Monday, September 30, 2019

சதீஷ் ஆசார்யா கார்டூன்! PMC Bank! திரிக்கப்படும் செய்திகள்!

சங்கடமான வங்கிவேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் சங்கீதம் பாட விடாமல் வங்கித்துறை சார்ந்த செய்திகளில் கவனம் இன்னும் விடாப்பிடியாக விட்டுப்போக மறுப்பது எனக்கு மட்டும்தானா? இதே வங்கித்துறையில் இருந்த சில பதிவர்கள் மாதிரி take it easy என்று கம்முன்னு  இருக்கமுடியாமல் வங்கிகளைப் பற்றி இங்கேயும் Consent to be ....nothing! தளத்திலும் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாராவது கவனிக்கிறார்களா? அப்படியே கவனித்தாலும் என்ன செய்துவிடமுடியும் என்று சலிப்பு வருகிறதா?



சதீஷ் ஆசார்யாவுடைய இந்தக் கார்டூனைப் பார்த்தபிறகு ஏன் இப்படிப்பொறுப்பே இல்லாமல் விஷமத்தனமான கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபமும், கோபப்பட்டு என்ன ஆகப்போகிறதென்ற சலிப்பும் சேர்ந்தே வந்தது.  சதீஷ் ஆசார்யாஇந்தக் கார்டூனில் தொடர்பு  இல்லாத இரு விஷயங்களை முடிச்சுப்போட்டு மூன்றாவதாக ஒரு விஷமத்தனமான கருத்தைப் பார்க்கிறவர்களிடம் விதைக்க முயன்றிருக்கிறார் என்கிற விவரம் புரிகிறதா? முதலில் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியிடம் இடைக்கால டிவிடெண்டாக 30000 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக வந்த செய்தி! இரண்டாவதாக பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது  ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதில் கஸ்டமர் தன் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும் என்பது கொஞ்சம் தளர்த்தப்பட்டு 10000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தி. இரண்டுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு படுத்தி என்ன சொல்ல வருகிறார் கார்டூனிஸ்ட்?      


கூகிளில் PMC Bank என்று தேடிப்பாருங்கள்! இந்த மல்டி ஸ்டேட் அர்பன் கூட்டுறவு வங்கி எப்படி ஆறேழு வருடங்களாக ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து பொய்யான விவரங்களைக் கொடுத்து வந்திருக்கிறது, இப்போது எப்படி மாட்டிக் கொண்டிருக்கிறது என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டே இருப்பதை தேடலில் பார்க்க முடியும்.


முதல் பாராவில் ஆர்தர் ஹெய்லியின் The Money Changers நாவல் விமரிசனமாகச் சொல்லிவிட்டு இந்திய வங்கிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்ததற்கான லிங்க் இருக்கிறது. PMC Bank இன் மொத்த டெபாசிட் 11000 கோடி ரூபாய்,  வங்கி கடன் கொடுத்த தொகை 8300 கோடி ரூபாய் என்பது வெறும் தகவல். வெறும் 3 கோடி ரூபாய் மூலதனம் அப்புறம் 9 கோடிரூபாய் ரிசர்வ் மட்டுமே உள்ள ஒருவங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிற ஒரே குழுமத்துக்கு 6500 கோடி கடன் கொடுத்தது எப்படி? PMC’s annual report shows it to be a profitable lender with a capital adequacy ratio higher than the 12% minimum requirement and a bad-loan ratio of under 4% – almost respectable by the current standards of India’s banking industry. If the news reports are correct, the solidity portrayed by that document is a fiction. How did PMC’s board, its auditors and the central bank remain clueless for so long? இன்னும் விரிவாகப்படிக்க இங்கே 

Fake News வெறும் கவனக்குறைவால் உருவாக்கப்படுபவை அல்ல! அவை திட்டமிட்டு உருவாக்கப்படுகிற விதத்தை இங்கே கொஞ்சம் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?

செய்திகளின் வேரைப் பிடியுங்கள் பார்த்துப்பழகுங்கள் என்று இந்தப் பக்கங்களில் அடிக்கடி சொல்வதில்  கவனம் செலுத்த முடியுமானால், ஊடகப்பொய்கள், திரிக்கப்படும் செய்திகள், அம்மாதிரிச் செய்திகளின் அரசியல் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதுமே கூட எளிதுதான்!

மீண்டும் சந்திப்போம்.      

Sunday, September 29, 2019

சாம் பிட்ரோடா! பாகிஸ்தான் ஆதரவு! சீனா மலேசியா துருக்கி!

Howdy Modi நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியை எந்த அளவுக்கு வெறுப்பேற்றியிருக்கிறது, கீழ்த்தரமான வேலைகளில் இறங்கும்படி செய்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது 
இப்படி ஒரு கட்சி இன்னமும் இந்திய அரசியலுக்குத் தேவைதானா என்ற கேள்விக்கு நண்பர் திருப்பூர் ஜோதிஜி தான் வந்து பதில் சொல்ல வேண்டும்! 



ஏனென்றால் கொஞ்ச காலத்துக்கு முன்னால் சாம் பிட்ரோடா பற்றி சிலாகித்துப் பதிவுகூட எழுதியிருந்தவர் அவர் ஒருவர்தான்! மற்றவர்களுக்கு வழக்கம்  போல அந்தப்பெயரே இந்நேரம் மறந்திருக்கும்!  ராஜீவ் காண்டியின் நண்பர் சாம் பிட்ரோடா இந்த அசிங்கத்தில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்கிறார்கள்! வீடியோ 7 நிமிடம்தான்! பாருங்கள்!  

 

ஐநா பொதுசபையில் இம்ரான் கானுடைய உளறல்களுக்கு முட்டுக் கொடுக்க சீனா, மலேசியா, துருக்கி இந்த மூன்று நாடுகளைத் தவிர வேறு நாதியில்லை என்பதை நண்பர்கள் செய்திகளில் கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த மூன்று நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மேலே ஒரு 19 நிமிட வீடியோவில் என்னவென்று கொஞ்சம் விவாதிக்கிறார்கள். வெளியுறவு விவகாரங்கள் கொஞ்சம் சிக்கலானவைதான், ஆனாலும் புரிந்து கொள்ள முடியாதவை அல்ல என்பதைச் சொல்லவே அக்கம் பக்கம்! என்ன சேதி! என்றொரு வலைப்பக்கத்திலும் எழுதிவருவதுகூட  நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்! 

  
NewsX சேனலின் ரிஷப் குலாடி இந்த 6 நிமிட வீடியோவில் துருக்கி அதிபரின் இஸ்லாமிய கலீஃபா  கனவுபற்றியும், அவர்களுடைய இரட்டை நிலைபாடுகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்வதை கவனத்தில் வைத்துக் கொள்ளலாமே!

    
இம்ரான் கானும் பாகிஸ்தானிய ராணுவ எஜமானர்களும் காஷ்மீர் காஷ்மீர் என்று கூவிக் கொண்டே இருப்பதில்  நாடு என்ன நிலையில் இருக்கிறது என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லவே இல்லை என்பது வரலாற்று சோகம்!  


எல்லாப்பிரச்சினைகளுக்கும் மோடி ஒயிக என்று கூவுவது மட்டும் தான் தீர்வு என்பதில் பாகிஸ்தானிகளுடன், நம்மூர் காங்கிகள். திராவிடங்கள் ஒன்று பட்டு நிற்பதைப் போல கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவும் தூரிகையில் கூவ ஆரம்பித்து இருக்கிறார்!

மீண்டும் சந்திப்போம்.
     

Saturday, September 28, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கல்கியின் கள்வனின் காதலி! பட விமரிசனம்!

ஒரு எண்பது வருஷங்களுக்கு முன்னால் கதாசிரியர்கள் தமிழில் எப்படிக் கதை சொன்னார்கள், ஜனங்களும் அதை எப்படித்  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்பதையெல்லாம்  திரும்பிப்பார்த்தால் நிஜமாகவே தலை சுற்றுகிறது! கூடவே கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அதைத் தாண்டி அவர் எழுதிய வேறு கதைகளைப் படிக்க ஏன் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை என்ற கேள்விக்கு விடைகிடைக்கிற மாதிரியும் இருக்கிறது!


 

கள்வனின் காதலி! இப்படித் தலைப்பில் 1937வாக்கில் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கதை! கதை என்னவோ மிகச் சாதாரணமானதுதான்! கல்யாணியும் முத்தையனும் மாமன் மகள் அத்தைமகன் உறவுமுறையுள்ள காதலர்கள்! மேலே பாரதியார் பாடலுடன் டைட்டில் கார்ட் இரண்டரை நிமிடம் பார்த்தீர்களானால்  படத்தில் நடித்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள் தெரியும். டைட்டில் முடிந்தவுடன் ஒரு காதல் பாட்டு! 


இதைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதும் போது காதல் பாட்டாகத்தான் எழுதினாரா இல்லையா  என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாததால்  உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்! முதலில் டூயட்டாக வரும் இந்தப்பாடலை கண்டசாலா மட்டும் பாடுகிற சோலோ வெர்ஷன் படத்தின் கடைசிப்பகுதியில் இருக்கிறது. பாட்டு முடிந்ததும், கதை ஆரம்பம்! கல்யாணியின் தந்தை மகள் முரடனும் ஏழையுமான முத்தையனுடன் பழகுவதைக் கண்டிக்கிறார். மகளுக்கு வசதியான கிழவர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் பேசியும் முடித்து விடுகிறார். கல்யாணி முத்தையனைச் சந்தித்து ஓடிப்போய்விடலாமாவென்று கேட்கிற அளவுக்கு கதை எழுதிய 1937 அல்லது படம் வெளியான 1955 காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறது! முத்தையன் தன்னுடைய தங்கை அபிராமிக்கு, திருமணம் செய்துவைத்தபிறகுதான், கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பற்றியே யோசிக்க முடியும் என்று மறுத்துவிடுகிறான். கோபத்துடன் கல்யாணி தந்தை பார்த்த கிழவருக்கே இரண்டாம் தாரமாக ஆகிறாள். முத்தையன் தங்கையுடன் வெளியூருக்குப் போய்விடுகிறான்.


கதாநாயகன் கள்வனாக மாற வேண்டாமா? ஒரு மடத்தின் கார்வாரிடம் வேலைகேட்டுப்போகிறவனை முதலில் விரட்டி அடிக்கும் அந்தக் கார்வார் சங்குப்பிள்ளை  (TS துரைராஜ்), முத்தையனின் தங்கை அபிராமியைப் (குசலகுமாரி)  பார்த்துவிட்டு, நாயகனைத் தாஜா செய்து அழைத்துவரச் செய்து கணக்கப் பிள்ளை வேலை கொடுக்கிறான். பின்பு ஒரு நாள் நாயகனை வெளியூர் வசூலுக்கு அனுப்பிவிட்டு தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். நாயகனிடம் நன்றாக உதைவாங்கித்  தப்பித்துப் போகிற சங்குப் பிள்ளை போலீசில் முத்தையன் திருடியதோடு தன்னைத் தாக்கியதாகவும் புகார் கொடுத்துவிடுகிறான்.  லாக்கப்பில் வைக்கப்படுகிற முத்தையனுக்கு அங்கே  சொக்கன் என்கிற குறவன் ஆறுதல் சொல்கிறான், இருவருமாகத் தப்பித்துப் போகிறார்கள். ஒருதரம் திருடன் என்று முத்திரை குத்திவிட்டால் அதுவே காலத்துக்கும்  நிற்கும்  என்று உபதேசம் செய்து முத்தையனையும் கள்வனாக மாற்றுகிறான்! கொள்ளிடக்கரை சுற்றுவட்டாரமே பயப்படும் கள்வனாக நாயகன் மாறியாயிற்று! 

    
நாயகி கல்யாணியைத் திருமணம் செய்து கொண்ட கிழவர் மனம் மாறி இந்தப்பாட்டுடன், சொத்துக்களை நாயகியின் பெயருக்கே உயில் எழுதி வைத்து விட்டு விவாக விடுதலை கொடுப்பதாகச் சொல்லிவிட்டு செத்தும் போய்விடுகிறார். இந்த இரண்டுபேரும் சந்திப்பதற்கும், அபிராமி என்ன ஆனாள் என்பதற்கு முடிச்சுப் போடுகிற மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாஸ்திரி (கே சாரங்கபாணி)  அவர் மனைவியாக அதான் எனக்குத்தெரியுமே முத்துலட்சுமி, நாடகத்தில் பெண் வேடமிடும் துணைக்கதாநாயகனாக கமலபதி (TR ராமச்சந்திரன்)    என்று வரிசையாகக் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். படத்தைப் பொறுமையாகப் பார்ப்பதற்கு கே சாரங்கபாணி, முத்துலட்சுமி  TR ராமச்சந்திரன், TS துரை ராஜ், குறவனாக நடித்தவர் என்று இவர்கள் வரும் காட்சிகள்தான் உதவியாக இருக்கின்றன .    


யூட்யூபில் இந்தப்படத்தைப் பார்த்தபோது இந்தப்பத்து நிமிட சதாரம் நாடகத்தில் வருகிற கள்ளன் சதாரம் (சிவாஜி TR ராமச்சந்திரன்) சந்திக்கிற காட்சி நன்றாக இருந்தது. என்தம்பி படத்தில் கூட இதே காட்சி கொஞ்சம் சுருக்கமாக இருந்தது நினைவுக்கு வருகிறதா?

என்னதான் கதாநாயகனாக இருந்தாலும் போலீஸ் வேட்டையாடுகிற  கள்வனை விட்டுவிட முடியுமா? அதுவும் அந்த நாட்களில்? நாயகனைப் போலீஸ் சுடுகிறது, நாயகி தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறாள். இப்படித் திரைப்படம் முடிக்கப்பட்டாலும், கல்கியின் கதையில் முடிவு அப்படி இல்லை.  

கல்கியின் கதைக்கு  S D சுந்தரம் வசனம் எழுதியிருக்கிறார் என்பதை விட கள்வனின் காதலி கதையை முதலில் என் எஸ் கிருஷ்ணன் தயாரிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டதாக விக்கி தகவல் சொல்கிறது. எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.

கல்கியின் கதைகளான பார்த்திபன் கனவு, தியாகபூமி இரண்டும் படமாக எடுக்கப்பட்டதில், பார்த்திபன் கனவு படம் ஒன்றில் தான் கதையில் இருந்த வசனங்களை அப்படியே எடுத்துப்பயன் படுத்தப்பட்டதாக நினைவு. படம் மிக நன்றாக எடுக்கப்பட்டுமே கூட வெற்றிப்படமாக அமையவில்லை. இந்தப் படத்துக்கு வசனம் கொஞ்சம் அல்ல நிறையவே மைனஸ்!


மீண்டும் சந்திப்போம்.     

Friday, September 27, 2019

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இங்கே நம்மூரில் காசுக்கு கூவுகிற ஊடகங்கள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னதை வைத்து மோடியின் அமெரிக்க ஜாலம் தோற்றுப் போய்விட்டதாகக் கூவிக் கொண்டிருக்கையில் அங்கே பாகிஸ்தானிய ஊடகங்கள் என்ன சொல்கின்றனவாம்? 


   
The Nation என்கிற பாகிஸ்தானியப் பத்திரிகையில் இந்தவார புதன்கிழமை வெளியாகியிருந்த கார்டூன் இது! Carrot and stick என்று சொல்வார்கள் இல்லையா, அதையே கொஞ்சம் இம்ரான் கானை வைத்து ஒரு செமத்தியான லந்து! பின்னால் என்ன நடந்ததோ தெரியாது, கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு முழுநீள வியாக்கியானம்! சமயத்தில் கார்டூனிஸ்டுகள் கலக்குகிறார்கள்! எதிர்ப்பு வந்தவுடன் பம்மிப் பதுங்குகிறார்கள்!  

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி எழுதிய Reset புத்தக வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் குமார் முகர்ஜி பேசுகிறார். வீடியோ 13 நிமிடம் 
 டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பிரணாப் குமார் முகர்ஜியைப் பற்றி அதே நிகழ்வில் பேசுவது 7 நிமிடம்  
படித்ததில் பிடித்தது! 
சில்வியா ப்ளாத்தின் கணவர் word processor வருகை எழுத்தாளர்கள் நிறைய பெருகி விட்டதற்கும் அவர்கள் தடித்தடியாக எழுதிக் குவிப்பதற்கும் ஒரு காரணம் என்கிறார்.மொபைலும் ஒரு காரணம்தான்.
முன்பு இயற்கையே ஒரு தடையை வைத்திருந்தது.ஒரு நாவலின் இருபத்தி மூன்றாம் பாகத்தை எழுத முனையும்போது "ஓவராப் போறே நீ!" என்று ஆர்த்தோ டாக்டரிடம் அனுப்பி வைக்கும்.இப்போது ஒரு நாவலை வாயாலேயே எழுதலாம்.
கொஞ்சம் யோசித்தால் சினிமா,ஓவியம்,இசை எல்லாமே இன்று அளவுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன தானே.மாதக் கணக்கில் ஓடக்கூடிய வெப் சீரிஸ்கள் எவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன.தொழில் நுட்பம் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.தொழில் நுட்பமும் சந்தையும் சிறியதாக இருந்த காலத்திலேயெ The human condition போன்ற ஒன்பது மணி நேரம் ஓடக்கூடிய படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.இலக்கியம் மட்டும் ஏன் சிறியதாக இருக்கவேண்டும்?
இது அதீதத்தின் காலம்

மீண்டும் சந்திப்போம். 

Thursday, September 26, 2019

இது யாருடைய மண்? ஒரு அறிமுகத்தெளிவு! மடியில் கனம்!

நாமெல்லாம் இது நம்முடைய மண், நாம் எல்லோருமே இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் ஒரு சிலர் இது இவர் மண், இல்லை இல்லை அவர் மண் என்றெல்லாம் அவர்களாகவே பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு  சொல்லிக் கொண்டிருக்கட்டும், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? நம்மில் யாராவது தெரிந்துகொள்ள எப்போதாவது முயற்சித்திருக்கிறோமா ?



இந்த 39 நிமிட வீடியோவில் பல இளைஞர்கள் கூடி இது ஆன்மீக பூமியா,அல்லவா என்று விவாதிக்கிறார்கள். நெறியாளர் இடைமறித்து திருநள்ளாறுக்கு மேலே அமெரிக்க சாட்டிலைட் கொஞ்சம் தள்ளாடுகிற மாதிரி ஒரு தவறான கற்பிதத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார். (10வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்!)  இந்த மாதிரிக் கற்பிதங்களுக்கு முந்தைய பதிவில் அரவிந்தன் நீலகண்டன் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவு படுத்தவேண்டியது என் கடமை. 


இங்கே விவாதம் மிக மேம்போக்காக நடப்பதைப் பார்த்தபிறகு தான் இந்த மாதிரி இளைஞர்களுக்காகவே நண்பர் எழுத்தாளர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹிந்துமதம்: ஒரு அறிமுகத் தெளிவு என்று (குழுமங்களிலும் பிறகு சந்தியா பதிப்பக வெளியீடாக ஒரு நூலாகவும்) ஏன் எழுதினார் என்பதே  கொஞ்சம் உறைக்கிறது. ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் பலருக்கே  தங்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது என்னென்ன என்பது தெரிவதில்லை என்பது நான் உட்பட, ஒப்புக்கொள்ளவேண்டிய வெட்கக்கேடு! இந்தப் புத்தக அறிமுகமாக எழுதியது இங்கே 


சதீஷ் ஆசார்யா சரத் பவாரை விட அதிகமாகக் கவலைப்பட்டு கார்டூன் வரைந்திருப்பது ஏன் என்றுதான் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. இந்தமாதிரி  தேர்தல் சமயங்களில் தான் முறைகேடாக சம்பாதித்த பணம் கொஞ்சம் வெளியே வரும் என்பது ஊரறிந்த ரகசியம்! சரத் பவாருடைய பணத்தொப்பையின் பின்னணி என்னெவென்று சொல்வது? தாவூத் இப்ராஹிமுடன் உள்ள தொடர்புகள், சிவசேனாவின் புலி பால் தாக்கரேவைக் கூட பூனையாக மாற்றி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைத்த சாமர்த்தியம் என்று எத்தனை  எத்தனை விஷயங்களைத் தான்  பட்டியலிடுவது? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம். 

       
    

Wednesday, September 25, 2019

வலைதளங்கள் தூதர் வேலை கூடச் செய்யுமா?

சமூக வலைதளங்கள் வளர்வதில் கட்டுக்கு மீறிப் போய்க் கொண்டே இருப்பதில், கட்டுப்படுத்த வேண்டும், சகட்டு மேனிக்கு கருத்து கந்தசாமிகள் உருவாகாமல் முறைப் படுத்தவேண்டும் என்றெல்லாம் கூக்குரல்கள் வெவ்வேறு பக்கங்களில் இருந்து எழுவது நமக்குத் தெரியும்! வலைதள தூதர்கள் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது என்றே சொல்ல வேண்டும்!



நிகழ்ச்சி நடப்பதோ சென்னையில். நானிருப்பதோ மதுரை. நிகழ்ச்சியைப் பற்றி, பங்கேற்பாளர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? இங்கே தான் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து கை கொடுக்கிறது. இணையத்திலும் யூட்யூபிலும் நல்லதும் கெட்டதுமாகக் கலந்தே கிடைப்பதை புரிந்து கொண்டு எது வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. இங்கே யூட்யூப் தளத்தில் பானு கோம்ஸ், ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீலகண்டன் மூவர் பேசியதும் கிடைத்தது. வானதி சீனிவாசனுடன் பார்வையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் வலையேற்றப்படவில்லை. ஆக இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவருமே ஒருமித்த கருத்துடையவர்கள், பிஜேபி ஆதரவாளர்கள் என்று இங்கே தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன?         
   

முதலில் பானு கோம்ஸ்! சமூக வலைதளங்களின் பாசிடிவான விஷயங்கள், எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் சொல்கிறார். சுருக்கமாகச் சொன்னாலும் ஒரு நல்ல அறிமுக உரை 


     
நமது பார்வைக்கு வரும் செய்திகளில் எத்தனை போலிகள். விஷமத்தனமானவை என்பதை அறிந்திருக்கிறோமா? Fake News உருவாகும் விதம், உள்நோக்கங்கள் இவைகளைக் குறித்து ஹரன் பிரசன்னா இந்த 36 நிமிட வீடியோவில் சொல்கிறார். Fake News பின்னணியில் உள்ள அரசியலைக் குறித்து கொஞ்சம் உபயோகமான தகவல்கள் சொல்கிறார்.



முன்னால் இருவர் பேசியதற்கு மேல்  அரவிந்தன் நீலகண்டன் பேச இந்த விஷயத்தில் என்ன மிச்சம் இருக்கிறது? Fake News என்று ஆரம்பமானதே நம்மூர்  பள்ளிப் பாடப்புத்தகங்களில் தான் என்று ஒரு புதிய கோணத்தில் இருந்து பேசுகிற இந்த 36 நிமிட வீடியோ, கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருந்தது உண்மை.

தமிழகம் ரிசர்ச் ஃபவுண்டேஷனுடைய முகநூல் பக்கம் இது. புதிய கல்விக்கொள்கை, ராஜராஜ சோழன் விவகாரம் பற்றியும் சில பகிர்வுகள் காணொளிகள் இருப்பதையும் பார்த்தேன்.   

இன்றைக்கு என்ன பிஜேபி RSS ஆதரவுப் பதிவா என்று கொஞ்சம் நக்கலாகக் கேட்கிற நண்பர்களுக்கு நான் சொல்லக் கூடிய ஒரே பதில்! செய்திகள், செய்திகளின் அரசியலைப் புரிந்து கொள்ள 360 டிகிரியிலிருந்தும் பார்க்கும் ஒருவனை அவ்வளவு எளிதாக எடைபோடவோ, முத்திரை குத்தவோ காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது சொல்லப் பட்ட விஷயத்தில் காட்டினால் நன்றாக இருக்குமே என்பது மட்டும் தான்!

செய்திகள் உருவாக்கப் படுவதிலும் கூட ஒருவித அரசியல் கலந்து தான் இருக்கிறது என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்!

மீண்டும் சந்திப்போம்.           

Tuesday, September 24, 2019

செய்திகளின் அரசியல்! எது, ஏன் தலைப்புச் செய்தி ஆகிறது?

இங்கே ஒவ்வொரு ஊடகத்திலும் எது தலைப்புச் செய்தி ஆகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே அரசியலை மட்டுமல்ல, செய்திகளின் அரசியலையும் சேர்த்தே சரியாக எடை போட முடியும், சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது என்னுடைய அனுபவம். 


செய்திகளோ, செய்திகளின் அரசியலோ கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைகிற தூரிகைக் கனவு, கற்பனை மாதிரி இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடிகிற அதே நேரம் செய்திக்கும் தலைப்புச் செய்திக்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?

This is 3rd time I m forced to comment on the grace u have!
🙏
This is called opposition guys This is the one Be with nation Stand with India Take pride being an Indian Apas me chahe matbhed ho, par together we must be united! Time to make a new party & unite people like him?
2
9
49
Great comment bro..  
இந்த ட்வீட்டர் செய்தியையே எடுத்துக்  கொள்ளுங்கள்! இதை ட்வீட் செய்த மிலிந்த் தியோரா, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன். 2006 இலிருந்து  2011 வரை இருமுறை மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர். இந்திரா குடும்ப விசுவாசி! 2014 இல் இறந்த பிறகு, மகன் மிலிந்த் தியோரா மும்பை காங்கிரஸ் தலைவராக சமீப காலம் வரை இருந்தார். எதனால் இவருடைய இந்த ட்வீட் ஒரு தலைப்புச் செய்தியாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தச் செய்திக்கு எதிர்வினையாக மறைந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் உட்படப் பலரும் என்னென்ன மாதிரி விமரிசித்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.  
       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)