Tuesday, July 16, 2019

சிறுகதை எப்படி எழுதுவது ? அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது?

எங்கள்Blog இல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேட்டு வாங்கிப்போடும் கதை என்று வாசகர்களிடமே கதையைக் கேட்டு வாங்கிப்போடுகிற வேலையை செய்து கொண்டு வருகிறார்கள். சிறுகதையாகக் கிறுக்கிப் பார்க்கிற வழக்கம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கூட அனுப்பி வைக்கலாம்! இந்த முயற்சி எப்போதிலிருந்து ஆரம்பித்தார்கள், இதுவரை எத்தனை கதைகளை வாங்கிப்போட்டிருக்கிறார்கள் என்ற விவரங்களை ஸ்ரீராம் வந்து சொல்வார் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருப்பதால் .......! 



இங்கே கல்கியை ஒரு உதாரணத்துக்காக இல்லை, இந்தப் படத்துக்காக மட்டும்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கல்கி அத்தனை நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிற மாதிரி என் நினைவில் இல்லை. கல்கியை விட, அருமையான சிறுகதைகள் எழுதியவர்களாக  புதுமைப்பித்தன் ஆரம்பித்து ஒரு பத்துப்பதினைந்து எழுத்தாளர்கள் என் நினைவில் இருக்கிறார்கள்! இப்போது அந்த ஆராய்ச்சி இங்கே முக்கியமில்லை. 2008 வாக்கில் இங்கே வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து நான் கவனித்து வருவதில், நானும் எழுத்தாளர்தான் என்று வலைப்பதிவர்கள் பலரும் காட்டிக் கொள்ள மிகுந்த ஆர்வத்தோடு இருந்த நாட்களை, சிறுகதைப் பயிற்சிப்பட்டறை நடத்தியதை  எல்லாம் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தே  பார்த்து வந்திருக்கிறேன்.

எப்படிக் கதை எழுதுவது?    இந்தத் தலைப்பில் குமுதத்தில் ரா கி ரங்கராஜன் ஒரு தொடராகவே எழுதி அது புத்தகமாகவும் கூட வந்து, இன்றைக்குத் தேடினால் மட்டுமே கிடைக்கும் என்றாகி விட்டது  

ஒரு சிறுகதை எழுதுவது எப்படி? இதற்கு ஏராளமான உதவிக் குறிப்புக்கள் இணையத்திலேயே கிடைக்கிறது. அதைவிட, அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்து கொள்வது  என்பதுதான் இன்னும் சிக்கலான கேள்வி! இதற்கு தெளிவான வரையறைகள் எதுவுமே இல்லை என்பது சிறுகதை எழுத்தாளர்களாக ஆசைப்படுகிறவர்கள் சந்திக்கும் சோகம்! 


அந்தநாட்களில் சில கூகிள் வலைக்குழுமங்களில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கதை சிறுத்தாலும்  என்ற தலைப்பில் ஒரு விவாத இழையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த சமயங்களில், நானும் குறுக்கே புகுந்து கொஞ்சம் நக்கலும் கேலியுமாகக் கதைத்துக் கொண்டிருந்தது உண்டு என்பதைத் தாண்டி நானும் கதை  எழுதப்போகிறேன். வலைப்பதிவில் எழுதுவதாலேயே நானும் எழுததாளர்தான் என்றெல்லாம் குதித்ததில்லை.  

எதுக்கய்யா இவ்வளவு   நீட்டி முழக்குகிறீர்கள் என்கிறீர்களா? சும்மா இருக்க நினைத்தாலும், விடமாட்டேன் என்று முகநூலில் பார்த்த சர்வலட்சணங்களும் பார்த்த ஒரு சிறுகதை!

‘அம்மா.. ஒரு ஹெல்ப் பண்ணனும் நீங்க’ கையைப் பிசைந்தபடி நின்றாள் வேலைக்காரி.
‘உன்னைத்தான் போன வாரமே வேலையை விட்டு நிறுத்தி தர வேண்டியதை எல்லாம் செட்டில் பண்ணிட்டேனே? இன்னம் என்ன, ஹெல்ப்பு கில்ப்புன்னு?’ வெடித்தாள் அவளுடைய பழைய எஜமானி.
‘இன்னொரு வீட்ல வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. பெரிய வீடு, நிறைய சம்பளம் வரும்…’
‘போய்ச் சேந்து தொலைக்க வேண்டியதுதானே? நான் என்ன ஹெல்ப் பண்ணணும்?’
‘பெரிய இடம்ங்கிறதாலெ போட்டி அதிகமா இருக்கு. இன்னும் அஞ்சாறு பேர் டிரை பண்றாங்க. என்னை ஏன் வேலையை விட்டு நிறுத்தினீங்கன்னு எளுதிக் குடுங்கம்மா. அதைக் காமிச்சா எனக்கு வேலை கிடைக்கும்’
‘அறிவு கெட்டுப் போச்சா? நான் ஊர்ல இல்லாதப்ப என் வீட்டுக்காரர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சம்மதிச்சி நீ அடிச்ச கூத்துனாலதான் வேலையை விட்டு நிறுத்தினேன்னு எழுதிக் குடுப்பேன், அதானே நிஜம்?’
‘அதாம்மா நிஜம். ஆனா சொன்னா அந்த வீட்டுக்கார ஐயா நம்பவே மாட்டேங்கறாரும்மா’ 

ஒரு சிறுகதைக்கு லட்சணமே அது சிறிதாக இருப்பது மட்டுமே அல்ல. பாத்திரங்கள், குணவார்ப்பு, சென்டிமென்ட் இப்படி எதுவுமே முக்கியமல்ல.
ஒருபுள்ளியில் ஆரம்பித்து அடுத்த புள்ளிக்கு நகர்வதற்கு முன்னால் ஒரு ட்விஸ்டுடன் முடிப்பது மட்டும்தான்! பளீரென்று ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைவதற்குள், ஏதோ  ஒரு செய்தியைச் சொல்லி ஆகவேண்டும்! அவ்வளவுதான்! 

நெல்லைத்தமிழன் அடிக்க வருவதற்கு முன்னால் பதிவை முடித்து விடுகிறேன்!😈😉😉😉😉😊  
       
மீண்டும் சந்திப்போம். 
   
         

14 comments:

  1. அரைப்பக்கக் கதை நல்லாவே இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் நம்பும்படியா சிறுகதை இருக்கவேண்டாமா? ட்விஸ்ட் மட்டுமே சிறுகதையின் இயல்பாக இருக்கணுமா?

    ஜெயகாந்தன் மற்றும் சில ரொம்ப பிரபலமான சிறுகதை (என்ற பெயரில் வந்த 3-4 பக்க சிறுகதைகள்) என்னைக் கவர்ந்ததே இல்லை. அதேபோல, குணாதிசயங்களை முற்றாக எழுதாமல், இப்படி நினைத்து இதனைச் செய்திருப்பாரோ, இல்லை அப்படி நினைத்திருப்பாரோ என்று வாசிப்பவர்களை Guess பண்ண வைக்கும் கதைகளும் என்னைக் கவர்வதில்லை.

    இதுதான் நல்ல சிறுகதை என்று டக்கெனச் சொல்லமுடியாது என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை ஆர்வத்துடன் படித்தவர்களில், குறைந்த பட்சம் 10 சதவிகிதமாவது நாவல் முடிந்த விதத்தை ரசித்திருக்க மாட்டார்கள், ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். அதுனால இதுதான் வடிவம் என்று சரியாகச் சொல்வது கடினம்.

    பொதுவா நான் பத்திரிகைகளில் படித்த சிறுகதைகளை வைத்துச் சொல்றேன். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு ஆன்மா இருக்கு, குணாதிசயம் இருக்கு. அதுக்கு ஏத்தபடி கதை எழுதினால் மட்டுமே அது அந்தப் பத்திரிகையில் பிரசுரமாகும்.

    இங்கு கேஜி ஜவர்லால் எழுதியிருக்கும் இந்தக் கதை 100% குமுதத்தில் ஒரு பக்கக் கதையாகவோ இல்லை அரைப்பக்கக் கதையாகவோ பிரசுரமாகும். விகடனுக்கு அனுப்பியிருந்தால் அதன் கதி என்னவாகும்னு சொல்லவேண்டியதில்லை. கல்கிக்கு அனுப்பும் துணிவு எழுதின ஆசிரியருக்கே இருக்காது. ஹாஹா.

    ReplyDelete
    Replies
    1. நெ.த.! முதலில் அடிக்காமல் விட்டதற்கு நன்றி!

      சிறுகதை என்றால் என்னவென்று மேற்கத்தியஉலகில் நிறைய எளிமையான இலக்கணங்கள் உத்திகள் என்று சொல்லிக் கொண்டே போகிறார்கள்! ஆனால் நம்மூரில் அந்த இலக்கணம் புரிந்து எழுதியவர்களில் சுஜாதா மட்டுமே உடனடியாக நினைவுக்கு வருகிறார் என்றாலும் அவருக்கும் முன்னோடியாக புதுமைப்பித்தன் இருப்பதை நிறையப்பேர் மறந்துவிடுகிறோம்! பொன்னகரம் அப்படிப்பட்ட . சிறுகதைக்கு நல்ல உதாரணமாகச் சொல்லக் கூடிய ஒன்று. குமுதம் ரொம்பநாட்கள் இந்த விஷயத்தைப் பிடித்துக் கொண்டு ஒருபக்கக் கதை அரைப்பக்கக் கதை, போஸ்ட் கார்ட் கதை என்று விதவிதமாக ஜவ்வுமிட்டாய் விற்கிறவவன் பொம்மை செய்கிற மாதிரி, இதை ஒரு கேலிக்கூத்தாகவே மாற்றிவிட்டது வேறுவிஷயம்!

      பத்திரிகைகளுக்கு ஆன்மா! சீரியசாகத்தான் சொல்கிறீர்களா? அதை இன்னமுமா நம்புகிறீர்கள்?

      குமுதம் ஆரம்பிக்கப்பட்டபோது கலப்படமில்லாத இலக்கியப்பத்திரிகையாகத்தான் சிலகாலம் வந்தது என்றால் இன்றைக்கு யாருமே நம்பமாட்டார்கள்! கிட்டத்தட்ட ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே மாறியதில் சர்குலேஷனில் நம்பர் ஒன்னாக நீண்டகாலம் இருந்தது! SAP செட்டியார் நல்ல வியாபாரி என்பதற்குமேல் அவருக்கோ குமுதத்துக்கோ ஏதோ ஆன்மா கொள்கை கோட்பாடுகள் இருந்ததா என்ன?

      //இங்கு கேஜி ஜவர்லால் எழுதியிருக்கும் இந்தக் கதை// குமுதம் மட்டுமே ஏற்றிருக்கக் கூடிய போஸ்ட்கார்டு கதையாக இருக்கலாம், ஆனால் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் அரசல்புரசலாக நடப்பதுதான் என்ற யதார்த்தம், இதை ஒரு சிறுகதையாக்குகிறது, ஆக சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மை இருப்பதுதான் முக்கியமான பலம்!

      Delete
  2. 2015 டிசம்பரில் என் பழைய பைண்டிங் கலெக்ஷனை மேய்ந்து கொண்டிருந்தபோது ஜீவி என்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதை தென்பட்டது. அதை ந்மஜீவி சார்தான் அது என்று நம்பி சஸ்பென்ஸ் கொடுத்து வெளியிட்டேன். ஜீவி ஸாருக்கே சொல்லாமல் சஸ்பென்ஸ் கொடுக்க நினைத்த எனக்கு பல்பு கொடுத்தார் ஜீவி ஸார். "அது நானல்ல" என்றார். அந்தக்கதையை அவர் அவ்வளவு வேகமாக புரிந்துகொண்ட நினைவுக்குக் கொண்டுவந்து நான் அவரைத்தான் சொல்ல வருகிறேன் என்று என்பதுபுரிந்துகொண்டார் என்பது எனக்குமிகவும் ஆச்சர்யம். அப்புறம் நான் பல்பு வாங்கிய கதை என்று ஒருபதிவு, அப்புறம் ஜீவி ஸார் நிஜமாகவே எழுதி பத்திரிகையில் வெளிவந்த கதை என்று ஒன்று என்று வெளியிட்டேன்.

    அப்புறம் நம் வலையுலக நண்பர்கள் எழுதி பத்திரிகையில் வெளிவந்த கதைகளைக் கேட்டு வாங்கிப்போட்டேன். ஒரு ஸ்டேஜுக்குப்பின் புதுசாகவே எழுதித் தாருங்கள் என்று சொல்லி கேட்டு வாங்கிப் போட ஆரம்பித்து விட்டேன். என் அப்பா சொன்ன ஒரு வார்த்தை "சீதை ராமனை மன்னித்தாள்"என்று அந்த வார்த்தையில் கதை முடியும்படி கேட்டு வாங்கிப் போட்டேன். சில படங்களைக் கொடுத்து அதற்குப் பொருத்தமாக கதை வாங்கிப்போட்டேன்.

    இது தவிர அவர்கள் தானாகவே எழுதி அனுப்பாத தொடங்க அதையும் கேட்டு வாங்கிப்போட்டுக்கொண்டிருக்கிறேன்.

    எல்லாம் சரி, நீங்கள் எப்போது கதை அனுப்பப்போகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. //எல்லாம் சரி, நீங்கள் எப்போது கதை அனுப்பப்போகிறீர்கள்?//

      அட ராபணா!

      //நானும் குறுக்கே புகுந்து கொஞ்சம் நக்கலும் கேலியுமாகக் கதைத்துக் கொண்டிருந்தது உண்டு என்பதைத் தாண்டி நானும் கதை எழுதப்போகிறேன். வலைப்பதிவில் எழுதுவதாலேயே நானும் எழுததாளர்தான் என்றெல்லாம் குதித்ததில்லை//
      இந்தப் பதிவை எழுதியதே அப்படி யாரும் என்னைக் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தானே!

      Delete
    2. இதை வாசித்ததும் கே.வா.போ.க.-க்கு ஒரு சிறுகதையை உடனே அனுப்பி வைத்தாக வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன், ஸ்ரீராம்.

      Delete
    3. அப்படிப் போடுங்க ஜீவி ஸார்... தட்ஸ் த ஸ்பிரிட்! காத்திருக்கிறேன்.

      கிருஷ் ஸார்... உங்களிடமிருந்தும் ஒரு சிறுகதை கட்டாயம் எதிர்பார்க்கிறேன். :)

      Delete
    4. ஜீவி சார் எனக்கு மூத்தவர்! மூத்தவர்களோடு எல்லாம் போட்டிபோடச் சொல்கிறீர்களே ஸ்ரீராம்! நியாயமா? :-)))

      Delete
    5. இதைப் போட்டி என்று நினைக்கிறீர்களே... அது நியாயமா?!!

      Delete
    6. நியாயம் எதிர்நியாயம்!!

      Delete
  3. படத்தை இப்போதான் கூர்ந்து பார்த்தேன். முதலில் பி.சி.ஸ்ரீராம் என்று நினைத்துவிட்டேன் (ஏன் சம்பந்தமில்லாமல் அவர் படம் என்று தோன்றியது). இப்போ பார்க்கும்போது நம்ம ஸ்ரீராம் மாதிரி தெரியுது (நீங்க கேஜி ஜவர்லால் படம் போட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்)

    ReplyDelete
    Replies
    1. நெ.த! இவர் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்! நல்ல கவிஞர், நல்ல எழுத்தாளர்! விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தன்னுடைய எழுத்தில் கொண்டுவரும் திறமைசாலி! இதுவரை ஐந்து,ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பகவத் விஷயத்தை எண்ணும்போது, ஹிந்துமதம் ஒரு அறிமுகத்தெளிவு, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணும் முறை இவை மூன்றும் சந்தியா பதிப்பக வெளியீடாக. அது தவிர பாரதிக் கல்வி என்றொரு பாரதியை ஒரு புதியகோணத்தில் அறிமுகம் செய்யும் புத்தகம், அறிவும் நம்பிக்கையும் --பிரியும் இடத்தில் மனிதன் என்ற தலைப்பில் ஒரு தத்துவ விசாரம், இதுபோக ஒரு கவிதைத் தொகுப்பு என்று ஆறு புத்தகங்கள். .
      ஆழ்ந்த வைணவ நம்பிக்கையும் தெளிவும், ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் என்று அவருடைய தேடலும் தெளிவும் மிகப்பெரிது.

      வங்கிப் பணியில் VRS வாங்கி கொண்டு இப்போது எழுதுவதைச் சுத்தமாக நிறுத்திக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். என்னுடன் அவ்வப்போது spiritual issues பற்றி மட்டும் தொலைபேசியில் விவாதிப்பதுண்டு. எபி வாசகர்களில் எனக்குத்தெரிந்து கீசா ஒருவருக்கு மட்டும்தான் இவரைத் தெரியும்.

      எங்கள்Blog ஸ்ரீராமும் நானும் 2009 இலிருந்தே வலைப்பதிவிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் உரையாடிக் கொண்டிருப்பது தவிர நேரில் முகம் பார்த்துப் பேசியதில்லை. அடுத்த முறை பேசுகிற வாய்ப்பு வரும் போது வீடியோ காலாக முகம் பார்த்துப் பேசி அந்தக் குறையையும் தீர்த்துக் கொண்டு விடலாம்!

      Delete
    2. //விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணும் முறை// - இது என்ன புதுசா? மேலும் விவரம் எங்கு கிடைக்கும்?

      Delete
    3. மன்னிக்க வேண்டும்! ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -படித்தலுக்கான ஓர் அறிமுகம் என்பதுதான் புத்தகத்தின் சரியான தலைப்பு. சந்தியா பதிப்பகம் அசோக் நகர் சென்னை 83 வெளியீடு 044 24896979 2016 வெளியீடு 160 பக்கங்களில் அறிமுகம் என்பதால் ஆயிரம் நாமங்களில் முதலில் உள்ள 190 நாமங்களுக்கு மட்டும் பொருளை (பல்வேறு பாஷ்யங்களில் இருந்து தொகுத்து) எழுதிய சிறு நூல்.

      Delete
  4. இந்தப்பக்கங்களை ஆரம்பித்தபோது எனக்கும் எழுத வரும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அல்ல, ஒரு வாசகனாக, வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக மட்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன் அம்மா!

    வலைப்பதிவுகளில் இந்தப் பதினோரு வருடங்களில் எனக்கு கிடைத்த அறிமுகங்கள், முட்டல் மோதல்கள், அதில் கிடைத்த அனுபவங்கள் என்று சொல்லப்போனால் இன்னும் interesting ஆக இருக்கலாம். ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் privacy கருதி பேசாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)