Thursday, February 28, 2019

கூட்டணி என்றால் குழப்பம்தான்! அரசியல் இன்று!

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் சிக்கி இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் படு கேவலமான பகிர்வுகள், சமாதானப் புறாக்கள் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் போது நடிகர் மாதவனின் ட்வீட்டர் பகிர்வு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! எங்கள்Blog டிவிட்டரில் கூட, கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது என்ற மாதிரி ஒரு செய்தி!
கிருஷ்ண மூர்த்தி STweet text
 
 

    
அங்கேயும் கொஞ்சம் கலப்படமான பின்னூட்டங்கள்!

கலப்படம் என்றால் கழகங்கள் நினைவு வராமல் இருக்குமா என்ன?   

இன்றைய செய்திகளில் தமிழக அரசியல் நிலவரம் படு கலவரமாக இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதா? அழுவதா? என்று ஒரே குழப்பம்! ஊடகங்களைப் பார்த்து வேறென்ன வரும்?



மதுரைக்கே உண்டான வெள்ளந்தித்தனம், தெனாவட்டு மிகுந்த விஜய காந்தை இந்தத் தேர்தல் களத்தில் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறோமோ? இந்தப் பழைய வீடியோ தொகுப்பைப் பார்த்த பிறகு அப்படித்தான் ஒரு எண்ணம் எழுந்தது.

அதிக தொகுதிகள், அதிக டிமாண்ட் வைப்பதால் தேமுதிகவை திமுக நிராகரிக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை ஸ்டாலின் பிறந்த நாளில் தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஹிந்து நாளிதழ்    பழம் நழுவிப் பாலில் விழும் என்று அந்தநாளில் கருணாநிதி காத்திருந்து ஏமாந்தது போல இல்லாமல் இந்தமுறை திமுக ரொம்ப விழிப்போடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
முக அழகிரி கொடுப்பது ஸ்டாலினுக்கு சாபமா? தமிழக மக்களுக்கு ஆசீர்வாதமா? எதுவானாலும்  அதை ஜனங்களாகிய நாம்தானே முடிவு செய்ய வேண்டும்!  

இது கேப்டனோட  2014 கூட்டணி அறிவிப்பு! ச்சும்மா ட்டமாஷுக்கு! எப்படியிருந்தவரைப் போய் இப்படி நாலுக்கும் அஞ்சுக்குமா அலைய விடறாங்க?  

அது யாரு அடக்க ஒடுக்கமா பின்னால? டாக்டர் யக்கோவ் தானா?!



Wednesday, February 27, 2019

ஊடகங்கள்! ஒவ்வொன்றும் ஒருவிதக் குழப்பம்!

இங்கே ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொருவிதமாகக் குழப்புவதையே தொழிலாகச் செய்து கொண்டு வருகிறது என்பதைத்   தொடர்ந்து உதாரணங்களுடன் இந்தப்பக்கங்களில் பார்த்துவருகிறோம்! இங்கே ,  இன்னும் ஒரு உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராகவும், இப்போது The Print தளத்தை நடத்துகிறவராகவும்.. சேகர் குப்தா! இந்தக் காணொளியில் குழப்பவில்லை, இம்ரான் கானுக்கு உபதேசம் செய்கிறார் என்பது சுவாரசியம்! 

இந்த வீடியோவில் அயூப் கான் முதல் இப்போது இம்ரான் கான் வரை, பாகிஸ்தான் தலைவர்களை, ஒவ்வொருவர் கதையாகக்  கொஞ்சம் சுருக்கமாக  சொல்லிவிட்டு, அவர்களுடைய முடிவு என்னமாதிரியானது என்பதையும் சொல்கிறார்! அந்த ஒரு காரணம் போக, இந்த யூட்யூப் வீடியோவுக்கு வந்திருக்கிற ஒரு கமென்ட், அதற்கு ஒரு பதில் கமென்ட் புன்னகைக்க வைத்தது.

Nishant Shrivas
I would say print is best media company now ..much better balanced ...the wire is propoganda media ..
145
Abhilash Sarangi
Wire is no smaller than a communist mouthpiece and the quint is a congress mouthpiece. Both left winged. This channel however, has been vacillating in it's choice of political colour BUT it's atleast pragmatic and Shekhar Gupta in particular is excellent in giving a no nonsense straight to the point news report.  இங்கே தமிழகச் சூழல் எப்படியிருக்கிறது? விவாத வீடியோக்களுக்கு வருகிற கமென்ட்  பெரும்பாலும் ஆபாச வசவுகள், கீழ்த்தரமான விமரிசனங்கள்! கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்களானால் தமிழேண்டா கோஷ்டியும், திராவிட கோஷ்டியும் எப்படிப்பட்ட நச்சுச்சூழலை இன்னமும் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும் புரியும்! விதைத்தது அவர்கள், ஆனால் விளைவுகளை அனுபவிக்க வேண்டியது நாமா என்ற ஒருகேள்வியை மிக அழுத்தமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!

ஒரு சரியான பதில்  வழி நிச்சயமாகக் கிடைக்கும்!


இந்த வீடியோவில் சேகர் குப்தா பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா முற்றிலும் உறுதியான நிலைபாட்டை எடுத்திருப்பதைச் சொல்கிறார்!
ஜூல்ஃபிகார் அலி புட்டோவின் பிரசித்தமான வசனம் 'bleeding India with a thousand cuts'! நேரடி யுத்தத்தில் ஜெயிக்க முடியாதென்பதால் பாக்.  ராணுவம் தீவீரவாதிகளைப் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி வந்ததும் இனிமேல் செல்லுபடியாகாதென்பது மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதிகள் உட்பட எந்த நாடுமே முன்வரவில்லையென்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்!
CPEC கூட்டாளி சீனாவும் பாகிஸ்தானுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

தோசையை வைத்து அந்தநாட்களில் பொருளாதாரத்தை விளக்கிய தோசானாமிக்ஸ் ரகுராம் ராஜன் கூட  நேற்று இந்திய விமானப்படை காட்டிய அதிரடி குறித்து என்னமோ பேசுகிறார்!

நன்றாகப்பேசட்டும்!  காதுல பூ சுற்ற எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோமென்பதில் நாம் தெளிவாக இருந்தால் அது போதும்!

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் ஒரு வழி, தெளிவு தானாகவே பிறக்கும்! 
   

Tuesday, February 26, 2019

தமிழேண்டா போராளியும்! முகநூல் போராளியும்!

இன்று அதிகாலை கைபர் பஃடூன்க்வா பிரதேசத்தில் பாலாகோட் பகுதியிலும், பிற இடங்களிலும் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல்களில் தீவிரவாத முகாம்களும், தீவீரவாதிகளும் அழிக்கப்பட்டுள்ள செய்தியை பாகிஸ்தானிய ராணுவமே அரைகுறையாக ஒப்புக் கொண்டாலும் நம்மூர் தமிழேண்டா போராளி, முகநூல் திராவிடப் போராளி கும்பல்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்களாம்!

   
ஒரு திமு கழக ஆதரவு முகநூல் போராளி முதலில் நியூயார்க் டைம்சில் பட்டும்படாமல் வந்த செய்தியைக் குறிப்பிட்டு, சந்தேகம் எழுப்பினார். இது மாதிரி அரையும் குறையுமாகப் படித்துவிட்டு எழுதிய பகிர்வு எடுபடவில்லை. NYT செய்திக்கு வந்த ஒரு பின்னூட்டமே, செய்தியைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்!
Observer Pittsburgh
@M hassan The strikes don't seem to be hasty or abortive. For an operation this risky, I doubt it would be. Unlike what the Pakistan's defense spokesman claimed, There were in fact 6 locations that were targeted. The main strike location (Balakot) is more than 80 miles inside Pakistan's border in the KP region. This area is known for it's support for Lashkar and Jaish groups. The news coming from Pakistan's local sources point to some of that. Not everything would be true. But if you look at the map, Balakot is quite near Muzzafarabad and well inside KP. In fact, I won't be surprised a lot of planning went into pointing the location of the strikes.
முகநூல் கழகப் போராளி எழுதியதற்கு ஆதரவாக ஒரு அவசரக்குடுக்கை உ.பருப்பு ஓடிவந்து எழுதியது இது!
விமான படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியா?? முகாம்கள் அழிக்கப்பட்டனவா?? பலத்த சேதம்மா?? உண்மை என்ன?? யார் சொல்வதை நம்புவது??

சரி, தாக்குதலுக்கு உள்ளான பகுதி எங்குள்ளது?? 


காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில்..

எனவே, இந்திய அரசுக்கோ, இந்திய ஊடகங்களுக்கோ அங்கே உண்மையில் என்ன நடத்தது?? என்ன பாதிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இல்லை..

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் விஷயத்தை மறைகின்றன என்றே வைத்துக்கொள்வோம், பாதிப்பை சொல்லவில்லை என்றே வைத்துக்கொள்வோம், அப்படியென்றால், நாம் சர்வதேச ஊடகங்களை தான் பார்க்கவேண்டும்..

ராய்ட்டர்ஸ், பிபிசி, CNN, டைம்ஸ் நாளேடு, வாஷிங்டன் போஸ்ட் என எந்த ஒரு சர்வதேச ஊடகங்களிலும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்படவேயில்லை... பிரேக்கிங் நியூஸ் கூட இல்லை.. 

சர்வேதேச ஊடகங்களின் செய்திப்படி, இந்திய விமானபடை விமானங்கள், கட்டுப்பாட்டு எல்லை கோட்டை தாண்டி, POK எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குண்டு வீச முயன்றன, ஆனால் பாக் விமானபடை வழி மறித்ததால், குண்டுகள் காட்டு பகுதியில் வீசப்பட்டுவிட்டது, பெரிதாக எந்த பாதிப்பும் சேதாரமும் இல்லை.. 
ராய்ட்டர் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவலில், குண்டு வீச்சில் மரங்கள் விழுந்து, வீடு சேதமடைந்து ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது என உள்ளது.. இந்திய ஊடகங்கள் சொல்லுமளவுக்கு உயிரிழப்பு & சேதங்கள் ஏற்பட்டிருந்தால், கட்டாயம் சர்வேதேச ஊடகங்களில் விஷயம் வெளிவந்திருக்கும்..
ஆனால் தமிழேண்டா போராளிகளுக்கு, செய்திகளைத் தேடிப் படித்து உண்மையைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமெல்லாம் இல்லை போல!

எல்லாம் எலெக்னுக்காக மத்திய அரசு நடத்துகிற ஸ்டன்ட், நாடகம் என்று ஒரே போடாகப் போட்டால் போதும்! உண்மையென்ன என்று யார் தேடப் போகிறார்கள்? ஈழ ஆதரவு வியாபாரம் போணியாகாத நேரங்களில், மோடி எதிர்ப்பு என்று கூவினால் கூட்டமும் காசும் கொஞ்சம் சேராதா?
சாதாரணநாட்களிலேயே பொய்களை சர்வ சாதாரண விஷயமாக அள்ளிவீசுகிற உதிரிகள், பிரிவினைக் கும்பல்கள், முக நூல் போராளிகள், இவர்களை பெரிது படுத்திக் காட்டும் காசுக்குக் கூவுகிற ஊடகங்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் என்னென்ன செய்வார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
வருகிற தேர்தலில் யார்யாரையெல்லாம் நம்பமுடியாது, நிராகரிக்கவேண்டுமென்பது புரிகிறதா?

இந்த தேசத்தை, மக்களை ஆண்டவன் காப்பாற்றட்டும்!


Monday, February 25, 2019

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! எல்லைமீறும் ஊடகங்கள்!

அரசியலைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் வியாதிதான்! அவர்கள் மாறலியே என்று குறை சொல்வதற்கு முன்னால், நம்முடைய யோக்கியதை என்ன? சில கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே அழகாகப் பதில் சொல்கிறார், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!

கொஞ்சம் மென்மையாக, இந்தப்பக்கங்களில் அரசியல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்ததில், மையக்கருத்தாக மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பித்தாக வேண்டும் என்பதைச் சொல்லிவருவது தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! வாக்குச்சீட்டு நம்மிடம் இருக்கும் வலிமையான ஆயுதம்! ஒருமுறைக்குப் பலமுறை நன்கு யோசித்துப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது. 

அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும் என்ற தலைப்பே ஊடகங்கள் எத்தனை வக்கிரத்துடன் செய்தி சேகரிக்கின்றன, அவதூறுகளையே கேள்விகளாக எழுப்புகின்றன என்பதைச் சொல்லும். ஊடகங்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதற்காக மட்டுமே இந்த வீடியோவைப் பகிர்கிறேன்! அன்புமணிக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல! பாமகவையும் நிராகரிக்கவேண்டிய உதிரிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தலித் எழில்மலை என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?

கே பொன்னுசாமி என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? விடுதலைச் சிறுத்தைகளோடு கூடிக் குலாவியதாவது நினைவுக்கு வருகிறதா? சௌகரியப் படுகிற போது வன்னியருக்கு மட்டுமே ஆன கட்சியாகவும் சௌகரியம் மாறும்போது அய்யங்காருக்கும் இடம் கொடுத்து எல்லோருக்கும் பொதுவானகட்சியாகவும்  இருந்து பார்த்து அதுவும் எடுபடாதபோது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன தான்!

ஆனால் அன்புமணியையோ, ராமதாசையோ மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற catchy  கோஷத்தோடு ஒரு மாற்றத்துக்கான அரசியலை அன்புமணி, எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவராக, தமிழ்நாடு முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்ல மருத்துவர் அன்புமணி எடுத்த முயற்சிக்கு என்ன வரவேற்பு இருந்தது? அவருடைய ஆதங்கம், எதிர்க்கேள்வி நியாயமானதுதான்! 

என்னமோ அன்புமணியை வறுத்தெடுத்து விட்டதாக மீடியா ஹைப் இங்கே கிளப்பிவிடப்பட்டிருக்கிறது! உச்ச பட்ச டென்ஷனில் அன்புமணி என்று பீற்றிக் கொள்கிறது நக்கீரன்!

விஜயகாந்த் தெம்பாக இருந்த நாட்களில் இதுமாதிரி ஊடகங்களைக் காறித்துப்பியது நியாயம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

வேறென்ன?


   

           

ஒலக மகா நடிப்புடா சாமீ! கதற வைக்கும் அரசியல் களம்!

லைப்பிலேயே ஏகப்பட்ட அரசியல் பரிதாபங்கள் முன்னால் வந்து நிற்கின்றன! அதிலும் கூட வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார்! நீயழுதால் நானழுவேன் ஒய்யாரக்கண்ணே என்றொரு பழைய பாட்டும்  கூடவே நினைவுக்கு வருகிறதே! 
வைகோ தன்னுடைய நிலைமை இப்படியாகி விட்டதே என்று கண் கலங்குகிறாரா? ஊழ்வினை வந்துருத்தூஉட்டும் என்பது நினைவுக்கு வர, கண் கலங்குகிறாரா? நமக்குத் தெரியாது! அதுநமக்கு அவசியமுமில்லை! 

ரே ஒரு விஷயம்தான்! கல்லறைக்குப் போகிறவரை நாட்டாமை செய்வேன் என்று அரசியல்வாதிகள், புதிய தலைமுறைக்கு வழிவிடாமல் நந்திமாதிரி மறித்துக் கொண்டிருக்கும் நிலைமை மாற, ஒன்று அவர்களாகவே ஒதுங்கி விடவேண்டும்! இல்லையானால் ஜனங்களே கம்பல்சரி ரிட்டையர்மென்ட்  கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்!  வைகோ போன்றவர்களுக்கு அது புரியாது! ஜனங்களாகிய நமக்கு ஏன் இன்னும் புரியவில்லை? இன்னமும் இவர்போன்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் தான் என்ன?


ன்னடா இது! மதுரைக்கு வந்த சோதனை? பாலையா திருவிளையாடல் படத்தில் பேசிய அற்புதமான ஒருவரி வசனம் இது! ராஜா பேச்சிலிருந்து கல்வித்தந்தைகள் எல்லோரும் ஏன் அடுத்து அரசியலுக்கும் தாவுகிறார்கள் என்பது புரிகிறதா? அரசியல் செய்யாத கல்வித்தந்தை எவராவது இருக்கிறார்களா? நெசமா தெரிந்துகொள்ள விரும்புகிறேன்! 

ப்படியே இன்னொன்றையும்! 

செருப்புக்காலுடன் திருமலைக்குப் படியேறி ராவுல் பாபாவும், ப்ரியங்கா மகன் ரைஹானும் மலையப்பனுக்கே  தரிசனம் கொடுக்க வந்தார்களாம்! சமீபகாலமாக, தேர்தல்கள் வந்தால்தான் காங்கிரஸ் முதல் குடும்பத்துக்கு, ஹிந்து கோவில்கள் நினைவே வருவதும் ஒலக மகாநடிப்புடா சாமீ! அல்லது என்னடா இது? திருமலைக்கு வந்த சோதனை? என்று கடந்து போய்விட முடியுமா?   
 *******   

திருநெல்வேலி என்றால் நெல்லையப்பரும் தாமிர பரணியும் கொஞ்சுதமிழும் நினைவுக்கு வரவே வராதோ? அல்வாவும் அருவாளும் தானா நெல்லை? 

  
மல் காசர் அரசியல் இளைஞர்களை அதிகமாகவே ஈர்க்க ஆரம்பித்திருக்கிறதோ? அரசியல் களத்தில் தற்போதைய கேள்வி, நிலவரம் இரண்டுமே இதுதான்!

திமுக, அதிமுக இரண்டு கழகங்களும் இளைஞர்களைத் தங்கள் பால் ஈர்க்கத் தவறி நீண்டகாலமாகிவிட்டது. மாற்று அரசியலுக்கான முன்னெடுப்பு எதுவுமில்லாத உதிரிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 

நிராகரிக்கப்பட வேண்டிய பட்டியலாகவும் கூட!              
         

Sunday, February 24, 2019

அரசியல் களம்! கூட்டணி பாவமா? பரிதாபமா?

தமிழக அரசியல்களம் முன்னெப்போதும் இதுமாதிரிப் பரிதாபங்களாக அங்கங்கே ரீல் அறுந்துபோய்க் கிடந்ததில்லை! அலுமினிய குவளையைப் பார்த்து தகர டபபா சத்தமாக இளிக்கிற மாதிரி, இங்கே ஒவ்வொரு கூட்டணியும் கேலிக்கூத்தாக்கப் படுவதில், சமூக ஊடகங்கள், குறிப்பாக யூட்யூப் சேனல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சொல்லிவைத்த மாதிரி இசுடாலின் ஆரம்பித்து வைத்த சூடு சொரணை இருக்கா முதற்கொண்டு கோபி பரிதாபங்கள் வரை! 


கூட்டணி பாவமா? பரிதாபமா? இந்தமாதிரி நக்கல் வீடியோக்கள், என்னமாதிரியான வாக்காளர்கள் மீது என்னமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென்று நினைத்துச் செய்கிறார்கள்? 200 ரூபாய் திமுக மாதிரி எங்களுக்கு வசைபாடத்தான் தெரியும்! விளைவு என்ன என்று கேட்டால் என்ன தெரியும் என்றா?

தேதிமுக வட்டாரம் கொஞ்சம் தெம்பாக இருக்கிற மாதிரித்தான் இப்போதுவரையிலான நிலவரங்கள் சொல்கின்றன. விஜய் காந்த் மகன் நன்றாகவே பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்! அதுமட்டும் போதுமா?
  
ஆக, தேதிமுக வில்  பிரேமலதா, விஜய் பிரபாகரன் என இரண்டு ஸ்டார் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிற மாதிரி ஒவ்வொரு தொகுதியிலும் பழைய வலிமையோடு செயல்படுகிற தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டுமோ?

கிழக்கு பத்ரி ஏதோ ஒரு தொலைக்காட்சிவிவாதத்தில் பேசியதன் மீது சிலரால் தடித்த வார்த்தைகளில் விமரிசனம் செய்யப்பட்ட விஷயம் கொஞ்சம் தாமதமாகத் தான் தெரியவந்தது. இன்று தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். விஜய் காந்தின் முக்கியத்துவத்தை  திமுகவும், அதிமுகவும் எந்த அளவில் மதிப்பிட்டிருக்கின்றன என்று பத்ரி சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அமமுக தினகரன், ம நீ ம கமல் காசர் இருவருடைய nuisance value குறித்துச் சொல்வதும்! 

    
தப்பும் தவறுமாகக் கணிப்பது, 2016 இல் பேசியதை அப்படியே உல்டா அடித்துப் பேசுவது, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு கழகத்திடம் மண்டியிடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகம் என்று அருணன் நினைக்கிறாரோ? பிட்டுப்பார்த்தால் உள்ளே அத்தனையும் சொத்தை என்றிருக்கிற அரசியல் சூழலில், கம்யூனிஸ்டுகளுடைய நிலைபாடு  என்ன பெரிய வித்தியாசமாக இருக்கிறது? அரசியலில் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் இந்திய கம்யூனிஸ்டுகளுக்குத் தான் என்பது அவர்களைத் தவிர எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது என்பது கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபம்!

பேச்சில் மட்டுமே இடதுகளாகவும், சமூக நீதிக் காவலர்களாகவும்  இருக்கும் விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட   உதிரிகளைப் புறக்கணித்தால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வருமோ? 

புத்தி புகட்டுவதற்கான வாய்ப்பு விரைவிலேயே தேர்தல் வடிவத்தில் வருகிறது!  

  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)