என்பது மட்டும் நிஜம்..
அரைகுறை சுயநல‌ போராளி மிக மிக ஆபத்தானவன், அவனால் மிகபெரிய சமூக அமைதி கெடும், அதற்கு முன் அரச அமைப்புகள் விழிப்பது நல்லது. ஆம், உழைப்பும் படிப்பும் நல்ல சிந்தனையுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் அதைத்தான் பல்வேறு சமூகங்களின் வளர்ச்சியினை கொடுக்கும்,

அது அன்றி எதுவும் வாரா
ஸ்டேன்லி ராஜன் சேர்த்தே சொல்லி இருக்கலாம்.

தலித் இலக்கியம், தலித் சினிமா, தலித் அரசியல் என்று தலித் மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து, தனித் தீவாக்கும் முயற்சிகள் நீண்டநாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சரக்கு மிடுக்கு என்று பேசும் திருமாவளவன், ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ணியதாலேயே பிரபலமான பா. ரஞ்சித், அவரை அடியொற்றி வந்த மாரி செல்வராஜ் என்று விபரீதமான சிந்தனைகளை விதைக்கும் நபர்கள் இப்போதுதான் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டி இருப்பதை ஸ்டேன்லி ராஜன் பகிர்வு சுட்டிக் காட்டுகிறது.

மாற்றுக்கருத்தையும் கவனத்தில் கொள்வதற்காக சிங்கப்பூர் பதிவர் நண்பர் கோவி கண்ணன்  . 
இது பட விமரிசனம் அல்ல என்று சொல்லியே ஆரம்பித்திருக்கும் கர்ணன் படத்தின் மீதான பார்வை இங்கே  

மீண்டும் சந்திப்போம்.

Friday, April 9, 2021

மீண்டும் சீனாதானா உளறலும் கொரோனா பரவலும்!

தமிழகத்தில் பிஜேபியின் கால்நகம் கூடப் பதிய  விட மாட்டோமென்று பானாசீனா காரைக்குடியில் பேசி ஐந்துநாட்கள் கூட ஆகவில்லை. வெட்டிப்பேச்சுக்குப் பெயர்போன சீனாதானா செட்டியார் அடுத்த உளறலை வாந்தியெடுக்க ஆரம்பித்திருக்கிறார்."எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம இது. அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது" என்று இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நேற்றைக்கு உளறிவைத்திருப்பது இங்கே செய்தியல்ல.உலகத்தின் பலநாடுகளில் 2வது, 3வது அலையாக கொரோனா நோய்த்தொற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவில் கடந்த ஆறேழு மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒவ்வொருநாளும் புதிதாக ஒருலட்சம் பேருக்கு மேல் என்று கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது.


சீனாதானா செட்டியார் போன்ற ஊழல் அரசியல் வாதிக்கு வேண்டுமானால்  இதுமாதிரி நோய்த்தொற்றும் உயிரிழப்பும், அரசியல் செய்யக் கிடைத்த இன்னுமொரு கல்லெறிதல் தான்!  ஆனால் ஜனங்களாகிய நமக்கு? இந்த 4 நிமிடப் பாடலைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள்! மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வது, அனாவசியமாகக் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது, மருத்துவர்கள் ஆலோசனைகளைப்பின்பற்றுவது என ஜனங்கள் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.    

உச்சக்கட்ட கேவலமான அரசு எது என்றால் மஹராஷ்டிராவின் மஹாவிகாஸ் அகாடி நடத்தும் அரசுதான். அங்கு வாழும் மக்களின் உயிர்களோடு அந்த அரசு விளையாடுகிறது.
எங்குமே வாக்ஸின் குறைவாக இல்லை. பொய்யை வாந்தியெடுத்து மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது அந்த அரசு. இப்படி அரசியல் செய்து மத்திய அரசின் மேல் வெறுப்பை உருவாக்க முயல்கிறார்களாம் இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில். இந்த ஐடியாவை காங்கிரஸில் இருக்கும் ஏதோ ஒரு கிழ அரசியல்வாதிதான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். சிறையில் 106 நாட்கள் இருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கும் அந்த திருட்டு கிழ நரிதான் டிவிட்டரில் வாய்க்கு வந்தபடி பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

08/04/2021 பகல் 12:30 வரை 15 லட்சம் யூனிட் வாக்ஸின் இருப்பில் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால்.. கோவிட் 19 வாக்ஸினை பல மருத்துவமனைகளில் நிறுத்திவிட்டு குறைவாக ஸ்டாக் உள்ளதாக மஹராஷ்டிரா அரசு பொய் சொல்கிறது. மஹா விகாஸ் அகாடியின் 100 கோடி கமிஷன் கதை வெளியில் வந்ததும் அதை மடை மாற்ற நடத்தப்படும் நாடகமே இது..!  என்று முகநூலில் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

சீனாதானாக்கள் மட்டுமல்ல அவர்கள் சங்காத்தம் வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும் நாட்டுக்குக் கேடு நினைப்பவர்களே! நோய்த்தொற்று வராமல் எப்படி நம்மைப்பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமோ அதேபோல சீனாதானா மாதிரியான கெடுமதியாளர்களை ஒதுக்கி வைப்பதும் மிகமிக அவசியம்.

மீண்டும் சந்திப்போம்

Sunday, April 4, 2021

யாருக்கு வாக்களிப்பது? அதற்கு முன் யார் யாரை நிராகரிப்பதென்பதை முடிவு செய்யுங்கள்!

எந்தத்தேர்தலிலும் பார்த்திராத அளவுக்கு இந்த சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களும் கூட்டணி  முடிவாகும் முன்னரே தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை கடந்த மூன்று மாதங்களில் தனித்து நடத்தி முடித்து விட்டன. பத்துவருடங்களாக ஆட்சியைப் பிடிக்க முடியாத பெரும்பசி, வெறியோடு திமுக பெரும்பணச் செலவில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளோடு களம் இறங்கியிருக்கிறது. அநேகமாக தமிழகத்தில் இருக்கும் மொத்த ஊடகங்களையும் திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, திமுகதான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற செய்தியை பல்வேறு விதமான வழிகளில்  ஜனங்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் யுத்தத்தில் வென்றதுபோல ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.


வணிக ஊடகங்களை திமுகவால் விலைக்கு வாங்க முடிந்தாலும், தனிமனிதர்களாக சமூக ஊடகங்களில் செய்துவரும் திமுக எதிர்ப்பை ஒன்றும் செய்ய முடியாமலும், அவைகளின் தாக்கம் எந்த அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணிக்க முடியாமலும் தவித்துவருகிறார்கள் என்பது தான் கள யதார்த்தம்


உதயநிதி அடுத்த முதல்வரா? கேட்கவே படுதமாஷாக இருக்கிறதே! ஆனால் சங்கர மடம் போல இல்லாத திமுகவில் என்ன நடக்கும் என்பது தான் ஊரறிந்த ரகசியமாயிற்றே!

தேர்தல் நேரக்காமெடிகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு வாக்காளர்களாகிய நமக்கு முன்னால் இருக்கிற கடமை, வாய்ப்புக்கள் என்னவென்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

அன்புள்ள வாக்காளரே!
வணக்கம். இன்னும் 2 நாட்களில் விரலைக் கறை படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். ஆனால் கறை நல்லது, நீங்கள் சரியான அரசைத் தேர்ந்தெடுப்பீர்களேயானால்.
பொதுவாகத் தேர்தலின் போது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நம் முன் ஐந்து வாய்ப்புக்கள் நிற்கின்றன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட எவற்றையெல்லாம் நிராகரிப்பது என்று சிந்தித்தால் நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது எது என்பது தானே தெளிவாகிவிடும்.
நாம் தமிழர் என்றொரு கட்சி களத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி விடுதலைப் புலிகளின் சித்தாந்தால் மன ஊக்கம் பெற்று (inspiration) உருவானது. அதன் ஆதர்ச தலைவர் பிரபாகரன். அவரது அணுகுமுறை இந்தக் கட்சித் தலைவரிடமும் பிரதிபலிக்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து பனைமட்டையால் விளாச வேண்டும், தன் முடிவை ஏற்காதவர்களை கிரீஸ் டப்பாவை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகப் பேசுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அது அரசியல் கட்சியல்ல, ஒரு வழிபாட்டுக் கும்பல் (Cult) அதை நிராகரித்து விடலாம்
அமமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தனிநபர்களின் சுயநலத்தால் உருவானவை. சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையில் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருக்கத்தானே வேண்டும்? சசிகலா, திமுகவை வீழ்த்துவதுதான் நமது நோக்கம் என்று அறிவித்து இருக்கிறார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி, திமுகவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட அதிமுகவைத்தானே வலுப்படுத்த வேண்டும்? அதற்கு மாறாக திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முற்படுவது ஏன்?
ஏனென்றால் தேர்தல் வெற்றியை அல்ல, தேர்தலுக்குப் பின் பேரம் நடத்தி, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தன்னை மீண்டும் கட்சிப் பொறுப்பில் பிணைத்துக் கொள்வதை எதிர்பார்த்து, தினகரன் களம் இறங்குகிறார். அவரது சொந்த நலனைக் காப்பாற்ற நாம் வாக்களிக்க வேண்டியதில்லை
கமல்ஹாசனின் கட்சி தோன்றக் காரணம் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல். அப்படி இடைஞ்சல் ஏற்பட்டிருக்காவிட்டால் என் சொத்து மதிப்பு ரூ 200 கோடி இருந்திருக்கும் (இப்போது 177 கோடி) என்கிறார். தனக்கு ஏற்பட்ட பண இழப்புக் காரணமாக பழி வாங்க அரசியலில் நுழைந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் அரசியல் பிரசினைகள் குறித்து சினிமாவிலோ, வெளியிலோ ஏதும் கருத்துச் சொன்னதில்லை என்பதை இதோடு பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும்.
தன்னை காந்தியின் பி டீம் என்கிறார் கமல்..காந்தி தனது எல்லாக் கூட்டத்தையும் பிரார்த்தனையோடு தொடங்கினார். ரகுபதி ராகவ ராஜாராம் பிரபலமானது அவரது கூட்டங்களின் மூலம்தான். கமல்ஹாசனுக்கு இறை நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது திருவாசகத்தின் பொருள் புரியாமல் விழிக்கிறான் பாமரன். கடவுளை நம்பாதவர் காந்தியின் பீ டீம் ஆக இருக்க முடியுமா?
ஒரு பக்கம் தன்னை காந்தியின் பி டீம் என்று சொல்லிக் கொள்பவர், தன்னை பெரியாரின் சீடர் என்றும் சொல்லிக் கொள்கிறார். காந்தியை பிரிட்டீஷ் அரசின் ஒற்றர், கவர்மெண்டின் ரகசிய அனுகூலி, உழைக்கும் மக்களின் துரோகி என்றெல்லாம் எழுதியவர் பெரியார் (19.2.1933, குடி அரசு தலையங்கம்) பெரியாரின் சீடர் எப்படி காந்தியின் பி.டீமாக இருக்க முடியும்?
திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் அதன் 2006-11 ஆட்சிக்காலம் நினைவுக்கு வருகிறது. மின்வெட்டு, நிலப்பறிப்பு, அதிகாரிகளை மிரட்டுவது, அரைப் பிளேட் பிரியாணிக்கும் பராட்டோவிற்கும் அடிதடி, அராஜகம், ரெளடியிசம் இவையெல்லாம் நினைவிலாடுகின்றன.
ஆரம்ப நாட்களிலிருந்து இன்று வரை திமுகவில் நீடிக்கும் ஒரே விஷயம், இந்து மத வெறுப்பு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது.
நான் எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதுவது அது குடும்ப ஆட்சியை நிறுவ முயல்வதை. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் இருப்பதற்கும் ஓர் அரசியல் கட்சி குடும்பத்தின் கையில் இருப்பதற்கும் பெருத்த வித்தியாசங்கள் உண்டு. அப்போதும் கூட அது அந்தந்த கட்சிக் காரர்களின் தலையெழுத்து என்று நாம் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். நாம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவரை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தர முற்படும் போது நாம் அதை நிராகரிக்கும் வகையில் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. நம் தனிவாழ்வு, தொழில், சமுக வாழ்வு இவற்றின் மீது நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தி வரும் அமைப்புஅரசு . அந்த அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைத்தால் என்னவாகும்?
அதிமுக அரசு இருண்டகாலத்திலிருந்து தமிழகத்தை விடுவித்தது. அதன் ஆட்சிக்காலத்தில் எதிர்மறையாக ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. நீட் ஜிஎஸ்டி எல்லாம் தமிழ்நாட்டிற்கு எனப் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டவை அல்ல. நாடு முழுமைக்குமானவை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது (உதாரணம் பஞ்சாப், ராஜஸ்தான்) திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்திலும் நடக்கிற்து. GST விகிதங்களைத் தீர்மானிப்பது ஒரு தனிநபரல்ல. ஓர் அரசுத் துறை அல்ல. ஒரு குழு -கவுன்சில் - தீர்மானிக்கிறது. அந்தக் கவுன்சிலில் எல்லா மாநில பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உதாரணமாக தில்லியின் சார்பில் மனீஷ் சிசோடியா (பாஜக) புதுச்சேரியின் சார்பில் நாராயணசாமி (காங்கிரஸ்( வங்கத்தின் சார்பில் அமித் மித்ரா (திருணாமூல்) கேரளத்தின் சார்பில் தாமஸ் ஐசக (மார்க்சிஸ்ட்)
எப்போதும் அதிமுகவின் அணுகுமுறை என்பது சட்டரீதியாக சாதிக்க முடிந்தவற்றிற்கு நீதிமன்றங்களை நாடுவது (உதாரணம்: காவிரி,) சட்டப்போரட்டத்தின் மூலம் சாத்தியமாகதவற்றிற்கு மாற்று வழிகளைக் காண்பது (உதாரணம் : 69% இட ஒதுக்கீட்டிற்கு ஒன்பதாம் அட்டவ்ணை மூலம் சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு)
எடப்பாடி அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களைப் பெற்று வருகிறது (உதாரணம் 11 மருத்துவக் கல்லூரிகள், மெட் ரோ ரயில் விரிவாக்கம்) தமிழக அரசின் வருவாய் முதன்மையாக மூன்று வழிகளில் வருகின்றன. 1.ஜி எஸ் டி (அதில் ஒரு பங்கு மத்திய அரசுக்குரியது) 2. பதிவுக் கட்டணங்கள் (நிலம், வீடு, வாகனங்கள்) 3. டாஸ்மாக். இந்த வருமானத்திலிருந்து அது அரசு ஊழியர் சம்பளம், விலையில்லா அறிவிப்புகள், போன்றவற்றையும் பிற செலவுகளையும் எதிர் கொண்டு பின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடுவது என்பது மிக சிரமம். அனேகமாக சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலும் (கடன் வாங்கக் கூட) நிதியும் தேவை . இதற்கு இரு அரசுகளுக்குமிடையே நல்லுறவு தேவை.
மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப் பிடிப்பது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்ள உதவலாம். மாநில வளர்ச்சிக்கு உதவாது. அதற்கு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமாக முடிவெடுக்கும் pragmatic அரசுதான் தேவை.
தேர்தல் என்பது இருப்பதில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புதான். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்றாட வாழ்வில் பெரும் பிரசினைகளை ஏற்படுத்தாத அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள்
எண்ணித் துணிக கருமம். அன்புடன் மாலன் .

எழுத்தாளர் மாலன் சொல்கிற விஷயங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் அதனால் இங்கேயும் பகிர்கிறேன் அதிமுக மீது எனக்கு வேறுவிதமான கருத்து இருக்கிறது. அதற்காக திமுக மாதிரியான ஒரு நாசகார கட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இல்லையா?

நீங்களும் இதை ஏற்பதோடு குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! செய்தியைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுங்கள் .
தமிழகம் பிழைத்திருக்க திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுமையாக நிராகரிப்பதுதான் ஒரே நல்லவழி! நம்மால் செய்ய முடிவதும் கூட!

மீண்டும் சந்திப்போம்.
        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)