திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?
பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Thursday, December 31, 2020
விடைபெறும் #2020 வரவிருக்கும் #2021 #தேர்தல்களம்
திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?
Tuesday, December 29, 2020
அதிமுக -பிஜேபி கூட்டணி(??) எந்த லட்சணத்தில் இருக்கிறது?
மூன்று நாட்களுக்கு முன்னால் அதிமுகவின் கே பி முனுசாமி மிகவும் தெனாவட்டாக, பிஜேபிக்கு ஒரு சவாலைப் பொதுவெளியில் விடுத்திருக்கிறார். கீழே வீடியோவை முழுதாய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், எட்டாவது நிமிடத்திலிருந்தாவது பார்த்து விடுங்கள்! ஆட்சியில் பங்கு கூட்டணி ஆட்சி என்று யாராவது வந்தால் ....என முழங்குகிறார். வெறும் 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி கூட இத்தனை வெளிப்படையாக, ஆட்சியில் பங்குக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் MLA க்களைப் பார்த்து முழங்கியதில்லை. டில்லித் தலைமையிடம் பேசி அவர்களைத் தலையெடுக்க விடாமல் வைத்திருந்தார் என்பது மிகச் சமீபத்திய வரலாறுதான்! கேபி முனுசாமி அவராகவே இப்படிப் பேசினாரா அல்லது பேசிவைத்துக் கொண்டு இப்படிப் பேச வைத்தார்களா என்பது அனாவசியம் திமுக, அதிமுக இரு கழகங்களுமே தங்களுடைய அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதே இல்லை! இந்த இரண்டு கழகங்களை விட்டால் தமிழனுக்கு வேறு கதியே இல்லை என்ற மிதப்பில் இருக்கிற கழகங்களைக் கண்டுகொள்வதற்கு தமிழக வாக்காளருக்குத் திறமை இல்லையா? அல்லது வேறெந்தக் காரணமாவது இருக்கிறதா?
கே பி முனுசாமியின் எச்சரிக்கையை தமிழக பிஜேபி எப்படி எடுத்துக் கொண்டது என்ற விவரம் பரம ரகசியமாக இருக்கிறது போல!
இந்த ரகசியத்தை எப்படியாவது வெளிப்படுத்தலாம் என்று இந்த 44 நிமிட இருதுருவம் நிகழ்ச்சியில் அதிமுக MLA செம்மலை, பிஜேபியின் நாராயணன் திருப்பதி இருவருடனும் ரங்கராஜ் முட்டி மோதிப் பார்க்கிறார். கூட்டணி உடைகிறதா, அல்லது வீரத்தழும்புகளுடன் நீடிக்கிறதா என்ற ரகசியத்தைக் கடைசிவரை இருவரும் சொல்லவே இல்லை.
Sunday, December 27, 2020
தமிழக அரசியல் களம்! சூடு பிடித்து விட்டதா? இன்னும் நாளாகுமா?
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ரங்கராஜ் பாண்டே இருந்தவரை தந்திடிவியில் முத்திரை பதித்த நிகழ்ச்சி ஆக இருந்தது. அவர் சேனலை விட்டு வெளியேறிய பின் அந்த நிகழ்ச்சியை சலீம், ஹரிஹரன், அசோகவர்த்தினி இப்படிப் பலரும் நடத்திப்பார்த்தும் கூட, பழைய மாதிரி தூக்கி நிறுத்தமுடியவில்லையே, ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் நெறியாளர் என்ன கேள்வி கேட்டார், பதில் சொல்லவேண்டியவரிடமிருந்து சரியான கேள்விகளைக் கேட்டாரா, தனிப்பட்ட அஜெண்டாவுடன் கேள்வி கேட்காமல் விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிற மாதிரி இருந்ததா என்ற தெளிவோடு நடத்த முடியவில்லை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி FlopShow ஆகவே போய்க்கொண்டிருக்கிறது
தந்திடிவி யாரைவைத்து, என்ன அஜெண்டாவுடன் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த அக்கறையுமில்லை! ஆனாலும் தமிழக அரசியல்களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்கிற என்னுடைய அபிப்பிராயத்துக்கு பிஜேபியின் தமிழகத்தலைவர் Dr.L.முருகனுடன் ஹரிஹரன் நடத்தி நேற்றிரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி வலுசேர்த்து இருப்பதாகவே பார்க்கிறேன். இந்த 42 நிமிட பேட்டியில் பிஜேபியின் மாநிலத்தலைவரிடமிருந்து என்ன தகவவலைப் பெற விரும்பினார்? ஒரு தெளிவில்லாமல் வெறும் வதந்தி அல்லது ஊகங்களின் பேரிலேயே கேள்வி எழுப்பிக்கொண்டே போனால் என்ன பதில் கிடைக்கும்?
மேலே 42 நிமிட வீடியோவைப்பார்க்க நேரமில்லையா? கடந்த 21ஆம் தேதி தமிழக அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனுடன் நடத்திய நேர்காணலின் 6 நிமிடச் சுருக்கம் இதையாவது பார்த்துவிடுங்கள்! அதிமுக பாஜக கூட்டணிக்குள் விரிசல், அடிமை அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பிஜேபி தான் முடிவு செய்ய வேண்டுமா போன்ற வதந்திகளைத் திமுகவின் சமூக ஊடகங்கள் எழுப்பிவரும் கேள்விகளையே ஹரிஹரனும் கேட்கிறார் ! என்பது தந்தி டிவி முதலாளிகளின் அஜெண்டாவாகக் கூட இருக்கலாம்! பாண்டியராஜனோ. முருகனோ கொஞ்சமும் மழுப்பவில்லை என்பது ஒருபுறம்! தேர்தல் களம் இன்னமும் தயாராகவில்லை, சூடு பிடிக்கவில்லை என்பதாலேயே இதுபோன்ற வதந்திகள்,பேட்டிகள் உலா விடப்படுகின்றன.
Saturday, December 26, 2020
சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! #அரசியல்களம்
அரசியல் செய்தியா அல்லது செய்தியே அரசியலா என்று குழம்பும் அளவுக்கு, தமிழக அரசியல் களத்தில் நிறையக் காமெடி சமாசாரங்கள் நடந்து கொண்டே இருக்கும்தான்! அதைமட்டுமே நம்பி, ஆஹா, அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன?! நிகழ் நேர அரசியல் காமெடி அல்லது செய்திகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?
#உதை_வாங்கிய_உதயநிதி கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
#உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டாக் போட்டு பரவலாகக் கலாய்த்திருப்பதாக இங்கே செய்தி
இன்னிக்கி அவனவன் குடும்பத்தோட கொஞ்சம் Wine குடிச்சமா, கேக், மட்டன் சாப்பிட்டமான்னு இருக்க விடாம புதுசா புதுசா என்னதடா கிளப்புறீங்க.
இன்று நண்பர் ஒருவர் ஒரு சர்ச் போர்டில் கண்டது :
கிருஸ்மஸ் இன்று சென்னையில் ஏசுவின் நவ க்ஷேத்திர யாத்திரை டூர் பேக்கேஜ் ஆரம்பம்!
மவுண்ட், லிட்டில் மவுண்ட், பெஸண்ட் நகர், சாந்தோம், மேரி மாதா சர்ச் (கோட்டை), (அரண்மனைக்காரத் தெரு) உட்பட 9 இடம்! ஒரே நாளில்! தவற விடாதீர்!
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலா...
-
எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு...
-
நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான...
-
புதன்கிழமை என்றால் எங்கள்Blog இல் கேள்விபதில் பதிவு கௌதமன் சாருடைய தனிக்காட்டு ராஜாங்கம் என்பதோடு கொஞ்சம் சுவாரசியமான விஷயங்களும் இருக்கும்...
-
என் சுவாசக் காற்றே......! உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா? அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வா...
-
யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்...
-
மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உ...
-
முந்தின பதிவில் ஒரு பாடலைக் கொடுத்து அதில் சரித்திரம் எந்த அளவு இருக்கிறது, புனைவு எந்த அளவு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இ ருந்தது ...
-
நம்மூர் ஆனந்த விகடன் தளத்தில் கூட அபூர்வமாக ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் உருப்படியான செய்தி, அதுவும் இந்தக்காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வ...