ஆனந்த விகடன் தலையங்கம்: செய்ய முடிவதைச் சொல்லுங்கள்!
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது இப்போது சாத்தியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றிக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம், ‘எப்போது குறைக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் தேதி ஏதாவது போட்டிருக்கிறதா?’ என்றும் கேட்டிருக்கிறார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைப்பதன் மூலமே அவற்றின் விலையைக் குறைக்க முடியும். ‘செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமே பெட்ரோலியப் பொருள்களின் வரிகள் சமீபகாலத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டன. இவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாட் வரியைக் குறைப்பதால் மாநிலத்துக்கு இழப்பு ஏற்படும். இப்போது விலையைக் குறைக்க முடியாது என்றாலும், எங்கள் ஆட்சிக்காலத்துக்குள் இதைச் செய்வோம்’ என்பது நிதியமைச்சரின் வாதம்.
மாநிலத்தின் நிதிநிலைமை அவர் அறியாதது அல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டவர் அவர். சொல்லப்போனால், தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நேர்மறையான அணுகுமுறைகள் மூலம் தி.மு.க அரசு பாராட்டைப் பெற்றுவருகிறது. ஜெயரஞ்சன் தலைமையில் தமிழக அரசின் மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவை அமைத்தது முதல் இப்போது ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்தது வரை எல்லாமே வரவேற்பு பெற்ற அறிவிப்புகள்.
பால் விலைக்குறைப்பு, பெண்கள் மற்றும் திருநர் சமூகத்துக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனத் தேர்தல் வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு விவகாரம் முதல் சறுக்கலாக அமைந்துள்ளது. ‘சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்’ என்பது தி.மு.க-வின் தேர்தல் முழக்கம். ‘செய்ய இயலாததை ஏன் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வியை இப்போது நிதியமைச்சரின் அறிவிப்பு எழுப்பியுள்ளது. தி.மு.க கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவும் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துபவை. அவற்றின் நிலை என்ன ஆகும் என்ற சந்தேகம் இந்தத் தருணத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்வார். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் ரிப்போர்ட் கார்டை வழங்குவார்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. (ஆனந்த விகடன், 30.06.2021)
தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுத்தது யார் என்பது இன்னமும் தெளிவாகாத விஷயம். புதுச்சேரி பிஜேபி அமைச்சர்களும் ஒன்றிய அரசு எனச்சொல்லியே பதவிப் பிரமாணம் செய்ததாக இங்கே செய்திகள் பரவலாக வெளியானபிறகு, தமிழிசை இத்தனை தாமதமாக மறுத்திருப்பதே ஒருவிதமான சப்பைக்கட்டு மாதிரித் தான் இருக்கிறது. (இந்து தமிழ்திசை உள்ளிட்ட ஊடகங்களில் முன்னர் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு, வீடியோக்கள் கிடைக்கிறதா என்று தேடினேன். உறுதி செய்யப்படாத தகவல் என்று நினைத்ததால் இந்தப் பக்கங்களில் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.) இதில் தமிழில் பதவியேற்ற பெருமையை மறைப்பது எங்கே இருக்கிறது? ‘இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப்பரப்பு’ என்று சொல்லிப் பதவியேற்பு உறுதிமொழியை ஆரம்பித்துவைத்தவருக்கு, பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்த ஒன்றியம் என்கிற வார்த்தை கிடந்து படாத பாடு படுவது தெரியாமல் போயிற்று என்றால் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?
உதயநிதி உருட்டுவதற்கெல்லாம் இது உறைபோடக் காணாது தான்! ஆனாலும் ஒரு நல்ல உருட்டோடு பதிவை முடித்துக் கொள்ளலாம் இல்லையா?
சிறிது காலம் முன்புவரை கூட நான் அர்ஜுன் சம்பத் என்கிற நபரை அவ்வளவாக அறிந்ததில்லை. பொன் மாலை பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் அடிக்கடி அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதுபோக ஒன்றிரண்டு வீடியோக்களில் பார்த்ததோடு சரி. நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ இன்று என் பார்வைக்கு வந்தது.
இந்த 23 நிமிட வீடியோவில் திமுகவை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரிக் கேள்வி கேட்கிறார். யூட்யூப் சேனல் வைத்திருந்தாலே ஊடகம் என்று அலப்பறை செய்கிற ஆசாமிகளுக்கு சூடும் வைக்கிறார் ரெட்பிக்ஸ் சேனல் தலைப்பு வைக்கிற மாதிரி சிவசங்கர் பாபாவைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை, சர்ச்சையைக் கிளம்புகிற மாதிரி எதையும் பேசவில்லை. ஆனால் அப்படித் தலைப்பு வைத்துத்தான் அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது, பாவம் என்ன செய்வது? அர்ஜுன் சம்பத் குறிப்பிடுகிற லயோலா கல்லூரிப் பேராசிரியை பற்றி ஒரு 5 நிமிட வீடியோ.
ஸ்டேன்லி ராஜன் சொல்கிற நுண்ணரசியல் புரிகிறதா? ஆணையத்தலைவர் மாதிரி ஏதாவது வாங்கிக்கொள்! ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் ஆசைப் படாதே! அவ்ளோ தான்! பஞ்சாயத்து முடிந்தது
மன்மோகன் சிங் 10 ஆண்டு காலம் டம்மிப்பிரதமராக இருந்த ஐ மு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அதிகம் பேசப் பட்ட வார்த்தை கூட்டணி தர்மம். அதற்கு அர்த்தம் மிக சிம்பிள்! கொள்ளையடிப்பதில் உனக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு என்கிற சதவீதக்கணக்கு. அவ்வளவு தானா? பானாசீனா மகனுடன் போய் முதல்வரை சந்தித்துவிட்டு வந்தது என்ன கணக்கு? மரியாதை நிமித்தமாக என்பது வெளியே சொல்லிக் கொள்வது மட்டும் தான்.
இந்தியப் பிரதமராக இருந்த அரசியல்வாதிகளிலேயே இன்றைக்கும் மிகவும் குறைத்து மதிப்பிடப் படுகிறவர் பி வி நரசிம்ம ராவ் ஒருவர் மட்டும் தான் என்கிற கசப்பான உண்மையை அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிற ஜூன் 28 இன்று, ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
புதிய தறுதலை தொலைக்காட்சிக்கு 17 மொழிகளில் பேச தெரிந்த முன்னாள் பி.வி.நரசிம்ம ராவ் என்று மட்டுமே தலைப்புக் கொடுக்கத் தெரிவதில் வியப்பு ஒன்றுமே இல்லை. முன்னாள் என்ற வார்த்தைக்கு அடுத்து பிரதமர் என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க முடியாத அலட்சியத்தைப்போலவே தேச மக்களும் அவரைக் குறைவாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்தி வருகிறோமா?
நரசிம்ம ராவ் : இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி என்ற தலைப்பிலேயே நூலின் மொத்தக் கருத்தையும் சொல்கிற மாதிரி வினய் சீதாபதியின் ஆங்கிலநூலைத் தமிழில் மொழி பெயர்த்த ஜெ . ராம்கியின் அறிமுக உரையோடு போன சனிக்கிழமை ஒரு நூல் மதிப்புரை விவாதம் நடந்தது என்ற தகவலை சற்றுத்தாமதமாகத் தான் தெரிந்து கொள்ள முடிந்தது . வலையேற்றியது Tamil EBookery யூட்யூப் தளத்தில் நேற்று வரை தேடி இன்றிரவு தான் கிடைத்தது.
வீடியோ 44 நிமிடம்
பேரறிவும் ஆளுமையும் இருந்தும் நரசிம்மராவால் சோனியா காண்டி, பல்லக்குத் தூக்குகிற விசுவாசிகள் துணையோடு கொடுத்த குடைச்சலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது இந்திய அரசியலின் பெரும் சோகம்.. சோனியாவின் வஞ்சம் நரசிம்மராவ் இறந்த பிறகும் தீராததில், முன்னாள் பிரதருக்கு டில்லியில் அரசுமரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தக்கூட விடவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள்ளும் அவரது உடல் மரியாதை செலுத்துவதற்காக வைக்கக்கூட அனுமதியில்லை. அகமது படேல்களும் ராஜசேகர ரெட்டிகளும் சேர்ந்து நடத்திய கொடுமைகளை முன்பே இங்கேயும் இன்னொரு வலைப்பக்கத்திலும் பேசியிருக்கிறோம்.
பிபிசி தமிழில் ஒரு விரிவான செய்திக்கட்டுரை வெளி வந்திருக்கிறது, பழைய கதைகளை மேலோட்டமாக நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நாட்டுக்குழைத்த நல்ல மனிதர்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
உதவாத ஒரு இடதுசாரியாகத் திரிந்து கொண்டிருந்த 40+ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பிரபலமான அரசியல் ஆளுமையைப் பற்றி, தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டே தோழர் வரதராஜன் சொன்ன ஒரு சத்தியவாக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஞாபகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்த்தால் அது எத்தனை சத்தியமான வாக்கு என்பதும் புரிந்துவிடும்.
வீடியோ 36 நிமிடம்
தோழர் வரதராஜன் குறிப்பிட்ட அந்தப்பிரபலமான அரசியல்வாதி பலவித கிறுக்குத்தனங்களுக்குப் பெயர் போனவர். கருணாநிதி மாதிரி எல்லாவற்றிலும் கருத்துக் சொல்லி எல்லா விதங்களிலும் சிக்கிக்கொண்டவர் அல்ல. எப்படி அவர் தப்பித்துக்கொண்டே வருகிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. அதற்குத் தோழர் சொன்ன பதில் தான் கிளாஸ்! இருகோடுகள் தத்துவம் தான்!
" ஒருவிஷயம் மிகவும் முட்டாள்தனமானது என்று ஜனங்கள் கூக்குரல் எழுப்ப ஆரம்பிக்கிறபோதே இன்னுமொரு முட்டாள்தனத்தை முன்னிறுத்துவது! புதிய விஷயம் கிளம்பியவுடன் பழைய கிறுக்குத்தனத்தை ஜனங்கள் மறந்துவிட்டுப் புதிய விஷயத்தைப் பிடித்துக் கொள்வார்கள். இப்படி வரிசையாகத் தொடர்வதிலேயே ஜனங்கள் மறதியும் கூடிக்கொண்டே போவதுதான் அவருடைய பலம், சாமர்த்தியம்! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பிளேட் தயிர்வடை ஆர்டர் செய்யச் சொல்வார். தயிர்வடை என்னுடைய குரு தட்சிணை என்பது நண்பர்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும்!
திமுக ஆட்சிக்கு வந்து இன்று 50 நாட்களாவதில், இரு கோடுகள் தத்துவம் சொல்கிற மாதிரி, வலுவில் ஒரு பிரச்சினையை உருவாக்கி, ஜனங்கள் குய்யோமுய்யோ என்று கூவ ஆரம்பிப்பதில் இன்னொரு பிரச்சினையை ஆரம்பித்து, தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத அவலத்தை மறைத்து ஜனங்களுடைய கவனத்தை எதிலும் நிலைகொள்ள விடாதபடி திசைதிருப்புவதில், அநேகமாக வெற்றி அடைந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு விஷயமாக நினைத்துப்பாருங்கள்! முதலில் அமைச்சர் தியாகராஜன்! ஒன்றியம் குன்றியம் என்ற விதண்டா வாதத்தை ஆரம்பித்தது அவர்தான்! நடுவில் சேகர்பாபு என்டர் ஆனார். அப்புறம் மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று ஒரேபோடாக செந்தில் பாலாஜி போட்டது ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைக்கு கொங்கு ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் என்பது ஆளுநர் உரையில் இடம்பெறாமல்போனதே பெரிய சாதனை என சட்டசபையில் பேசியது சர்ச்சையாக.
கூட்டிக் கழித்துப்பாருங்களேன்! திமுகவின் சிக்சர்கள் காணாமல் போனதும் வெட்டி சர்ச்சைகளில் அவர்களது கையறுநிலை மறைக்கப்படுவதும் புரியுமே!
பர்கா தத்தின் Mojo Story சேனலில் அவருடைய அரசியல் சொற்பொழிவு, விவாதத்தைக் கேட்கையில் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
53 நிமிடங்கள் என்பது இந்த சப்ஜெக்டுக்கு மெய்யாகவே நெம்ப ஓவரு ரகம் தான்! இந்த ஒரு விஷயத்துக்காகத் தான் சதீஷ் ஆசார்யா, மஞ்சுள் போன்ற கார்டூனிஸ்ட் அறிவுஜீவிகள் தேவலையே என்று தோன்றும். சாம்பிள் ஒன்று பார்த்துவிடலாமா?
சதீஷ் ஆசார்யா, பிரசாந்த் கிஷோரை சௌகரியமாக இதில் தவிர்த்துவிட்டார் என்பதில் நுண்ணரசியல் எதுவும் இருக்கிறதா?
கார்டூனிஸ்ட் மஞ்சுளுக்கு நரேந்திர மோடியைத் தவிர வேறெதுவுமே பிரச்சினையில்லை!பொருட்டுமில்லை! ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி வகையறாக்கள் செய்துவந்த அட்டூழியங்கள் எதுவுமே பொருட்டில்லை என்கிறபோது எரிச்சல் வரத்தான் செய்கிறது.
இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று அந்தநாட்களில் காமராஜர் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.
திமுக அடக்கமுடியாத யானை என்று சட்டசபையில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வீடியோ 40 நிமிடம் என்று சொன்னால் ஸ்ரீராமுக்கு ஒவ்வாமை வந்துவிடுமே என்பதால் ஸ்க்ரீன் ஷாட் மட்டும்! பார்க்க விரும்பினால் நீலக்கலரில் சுட்டி.
அடக்கமுடியாத யானை எப்படியிருக்கும் என்பதை கார்டூனிஸ்ட் அமரன் கோடுகளில் வரைந்து காட்டி இருக்கிறார்! திருத்தங்கள் நிறையச் சொல்லலாம்!
இந்த யானைக்கு ஒவ்வொரு அவயமும் வெவ்வேறு மிருகத்தின் அவயமாக வரைந்திருந்தால் கனப்பொருத்தம்!
தினமலர் நாளிதழுக்கு என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்::: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை. தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது. கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர். ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்! உண்மையிலேயே பரிதாபப் படுகிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா? எதுவாக இருந்தாலும் ஒன்றரை மாதத்திலேயே திமுகழக அரசின் லட்சணம் இதுதான் இப்படித்தான் என்றாகிவிட்டது மட்டும் நிச்சயம்
இந்த ஒன்றியம் இவர்களிடம் படுகிற பாடு இருக்கிறதே! நீட் தேர்வு பற்றிய பேச்சு எழுகிற சமயங்களில் எல்லாம் சினிமா நடிகர் சூர்யா தவறாமல் ஆஜராகி விடுகிறார் என்பது கூட தமிழக அரசியலின் இன்னொருவிதமான காமெடி!
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்கள், திருத்தங்கள் மீது தீர்மானமோ ஆட்சேபமோ தெரிவிப்பது ஒரு பயனுமில்லாத நேற்று அரசியல் ஸ்டன்ட் மட்டுமே! அதுபோலவே தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, தேர்வு ரத்து என்பதும் சட்டமசோதாவை உச்சநீதிதிமன்றம் உறுதிப்படுத்திய பிறகு எடுபடாது என்று தெரிந்தே மாணவர்களையும் பெற்றவர்ளையும் குழப்பி ஏமாற்றுகிற வேலை! பின்னே வேறென்ன?
தினமலர் நாளிதழ் இன்றைக்குப்பார்த்து எதற்காக இந்தக் கார்டூனை வெளியிட்டிருக்கிறார்கள்?பாமகவின் இரட்டைநாக்கும் ஆதாயம் இருந்தால் கூட்டணியை மாற்றிக்கொள்ளும் வேகமோ புதிது அல்ல. 2021 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு திமுகவை நெருங்க பாமக எடுத்த முயற்சிகள், பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர் G K மணி மருத்துவர் ராமதாசின் தூதராகச் செயல்பட்டுவருவது எதுவுமே ரகசியமல்ல. ஆச்சரியமுமல்ல.
முதல்வர் நல்ல முடிவெடுக்கப்படும் என்று சொன்னது போல மருத்துவர் ராமதாசும் முடிவெடுத்துவிடுவார் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல.
தினமலர் செய்தி மட்டும் உண்மையாக இருக்குமானால் தமிழகத்தில் பிஜேபி மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அடுத்து வரும் தேர்தல்களில் கழகங்களை, கூட்டணி வைக்காமலேயே தோற்கடிக்கிற அளவுக்கு வலிமை பெற்று வளருகிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டுமோ? A Party with a diference என எப்போதோ யாரோ சொன்ன கதையெல்லாம் பொய்தானாம்! அவர்களும் கழகங்கள், காங்கிரஸ், இதர கட்சிகள் மாதிரியே இந்தவிஷயத்திலும் என்று நீட்டி முழக்குகிறது தினமலர்.
டிஸ்கி: ஆனால் பிஜேபியின் மாநில பொதுச் செயலர்
K T ராகவன் மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறார்
அதேபோல H ராஜா மீது தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடுகட்டிக் கொண்டுவிட்டார் என்ற செய்தி அமமுக ஆசாமிகளால் பரப்பப்படுவதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் பகிர்கிறேன்.
அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை என்பது சரிதான் போல.
தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிற அதே நேரம் தேசியப் பார்வை கொண்டவராகவும், அரசியலை உடனுக்குடன் ஆராய்ந்து, சரியாக விமரிசனம் செய்கிறவராகவும் அவர் இருப்பதுதான்! பாமகவின் டாக்டர் ராமதாசும் கூட அப்படி அரசியல் செயல் பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மீது அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டாக்டர் ராமதாஸ் ஆதாயம் தருகிற பக்கம் சாய்ந்தே பழக்கப்பட்டவர என்பதோடு, எல்லா நேரங்களிலும் அவரது அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்ததே இல்லை என்கிற கடந்தகால வரலாறும் தடையாக இருக்கிறது.
நான்காண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்தான்! ஒரு consistency உடன் அரசியல் பேசுகிறவர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு என்றாலும், அப்படி அரிதானவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வீடியோ 37 நிமிடம், டாக்டர் கிருஷ்ணசாமியைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒன்றும் கூட!
நேற்றைய 16வது தமிழக சட்டமன்றக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியதில்,புதிய திமுக அரசின் செயல் திட்டங்கள் எப்படியிருக்கும் என்பது வெளிப்பட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா?
படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா?
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.
நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப் பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.
மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது. தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.
ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.
இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்? ”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம். ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப் படுத்தப் போகிறார்களா? இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.
குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!
அரசியலில் ஒரு தெளிவான பார்வையோடு இருப்பது அபூர்வம். நேர்மையாக அரசியல் விமரிசனம் செய்வது அரிதிலும் அரிது. இப்படி அபூர்வமானவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறாரே, எப்போது இவர்போன்ற அரசியல்வாதிகளைக் கண்டுகொள்ளப் போகிறோம்? சொல்லுங்கள்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்? 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக செய்த மிகப்பெரிய தவறாக தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை ஒதுக்கிவைத்தது தான் என்பது என்னுடைய கருத்து. பாமகவுக்கு மட்டுமே கொடுத்த முக்கியத்துவம், பிஜேபி உடன் ஒருவிதமான அலட்சியம் இவைகளும் அதிமுகவின் தோல்விக்குக் காரணங்களாக இருந்தன. பிஜேபியும் கூட அதே தவறைத்தான் இன்று வரை செய்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்று பிரதான எதிர்க் கட்சியாக, பெயரளவுக்கே அதிமுக இருந்து வருகிறது. அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாமகவின் டாக்டர் ராமதாசும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமியும் தான் செய்துவருகிறார்கள் என்பதை இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றால் தமிழ்நாடு என்பது ஊராட்சிகளின் ஒன்றியமா என்ற அழுத்தமான கேள்வியை தமிழக அமைச்சர்களிலேயே கடைக்குட்டி தியாகராஜனுக்கு முன்வைக்கிற தைரியம் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமிக்கே இருந்தது. தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமரிசனத்தையும் கிருஷ்ணசாமி தொடர்ந்து செய்து வருகிறார். கவனிக்கிறோமா?
'ஸ்டாலின் டெல்லி பயணம்' சாதனை ஆனதா? வெறும் சம்பிரதாயத்தில் முடிந்ததா.?
மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி!! இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா?
மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 40 தினங்கள் கழித்து ஜூன் மாதம் 17ஆம் தேதி டெல்லியில் பாரத பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அரசு விழா ஒன்றுக்கு வருகை புரிந்த மோடி அவர்களுக்கு எதிராக திமுகவும், அதன் தோழமை இயக்கங்களும் கருப்பு கொடிகளாலும், கருப்பு பலூன்களாலும் சென்னையின் மண்ணையும், விண்ணையும் நிரப்பி போராட்டம் செய்தனர். அதையும் தாண்டி மோடி அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி மாணவர் வளாகத்திலும் அத்துமீறி நுழைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவங்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. எந்த மோடிக்கு எதிராக ”திரும்பிப் போ” என்று கோஷம் எழுப்பினார்களோ? அந்த மோடியை தேடி அவருடைய இல்லம் சென்று சந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சென்னையில் மோடிக்கு எதிராக நடந்தது போல, டெல்லியில் ஸ்டாலினுக்கு எதிராக எவரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது டெல்லி அரசியல் நாகரீகம்!
மாநிலங்களில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்கள் பாரத தேசத்தின் பிரதமரைச் சந்திப்பது வெறும் சம்பிரதாயத்திற்கானது மட்டுமல்ல, தங்களது சாதுரியத்தால் அந்தந்த மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்களை வலியுறுத்தி சாதிப்பதே அதில் உள்ளார்ந்த அம்சம். இதுபோன்ற ஒரு முக்கியமான சந்திப்பிற்கு முன்பாக கள அளவில் “Home Work” என்று சொல்லக்கூடிய முன்னோட்ட பணிகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.
“Go Back Modi” என சமூக வலைதளங்களில் டிரென்டிங் செய்ததும், விமான நிலையத்தைத் தாண்டி பதினைந்து கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கிண்டி ஐஐடி வளாகத்திற்குள்ளும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததும் மோடியின் நெஞ்சில் நீங்காத வடுவாகி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சுமூகமான உறவுக்கான பாதையை ஸ்டாலின் அவர்களால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஒரு ராஜ தந்திர நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஏனெனில் பிரதமருடனான சந்திப்பு என்பது வெறும் சம்பிரதாயத்தையும் தாண்டி தமிழகத்திற்குக் கேட்டுப் பெற வேண்டிய பல கோரிக்கைகள் அவர் தலைக்குமேல் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறக்க ஒரு இதமான சூழலை உருவாக்கி அதன் பின் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் டெல்லி சென்று சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சில கோரிக்கைகள் நிறைவேறியிருக்கக் கூடும். கடந்த 17 ஆம் தேதி பிரதமர் – ஸ்டாலின் நேரடி சந்திப்பின் போது 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஒரு புத்தக வடிவிலான மனு அவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன தலை மேல் இருக்கக்கூடிய பிரச்சனைகளா? அதையெல்லாம் ஏன் தற்போதைய உடனடி கோரிக்கைகளில் சேர்க்க வேண்டும்? கரோனா இரண்டாவது அலையில் தொழில், வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும் நாற்பது நாட்களுக்கு மேலாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினருமே ஊரடங்கால் சிக்கித் திணறுகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசும் மிகப்பெரிய அளவிற்கு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. எனவே, இப்பொழுது தமிழக அரசை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போதிய நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை தானே முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்?
ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூபாய் 1000, அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபாய்1000-லிருந்து 1500, பெட்ரோல் டீசலுக்கு தலா ரூ 5 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற நிதி ஆதாரத்தோடு சமந்தபட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட தமிழ்நாடு அரசு நிறைவேற்ற எந்த முனைப்பும் காட்டவில்லையே? இந்நிலையில் 12,500 கோடி நிலுவையில் உள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வீராவேசமாகப் பேசினால் மட்டும் போதுமா? பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி நிலுவை, 13 மற்றும் 14-வது நிதி ஆணைய பங்கீடுகள் போன்ற மிக முக்கிய நிதி அம்சங்கள் அல்லவா அக்கோரிக்கை மனுவில் முக்கிய இடம் பெற்றிருக்க வெண்டும்?
தமிழக நிதி நிலைமையை எடுத்துச் சொல்லி, குறைந்தபட்சம் அந்த நிலுவைத் தொகையை இரண்டு, மூன்று தவணைகளாகப் பெறுவதற்கு உண்டான உத்தரவாதத்தைப் பிரதமரிடத்திலே அப்போதே பெற்று அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேருவதற்கு முன்பாக ரூபாய் 4000 அல்லது 5000 கோடி பெறப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற முக்கியமான வாய்ப்பை ஸ்டாலின் நழுவவிட்டு விட்டார். சாதனை நிகழ்த்துவதைக் காட்டிலும் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதிலும், வெறுப்பு அரசியல் செய்வதையுமே முக்கியமானதாகக் கருதியதன் விளைவுதான் இதுவோ?
சாதனைகளை நிகழ்த்த அதற்குண்டான வலுவான முன்னேற்பாடுகள் “Spade Work” முறையாகச் செய்யப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் மாறாக ”எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல” - ”பச்சை புண்ணில் உப்பைத் தடவுவது போல” மே 07-ஆம் தேதி பதவியேற்ற நாள் முதல் டெல்லி சென்று திரும்புவது வரை மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என இழிவு படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு; தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை மட்டுமே கையில் எடுப்பது தமிழகத்துக்கு நிகழ்காலத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது; எதிர்காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.
மத்திய அரசின் அதிகார வரம்பு என்ன? மாநில அரசின் அதிகார வரம்பு என்ன? என்பது கூட தெரியாமல் ஒரு மாநிலக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, இப்போது அத்தனையையும் நிறைவேற்ற வேண்டும் என பட்டியலிட்டுக் கேட்டால், அதை நிறைவேற்றுவது எப்படி மத்திய அரசுக்கு சாத்தியமாகும்? ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த அறிக்கை என்பது வேறு; தேர்தல் வாக்குறுதி என்பது வேறு; நடைமுறை பிரச்சினை என்பது வேறு. புதிய கல்வித் திட்டம் (NEP), நீட் தேர்வுகள் (NEET), மூன்று வேளாண் திட்டங்கள், மின் சட்டம் போன்றவை எல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இந்தியா முழுமைக்குமான சட்டங்களை ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ரத்து செய்ய முடியுமா?
7 பேர் விடுதலை, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகம் போன்ற அம்சங்கள் குறித்து என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நடந்த சந்திப்பு 20 நிமிடங்கள். வெளியே வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு ’மன நிறைவையும், மகிழ்ச்சியையும்’ தந்தது என்று கூறினார். பொதுவாக இது அரசியல் தளத்தில் பயன்படுத்தப்படும் Diplomatic வார்த்தை அல்ல, பொதுவாக ’திருப்தி’ என்ற வார்த்தைதான் பயன் படுத்தப்படும். அதாவது தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே ’மகிழ்ச்சி’ என பயன்படுத்தப்படும். ஏன் ’திருப்தி’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, மனநிறைவு என்ற வார்த்தை பயன்படுத்தினார்? என்பது புதிராக உள்ளது.
மோடி அவர்களுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியதாக ஸ்டாலின் அகமகிழ்ச்சி கொள்கிறார். மோடி அப்படிச் சொல்லியிருந்தால் அது அவரின் பெருந்தன்மையும், திறந்த மனப்பான்மையும் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழ் மாநிலத்தைப் பாகுபாடில்லாமல் தங்களுடன் அணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அடுத்த பத்தாவது நிமிடத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மீண்டும் ’ஒன்றிய புராணம்’ பாடி தனது வெறுப்பு அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கலக்காமல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகச் செல்லுமா? அல்லது பிணக்குடனே தொடருமா? என்பதே கேள்வி.
இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா இருக்குமா?
மிகவும் எதிர்பார்த்த மோடி - ஸ்டாலின் சந்திப்பு வெறும் சம்பிரதாயமாகவே முடிந்து விட்டது; சாதிக்க வாய்ப்பிருந்தும், ஸ்டாலின் சாதிக்க தவறிவிட்டதால் ஏமாந்து போனது தமிழ் மக்களே! ஸ்டாலின் அவர்களின் மன மகிழ்ச்சி - மன நிறைவுக்கு அவரின் வேறு எந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்? என்பதற்கு எதிர்வரும் காலமே பதில் சொல்லும்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.
20.06.2021
கவனிக்கவேண்டிய முக்கியமான பகுதிகளை தடித்த எழுத்துக்களில் தந்திருப்பது என்னுடைய வேலை.
குப்பை அரசியல்வாதிகளுக்குத் தேவையே இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதில், டாக்டர் கிருஷ்ணசாமி மாதிரி கவனிக்கப்படவேண்டியவர்களை கவனிக்க மறந்து விடுகிறோமா? எப்போது நம்முடைய பார்வையை விசாலமாக்கிக்கொள்ளப் போகிறோம்?
முந்தைய பதிவில் தமிழக முதல்வர் தலைநகர் டில்லிக்குப் போனதைக் கொஞ்சம் பார்த்தோம். கூடவே போனவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது லைம்லைட்டுக்கு வரவே இல்லையே என்ற மனக்குறையை இன்றைய செய்திகள் தீர்த்து வைத்திருக்கின்றன. திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகன் முதல்வருடன் கூடவே டில்லிக்குப் போனதாக செய்திகள் சொன்னாலும் பிரதமரைச் சந்தித்த போதும் சரி, மறுநாள் சோனியாவை சந்தித்தபோதும் சரி துரைமுருகனைக் காணவே இல்லை. எங்கே போனாராம்?
டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே, கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்ததாக News 18 தமிழ்நாடு செய்தி சொல்கிறது. அப்படியானால் தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் MP மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றதாக இதே செய்தியின் துவக்கம் சொல்வதில் வரவேற்பளிப்பதற்காக மட்டுமே துரை முருகன் டில்லிக்குப் போனார் என்றாகிறதே! ஆக, பொழுது போகாமல்தான் தந்தையும் மகனும் தோனியைச் சந்தித்தார்கள் போல!
இந்த 5 நிமிட வீடியோவில் விகடன் சொல்வது என்ன? மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணி வேண்டாம் என ஸ்டாலின் உருமாறி இருப்பதாக சொன்னதைக் கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாதிரி நிதானமான அணுகுமுறைக்கு மாறிவருகிறார் என்கிறார்களே, அது சரிதானா?
.
நீட் தேர்வை ரத்து செய்!இது எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது. பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நீட் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை மெமோரண்டமாக அளித்து இருக்கிறோம் என்று சில கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லியிருக்கிறார்
நீட் தேர்வு ரத்து மாதிரியே கச்சத்தீவை மீட்பதும் அந்தக் கோரிக்கைகளில் சேர்ந்திருக்கிறது GST வரிவசூலில் தமிழகத்துக்கு நிலுவை இருப்பதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதில் ரூ. 4321 கோடி என்று குறிப்பிட்டுப் போதிய விவரங்களுடன் கேட்டமாதிரித் தெரியவில்லை. பிரதமருடனான சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும்? முகநூலில் ஒரு கற்பனை உரையாடல்.
சிரிப்பதற்காக மட்டும்.
திமுகஆட்சிக்கும் மின்வெட்டுக்கும் அப்படி பொருத்தம்! அந்தநாளைய ஆற்காடு வீராசாமி போலத் தடுமாறாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி அசால்டாக ஒரேபோடு போட்டதில் ஆறுமாத வாய்தா! அப்புறம்? இன்னொரு வாய்தா வாங்கத்தெரியாதா என்ன? !! ஜனங்கள் பாடு தான் எப்போதும் போலத் திண்டாட்டம்.....😕😔
சுண்டெலிகளுக்குக் குளிர்விட்டுப்போய் விட்டது போல! அதற்காக பிறந்தநாள் வாழ்த்தாக இப்படியா? திமுக சங்கர மடம் இல்லைதான்! ஆனால் வாரிசு இல்லாத கட்சி ஒன்றுமில்லையே!
தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர் - பிரதமர், முதலமைச்சர் சந்திப்பின் முக்கியத்துவம் இப்படி கலைஞர் செய்திகள் தொலைகாட்சி பெருமிதப்பட்டுக் கொள்கிற விவாத நிகழ்வு வீடியோ 50 நிமிடம். வேறு வேலை எதுவுமில்லை என்றால் தாராளமாகப் பார்க்கலாம். பனிமலர் தான் நிகழ்ச்சியின் நெறியாளர்.
இத்தனை அதிமுக்கியமான நிகழ்ச்சியைப் பற்றிய விவாதத்துக்குப் பார்வையாளர்கள் வெறும் 72 பேர்தான் என்பதை மேலே ஸ்க்ரீன்ஷாட் காட்டும்போது ஏ தாழ்ந்த தமிழகமே என்று கருணாநிதி மாதிரி நாமும் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லையே!
இணையத்தில் இந்த அதிமுக்கியமான நிகழ்வைக் குறித்து நிறைய சேதி சொல்கிறார்கள்! எப்படி என்று பார்த்து விடலாமா?
அதுசரி! ஸ்டேன்லி ராஜன் வேறெப்படிச் சொல்வாராம்?
கார்டூனிஸ்ட் அமரன் கூட ஸ்டேன்லி ராஜன் சொன்னதைத் தான் கோடுகளில் வரைந்திருக்கிறார்.
இது ஸ்ரீராம் சேஷாத்ரியின் ட்வீட்டர் செய்தி :: டில்லியில் வரவேற்கக் காத்திருந்த கூட்டம், 200 ரூ உபிக்களை டில்லிக்கு கூட்டிக்கொண்டுபோக செலவாகுமே! உள்ளூர் ஆட்களை வைத்தே சமாளித்துவிட்டார்கள் போல.
நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக ஸ்டாலின் ட்வீட் செய்த சோனியா ராகுல் இருவரைச் சந்தித்ததைப்பற்றி எந்த முக்கியத்துவமும் விவாதமும் இல்லையா?
நாம்தான் இவர்களுக்குத் தேவையே இல்லாமல் இத்தனை பில்டப் கொடுத்து வருகிறோமா என்ன?
நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி ஜெ. ராம்கியின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பில் வினய் சீதாபதியின் புத்தகத்தை இன்றைய மீள்வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு அருமையான செய்தித்தொகுப்பு.
சிலவருடங்களுக்கு முன்புவரை கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லை என்ற முடிவு, என்மகன் வாங்கிவைத்திருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை என்னிடம் தள்ளிவிட்டதில், முறியடிக்கப்பட்டது. இன்றும் பி வி நரசிம்ம ராவ் என்கிற மகத்தான மனிதனைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் என்ன என்பதை யோசிக்க வைத்த ஒரு நல்ல புத்தகம் இது.
It were these crucial 90 minutes that paved the way for India’s historic decision to liberalise its economy in 1991. Rao was told that foreign exchange reserves had dipped to Rs 2,500 crore, only enough to meet three months’ importsஎன்று ஆரம்பிக்கிற ஒரு நினைவுத்தொகுப்பை வாசித்துத்தான் பாருங்களேன்! பிரதமர் நரசிம்ம ராவ், தன்னுடைய நிதியமைச்சராக இருக்கும்படி முதலில் கேட்டுக் கொண்டது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் I G படேலைத்தான்! உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஏற்க மறுத்து விடவே அடுத்த சாய்சாகத் தான் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டார் என்கிற சேதி போகிற போக்கில் இந்த நினைவுத் தொகுப்பில் வருகிறது!
சிராக் பாஸ்வான்! பீஹார் அரசியலில் செல்வாக்கோடு இருந்த ராம்விலாஸ் பாஸ்வானுடைய மகன், தந்தையின் அரசியல் வாரிசும் கூட! தந்தை நடத்தி வந்த லோக் ஜனசக்தி பார்ட்டியின் (LJP) தலைவரும் கூட.பிஹார் அரசியலில் நிதீஷ் குமாரின் JDU (S) கட்சியும் LJP யும் சமஅளவிலான வாக்குவங்கியை வைத்திருந்தது பழைய கதை. ஆனால் நிதீஷ்குமாரின் அரசியல் சாதுர்யம் அவரைக் கொண்டுபோன உயரத்தை பாஸ்வான்+ எட்டிப் பிடிக்கமுடியவில்லை கடந்த சட்டசபைத் தேர்தல்களில் NDA கூட்டணியை விட்டு வெளியேறி, தனித்துப்போட்டி ஆனால் பிஜேபிக்கு மட்டும் ஆதரவளிப்பதான விளையாட்டை சிராக் பாஸ்வான் நடத்தியதில் நிதீஷ் குமார் ரொம்பவுமே சேதப்பட்டுப் போனார் என்பதை நாடுமறந்தாலும் நிதீஷ் குமார் மறக்கவில்லை. Since then, Mr Kumar has been clear that the onus was on the BJP to show that it did not have a secret understanding with the LJP, drawn a red line at Chirag Paswan’s induction into the Union council of ministers, if and when a Cabinet reshuffle occurs, and worked to weaken Mr Paswan’s hold over his party. This plan succeeded (with perhaps the BJP’s blessings) when five LJP Members of Parliament decided to elect Pashupati Kumar Paras, the late Paswan’s brother, as parliamentary party leaderஎன்று உச்சுக்கொட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம்
நிதீஷ் குமார் பீஹார் அரசியலில் தன்னுடைய பிடியை மறுபடி பெற்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்வதா? அல்லது சிராக் பாஸ்வான் தன்னுடைய பிடியை இழந்து விட்டாரா? இப்போது அவர்முன் இருக்கிற சாய்ஸ் என்ன? இதற்குமேலும் பிஜேபியோடு காலம் தள்ள முடியுமா? பீஹாரில் எதிர்த்தரப்பான லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியோடு கை.கோர்ப்பாரா?
இங்கே கழகங்கள் அடிக்கிற லூட்டியில் வெறுத்துப் போய் வேறுபக்கம் பார்க்கப்போனால் அங்கேயும் இத்தனை ரணகளமா? ஒண்ணும் புரியலையே சாமி!
சொல்லாதே யாரும் கேட்டால்! சொன்னாலே தாங்க மாட்டார்! இப்படி ஒரு பழைய திரைப்படப்பாடல் இந்தத் திருட்டுச் செய்தியைப் படித்தபோது பின்னணியில் ஒலிக்கிற மாதிரியே இருந்ததென்றால் நம்புவீர்களா?
கிஸ்லே பாண்டே! ட்வீட்டரில் தன்னை சுப்ரீம் கோர்ட் சொலிசிட்டர் என்று சொல்லிக்கொள்பவராம்! உத்தரப் பிரதேச போலீசோ இந்தமனிதர் சட்டப்படிப்பெல்லாம் போலி என்கிறது.இப்போது சொன்னால் தாங்க முடியாதென்று சொன்னது இவர் நிஜவக்கீலா போலி வக்கீலா என்பதல்ல! கிரேட்டர் நொய்டாவில் இவர் வாடகைக்கு எடுத்திருக்கிற flat இல் இருந்து திருடுபோன 13 கிலோ தங்கம், ரொக்கம் பிடிபட்டிருப்பதுதான் விஷயம். இது வரை பதிவுசெய்யப்பட்ட திருட்டு வழக்குகளிலேயே சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கமாக 57 லட்சரூபாய் என்றிருந்தால் யாரால் தான் தாங்க முடியுமாம்? சொல்லுங்களேன்!
இத்தனைக்கும் இந்த வீடு இந்த போலி வக்கீல் பெயரில் இல்லை. ஏகப்பட்ட மோசடிப்புகார்கள் இவர்மீது இருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதெல்லாம் 18, 19 வருடங்களுக்கு முந்தையவை என்று லாயர் அசால்டாகச் சொல்கிறார்.
எப்படி இதுமாதிரி மோசடிப்பேர்வழிகள் எல்லாம் உலக மகாடாக்டர் ரேஞ்சிலேயே இருக்கிறார்கள் என்பதை இந்தச் செய்தியைப் படித்தபோது முதலில் அதிர்ச்சி அடுத்து ஆச்சரியம் என்று டாஸ்மாக் பக்கம் போகாமலே மயக்கம் வந்துவிட்டது .
இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்! அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே! பாமக நிறுவனத் தலைவர் Dr ராமதாஸ் சிலகாலமாகவே கதைகள் சொல்லி அரசியல் நடப்பை சொல்லாமல் சொல்வதென்ற பாணியைக் கடைப்பிடித்து வருவதும் தெரிந்திருக்கும்.
அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது.
அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, ‘’ நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று கட்டளையிட்டார்.
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், ‘’ பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்” என்று கதையளந்தனர்.
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திருப்பினர்.
எனக்கென்ன ஒரே வருத்தமென்றால், நாளைய தமிழ் பேசும் ஊராட்சி ஒன்றிய முதல்வராக அறியப்படுகிற தியாகராஜனைப் போயும் போயும் அந்த யூட்யூப் வாயன் ஜெயரஞ்சனிடம் பட்ஜெட் ஆலோசனை கேட்கச் சொல்லி விட்டாரே இந்த ஸ்டேன்லி ராஜன் என்பது மட்டும்தான்!
திமுகவும் முதல்வரும் தம்பட்டம் அடித்துக்கொள்கிற சிக்ஸர்கள் யோக்கியதை இன்னதென்று ஏற்கெனெவே தெரிந்து வைத்திருப்பதால் எனக்கு இந்த சிக்சரும் கூட என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லாமல் போய்விட்டது. மதுரை வக்கீலய்யா பிரபு ராஜதுரை வேறு முகநூலில் இந்தக் காலி இடம் கார் பார்க்கிங் ஆக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு மேல் ஒரு ஆக்கிரமிப்பும் இல்லை மீட்கப்படவும் இல்லை என்ற குட்டை முகநூலில் சிலநாட்களுக்கு முன்னாலேயே உடைத்துவிட்டார்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது அமைச்சர் பெருமக்களுக்குப் பொருந்தாது போல இருக்கிறதா? கொரோனா முதல் அலையில் (அதிமுக ஆட்சி) நோய்த்தொற்று எண்ணிக்கையை விட இப்போது 2வது அலையில் ( திமுக ஆட்சி) தொற்று பல மடங்கு அதிகம் உயிரிழப்பும் மிக அதிகம் என்பதை மறந்த மறைக்கும் பேச்சு. ''அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? கடந்த ஆட்சியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்பொழுது கரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று செந்தில் பாலாஜி கேட்டதாக நக்கீரன் வெளியிட்டிருக்கிறது
எல்லாவற்றுக்கும் உங்களையே நம்பியிருக்கிற கரூர் MP ஜோதிமணியை இப்படி வெறும் அஞ்சு பேரோடு வீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை.க் கண்டித்துப் போராட விட்டுவிட்டீர்களே! அது ஏன் அமைச்சரே என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல இருக்கிறது. நல்ல கதைதான்!
சிங்காரச் சென்னை வெர்ஷன் 2.0 வரப்போகிறது என்பது கொஞ்சம் பழசு! இப்போது சென்னையில் கோழிதிருடக் கூடக் காரில் வந்திறங்குகிறார்கள் என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். கொரட்டூர் காவல்துறை 10 நாட்டுக் கோழிகளைத் திருடிச்சென்றவர்களைத் தேடுகிறார்கள் என்று விவரிக்கிறது.
இது வேறுவிதமான சோஷலிசக் கொடும் காமெடி!
இது ஒன்றியக் காமெடி! ஓவராயிடுச்சுன்ன உடனேயே சுருதியைக் குறைத்துக்கொண்டது பெரும் காமெடி.
GST கவுன்சிலின் 44வது கூட்டம் இன்றைக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. போன கூட்டத்தில் 21 பக்கம் எழுதி வைத்து ரவுசுகாட்டிய DWD இந்தக்கூட்டத்தில் பேச்சு மூச்சே காணோம்!
டிஸ்கி:தமிழக நிதியமைச்சர் தன் எதிர்ப்பைச் சொன்னதாக, அரசு செய்திக்குறிப்பு ஒன்று சொல்கிறது. கவுன்சில் கூட்டத்தின் ஒன்றரை மணிநேர வீடியோவில் மட்டுமல்ல கூகிள் செய்தித் தேடலிலும் அதைக் காணோம். என்ன இது பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு வந்த சோதனை? உள்ளூர்ப் பல்கலைக்கழகத்திலேயே படம் வைக்கத்தடையா?
தினசரி ஏதாவது ஒரு ஆடியோவை வெளியிட்டு, யாரைக் குழப்புகிறார் சசிகலா? புதிய தறுதலை அறிவாளிகளே குழம்புகிறார்கள் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு?
தேர்தல் தோல்விக்குப்பின்னால் அதிமுக கொஞ்சம் துவண்டுபோய்த்தான் கிடக்கிறது.O பன்னீர் செல்வம் பழைய பன்னீர்செல்வமாக இருக்கிறாரா அல்லது புதிதாக தர்மயுத்தம் 2 என ஆரம்பிப்பாரா? சசிகலா அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்பிப் பார்க்கிறார் என்பது ஒருபக்கம், OPS என்னசெய்வாரோ என்று இன்னொரு பக்கமுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் திமுகவே ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறதென்றால் .........!
கமல் காசருடைய #மநீம கட்சி என்ன நிலைமையில் இருக்கிறது? மக்கள் நீதி மையத்தின் ஆலோசனை கூட்டம் இணையம் ஊடாக நடந்தது.கமலஹாசன் தானே பேசி தானே ஆலோசனை செய்திருக்கலாம் அல்லது தசவாதாரம் போல பல வேடங்களில் அவரே வந்து பேசியிருக்கலாம் என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் நேற்று முன்தினம்நையாண்டி செய்திருப்பது போலத் தானா? ஆனால் இரண்டு நாட்களாக பொள்ளாச்சி Dr. மகேந்திரன் திமுகவில் இணையப்போவதாக, பெரிய போஸ்டிங் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துகொண்டே இருந்தன.மு க அழகிரி - இசுடாலின் சந்திப்பு மாதிரியே அதுவும் வரும் ஆனா வராது ரகமாகிப்போய்விட்டது.
கமல் மாதிரியே, நிறைய பன்ச் டயலாகெல்லாம் பேசித் தன்னுடைய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தியவர் விஜய் சேதுபதி. தேர்தல் ரிசல்ட்டுக்குப்பிறகு அரசியல் பன்ச் பேசினால் என்னவாகும் என்பது தெரிந்தவராக, சங்கடமான பன்ச்சை விட்டு சமையல் நிகழ்ச்சியில் சங்கீதம் பாடப்போறேன் என்று ஒதுங்கிவிட்டார். யார் சேனலில் என்று கூடத்தெரியாத அப்பாவியாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
என்ன தயா இதெல்லாம் என்று ஆதங்கப்பட வேண்டாம்! சமூக இடைவெளி, கொரோனா கட்டுப்பாடுகள், ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் இவை சட்டமே நாங்கள்தானடா திமுக அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே!
சோனியாவின் தவப்புதல்வன் ராகுல் காண்டிக்கு ட்வீட்டரில் மட்டுமே அரசியல் பேசத்தெரியும். அதையும் யார் எழுதிக்கொடுக்கிறார்கள் என்பது காங்கிகளின் பரமரகசியம். பப்பு ஒரு கீச்சைப் போட்டவுடன் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து எப்படிக் கிழிக்கிறார்கள் பாருங்கள்! இந்த லட்சணத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் நிற்கக்கூடியவர் என்று ராகுலுக்கு முட்டுக்கு கொடுக்கிறார்களே. அது எப்படி?
இங்கே இசுடாலினுக்கு ஊடகங்கள் முட்டுக்கொடுக்க ஆரம்பித்து சில வருடங்கள் தான் ஆகியிருக்கும்! ஆனால் ராகுலுக்கு 2004 இலிருந்தே முன்களப்பிணியாளர்கள் முட்டுக் கொடுத்துவருகிறார்கள். முட்டுக்கொடுத்துக் கொடுத்தே இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்தே பாருங்களேன்!