மஹாராஷ்ட்ரா அரசியல் குழப்பங்கள், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆனபின்னாலும் தீர்ந்த பாடில்லை. சிவசேனா ஒரு முழம் இறங்கி மூன்று முழம் கொம்பேறிப் பேசிக் கொண்டிருக்கையில் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரேவுடன் அதன் MLAக்கள் +7 சுயேட்சைகள் (சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்) கும்பலாக மும்பையில் ஆளுநர் மாளிகைக்குப் போயிருக்கிறார்கள்! இந்த விவகாரத்தில் The Print தளத்தின் சேகர் குப்தா நேற்று ஒரு 22 நிமிட வீடியோவில் சிவசேனா என்ன நினைப்பில் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதை சொல்கிறார்!
Oct 31, 2019 6:50 pm (IST)
காங்கிரஸ் கட்சி இன்னமும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிவசேனா பின்னால் அலைகிறது. குமாரசாமியை முதலமைச்சராக்கிப்பார்த்த formula கர்நாடகத்திலேயே எடுபடவில்லை என்கிறபோது மஹாராஷ்டிராவில் மட்டும் எடுபடுமா என்ன?
Shiv Sena MLA Aditya Thackeray says that the delegation met the Governor to request him to provide financial assistance to the losses faced by the farmers in view of the drought situation. "We have requested the Governor that whatever losses the farmers have faced, the government should try to help them. Our priority is to help people," Thackeray said. என்கிறது News 18 செய்தி. அல்லாப்பேரும் ஜோரா ஒருக்கா கைதட்டுங்க!
காங்கிரஸ் கட்சி என்றால் இரண்டுவிஷயங்கள் தான் நினைவுக்கு வரும்! முதலாவது, ராகுல் காண்டி கட்சித்தலைவராகப் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டு ராஜினாமா செய்து விட்டு ஓடியது! அடுத்தது அடிக்கடி எங்காவது வெளிநாட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவது! இப்போதும் இந்தோனேசியாவுக்கு தியானம் செய்யப் போயிருக்கிறாராம்! 17 நிமிட வீடியோவில் புலம்பித தள்ளுகிறார்கள். இந்த லட்சணத்தில் பப்பி பிரியங்கா. பிஜேபியில் சுதந்திர போராட்ட வீரர்கள் யாரும் இல்லாததால் தான் காங்கிரசிலிருந்து சர்தார் படேல் போன்றவர்களைத் திருடுகிறார்கள் என்ற மாதிரிப் பேசியிருப்பது செம காமெடியாக இருக்கிறது!
ஆச்சரியம்! சோனியா & வாரிசுகளுக்கு, பிஜேபி கொண்டாடிய பிறகுதான் வல்லபாய் படேல், லால் பகதூர் சாஸ்திரி, ஏன் ஒரிஜினல் காந்தி ஞாபகமே வருகிறது! அல்லாப்பேரும் ஜோரா இன்னொருக்கா கைதட்டுங்க!
இந்தவார துக்ளக் அட்டைப்பட நையாண்டி
மீண்டும் சந்திப்போம்.