Wednesday, July 31, 2019

கீதம்! சங்கீதம்! ஒன்றில்லாமல் மற்றொன்றா?

கொக்கரக்கோ என்றொரு படம் 1983 இல் வந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது! இளையராஜா இசையில் SPB, SP ஷைலஜா பாடிய இந்த ஒரு பாட்டுக்காகவே படத்தின் பெயர்  இன்னும் மனதில் நிலைத்திருக்கிறதோ? பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்திடம்  கேட்டு இருந்தால் இன்னும் தரமான வீடியோவைத்  தேடிக் கொடுத்து  இருப்பார் என்று டைப் செய்து கொண்டிருக்கும் போதே நல்ல வீடியோவாக ஒன்று கிடைத்து விட்டது! மோகனராகம் என்று சொல்கிறார்கள்! எனக்கு ராகங்களைக் கண்டுபிடிக்கிற அளவு ஞானமில்லை! படத்தில் பாடுவது மகேஷ், இளவரசி என்று மட்டும் தகவல் தெரிகிறது.  


1993 இல் கமல் ஹாசன் கலைஞன் என்ற படத்தில் கொக்கரக்கோ  கோழி என்று பாடி ஆடியதும் இளையராஜா இசையில் தான்! சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் தயாரிப்பாம்! 


என்னுடைய நல்லகாலம், இந்தப் படத்தைப் பார்த்ததாக நினைவில் இல்லை! பாட்டென்னவோ கொஞ்சம் சுமார்தான்!


கொக்கரக் கொக்கரக்கோ! கில்லி  படத்தில் விஜய் , த்ரிஷாவுக்காக உதித் நாராயணன், சுஜாதா பாடியது. இசை அமைப்பாளர் வித்யா சாகர் நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.   


D இமான் இசையில் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் படத்துக்காக கொக்கரக்கோ கோழி கூவ என்று ஆடிப்பாடி அசத்துகிறார். இசை பட்டையைக் கிளப்புகிறது என்பது கேட்கும்போதே யாரும் சொல்லாமலேயே புரியக் கூடியது தான்!


கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! என்று ஜிக்கி ஆரம்பிக்க. TMS தன்  கணீர்க் குரலில் தொடர்கிற இந்தப் பாட்டு இடம் பெற்றபடம்  பதிபக்தி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் இது.

மீண்டும் சந்திப்போம்.
           

Tuesday, July 30, 2019

நிறையவே சுவாரசியமான சில விஷயங்கள்!

என்னமோ பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் எல்லாம்  வழக்கம் போல கடுமையாக விமரிசித்தார்கள் என்பதோடு நம்முடைய கவனமும் அக்கறையும் முடிந்து போய்விடுகிறதா? என்னவென்று புரிந்துகொள்ள ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா? அப்படி முயற்சி செய்ய ஆசைப்படுகிற ஒருசிலருக்காகவாவது இதைப் பகிர்ந்தே ஆக வேண்டும் இல்லையா?


இந்த வீடியோ 42 நிமிடங்கள் தான்! நிதியமைச்சர் உள்ளிட்டு பலரும் பட்ஜெட்டைப்பற்றிய பல விஷயங்களை எடுத்துச் சொன்ன வீடியோக்கள் யூட்யூப் தளத்திலேயே நிறைய இருக்கின்றன.


அதென்ன காஷ்மீருக்கு மட்டும் ஒரு விசேஷ அந்தஸ்து? 72 வருடங்களுக்குப் பின்னாலும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுத்து இந்திய மக்கள் வரிப்பணத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து, அப்புறமும் அங்கே  என்ன நடக்கிறது? அதெல்லாம் என்ன ஆனது?   ஒவ்வொரு இந்தியனும் காஷ்மீரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அதற்கு உதவியாக இந்த 9 நிமிடச் செய்தியைப் பார்த்து விடுங்கள்.



கொஞ்ச மூணுமாசப் பழசுதான்!  ஆனால் இன்றைக்குத்தானே என் கண்ணில் பட்டது, கொஞ்சம் சுவாரசியமான பேச்சு! 39 நிமிடம் தான், தவற விடாமல் பார்க்கும்படி, வேண்டுகிறேன். இதன் அடுத்த பகுதி வீடியோ உடனடியாகக் கிடைக்கவில்லை. படித்ததில் பிடித்தது எவையெவை என்று கலியமூர்த்தி பேசுகிற இந்த வீடியோ 26 நிமிடங்கள் தான்! 


இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமான, அதே நேரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக! வீடியோக்களை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
          

Monday, July 29, 2019

கொஞ்சம் சினிமா! கொஞ்சம் சுவாரசியம்!

இந்தப்பக்கம் இன்றைக்கு என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என்னைப் பற்றி எழுதேன் என்று ஒரு திரைப்படக் காட்சித்துணுக்கு முன்னுக்கு வந்து நின்றது. அதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்!

  
பசங்க படத்தில் வரும் ஒரு அருமையான காட்சி இது. இன்று பார்க்கும்போது கூட மனதைத்தொடும் காட்சியாக! தனது அனுபவத்தையே கொஞ்சம் விவரித்து,  இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான் உங்களுக்கான உபதேசம் கிடையாது என்று சொல்கிற இடம்! கொஞ்சம் பார்த்துவிட்டு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்களேன்!


ஒரு சவூதி, ஒரு இந்தியன், ஒரு ஈரானியன் என்று இந்த மூவரும் கத்தாருக்குப்போனால் அதுவும் ஒரு bar என்றால் எப்படி இருக்கும்? ஏழுவருடங்களுக்கு முந்தைய வீடியோதான்! ஆனால் 115 லட்சம் முறை பார்க்கப் பட்ட ஒரு 7 நிமிட வீடியோ என்கிறது யூட்யூப் தளம்! Standup Comedy க்கு நாம் அதிகம் பழகவில்லை, இல்லையா? சிரிக்க முடிகிறதா என்று கொஞ்சம் பாருங்களேன்!


திருமுருகன் காந்தி என்பது தான் இந்த ஆசாமியின் உண்மைப் பெயரா? எனக்கு அது தெரியாது, அக்கறையும் இல்லை! ஆனால் இது மாதிரி இன்ஸ்டன்ட் போராளிகள் தமிழ் நாட்டின் standup comediians   ஆவதற்கு  போட்டிபோட்டுக் கொண்டு அரசியல் பேசுவதைவிட சுவாரசியமான காமெடி இருக்கிறதா? 


வீட்டுக்கு வீடு! 1970 சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த ஒரு  
நகைச்சுவைப் படம். ஜெய்சங்கர் லட்சுமி ஜோடி, ஸ்ரீதர் படக்கம்பெனியின் ஆஸ்தான நடிகராக இருந்த முத்துராமனும் இருக்கிறார், நாகேஷ் வி  கே ராமசாமி காமெடி கலக்கல் என்றால் கீழே நாகேஷுக்காக நடிகர் TS பாலையாவின் மகன் சாயி பாபா பாடிய அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ பாடல் இன்னும் சூப்பர் கலக்கல்!
     

கொஞ்சம் ரசிக்க முடிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.  

Sunday, July 28, 2019

இன்றைக்குப் பார்த்த, சில சுவாரசியமான விவாதங்கள்!

நம்மூரில் பொருளாதாரம். வெளியுறவு விவகாரங்கள்  முதலான முக்கியமான விஷயங்கள் தெரிந்து பேசுகிற அரசியல்வாதிகள் மிக அபூர்வம்! அதுவும் தமிழகத்தில் விஷயம் தெரிந்து பேசுகிற ஆசாமிகளைக் கண்டாலே முட்டை வீசித்  தாக்குகிற திராவிடக் கலாசார கருமாந்தரத்தில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரி உண்மையிலேயே பொருளாதார பேராசிரியராக இருந்த ஒருவரைப் பற்றி இங்கே ஒரு ஏளனமான கண்ணோட்டமே திட்டமிட்டுப் பரப்புரை செய்யப்பட்டது. டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் போதித்திருக்கிறார் என்பது இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ?  மனிதர் கலகக்காரர்தான், ஆனால் யாரைத் தாக்குகிறோம், எதிர்த்துக் கலகம் செய்கிறோம் என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். சோனியாG மற்றும் வாரிசுகளை அம்பலப்படுத்தியதில், அவரளவுக்கு களத்தில் இறங்கிச் செயல்பட்டவர்கள் யாருமே இல்லை.  
  

எதற்காக இத்தனை பில்டப்  முன்னோட்டம் என்கிறீர்களா?

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்திய பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புத்தகம் வெளியாகிவிடும் என்று சொல்வதுடன் , இந்தியப் பொருளாதாரம்  குறித்து தனது கருத்துக்களை இந்த நேர்காணலில் சொல்கிறார். வீடியோ 27 நிமிடங்கள் தான்!


பிஜேபிக்கு இப்படி ஒரு சோதனையா? பாஜகவுக்குத் தாவுகிறாரா ராதாரவி என்றொரு தலைப்புக் கொடுத்து வில்லங்க வாயர் ராதாரவியுடன் நேர்காணல் ஒன்றை ரங்கராஜ் பாண்டே நடத்தியிருக்கிறார்! பொதுவெளியில் கொஞ்சம் விவகாரமாகப் பேசுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிற நிறைய திராவிடப் பேச்சாளர்களில் ராதாரவி கொஞ்சம் பிரபலமானவர்! அதற்காக பிஜேபிக்குத் தாவுகிறார் என்றெல்லாம் விவகாரம் வேறுவிதமாகக் கிளப்பி விட்டால்....!

கொஞ்சம் ஆவலைத் தூண்டிய, தூண்டில் போட்டு இழுத்த தலைப்பு, விவாதம் இது. வீடியோ 51 நிமிடம்.

ஞாயிறு பொழுது கொஞ்சம் வித்தியாசமாகப்  போக வேண்டாமா? கர்நாடக சபாநாயகர் ஞாயிறு விடுமுறை என்று கூடப்பார்க்காமல் சற்றுமுன் காலை 11.30 மணிக்கு நிருபர்களைக் கூப்பிட்டு மிச்சமிருந்த அதிருப்தி MLAக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து அறிவித்திருக்கிறார். விவகாரம் மறுபடி நீதிமன்ற முடிவுக்கே விடப்படுகிற மாதிரியான இந்த முடிவில் விவேகம் இருக்கிற மாதிரித் தெரியவில்லை. நாளை காலை எடியூரப்பா நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தோற்கடிக்க இது உதவாது என்றாலும் கர்நாடக அரசியல் குழப்பத்தை நீட்டிக்க மட்டுமே உதவும் என்றே தோன்றுகிறது.    

மீண்டும் சந்திப்போம்.
        

  

Friday, July 26, 2019

நாலாவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா! தாக்குப் பிடிப்பாரா?

கர்நாடக அரசியலில் சபாநாயகர் முதல் தவணையாக மூன்று அதிருப்தி MLAக்களைத் தகுதிநீக்கம் செய்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். 76 வயதாகும் BS எடியூரப்பா, எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சற்று நேரத்துக்கு முன் 4வது முறையாக, கர்நாடக முதல்வராகப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். வருகிற திங்கட்கிழமை நம்பிக்கை கோரி வாக்கெடுப்பை நடத்திய பிறகே மந்திரிசபையில் யார் யார் என்பது முடிவாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னொரு செய்தி ஜூலை 31 வரை அவகாசம் ஆளுநர் கொடுத்திருப்பதாக!  சபாநாயகர் அடுத்த தவணையில் இன்னும் 14 அதிருப்தி MLAக்கள் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன், அவர்களைவைத்துத் தன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தேசித்திருக்கிறாரோ என்னவோ!


பிஜேபியின் மத்தியத் தலைமையில் இருந்து எவரும் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததில் ஆச்சரியம் இல்லை! 75 வயதுக்குமேல் பதவியில் எவரையும் அமர்த்துவது இல்லை என்று பிஜேபி எடுத்த முடிவுக்கு முரணாக எடியூரப்பா தன்னுடைய பிடிவாதத்தால், பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதாகச் சொன்னதால், கர்நாடகத்தில் எடியூரப்பாவைத் தவிர்த்து அடுத்து அடையாளம் காட்டக்  கூடிய தலைவர் எவரும் இல்லை என்பதால், மகனே உன் சமர்த்து என்று தலைமை ஒதுங்கிக்  கொண்டுவிட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. சபாநாயகருடைய முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஏற்கெனெவே ஒரு சாம்பிள் காட்டியிருக்கும் நிலையில் கர்நாடக அரசியல் களத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலையே இன்னமும் நீடிப்பதாக எனக்குப் படுகிறது. ஜூலை மாத முதல் மூன்றரை வாரங்கள் ஒரு மார்க்கமாகவே போய்க்கொண்டிருந்த நிலைமையை, எதிர்க் கட்சிவரிசையில் இருக்கும் காங்கிரஸ் JDS நீட்டித்துக் கொண்டு போகவே செய்யும் என்பதான பின்னணியில் எடியூரப்பா தாக்குப் பிடிப்பாரா? எத்தனை காலத்துக்கு? என்ற கேள்விகளுக்கான விடையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! அது தெளிவாகிற வரை கரு "நாடகம்" குறித்து எழுதாமல் இருப்பது ஒன்றுதான் நான் செய்யக் கூடியது!  
டொனால்ட் ட்ரம்பிடம் பிரதமர் என்ன சொன்னார் என்பதை அவரே நேரில் வந்து சபையில் சொல்லவேண்டும் என்று காங்கிரஸ் ஆசாமிகள் ரகளை செய்து ஓய்ந்துபோயிருக்கும் வேளையில் தினசரி தளத்தின் ஓனர் செங்கோட்டை ஸ்ரீராம் இந்தப்படத்தைப் பகிர்ந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்!


ஊடகக் கிறுக்கர்கள்! தெறிக்கவிட்ட வைகோ மிரண்டு போன வெங்கைய நாயுடு என்று தலைப்புக் கொடுக்கிறார்கள்! வீடியோவின் கடைசிப்பகுதியைப் பாருங்கள் 2.30 நிமிடத்தில் இருந்து! மிரட்டியது யார் மிரண்டது யார்? 

தமிழ்மணத்துக்கு என்னாச்சு? fatal error என்றே தொடர்ந்து வந்துகொண்டிருந்ததே?

மீண்டும் சந்திப்போம்.
       
   

Thursday, July 25, 2019

இன்றைக்கிருப்பது ராட்சசர்கள்! சொல்வது கர்நாடக சபாநாயகர்!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இந்தமாதம் முழுவதும் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார் என்பதை நான் சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்! ஆனால், சமீபகாலத்தில் வேறெவரையும் நான் இவரளவுக்கு பேசுகிற விதம் உள்ளிட்டுப் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்ததில்லை. நிதானமாகப் பேசுகிறார். காங்கிரஸ்காரராக இருந்தாலும், கொஞ்சம் நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவாவது முயற்சி செய்தார் என்பதில் எல்லாம் இங்கே கழகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை! 


எழுபது வயதாகும் ரமேஷ் குமாரைப் பற்றி நான் தனிப்பட்ட விமரிசனம் எதுவும் செய்யவிரும்பவில்லை. ஆனால் இந்த 5 நிமிடப் பேட்டியில் 10வது ஷெட்யூலை வைத்துத் தான் என்ன மாதிரி முடிவெடுக்க முடியும் என்பதை ஒரு  கோடி காட்டி இருப்பகாகவே நான் புரிந்து கொள்கிறேன். 1985 இல் கொண்டு வரப்பட்ட கட்சித்தாவல் தடைச்சட்டம் எந்த அளவுக்குப் பயனற்றுப் போயிருக்கிறது என்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய தருணம் இது. உச்சநீதிமன்றமே நேற்றைய நாட்களில் இந்தச் சட்டத்தை மதிப்பீடு செய்து ஏற்றுக்கோண்டு விட்டது என்பதால் மட்டும், இப்போதும் அதே மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் இயற்றுவதோடு சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது என்பதை மறந்து சட்டமன்றத்தில் காங் JDS உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசிய பேச்சுக்கள்நீதித்துறை  எல்லாம் நீதிமன்றத்தின் முன்னால் எடுபடுமா?


இந்த விவாதம் பகிரப்பட்டதுகூட பேசியவர்கள் எல்லாம் தெளிவாகப் பேசினார்கள் என்றல்ல! எதைப் பேசுவதற்குத் தவறினார்கள் என்பதை நீங்களே யோசித்துப் பார்க்க உதவியாக மட்டுமே!  

இங்கே நம்முடைய அரசியலில் மிகப்பெரிய பரிதாபமே, ஒத்து இயங்கவேண்டிய சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்டமன்றம், நாடாளுமன்றம், சட்டப்படி செயல்பட வேண்டிய நிர்வாகம் /அதிகாரிகள், சட்டத்தைப் புரிந்துகொண்ட விதம் சரிதானா என்பதைச் சொல்ல வேண்டிய நீதித்துறை     இவைகளில் அங்கம் வகிக்கும் எவருக்குமே தங்களுடைய பொறுப்பு, கடமை,அதிகாரவரம்பு  என்ன என்பதே தெரிவதில்லை என்பதுதான்! வானளாவிய அதிகாரம் என்று குதித்த ஒரு சபாநாயகரை நீதிமன்றம் தலையில் குட்டி அடக்கிவைத்த கதை தமிழகத்திலேயே  நடந்தது. நீதிமன்றத் தலையீடு இல்லாமல் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுகிற தன்மை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அறவே இல்லை என்பதை இப்படிப் பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புகிற நேரங்களிலாவது கவனிக்கிறோமா? அரசியல் சட்டத்தை அறிமுகம் செய்து அரசியல் சாசன நிர்ணயசபையில்  அம்பேத்கர் பேசும்போது, நாடாளுமன்றம், அரசுநிர்வாகம், நீதித்துறை இவை மூன்றில் எது பிரதானமானது, அதிகாரம் மிக்கது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விட்டதற்கு, ஏதோ இரண்டு தவறு செய்தால், மூன்றாவது தலையிட்டுச் சரிசெய்யும் என்கிற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் மட்டுமே என்றார். ஆனால் இந்திரா காலத்தில் அம்பேத்கருடைய அந்த நம்பிக்கை தவிடு பொடியாக்கப்பட்டதை இங்கே மறந்துவிடுகிறோம். தவறான ஆசாமிகளை சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ள இடத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிற தவறை வாக்காளர்களாகிய நாமும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில், சட்டம் இயற்றுவது எப்படியென்றே தெரியாத தற்குறிகள் நீதிமன்றங்களோடு வானளாவிய அதிகாரம் படைத்தது  நீயா நானா என்று வெட்டிவீராப்பு பேசுவதை இன்னும் எத்தனை நாளைக்கு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்?  

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

         

Wednesday, July 24, 2019

ஆன்டி க்ளைமேக்சாக கரு "நாடகம்" முடிந்தது எப்படி?

கர்நாடக அரசியல் குழப்பங்களில் சில படிப்பினைகள் இருக்கத் தான் செய்கின்றன. என்னவென்று பார்க்கவோ, கற்றுக் கொள்ளவோ ஜனங்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்விதான் எல்லாக் குழப்பங்களிலும் முன்னுக்கு வந்துநிற்பதைப் பார்க்கவும் தவறுகிறோம். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  இப்போதைய குழப்பம் ஆரம்பித்தது எப்படி என்பதை 3 infographics / படங்களில் வெளியிட்டிருப்பது, புரிந்துகொள்ள உதவியாக இன்றைக்கு வெளியாகியிருக்கிறது.  TOI க்கு நன்றியுடன்!


    
அரசைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் பணப்பைகள் முயற்சி செய்யாமல் ஒன்றுமில்லை! இருக்கிற மந்திரிகள் ராஜினாமா செய்து, அதிருப்தி MLAக்களுக்கு இடம் கொடுப்பதாக DK சிவகுமார் பிளான் கூட அவர்களை அசைத்துப் பார்க்கவில்லை. பிந்தினநாட்களில் சிவகுமாரே BJP என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று சொன்னதும் பொதுவெளியில் காணக் கிடைக்கிறது.


அதிருப்தி  MLAக்கள்  உச்சநீதிமன்றத்தை நாடியதில் இடைக் கால உத்தரவாக  ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் முடிவு எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும், அவர்கள் மீண்டும் தங்கள் ராஜினாமாவை சபாநாயகரிடம் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜூலை 12 அன்று தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாக அறிவித்த பிறகும்  கூட சபாநாயகர் ராஜினாமாக்கள் மீது  முடிவெடுக்கத் தனக்கு கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்ததோடு சரி! அதற்கப்புறமும் கூட முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேபோனதன் காரணம் என்ன? ஏற்றுக்கொண்டாலும் தகுதிநீக்கம் செய்தாலும் கூட்டணி அரசுக்கு ஒரு லாபமுமில்லை என்பதாலா? 

இடைத்தேர்தல் நடத்தினாலும் சாதகமாக இருக்குமா என்பது தெரியாமல் எவ்வளவுகாலம் சவ்வாக இழுக்க முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டு  ரெண்டுங்கெட்டானாக அந்தரத்தில் தொங்கிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது யார்? இப்படி ரெண்டுங்கெட்டானாக காங்கிரஸ்-JDS  கூட்டணி முடிவெடுத்து விட்டு, BJP மீது மட்டும் பழிசுமத்தி சட்டசபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டால் போதுமா? 


பேசினார்கள் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள், கோஷம் எழுப்பினார்கள்! வேறுவழியே இல்லாமல் வாக்கெடுப்பு நடந்ததில், அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே கவிழ்ந்தும் போனார்கள்.  

இங்கே சித்தராமையாக்களும் இன்னும் காசுக்காக மட்டுமே கூவுகிற காங்கிரஸ் வக்கீல்களும் கட்சித்தாவல் தடைச்சட்டம் இப்படிச் சொல்கிறதே அப்படிச் சொல்கிறதே என்றெல்லாம் கூவினாலும், நம்மூர் அரசியல்வாதிகள் சட்டத்தை ஏய்ப்பது எப்படி என்பதில் கில்லாடிகளாக இருப்பதில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் போதாமை  ஈயென்று இளித்து நிற்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல் என்றாகி இருக்கிறதா இல்லையா?

கர்நாடக சபாநாயகர் ஒரு புதுமையான முயற்சியைச்  செய்து பார்த்தார். கடந்த  நாடாளுமன்றத்தேர்தலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், வேட்பாளராக நின்று ஜெயித்ததில், அவருடைய  ராஜினாமாவை  ஏற்பதற்கு முன்னால் அவரது சட்டசபைத் தொகுதி மக்களில் ஒரு சிலரை மட்டும் அழைத்துக்  கருத்துக் கேட்டார் என்று சொல்கிறார்கள். இப்போதும் கூட அதிருப்தி MLA க்கள் ராஜினாமா விஷயத்தில் கூட அதேபோலச் செய்வாரா என்றொரு எதிர்பார்ப்பும் இருந்திருக்கலாம்! அதைவிட தேர்தல் விதிகளில், ஏற்கெனெவே ஏதோ ஒரு அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவர், மற்றொரு பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிடக் கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தால் என்ன? தேர்தல் சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

சுயேட்சைகள், 1% - 4% வாக்குகளைக்கூடத் தனித்து நின்று வாங்கமுடியாத உதிரிக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? 

கொஞ்சம் யோசித்து  இன்னும் என்னென்ன  செய்யவேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசிக்கவாவது செய்யுங்களேன்!

மாற்றம், முதலில் நம்மிடமிருந்தே  ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
          

Tuesday, July 23, 2019

படங்களோடு கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

வித்தியாசமான பலநேரங்களில் பத்திபத்தியாக எழுதிக் கொண்டிருப்பதை விட சில படங்களே செய்திகளின் அரசியலைத் தெளிவாகச் சொல்லிவிடுவதை வெகுவாக ரசித்திருக்கிறேன்! சிலநேரம் படத்தோடு ஒருசில வார்த்தைகள் சேரும்போது அங்கே ஒரு அருமையான காமெடியும் சேர்ந்துவிடுவதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?

   

இந்தப் படத்தை மட்டும் பார்த்தால், நம்மில்  பெரும்பாலும்  அப்படியே கடந்துபோய்விடுவோம்தான் இல்லையா? ஆனால்  இப்படி சில வார்த்தைகளோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!

Narayanan R 
தேவரய்யாவையும், காமராஜரய்யாவையும் கும்பிடுகிறார் சரி. போட்டோக்கு போஸ் முடிஞ்சது.
அதென்ன மூக்குப்பொடிக்கு செருப்பு துடைக்கிறது கோப்ப்ப்பால்...?🤔
பார்த்தவுடன் பிபி எகிறிடுச்சோ ? தொப்புனு தல சுத்தி விழுந்துட்டீங்க ?  


The Accidental Chief Minister கேட்பதாக! சதீஷ் ஆசார்யா கார்டூன் போட்டதே தப்பு என்றொரு கருத்து இருப்பதை நானறிவேன்! அதற்காக?  The Accidental  Prime Minister,  The Accidental Party President  இப்படி எல்லாமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நடக்கிறதே! அது ஏன்? எப்படி என்ற கேள்வி வரக்கூடாதா?  


  
சட்டமன்ற உறுப்பினர்களை சில்லறையாகவோ மொத்தமாகவோ பிஜேபியினரால்  விலைக்கு வாங்கப் பட்டிருப்பதாக சித்தராமையா இன்றைக்கு சட்டசபையில் பேசியிருக்கிறார், அவர்   சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? ஆதாயத்துக்காக சாத்தான் கூட வேதம் போதுமாம்!  என் முதுகில் குத்தியவர்கள், அமைச்சர்களாக வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் பணப்பெட்டி DK சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு சபதம் செய்தது ஆகப்பெரிய காமெடி! இதே சிவகுமார் பிஜேபி என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று பேசியதும் கூட பொதுவெளியில் உலவிக் கொண்டிருப்பதுதான்!

ஆனாலும் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக் கொண்டு பிஜேபி இப்படிச் செய்வது சரியா தவறா என்று கருத்துச் சொல்வதற்கு முன்னால், கடந்த இரண்டுவாரங்களாக என்ன நடந்தது, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக (??) காங்கிரசும் தேவே கவுடாவின் கட்சியும் என்னென்ன பேரங்களில் இறங்கி எப்படி எப்படியெல்லாம் உருக்கமாக சீன் போட்டார்கள் என்று பார்த்துவிட்டு அங்கே முதலில் காறித்துப்பிவிட்டு, இங்கே வந்து  சொல்லலாம்! 

இல்லையென்றால் அவரவர் இருப்பிடத்திலேயே #GoBackModi கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அமைதியாகலாம்!

மீண்டும் சந்திப்போம்.
         

Monday, July 22, 2019

குமாரசாமி இன்றிரவு ஆளுநரைச் சந்திக்கிறாராம்! லவ் லெட்டருக்குப் பதிலா?

கரு "நாடக" அரசியல்  கோமாளித்தனங்களில் தலையிட  உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமையும் உறுதியாக மறுத்து விட்டது. அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட இரண்டு சுயேட்சை சமஉக்கள் H நாகேஷ், R சங்கர், இருவரும் கர்நாடக சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி மனுச்  செய்திருந்ததில், 'இம்பாசிபிள்  நாளைமறுநாள்  வழக்கு விசாரணைக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று முடித்துவிட்டதாக IndiaLegal தளச் செய்தி ஒன்று சொல்கிறது. 



இது குமாரசாமி அரசுக்கான நிவாரணமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. சபாநாயகர், சட்டமன்றம் இரண்டினுடைய வானளாவிய அதிகாரம் எதுவரை போகிறது என்று உச்சநீதி மன்றம் பொறுத்திருந்து பார்க்க நினைத்து இருக்கலாம்  மத்திய அரசும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில், குமாரசாமிக்கு வேண்டிய அளவு கயிற்றைக் கொடுத்து அவராகவே தொங்கட்டும், நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கப்போகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறதோ? முந்தைய காலங்களில் காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டதைப் போல அவசரப்பட்டுக் கொண்டிருந்த எடியூரப்பா கூட வாயை அதிகம் திறக்காமல் அமைதியாக இருப்பது அப்படித்தானோ என்று எண்ணவைக்கிறது.      



பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்தாம் பாகத்துக்கு கல்கி வைத்த தலைப்பு தியாக சிகரம் கடைசிநேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் குமாரசாமியைக்கூட  தியாகசிகரம் ஆக்கி காங்கிரஸ் முதலமைச்சருக்கு வழிவிடுகிறார் என்று சிவகுமார் சொன்னதில் எந்த அளவு உண்மை?


எந்தக் காங்கிரஸ்காரன் என்றைக்கு ஒற்றுமையாக ஒரேகுரலில் பேசியிருக்கிறான் சொல்லுங்கள்! DK சிவகுமார் ஒரு விதமாகவும்  கர்நாடகாக் காங்கிரஸ் தலைவர்  தினேஷ் குண்டுராவ்  வேறுவிதமாகவும் பேசுவதைப் பாருங்கள்!  


சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மாலை 6மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும், இந்த விவகாரத்தில் என்னைப் பலிகடா  ஆக்கிவிடாதீர்கள் என்கிறார்! இவரும் கூட தியாகசிகரமாகக் காட்டிக் கொள்ள சரியான போட்டியாளர்தான்! மாலை  ஆறு மணி ஆனபின்னாலும் கூட அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை! இதுதான் கடைசி சான்ஸ் என்று ஒவ்வொருத்தராக பிஜேபியைத் தாளித்துப் பொடி சேர்த்துப் பேசுகிறார்கள் பேசுகிறார்கள், இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்! மாலை 6.20  நிலவரப்படி அவையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடைசிவரை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே தள்ளிப்போடுவதற்குக் காங்கிரஸ் JDS கூட்டணி மும்முரமாக இருப்பது மிகப் பரிதாபமான காட்சியாக நேரலையில் பார்க்க முடிகிறது. 

கர்நாடகம் எப்போதும் இந்திய ஜனநாயகத்தின் சீக்காளியாக இருந்து வருவதை ஒரு பட்டியலுடன் விளக்குகிற பதிவு ஒன்று. தெரிந்து கொள்வதில் தவறொன்றுமில்லையே! 

தியாக சிகரம் குமாரசாமி! சதீஷ் ஆசார்யா 
சொன்னாக்க அர்த்தமிருக்கும்!

இந்த நேரத்தில் முதல்வர் குமாரசாமி இன்றிரவு  7 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி வந்துபோய்க் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தியுங்கள் என்று ஆளுநர் இரண்டாவது கடிதம் அனுப்பியதை இந்த லவ்லெட்டர் என்னைப் புண் படுத்துகிறது என்று சொன்னவர் குமாரசாமி. இப்போது சந்திப்பு  எதற்காகவாம்? 

நேரலையில் யார் யாரோ ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. முதல்வர் குமாரசாமி அல்லது troubleshooter DK சிவகுமார் இருவரும் அவையில்தான் இருந்தார்களா என்பதைப் பார்க்க முடியவில்லை.

ஜனநாயகத்தைப் பாழடித்ததில் காங்கிரஸ் கட்சி இன்றும் கூட முதலிடத்தில் குற்றவாளியாக நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி இருப்பதற்கு இல்லாமல் போவதே ஜனங்களுக்கும் நாட்டுக்கும்   நல்லது. 


மீண்டும் சந்திப்போம்.


Sunday, July 21, 2019

ரங்கராஜ் பாண்டே! பிரியங்கா தாராளம்! மம்தா பானெர்ஜி பொருமல்!

பிரியங்கா வாத்ரா இரண்டு நாட்களாக ஏற்கெனெவே குழம்பிக் கிடக்கும் காங்கிரஸ் கட்சியை இன்னமும் குழப்புகிற விதமாக அதிரடி காட்டி வருகிறாரோ? சோன்பத்ரா பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கலவரம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 10 பேர் பலி என்ற விஷயத்தில் மூக்கை நுழைத்து, பலியானவர்கள் குடும்பத்தை சந்திக்கப் போகிறேன் என்று கிளம்பியதில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டுநாள் அரசு விருந்தினர் மாளிகையில் சௌகரியமாக இருந்து கொண்டே தர்ணா நாடகம் நடத்தியதில், யோகி ஆதித்யநாத் அரசு பலியானவர்கள் குடும்பங்கள் விருந்தினர் மாளிகையில் வந்து சந்திக்க அனுமதித்ததில், தர்ணா நாடகத்தை முடித்துக் கொண்டு, மறுபடி வருவேன் என்று முழங்கிவிட்டுக் கிளம்பிவிட்டார். 


சுட்டுக்கொண்டு பலியானவர்கள் குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் உதவி என்ற அறிவிப்புடன்.  நேற்றைக்கு டில்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மரணத்தைக் கூட தனக்கான பப்ளிசிடியாக, மாற்றிக் கொண்ட கூத்தும் நடந்தது. ராகுல் காண்டி ராஜினாமா வாபஸ் பெறவில்லை என்றால் அடுத்து காங்கிரஸ் தலைமைக்கு பிரியங்காவை விட்டால் வேறு ஆளில்லை என்ற குரல்கள் கொஞ்சம் வலுத்து எழுந்த பிறகே பப்பி இந்த நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார் என்பது இயல்பாகவே சில சந்தேகங்களை எழுப்புகிறது.


நமக்கே இப்படி சந்தேகங்கள் வருகிறபோது, ஊடகக்காரர் ரங்கராஜ் பாண்டேவுக்கு மட்டும் வராதா என்ன? ராகுலை பதவியிலிருந்து இறக்க சதி செய்கிறாரா பிரியங்கா | தங்கபாலுடன் பாண்டேவின் பரபரப்பு நேர்காணல் என்றொரு தலைப்பைக் கொடுத்து, இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். 54 நிமிடங்கள். உபயோகமில்லாத பிக் பாஸ் அழுவாச்சி சீரியல்கள் பார்ப்பதைத் தவிர்க்க விரும்பினால்,  அரசியல் எங்கே போய்க்கொண்டிருக்கிறது, என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நேர்காணல் கொஞ்சம் உதவியாக இருக்கும். சதி, பரபரப்பு வார்த்தைகள் எல்லாம் உங்கள் ஆவலைத் தூண்டுவதற்காக மட்டுமே! சதி ஏதாவது இருக்குமானால், இதுமாதிரி நேர்காணல், அதுவும் தங்கபாலு மாதிரியான ஆசாமிகளிடமிருந்து தெரிந்துகொள்ள முடியாது என்பது நமக்குத் தெரியாதா என்ன?  அதையும் மீறி ஒரு சுவாரசியமான நேர்காணல் இது! தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் தொடாத சப்ஜெக்ட் இது.

அப்பாடா! ஒருவழியாக மம்தா பானெர்ஜி சிரித்த முகமாய்த் தெரிகிற ஒரு படம் கிடைத்து விட்டது!  

"மேற்குவங்கத்தில் ஏதேனும் கலவரம், பிரச்னை நடந்தால் உடனடியாக உண்மை அறியும் குழுவை அனுப்புகிறது பா.ஜ.க. அதுவே உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கலவரத்தைப் பற்றி அறிந்துகொள்ள நாங்கள் ஒரு குழுவை அனுப்பினால் மட்டும் அம்மாநில காவலர்கள் எங்கள் குழுவைத் தடுக்கிறார்கள். நாங்கள் சொல்ல வருவதைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. அனைவரும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரியங்கா காந்தி தர்ணா செய்ததில் எந்த தவறும் இல்லை” என்று தனது பொருமலையும், பிரியங்காவுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிற ஒரே குரல் மம்தா பானெர்ஜியுடையது. மிகவும் நியாயமான பொருமல் தான்! 

செய்திகளின் அரசியல் புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.
  
                   

Saturday, July 20, 2019

எது பொருளோ அதைப் பேசுவோம்! எப்போது பேசப்போகிறோம்?

ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம்! ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இசுடாலின் மாதிரி ஒரு வாடிக்கையாகிப்போன  டெம்பிளேட்டாகப்  பேசுகிறாரா  அல்லது விஷயத்தைப் புரிந்துகொண்டுன் பேசுகிறாரா என்று எப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்?  


கல்வியாளர் வெற்றி விடியல் சீனிவாசன் சூர்யா கிளப்பி விட்டுப் போன கேள்விகளுக்கு பொறுமையாக, சுருக்கமாகவே பேசுவதைக் கேட்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் எப்போது தயாராகப் போகிறோம்?  


இங்கே கர்நாடகாவில் 40000 இஸ்லாமியக் குடும்பங்களின் சேமிப்பை கர்நாடக காங்கிரஸ் அரசியல்வாதிகளுடைய துணையோடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஹலால் செய்யப்பட்ட மோசடியாக சுருட்டிக் கொண்டு துபாய்க்கு ஓடிப்போன மொகமது மன்சூர்கான் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார். எத்தனை கர்நாடக அரசியல்வாதிகளுடைய பெயர்கள் சந்திக்கு வரப்போகிறதோ தெரியாது! ஆனால், இந்த மோசடிமன்னன் கைது விவகாரமோ, மோசடி நடந்தவிதம் எப்படி, ஏமாந்த ஜனங்களுக்கு அவர்களுடைய அசலாவது திரும்பக் கிடைக்குமா என்பதைப்  பற்றி காங்கிரசும் கூட்டாளிகளும் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை! சரி,  ஜனங்களோ ஊடகங்களோ  கொஞ்சமாவது அலட்டிக் கொண்டிருப்பதாக சிறிதளவு அசைவாவது தெரிகிறதா?


  • SIT arrested Umar Shariff, 42 yrs, running a school by name "Al Basheer" off Bannerughatta Road, Bengaluru. Accused was propagating for IMA & Mansoor Khan for last 5 yrs; sent to judicial custody till July 22
    12:48 PM · Jul 19, 2019 · Twitter for Android    

      
    இது ஆடிட்டர் குருமூர்த்தி இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி பேசியது. ஸ்ருதி டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்! ஆனால் அவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் ஆதி அந்தம் இரண்டும் இல்லாமல் Bitடு Bit ஆகப்  பதிவேற்றுவதில் என்ன சுகம் காண்கிறார்களோ? எனக்கந்த உண்மை தெரிஞ்சாகணும் ஜாமி!  

    மீண்டும் சந்திப்போம்.
            

    Friday, July 19, 2019

    இடுக்கண் வருங்கால் நகுக! கடுப்பேத்துறார் பீர்பால்!

    ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த (?) அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீர்பால் கதையைக் கொஞ்சம் அப்படி இப்படி டிங்கரிங் செய்து இந்த டில்லி பாதுஷாக்களே இப்படித்தான் என்று மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு! தேர்தல்முறை வந்து பாதுஷாக்களை ஒத்திக்கோ என்று தேர்தலில் தோற்கடித்தாலும், முந்தைய பாதுஷாக்கள் பழைய நினைப்பிலேயே இருக்கிற இன்றைய நிகழ்வுகளை எங்கு போய் டிங்கரிங் செய்வது?


    பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதரவு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள். 

    க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

    ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை, 
    புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

    ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார். 

    "னக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


    சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

    "ன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

    கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை. 

    பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

    பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்ன போதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!
    க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

    "பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

    "ப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!
    "ங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

    "நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

    "முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

    "ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

    ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

    பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை! 

    கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார், அது தனக்கும் ரசிச்சு அசலாகப் பொருந்துகிறது    என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

    ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா! கடுப்பேத்துறார் இந்த பீர்பால் என்று மனதுக்குள் பொருமுவதைத்தவிர......... 
    வேறென்ன செய்ய முடியும்!  

    இது கர்நாடகக் காங்கிரஸ்  கூத்து! 



      இது உத்தர பிரதேசக் காங்கிரஸ் கூத்து! 
       
    கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் யோசித்து வையுங்கள்!

    மீண்டும் சந்திப்போம்.

       

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)