இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒருவிதமான தேர்தல் சுரம் தொற்றிக் கொள்ளும்! அவர்களுக்குத் தொற்றியதை நமக்கும் தொற்றிக்கொள்ள விடத்தான் வேண்டுமா? இது KDbrothers சேனலுக்கு ஓசி விளம்பரம் இல்லை!
இனி செய்திகளை ஒவ்வொன்றாக அலசலாமா?
முதல் கீச்சைக் கொஞ்சம் கவனியுங்கள்! நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்தது கூட்டணி ஆட்சியா? தனிக் கட்சி ஆட்சியா என்று கேட்பதிலேயே மாநிலத்தில் தனிக்கொள்ளை! மத்தியிலே கூட்டுக் கொள்ளை என்று சோனியாவோடு கூட்டணி அமைத்து 10 ஆண்டுகள் வளமாகக் கொழித்த பழையகதையை நினைவு படுத்துகிறார்களோ? நாட்டுக்கு நல்லது ஏன் தமிழ்நாட்டுக்கும் நல்லதாக இருக்கக் கூடாது?
கழகத்தின் முன்னோடி கருணாநிதி 2006 வாக்கிலேயே இந்தலாஜிக்கை அறிமுகப்படுத்தி, கூட்டாளிகளை வாயடைக்கச் செய்துவிட்டார் என்பதை அறியாயோ கண்மணியே!அப்போது யார் யார் எந்த அணியில், எத்தனை சீட்டை ஜெயித்தார்கள் என்பதையும் அங்கே சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்! கருணாநிதியால் செய்ய முடிந்ததை, ஸ்டாலினும் செய்ய முடியுமா என்பது 9 ரூபாய் நோட்டு போல கேள்விக் குறியாக இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!
அந்தக்கணிப்பு இந்தக்கணிப்பு என்று ஸ்டாலினை முன்னிறுத்தி வருகிற எந்தக்கணிப்புமே நம்பத் தகுந்ததுதானா? இதையும் இரண்டாவது கீச்சில் கொஞ்சம் உரசிப்பார்த்து விடலாமா?
இங்கே வயது வாரியாகப் பிரித்து சொல்லி இருப்பதிலுமே கொஞ்சம் தெளிவில்லை! முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை 19வயதுக்கு உட்பட்டவர்கள் வெறும் எட்டு லட்சத்துச் சொச்சம் தானா? அடுத்த பிரிவு 20 முதல் 29 வயதுக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சம்! இந்த இரண்டு பிரிவையும் சேர்த்தால் 1.27 கோடி! இதில் ஒருமுறை அல்லது இருமுறை வாக்களித்தவர் எண்ணிக்கை சரியாகப் புலப்படவில்லை என்றாலும் தி மு கழகம் இந்தப்பிரிவினரில் எத்தனை சதவீத வாக்குகளை வாங்கிவிடும் என்கிறீர்கள்? இங்கே தான் கருத்துக் கணிப்புகள் முழுக்கத் தவறுகிறதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் உள்ளிட்டு எல்லா உதிரிக் கட்சிகளையும் சேர்த்து மெகாகூட்டணி அமைத்தாலும் சரியான விடை சொல்ல முடியாதபடி தான் களநிலவரம் இன்னமும் இருக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டபிறகு இருமுனைப்போட்டியா, பலமுனைப்போட்டியா என்பதில் இப்போது வரும் ஆரம்பகட்ட கருத்துக்கணிப்பு எல்லாம் வாக்காளருடைய ஒரு விரல் பட்டனை அழுத்தும் போது என்னமாதிரி எதை நாடி அழுத்தும் என்கிற ஒரே தருணத்தில் பொய்யாகிப்போகுமா?
களம் தயாராகிக்கொண்டே வருவதில் கொஞ்சம் பொறுத்திருந்துதான், கணிப்புகளின் வேர் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்கப் பழகுவோமே!
என்ன அவசரம்?
ஆனால் கீழேயே இன்னொரு செய்தியும் இருக்கிறதே!
தமிழகத்தில் வயது வாரியாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
#Voters #VotersList #Elections2019 #ElectionCommission #TamilNadu #sunnews
- ஆனால் செய்திகளை முந்தித்தருவது தந்திதானோ? நேற்றிரவே வாக்காளர் பட்டியல் விவரம் ட்வீட்டரில் வெளியாகி விட்டது.