Thursday, July 11, 2019

அரசியல் போரடித்தால் என்ன? கொஞ்சம் திரை இசை போதுமே!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தான் ஒரு பழம் தின்று கொட்டைபோட்ட காங்கிரஸ்காரர் என்று நிருபர்கள் சந்திப்பில் நிரூபித்திருக்கிறார். இன்றோ நாளையோ ஒன்றும் பெரிதாக நடக்கபோவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் என்ன? சில அருமையான திரைப்பாடல்களில் இன்றைய பதிவை ரசிக்கலாமே!

    
மாலையில் மலர் சோலையில் என்று PB ஸ்ரீனிவாஸ் கொஞ்சும் குரலில் ஆரம்பிக்கிற இந்தப் படம் அடுத்த வீட்டுப்பெண் 1960 இல் வெளிவந்தது. வேதாந்தம் ராகவையா இயக்கத்தில், அஞ்சலி தேவி சொந்தத்தயாரிப்பில் வந்தபடம். அவருடைய கணவர் P ஆதிநாராயண ராவ் தான் இசையமைப்பாளர்   டணால் தங்கவேலுவுக்கு இந்தப்படம் தவிர PB ஸ்ரீனிவாஸ் வேறெந்தப் படத்திலாவது பின்னணி கொடுத்திருக்கிறாரா? கேள்வி  எங்கள்Blog ஸ்ரீராம் மாதிரிப் பாட்டுப்பிரியர்களை engage செய்வதற்காக! இதே படத்தில் இன்னொரு PBS அமுத கானம், கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!

  
அந்த நாட்களில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம்! மிக அருமையான செட், அருமையான திரைக்கதை என்று படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த நிறுவனம். சிலப்பதிகாரம் கண்ணகி கதையையே கொஞ்சம் உல்டா  அடித்து தங்கப்பதுமை என்றொரு படம். ML வசந்த குமாரி சூலமங்கலம் ராஜலட்சுமி இருவரும் பாட TR ராஜகுமாரி நடனத்துடன், வருகிறாள் உன்னைத்தேடி! SA சாமி இயக்கத்தில் 1959 இல் வந்த படம். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.  


பதி பக்தி! பீம்சிங் இயக்கத்தில் 1958 இல் வந்த வெற்றிப்படம். இந்தப் படத்தின் க்ளைமேக்சுக்கு கொஞ்சம் முன்னால் சிவாஜி கணேசன் மழையில் உருண்டு புரண்டு நாலைந்து பக்க வசனம் பேசுவதை இப்போது நினைத்தால் கூட செம அலெர்ஜி! இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி TMS மற்றும் சந்திரபாபு  குரல்களில் ஒரு அருமையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு 

  
நீலமலைத்திருடன் என்றொரு படம். இதை தேவகோட்டை லட்சுமி திரையரங்கில் மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம். அனேகமாக 2nd run ஆக இருக்கலாம்!  


1957 இல் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில்  MA திருமுகம் இயக்கத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்து வந்த படம். சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று கணீர்க் குரலில் பாடுவது மதுரைக்கார TMS தான்! இசை கே வி மஹாதேவன். 

பாடல்களைக் கேட்டீர்களா? பிடித்திருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.   
           

6 comments:

  1. அடுத்த வீட்டுப்பெண்ணின் ஹிந்தி வடிவத்தில் கிஷோர் பாடும் பாடல் ஒன்றும் - இரண்டு என்றுகூடச் சொல்லலாம்! - ஆஷா போன்ஸ்லே பாடலொன்றும் (இது தமிழில் பின்னர் காபி அடிக்கப்பட்டது) ரசிக்க வைக்கும். ஏக் சதுர நாத் பாடலை சமீபத்தில் கபில், ரன்வீர்சிங்குடன் கவாஸ்கர் ரசித்துப் பாடியது கண்கொள்ளாக்காட்சி!

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி வெர்ஷனில் மெஹ்மூத் கோணங்கித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாதே ஸ்ரீராம்! அதையும் பார்த்திருக்கிறேன், என்னுடைய சாய்ஸ் ஆதிநாராயணராவ் இசையமைப்புத்தான்!

      Delete
  2. அருமையான பாடல்களின் தொகுப்பு..
    மகிழ்ச்சி.. நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தேர்வு செய்யப்பட்ட பாடல்களை ரசித்ததற்கு மிகவும் நன்றி, துரை செல்வராஜூ சார்1

      Delete
  3. Adhi Narayana Rao is one of the best music director. His other films songs are also very good. A.V Penn is better than Padosan. But I think Maalaiyil Malar Cholaiyil song back ground music is from one old hindi song. Now I could not recollect that song. Thanks for sharing old songs. Some where I read Chandra babu wanted to become play back singer at later stage. MSV supported him, but Sivaji did not accept.

    ReplyDelete
    Replies
    1. ஆதிநாராயணராவ் இசையமைத்த வேறு படங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்தவீட்டுப் பெண்ணில் இன்னமும் மனதில் நிற்கிறார். சந்திரபாபு சிவாஜியால் மட்டுமல்ல, எம்ஜியாராலும் கெட்டவர்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)