Wednesday, July 3, 2019

காங்கிரஸ் ராஜினாமா தமாஷா! முதல்பாகம் முடிந்தது அடுத்தது எப்போ?

நீங்கள் ஒரு நிறுவனத்தில் தலைவராக இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு ஞானோதயம் வந்து நிறுவனத்தின் தோல்விக்கு நானே காரணம் என்று ராஜினாமா செய்கிறீர்கள் என்றால் அந்த நிறுவனம் என்ன செய்யும்? சொரணையுள்ள நிறுவனமாக இருந்தால், என்ன நடக்கும்? ஒரு தாட்சணியத்துக்காக ராஜினாமா முடிவு உறுதிதானா அல்லது முடிவை மாற்றிக்கொள்கிறீர்களா என்று ஒரு வாய்ப்பு தரும்.  முறுக்கிக் கொண்டேபோனால் போய்வா மகனே என்று அனுப்பிவைத்துவிட்டு அடுத்த தலைவர், அடுத்தடுத்த வேலைகள் என்று போய்க்கொண்டே இருக்குமா இல்லையா? 

  
இதுவே சோனியா மற்றும் வாரிசுகள் நடத்தும் காங்கிரஸ்  கம்பெனி என்றால் என்னென்ன நடக்கும் என்பதை ஒருமாத காலத்துக்கும் மேலாக நடக்கும் தமாஷா காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  முதலாளியே ராஜினாமா நாடகம் நடத்தி போய்வருவேன் சபையோரே போய்வருவேன் நான் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தால், அடிமைகள் கூட்டம் பதிலுக்குப் போகாதே போகாதே என்தலைவா என்று கண்ணீர் விடத்தான் செய்யும். ஆடியன்சுக்கே அலுப்பு வந்து கல்லெறிகிற நேரமும் வந்து விடுமென்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ ராஜினாமா நாடகத்தின் முதல் பாகம் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. 

அந்தநாளைய காமராஜர் பிளான் போல 
நினைத்துக்கொண்டு ராகுல் செய்தால் 
சரிவருமா? இது 2019! 1963 அல்ல! 
ராஜ்தீப் சர்தேசாய் சரியாத்தான் 
சொன்னாராம்! கேட்டீங்களா?
“It is an honour for me to serve the Congress Party, whose values and ideals have served as the lifeblood of our beautiful nation. I owe the country and my organisation a debt of tremendous gratitude and love,” Rahul tweeted along with the four-page letter. He had earlier told news agency ANI that he was “no longer the party president” and the Congress Working Committee (CWC) must soon decide on his replacement.  என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆக ராகுல் காண்டி தான் இனிமேல் காங்கிரஸ் தலைவர் இல்லை என்று இன்றைக்கும் சொல்லிவிட்டதால் முதல்பாகம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது  90 வயசு தாண்டின மோதிலால் வோரா  இடைக்காலத்தலைவராகலாம் என்ற தகவலுடன்!
சின்ன முதலாளி ராகுல் பிடிவாதமாக இருக்கிறார். பெரிய முதலாளி சோனியா எப்படி சமாளிக்கப்போகிறார், முடிவு செய்யப்போகிறார் என்பதில் இருந்து அடுத்தபாகம் தொடங்கி ஆகவேண்டும் இல்லையா? ஒரு மெகா சீரியல் போல இந்த தமாஷா தொடர்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது!  
மீண்டும் சந்திப்போம்.
     

6 comments:

  1. இந்த ராஜினாமா நாடகம் போலத்தான் தெரிகிறது. அம்மாவின் பிடியில் காங்கிரஸ் இருக்கு என்ற நம்பிக்கையில் ராகுல் ராஜினாமா. அவர் சிலரின் ராஜினாமாக்களை எதிர்பார்க்கிறார், ஆனால் அவர் ராசி ப.சி. தப்பிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு அடுத்த பதிவும் இந்த விவகாரம் தொட்டு எழுதியாயிற்று. ஆர்னாப் கோஸ்வாமி ஒரு ஐந்து கேள்விகளை இந்த விஷயத்தில் வைத்திருக்கிறார் முதலாவது ராஜினாமா நிஜமானதுதானா? அல்லது ஒரு ட்ராமாவின் முதல் அத்தியாயமா?

      காண்டிகளுக்கு டூப்ளிகேட்டாக இருக்கத்தெரிந்த அளவுக்கு ட்ராமா அவ்வளவு வரவில்லையோ?

      Delete
  2. ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கழட்டிவிட்டாலும், அவரால் 5 வாக்குகள்கூட வாங்க முடியாது என்பது ராகுலுக்கு ஏன் இன்னமும் தெரியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. பானாசீனாவுடைய பலம் வாக்குசீட்டிலோ வாக்குப்பெறுவதிலோ இல்லையே! சொந்தக்கட்சியோ கூட்டணிக்கட்சியோ, யாரை எங்கே தொட்டால் ரொம்ப வலிக்கும், வரும்படியும் வரும் என்பதில் கில்லாடி! அவ்வளவுதான்!

      ஏகப்பட்ட வில்லங்கமான விவரங்கள் கைவசம் இருப்பதால் பானாசீனாவை ராகுல் அல்ல, சோனியாவும் கூட அசைக்கமுடியாதே!

      Delete
  3. அவர் சிலர் ராஜினாமாக்களை எதிர்பார்க்கிறார் என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள், நெல்லை?

    அவர் ராஜினாமாவை நேர்வழியில் ஏற்றுக் கொண்டால், சோனியா குடும்பம் அல்லாத வேறு தகுதி வாய்ந்தவர் தலைமைக்கு வர வாய்ப்பு இருக்கிறதல்லவா?.. இந்த விட்டுக் கொடுத்தலை நியாயப் படுத்த முடியாதா?..

    ReplyDelete
    Replies
    1. தானாகவே முன்வந்து சிலபல பெருந்தலைகள் ராஜினாமா செய்வார்கள் என்று ராகுல் காண்டி எதிர்பார்த்ததை முந்தைய செய்திகளை ஒன்றோடொன்று பொருத்திப் பார்த்தே புரிந்து கொள்ள முடியும் ஜீவி சார்!

      ராஜ்தீப் சர்தேசாய் கடந்த 29ஆம் தேதி போட்ட ட்வீட்டை எதற்காக மூன்று முறை நானே பகிர்ந்தேன் என்று நினைக்கிறீர்கள்? இதில் சோனியா ராகுல் இருவருமே ஒரே அலைவரிசையில் இல்லை என்பது மட்டும் இப்போதைய நடப்பில் தெளிவாகியிருக்கிறது. அவ்வளவுதான்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)