சீன அரசியலைப்பற்றியோ சீன அதிபராக இரண்டாவது முறையாகவும் தொடருகிற ஜி ஜின்பிங் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? என்ன கிண்டலா? பேசினால் காங்கிரசைப்பற்றியே பேசுவது இல்லாவிட்டால் ஏதாவது சீனா கொரியா அமெரிக்கப் பூச்சாண்டி காட்டுவது! இதெல்லாம் சரியில்லை என்று முனகுகிறீர்களா?
நேற்று முன்தினம் பிபிசி 2 சேனலில் ஒளிபரப்பான China: A New World Order என்கிற டாகுமென்டரியின் முதல் பகுதியை (60 நிமிடம்) பார்க்கிற வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்தது.
Rarely has the word-of-mouth surrounding a new Chinese star differed so dramatically from his official résumé. Xi Jinping was anointed in October as the likely successor to President Hu Jintao as party chief in 2012, and his canned bio says little about his family history. But China's gossip mills have been churning overtime. Turns out Xi's dad, revolutionary hero Xi Zhongxun, was purged three times by Mao Zedong and later became a pro-market reformer. He was also one of the few leaders to defend Hu Yaobang, a progressive party chief sacked in 1986, and to condemn the 1989 Tiananmen Square massacre—after which he was rarely seen in public again இப்படி 2012 இல் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் அதனாலேயே by default சீன அதிபராகவும் ஆன கதையை ஜோனாதன் ஆன்ஸ்ஃபீல்ட் ஆரம்பிக்கிற விதத்தை இப்போது திரும்பிப் பார்த்தால், அடுக்கடுக்கான பொய்களால் கட்டப்பட்டது சீன அரசியல் என்பது தெளிவாகவே புரிகிறது. சந்தேகமிருந்தால் நீலவண்ணத்தில் இருக்கிற பகுதியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள்!
ஜி ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அரசின் பிடி (கம்யூனிஸ்ட் கட்சியின் பிடி என்று வாசித்துக் கொள்ளவும்) நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இறுகிக் கொண்டே வரும் விதத்தை இந்த டாகுமெனடரி கொஞ்சம் எளிமையாகவே சொல்கிறது. அதிபர் பொறுப்புக்கு வந்தவுடனேயே ஊழலுக்கெதிரான நடவடிக்கை என்று பல்லாயிரக்கணக்கான ஜனங்களைச் சித்திரவதை செய்த நாடகம் என்று ஆரம்பித்து கட்சிக்குள்ளும் வெளியிலும் தனக்கு எதிரான குரலை ஒடுக்க ஆரம்பித்ததில் இருந்து, ஹாங்காங்கில் வலுத்துவரும் போராட்டங்கள், ஜின் ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகள், என்று ஒருமணிநேரத்தில் கிடைத்த காணொளிகள், அதிருப்தியாளர்கள், சீன விவகார எக்ஸ்பெர்ட்களின் கருத்து என்று ஒரு நல்ல தொகுப்பாக இருந்தது. இதன் 2ஆம் பகுதி செப்டெம்பர் 5 அன்றும், 3வதும் இறுதியுமான எபிசோட் செப்டெம்பர் 12ஆம் தேதியும் ஒளிபரப்பாகிறதாம்! பார்க்க மனமிருப்பவர்களுக்கு மார்க்கமும் உண்டே!
ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பான 6.8% இலிருந்து 1.3# ஐ மத்திய அரசுக்குக் கொடுத்தது சுரேந்திராவுக்கு பொறுக்க முடியவில்லை என்றால் கீழே இவருக்கு வேறு மாதிரி!
வங்கி ஊழியர் சங்கத்தலைவராக இருந்தால் காமெடிப் பீசாக இருக்கக்கூடாதென்று யார் சொன்னார்கள்? AIBEA வின் CHV என்று இனிஷியலால் அழைக்கப்படுகிற C H வெங்கடாசலம், "இந்த வங்கி இணைப்பு மூலம் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மாறாக, 5 துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த பின், வங்கியின் வாராக்கடன்தான் அதிகரித்துள்ளது.நிரவ் மோடியின் மோசடியை கண்டுபிடிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தவறிவிட்டது, அப்படியிருக்கும் வங்கிகள் எவ்வாறு மிகப்பெரியதாக மாற்றும் போது, எவ்வாறு சிறந்த கண்காணிப்பில் ஈடுபடமுடியும்?". இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் வங்கி இணைப்பைக் கண்டித்து இன்று பிற்பகலில் சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கறுப்பு பட்டை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார் என்று இந்துதமிழ் திசை நாளிதழ் தகவல் சொல்கிறது. CHVயால் முடிந்தது ஆர்ப்பாட்டமும், அதிகபட்சம் ஓரிருநாள் வேலைநிறுத்தம் என்ற அடுத்தகட்ட காமெடி மட்டும் தான்!
இந்தவிவகாரத்தில் எனக்கொரு கருத்துமில்லை! ஆனால் முகநூலில் ஏதோ புகைந்து கொண்டே இருக்கிறது போல!
இந்த செய்தியைப் ஒட்டு பதிவர் வால் பையன் தனக்குத்தானே ஈரோட்டு Tao என்று பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! ஈரோடு என்றால் சாதாரணமாக நினைவுக்கு வருவது வெங்காயம் தானே! இது என்ன புதுசா?
மதுரை புத்தகத்திருவிழா நேற்றைக்கே ஆரம்பித்து விட்டது போல! எனக்குப் போய்வருகிற வாய்ப்பில்லை. யாராவது புத்தக அபிமானம் உள்ள மதுரைப்பதிவர் எவராவது தினசரி நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார்களா என்று பார்க்கலாம்! அதெல்லாம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குத்தான் என்று சொல்கிறீர்களா? டெல்லி அப்பளம் கான்டீன் அங்கே மட்டும்தானா?
மீண்டும் சந்திப்போம்.