2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் செம அடி வாங்கிய பிறகு காங்கிரசுக்கு திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் உளறுவாயர்கள் எவரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்களாம்! பாராட்ட வேண்டிய விஷயம்தான்! இந்த ஞானம் ஜூன் 3 ஆம் தேதியை எதிர்பார்த்து ஏமாந்தவர்களுக்கும் வருமே ஆனால் அதுவே தமிழ்நாட்டுக்கு சுபதினம்!
லாட்டரிச் சீட்டில் லட்சம் விழுந்தால் கிடைத்தவர்க்கே அது சுபதினம் என்ற வரிகளை நினைவில் வைத்துக் கொண்டு கான்ட்ராக்டர் நேசமணி மேட்டர் மாதிரி இன்னொரு வடிவேலு மகான் காமெடி தேறுகிற வரையிலாவது அமைதியாக இருந்தார்களென்றால் அது அவர்களுக்கே நல்லது.
ஆறுநாட்கள் வெளியில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த ராகுல் காண்டி நேற்றைக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்பதோடு NCP தலைவர் சரத் பவாரையும் சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசியிருக்கிறார். சரத் பவார் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்து 52+5 =57 எம்பிக்கள் ஆனால் இம்முறையானது நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்து பெறலாமே என்ற நப்பாசை பின்னணியாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். சரத் பவார் அதைப்பற்றி பேச்சே எழவில்லை என்று மறுத்திருக்கிறார்.
காரை மறித்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கிய கும்பல்: சரமாரியாக திட்டி சவால்விட்ட மம்தா என்று சாதாரணமாக செய்தி போடுகிறது இந்து தமிழ்திசை. மம்தா பானெர்ஜியை வெறுப்பேற்ற ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஒன்றே போதுமானதாக இருக்கிறதோ? நிலை குலைந்தவராகப் பொங்குகிறார் பொருமுகிறார் மிதுன் சக்ரபர்த்தி பட வசனம் சொல்லி மிரட்டுகிறார்! ஒருவிதத்தில் பாவமாக இருக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேபினெட் அமைச்சர்கள் இவர்கள், என்ன பொறுப்பு என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.
ரவிசங்கர் பிரசாத் மூன்று முக்கியமான துறைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது சுமை குறையலாம். முழுப்பட்டியலும் இங்கே
மீண்டும் சந்திப்போம்.