நரேந்திர மோடி அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடத்தில் யார் என்ற கேள்விக்கு விடைகிடைத்து விட்டதாக தி டெலிகிராப் நாளிதழ் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது இப்படி:: Union home minister Amit Shah on Tuesday put to rest speculation on who was the No. 2 in the government by chairing a high-level meeting attended by senior ministers such as finance minister Nirmala Sitharaman and external affairs minister S. Jaishankar என்கிறார் செய்தியாளர் Imran Ahmed Siddiqui ஆனால் சதீஷ் ஆசார்யா மாதிரி அபிமான கார்டூனிஸ்டுகளுக்கு அமித் ஷா தான் நம்பர் ஒன்னாகத் தெரிகிறது போல!
அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே இங்கே நிறையப்பேருக்கு அடிவயிற்றில் சொல்ல முடியாத சங்கடங்கள் ஆரம்பித்துவிட்டதென்று வெளிப்படையாகவே தெரிய வந்திருப்பது தான்!
பாரதி என்ற பெயரையே சொல்வதைத் தவிர்த்த திராவிடப் புரட்டுகளுக்கு இப்போது பாரதியின் முண்டாசு, அதன் நிறம் பற்றிய கவலை வந்திருப்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய தமாஷா!
பாரதியின் முண்டாசுக்கு காவி வண்ணம் பூசி விட்டார்கள் என்று ஓசிச் சோறுகளின் வாய் பெரிதாய் திறந்து ஓலம் பெரிதாய் கேட்கிறது.
இந்த எதிர்ப்பு, இவர்களின் எஜமானர்களிடம், தங்களுக்கு கூலியை உயர்த்தி கேட்கும் கீழ்த்தரமான யுக்தி.
பாரதி காலையில் கீழ்வானத்தில் உதிக்கும் ஒரு ஞானச்சூரியன். அவன் தலைப்பாகை காவியாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டை கறுப்பாக மாற்ற நினைக்கும் கும்பலுக்கு கண் கூசுவது வியப்பொன்றுமில்லை.
காலமெல்லாம் அவனை பார்ப்பான் என்று ஒதுக்கி வைத்துவிட்டு இன்று என்ன இவ்வளவு அக்கறை? இத்தனை வருடங்களில் ஒரு நாளாவது அவன் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்ததுண்டா? (இவர்கள் காலடி படாமல் இருப்பதே நல்லது என்றாலும்) என்றாவது அந்த மகா மனிதனின் நினைவத்துக்குச் சென்று வணங்கியதுண்டா?
"வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதம் பொறுப்பளோ பாரத தேவி" என்று இந்த "திராவிடர்களின்" எஜமானர்கள் காலடி இந்த மண்ணில் படலாமோ என்று கர்ஜித்தவன்.
"வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று உறக்கச் சொல்லிய பாரதி, சக்தியின் மைந்தன். அவனுக்கு காவி தலைப்பாகை வைத்தாலும் என்ன தவறு?
இந்த ஓநாய்களுக்கு காவி மீது உள்ள வெறுப்பு என்பது பச்சை மற்றும் வெள்ளை வர்ணங்களின் மீது உள்ள பாசத்தினால் வருவது என்பது உலகறிந்ததே.
பாரதி கண்ணன் பிறப்பை ஆடிப்பாடி கொண்டாட பாடல் தந்தவன். காயில் புளிப்பையும் கனியில் இனிப்பையும் கண்ணன் என்று கொண்டாடியவன். நீங்கள், உங்கள் "தொழில்" நிமித்தமாய் கண்ணனை வெறுப்பவர்கள்.
"உன்னைக் கோடிமுறை தொழுதேன் இனி
வையத் தலைமை எனக்கருள்வாய் அன்னை
வாழி! நினதருள் வாழி!
ஓம் காளி! வலிய சாமுண்டீ" என்று காளியிடம் உயர்ந்த வரம் கேட்டவன். உங்களைப்போல் பிரியாணி கேட்டு கீழ் நிலை வாழ்க்கை வாழ்ந்தவன் அல்லன்.
வையத் தலைமை எனக்கருள்வாய் அன்னை
வாழி! நினதருள் வாழி!
ஓம் காளி! வலிய சாமுண்டீ" என்று காளியிடம் உயர்ந்த வரம் கேட்டவன். உங்களைப்போல் பிரியாணி கேட்டு கீழ் நிலை வாழ்க்கை வாழ்ந்தவன் அல்லன்.
"மழையும் காற்றும் பராசக்தி செய்கைகாண்- வாழ்கதாய்" என்று எல்லாவற்றிலும் சக்தியை கண்டவன். யாகம் என்றால் எள்ளி நகையாடுபவர்கள் நீங்கள்.
"வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்" என்று வேதங்களை போற்றி வளர்ந்தவன்.
உங்களைப்போல் வேதங்களை பழித்து வாழ்ந்தவன் அல்லன்.
மேன்மையுறச் செய்தல் வேண்டும்" என்று வேதங்களை போற்றி வளர்ந்தவன்.
உங்களைப்போல் வேதங்களை பழித்து வாழ்ந்தவன் அல்லன்.
"போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை
புகன்றது எவருடையவாய்" என்று பாரத மாதாவை நினைத்து பெருமை கொண்டவன்.
புகன்றது எவருடையவாய்" என்று பாரத மாதாவை நினைத்து பெருமை கொண்டவன்.
அவன் பெயரைச் சொல்லக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள். வீணர்களே, பாரதியிடம் இருந்து தூரமாய் சென்று விடுங்கள். அவன் சூரியன்.
ஜெய் ஸ்ரீராம்! என்றெழுதி 10 லட்சம் போஸ்ட் கார்டுகளை மம்தா பானெர்ஜி வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொன்னாலும் சொன்னார்கள்! மம்தா குடும்ப வாரிசு அபிஷேக் பானெர்ஜி உளற ஆரம்பித்து விட்டார். ஜெய் ஸ்ரீராம்! கோஷத்துக்கு TRP ( மவுசு) குறைந்துவிட்டதாம்! பதிலுக்கு நரேந்திர மோடிக்கு ஜெய் ஹிந்த் என்றெழுதித் தபால் அனுப்பப் போகிறார்களாம்!
ஏட்டிக்குப் போட்டி! அதுவும் #தமிழேண்டா இஷ்டைலில்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment