Sunday, June 30, 2019

அரசியல் இன்று! காமெடி கலாட்டா!

ஞாயிற்றுக்கிழமை கூடவா  சீரியஸ் பதிவு  என்று அலுத்துக் கொள்கிறீர்களா? கொஞ்சம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கிற கலாட்டாக்களைத் தொடர்ந்து கவனித்தால்  செம காமெடி மூடு களைகட்ட ஆரம்பித்துவிடும்!  சந்தேகமே வேண்டாம்! சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ்காரர்கள் எதற்காகவாவது கூடினார்கள் என்றால், கண்டிப்பாக வேட்டி கிழிப்பு , அடிதடி, கைகலப்பு என்றெல்லாம் முந்தைய நாட்களில் செய்தி வராமல் இருக்காது. இதை விகடன் தளம் உறியடி கட்டி வேறு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 


மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சஸ்பென்ஷன் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிற கராத்தே தியாகராஜன் இருவருமே காங்கிரசில் பானாசீனா கோஷ்டி என்று அறியப் பட்டவர்கள் என்பதில் பானாசீனா கோஷ்டியுமே உடைகிறதா என்ற கேள்வியை சில ஊடகங்கள் எழுப்பியதில், பானாசீனா ரொம்பவுமே அப்செட். திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் ஏற்படுகிற மாதிரியானதில் தன்பெயரும் சேர்த்து உருட்டப்படுவதில் பானாசீனா உஷாராகி கராத்தே பேசினது தப்பு, கே எஸ் அழகிரியிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டாலும் கராத்தே விடுவதாயில்லை!   சந்தடிசாக்கில் கராத்தே கோபண்ணாவின் வேட்டியையும் சேர்த்து உருவிவிட்டது இந்த வாரத்தின் காங்கிரஸ் காமெடி! 


நாம்தமிழர் கட்சியின் துரைமுருகன் தண்ணீர் பிரச்சினையை ஒட்டி  இசுடாலின், எடப்பாடி , H ராஜா மூவரையும் வைத்து  ஒரு அரசியல் பகடி செய்திருக்கிறார் சரி! பாலிமர் தொலைக்காட்சி மீது என்ன கோபம்? போகிறபோக்கில் அதையும் வச்சு செய்திருக்கிறார்! நகைத்து வையுங்களேன்! 


வைகோவை மறந்தால் தமிழ்நாட்டில்அரசியல்   காமெடி நிறைவடையுமா? ஆசியா நெட் தமிழில் வைகோவுக்கு  என்னமோ ராஜ்யசபா போவதில் அக்கறை இல்லை  என்கிற  மாதிரி ஒரு செய்தி! நாளைக்கு திமுக தரப்பில்  யார் யார் என்பது தெரிந்துவிடும்! இருந்தாலும் திருட்டுத் திராவிடம் 3.0 என்ற தலைப்புக்காகவே இந்த நையாண்டியை ஒருதரம் பார்த்துவிடலாம்!

மீண்டும் சந்திப்போம். 
         

இந்த மதம் எது எதற்கெல்லாம் பயன்படுகிறது? !!

எது பொருளோ அதைப் பேசுவோம்! என்ற தலைப்பில் இங்கே  நம்முடைய உடனடி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சங்கதிகளாகக் கொஞ்சம் பார்த்துக் கொண்டு வருகிறோம், இல்லையா? இந்த மதம் என்றால் என்ன? religion is a set of beliefs that is passionately held by a group of people that is reflected in a world view and in expected beliefs and actions  என்கிறது சிம்பிள் இங்கிலீஷ் விக்கிபீடியா. மதம் என்றால் ஒரு குழுவுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள், உலகத்தின் மீதான பார்வை இத்தியாதி இத்தியாதி. இதற்குமேல் மிகவும் எளிமையாக, சுருக்கமாகச் சொல்லிவிடமுடியுமா?   

   38 நிமிடங்கள் தான்! பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
  
ஆனால் மதநம்பிக்கைகளை ஆதாரமாக வைத்து மோசடிகளில் இறங்குவதும், ஒரே மதம்  என்கிற ஒற்றைப்புள்ளி தாண்டி யோசிக்கத்தெரியாத ஜனங்கள் அதில் ஏமாறுவதும் எதில் சேர்த்தி? இங்கே காங்கிரஸ் திமுக  முதலான கட்சிகள் தங்களை சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்வதையும், ஓட்டு அரசியலைத்தாண்டி அவை சிறுபான்மையினருடைய நலனுக்கானதல்ல என்று மட்டுமே ஆகிப்போன  Pseudo Seculars  தான்! இதை  இந்திய அரசியலில் நெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். 

கர்நாடகாவில்  பெங்களூரு நகரில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒற்றை மனிதன் மதத்தின் பெயரால் மோசடி செய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் என்னை மிகவும் அதிரவைத்த  ஒரு செய்தி! Islamic Monetary Advisory என்ற பெயரில் ஹலால் செய்யப்பட்ட முதலீடாக சுமார் 40000 இஸ்லாமியக் குடும்பங்களில் இருந்து பெற்றுக் கொண்டு காங்கிரஸ்காரர்களுக்கும் வேறு சில உதிரிகளுக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டு, இப்போது துபாய்க்கு மிச்சத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிய மன்சூர் கான் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிற வீடியோ மேலே, ஒரு விவாதத்துடன்!


இந்த மோசடியைப் பற்றி, ஏதாவது முன்னேற்றம், புதிய செய்திகள், தகவல்கள் இருக்கிறதா என்று ஒவ்வொருநாளும் ஆங்கில ஊடகங்களில் தெடிக் கொண்டே இருக்கிறேன்.   

இந்திய அரசியலில் தொடர்ந்து இதுமாதிரி மோசடி ஆசாமிகள், போலி ரட்சகர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிற இஸ்லாமிய சகோதரர்கள், தாங்களேதான் அந்த மாயையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சொல்வதைக்கூட விரும்பாத இஸ்லாமிய நண்பர்கள் பலரை  அறிவேன்.


ஹலால் செய்யப்பட்ட IMA Jewellery என்று    ஏமாறுவது ஒருபக்கம்! வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒருபக்கம்! இவர்களோடு சேர்ந்து இந்த தேசமும் இழுபட வேண்டுமென்று   நினைத்தால், அது எத்தனைநாளைக்கு?  

மீண்டும் சந்திப்போம்.  



Saturday, June 29, 2019

சாட்டர்டே ஸ்பெஷல்! கொஞ்சம் கேள்விகள்!

என் சுவாசக் காற்றே......!

உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?

அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.

வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!

புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக! 

புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!

வாருங்கள்! பேசுவோம்!  இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர்  கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே 
இந்தப்பக்கங்களில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து, இந்தப்பதிவுடன் 
223 பதிவுகள் என்று வளர்ந்திருக்கிறது.

விடுபட்டுப்போன நண்பர்கள் தொடர்பு மீண்டும் சீராக ஆரம்பித்ததும்  பக்கங்களுக்கு வருகை களைகட்ட ஆரம்பித்ததும்  இந்த வருட  பிப்ரவரியில் இருந்துதான்! 2009 டிசம்பர் முதல்  2018 டிசம்பர் வரையே இந்தப் பக்கங்களுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 39025 தான்! நண்பர்கள் வருகை கடந்த ஆறுமாதங்களில் இருமடங்குக்கும் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருப்பதில் எங்கள்Blog ஸ்ரீராம், தமிழ்மணம் திரட்டி, என்று வெளியே 
இருந்து கிடைத்த referral ஆதரவு முக்கியப்பங்கு வகிக்கின்றன.

எங்கள்Blog ஸ்ரீராமுக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் நன்றி.

இசைப் பிரியர் ஸ்ரீராமுக்காக ஒரு பாட்டு 

எங்கள்Blog வெறுமனே referral ஆக மட்டுமல்ல தன்னுடைய வாசகர்களில் கொஞ்சம் பேரை இங்கே பதிவுகளுக்கு ரெகுலராக வந்து உரையாடுகிற
பங்காளிகளாகவும் அனுப்பிவைத்திருக்கிறது என்பதையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிற தருணத்தில் ......... 

நண்பர்களிடம் கேட்க விரும்புகிற ஒரு சிலகேள்விகளாக:

இந்தப்பக்கங்களின் உள்ளடக்கம் உங்களுக்குத் திருப்தியாக 
இருக்கிறதா? கொஞ்சமாவது பயனுள்ளதாக இருக்கிறதா?

வேறேதாவது மாற்றங்கள் வேண்டியிருக்குமா? என்னென்ன 
மாற்றங்கள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

உங்கள் பதில்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
    

Friday, June 28, 2019

அரசியல் இன்று! காஷ்மீர்! மம்தா பானெர்ஜி! சந்திரபாபு நாயுடு!

வரலாறு சொல்லும் பாடங்களைக் கற்றுக்கொள்ளத்தவறினால் அரியர்ஸ் க்ளியர் செய்யாத மாணவன் நிலையை விட மோசம் தான் என்பதைக் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி  நிரூபித்து வருவது மிகப்பரிதாபம்! இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை இன்னும் ஆறுமாதத்திற்கு நீடிக்க வகை செய்யும்  மசோதாவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ், AIMIM ஒவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்குரலை எழுப்பிய பிறகு மக்களவை மசோதாவை ஏற்றுக்கொண்டது.

     
ஜம்மு காஷ்மீர் விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆக்கப்பட்டதில் ஜவஹர்லால் நேருவோடு ஷேக் அப்துல்லா மற்றும் வாரிசுகளும் சேர்ந்து  செய்திருக்கிற முட்டாள் தனங்களைச் சொல்லிக் காட்டினால் கோபம் வரத்தானே செய்யும்! 

காஷ்மீர் எப்போதும் ஒரு கொந்தளிப்பான பிரதேசமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிற தரப்பாக பாகிஸ்தானுடன் நம்மூர் காங்கிரசும் காஷ்மீரி அரசியல் வாதிகளும் இருப்பதும் சகித்துக் கொண்டு போக வேண்டியதும்  இந்த தேசத்தின் தலைவிதி ஒன்றுமில்லை!


மம்தா பானெர்ஜியை I PAC என்று தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் நிறுவனம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது முறையாகச் சந்தித்திருக்கிறார் என்பதில் எந்தப்  பெரிய செய்தியும் இல்லையே என்கிறீர்களா? தீதியை சிரித்த முகமாகக் காட்டுவதற்கே பிரசாந்த் கிஷோர் என்னென்ன பாடெல்லாம் படவேண்டியிருக்குமோ? இன்னும் எத்தனை செஷன் கோச்சிங் வேண்டியிருக்கும்  என்பது பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? 


சமீபகாலமாக மம்தா பானெர்ஜி என்ன செய்தாலும் அவருக்கு எதிராகவே திரும்புவதை பிரசாந்த் கிஷோர் மாற்றி விடுவாரா என்பதெல்லாம் அடுத்த பட்சம் தான்! முஸ்லிம் மாணவர்கள் மெஜாரிட்டியாக உள்ள பள்ளிகளில் அவர்களுக்கென்று தனியாக உணவுக்கூடம் அமைக்கச் சொல்லி அரசு சர்குலர் அனுப்பியது எதற்காக என்று பிஜேபி கேள்வி கேட்கிறது! இது ஒரு பக்கயென்றால் இன்னொருபக்கம் சட்டசபையில் இந்தப் புதன்கிழமை ஒரு முஸ்லிம் MLA  காங்கிரஸ்காரர்தான், சிறுபான்மைக்காவலர் வேஷம்போடும் மம்தாபானெர்ஜியை வெளுத்து வாங்கியிருக்கிறார் என்கிறது ஒரு DNA தளச்செய்தி!

One such MLA is Moinul Haque of Congress, a veteran leader from Farakka. He virtually managed to put the cat among the pigeons by asking Mamata Banerjee point blank about various perceived appeasement policies practiced by the West Bengal CM. 

Moinul Haque asked that why arbitrarily allowance was granted from Imams and Muezzins while gatekeepers of other religions didn't get a dime. The decision taken during the first term of Mamata government had attracted severe criticism with High Court finally rejecting the dole given to Imams. Haque was also severe at Mamata and criticised the fact that she attended Eid's jammat at Red Road,where normally women don't go. 

This unprecedented attack came on the floor of the assembly on the same day when Mamata Banerjee extended the olive branch to the Congress and CPI(M) saying that all the forces need to come together to counter BJP. காங்கிரசும் இடதுசாரிகளும் மம்தாவின் ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்து விட்டார்கள்.பிஜேபியோ, மூவரும் ஒன்று சேரட்டுமே! அப்படிச் சேர்ந்தார்களானால்  இருக்கிற தொண்டர்கள் அத்தனைபேரும் பிஜேபியில் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லி மற்றக்கட்சிகள்  வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.


மாநிலத்தில் ஒருபக்கம் வன்மம் காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு! இன்னொருபக்கம் உறவை முறித்துக்கொண்டு வீராப்பாக வெளியே வந்ததும் நாயுடு பக்கம் இருக்கிற கொஞ்சநஞ்சப் பேரையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் BJP! நாயுடு பாடு பரிதாபம் தான் என்று தோன்றுகிறதா?  வீட்டைப்பார்ப்பாரா, சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்களைப் பார்ப்பாரா, கட்சியைத் தான் பார்ப்பாரா? தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்ற கர்ஜனையோடு NTR ஆரம்பித்த தெலுகு தேசக் கட்சி, இன்று  ஐயா சாமி என்னை விட்டுவிடு என்று நாயுடுவைவிட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பது, நாயுடுவே  ஆரம்பித்து வைத்தது. அனுபவிக்கிறார் என்பதில் பரிதாபப்பட ஏதுமில்லை!
              
மீண்டும் சந்திப்போம்.
     

ராகுல் காண்டியின் ராஜினாமா போராட்டம்! காங்கிரசுக்கே இது புதுசாம்!

இன்றைய அரசியல் செய்திகளில் ஒரு ஓரத்தில் ராகுல் காண்டி நடத்திவரும் ராஜினாமா போராட்டம் அவ்வளவு கவனத்தைப் பெறவில்லையோ?  இதற்கு கடந்த 70+ ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கடந்துவந்த பாதை,மாமியார் தேய்ந்து கழுதை ஆனாளாம்! கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சுதாம்! கட்டெறும்பும் தேய்ந்து ...?? இப்படிக்  கேள்விக்குறி ஆகி நிற்பதைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடலாம்!



தாத்தன்       நேரு காலத்தில் பழிசுமப்பதற்கென்றே விகே  கிருஷ்ண மேனன் டிடிகிருஷ்ணமாச்சாரி போல சில பலியாடுகள் இருந்தார்கள். பதில் பேசாமல் பழியும் சுமந்தார்கள்! நேருவின் புனித பிம்பத்தைக் காப்பதற்கு அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பிரிவு நேரு இறந்தபின்னால் கூட வெகு முனைப்பாக இருந்துவருவது அவ்வளவாக வெளியில் தெரியாத விஷயம். 

இந்திரா காலத்தில் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அடிக்கடி பந்தாடப் பட்டார்கள். சென்னா ரெட்டி மாதிரி மாநில அரசியலில் சொந்தக் செல்வாக்கு மிகுந்தவர்களை மத்திய மந்திரியாகவோ கவர்னராகவோ ஆக்கி, சொந்தச்  செல்வாக்கு இருந்தவர்களை  செல்லாக்காசாக்கின குள்ளநரித்தனம் இந்திராவிடம் இருந்தது. நேரு கால விசுவாசிகள் ஆதரவு கட்சியிலும் அதிகாரிகள் மட்டத்திலும் இந்திராவுக்கு இருந்தது.   

இந்திராவின் மருமகள் நான் என்று மார்தட்டிக்கொண்ட சோனியாவுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருந்ததில்லை.ஆனால் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒரு பாடம் மட்டும் தெளிவாகப் புரிந்திருந்தது. சொந்தக் செல்வாக்கை வளர்த்துக்கொள்கிறவர்களை விட்டு வைக்கக்கூடாது என்பதுதான் அது.ஆனால் இந்திரா மாதிரி முந்திச் செயல்படுகிற வேகம் மருமகளிடம் இருந்ததில்லை  2009 இல் ராஜசேகர ரெட்டி ஒரு விபத்தில் இறந்ததும், அவர் குடும்பத்தை ஆந்திர அரசியலில் வளர விடக்கூடாதென்று ஜெகன் மோகன் ரெட்டியை அடக்கிவைக்கப்பார்த்தது, இன்றைக்கு ஆந்திரா தெலங்கானா இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசை இல்லாமலேயே சுத்தமாகத்துடைத்து விட்டது. ராஜசேகர ரெட்டி கண்டுபிடித்த புதுப்புது ஊழல் உத்திகளை, உதாரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவை,  காப்பியடித்து ஆதாயமடைந்தது பானாசீனா மகன் உள்ளிட்ட சிலர்  மட்டும்தான்! அதேபோல மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் இணக்கமாகப் போக விரும்பாத மம்தா பானெர்ஜி காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கவேண்டிவந்தது.ஆக, இந்திராவின் மருமகளாக்கும் நான் என்று மார்தட்டிக் கொண்டது வெறும் பேச்சாகவே   ஆனது மட்டும் தான் மிச்சம்! 

நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்ததாம்!

இந்தப்பின்னணியில் 2014, 2019 இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்ததற்கு ஊடகங்களில் ராகுல் காண்டியையே குறை சொன்னார்கள். சோனியாவின் மனக்குமுறலாகவே ப்ரியங்கா வாத்ரா, காங்கிரஸ் காரிய கமிட்டியில் தன் அண்ணனைத்  தனியாக விட்டுவிட்டார்கள் என்று கோபப்பட்டதை, எடுத்துக்கொள்ள முடியும். 

மூன்று நாட்களுக்கு முன் வேறு எவரும் காங்கிரஸ்  தலைமைப் பொறுப்பேற்க முன்வராததால் ராகுல் காண்டியே தலைவராக தொடர்வார் என்ற செய்தி கசியவிடப்பட்டது. மாறாக நேற்று ராகுல் காண்டி தன்னுடைய ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக செய்தி வந்ததோடு, தேர்தல் தோல்விக்குத் தாமும் தார்மீகப் பொறுப்பேற்பதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்திருப்பது, இன்னும் சிலபல  தலைகள் இதே பாணியில் உருளும் என்பதைக் காட்டுகிறது. பிரியங்காவின் சும்மா விடமாட்டேன் எச்சரிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேசம் கர்நாடகா மாநிலங்களில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டிருப்பதும் ஒரு வகையான முன்னோட்டம். 

சரி! எதற்காம்? அதுதான் காங்கிரசில் இருப்பவர்களுக்கே இன்னமும் புரியவில்லை. இன்றைக்கு காங்கிரசில் இருக்கிற தலைகளுக்கு ஏதாவது வருமானம் பார்க்கிற பதவியில் ஒட்டிக் கொண்டே இருந்தாகவேண்டும், இல்லையென்றால் தலை வெடித்துவிடும் என்கிற மாதிரி ஆசாமிகளுக்குப் பதவியும் அதிகாரமும் சம்பாதித்துத் தருவதற்காக மட்டுமே நேரு பாரம்பரியம், வாரிசுகள் தயவு தேவை!  பானாசீனா, கமல்நாத் போன்ற பழம்பெருச்சாளிகள் மீது நேரடியாகக் கைவைக்கிற உறுதி ராகுலுக்கு இல்லை.

இந்த ராஜினாமா நாடகம் காங்கிரசை எங்கு கொண்டுபோகப் போகிறதோ, யாருக்குமே புரியவில்லை. காங்கிரசுக்கே இந்த அனுபவம்  ரொம்பப் புதுசு! ரொம்பவுமே தயங்குகிறார்கள், தடுமாறுகிறார்கள்! ராகுல் காந்தியின் கோபத்தை தணிக்கும் வகையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது ஒரு செய்தி. .

வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு வழி?

மீண்டும் சந்திப்போம்.
         

Thursday, June 27, 2019

திருட்டு திராவிடம்! பானாசீனா! குமாரசாமி! காஷ்மீர்!

வலைப்பதிவுகள் எழுதுவதை விட்டுவிட்டு கூகிள் பிளஸ்சில் வெகு மும்முரமாய்ச் செய்திகளையும் அதன்மீது சின்னச் சின்ன விமரிசனங்களாகவும் எழுதிக் கொண்டிருந்த கடந்த காலத்தில் சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இத்தனையாவது முறையாக சரிந்து விழுந்தது என்ற தகவலை நக்கலாகக் குறைந்தது பத்துப் பதினைந்து முறையாவது பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால் பானாசீனா விவகாரத்தில் இந்தக் குறிப்பிட்ட நீதிபதி எத்தனையாவது முறை கைது செய்யத் தடை என்று நீட்டித்துக் கொண்டே போகிறார் என்பதைக் கணக்கு வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும் போல! 


யாரை எங்கே எப்படிச் சரிக்கட்டுவது என்பதில்  சால்வை அழகர் பானாசீனாவுக்கு இருக்கிற   சாமர்த்தியம் இங்கே வேறெந்த கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை. அடுத்து எவரையாவது சொல்லலாம் என்றால் அது தயாநிதி மாறன் தான்! இன்றுவரை கைதுநடவடிக்கையை சந்திக்காமலேயே இந்த இரண்டுபேர்தான் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ!ராசா, கனிமொழி இருவரையும் சிக்க வைத்தது, இதுவும் கூட ஊரறிந்த ரகசியம் தான். நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்தப்பதிவைப் படித்துவிட்டு நம்மால் பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்! 


நரேந்திர மோடிக்குத்தானே ஓட்டுபோட்டீங்க? அங்கேயே போங்க என்று சொல்கிற குமாரசாமி, சட்டசபைத்தேர்தலில் கூட ஜனங்கள் அவருக்கோ காங்கிரசுக்கோ ஓட்டுப் போடவில்லை, அவர்கள் ஒரு ஒட்டுப்போட்ட  கூட்டணியை அமைத்துத்தான்ஆட்சியில் இருக்கிறார்கள்    என்பதை மறந்து விட்டு ஜனங்களிடம்  கோபப்படுவது ஏன்? 

   
உள்துறை அமைச்சர் காஷ்மீருக்குப் போயிருக்கிறார். முப்பது ஆண்டுகளில் இதுவரை காணாத அதிசயமாக, வழக்கமாக வீரமுழக்கம் கடையடைப்பு கல்லெறிதல் என்று தெருவில் இறங்கிப் போராடுகிற போராளிகள் எவரையும் காணோமாம்  இயல்பு வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப் படவில்லை என்பது ஒருபுறம்! மறுபுறம்  இதுவரை எல்லாவிதமான அடாவடிகளிலும் இந்திய அரசை பிளாக்மெயில் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ஹூரியாத் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது என்று கெஞ்சிக் கேட்கிறதென்பது. 18 நிமிட விவாதம்தான்!  கொஞ்சம் பாருங்களேன்!  

திராவிட மாயை, திருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன? 


இதுக்கு மேலே சுருக்கமாகச் சொல்ல முடியாதுதான்! இல்லையா?   

மீண்டும் சந்திப்போம்.
  

Wednesday, June 26, 2019

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் பன்ச் டயலாக் பேசி, தரையில் கையையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருக்கிற போட்டோ எல்லாம் போட்டார். சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் இது!


ஆனால் பன்ச் டயலாக் பேசமுடியாமல் தன்னிடம் முறையிட வரும் ஜனங்களிடம் மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க எதுக்கு எங்கிட்ட வர்றீங்க என்ற ரேஞ்சில் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இரண்டாவது முறையாக கிராமத்துக்கு விஜயம் செய்யப்போகையில் காத்திருந்த ஜனங்கள் சாலையை மறித்ததும் குமாரசாமி கோபமும்!  இன்றைக்கு நடந்த கூத்தும் செய்தியும்  நாடாளுமன்றத் தேர்தலில் குமாரசாமி மகனும் ஜெயிக்கவில்லை, தேவே கவுடாவும் ஜெயிக்கவில்லை என்ற கோபம் இன்னமும் ஆறவில்லை போல! இது அடுத்தவீடு கர்நாடகா செய்தி என்றால் நம்மூர் செய்தி, நையாண்டி ஒன்றும்  கூடவே வேண்டாமோ? 


மதுரை வைகை பெரிய பாலத்துக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்! இது செய்தி! திமுகவுக்கு மோடியைக் கண்டாலும் பயம் காவி நிறத்தைக் கண்டாலும் பயம்! எப்படி?


முதலில் கூட்டுக்களவாணி காங்கிரசுக்கல்லவா மூவர்ணக்கொடியைப் பயன்படுத்தக்கூடாதென்று சொல்ல வேண்டும் ? !!  காவி மீதுள்ள பயத்தில் மேல்பகுதிக்குப் பச்சை வண்ணம் தீட்டப்படுவதை மறந்ததற்கு  என்ன சால்ஜாப்பு சொல்வார்களோ, அறியேன்! அதனால் ஒரு நையாண்டி!
      

துக்ளக் அட்டைப்பட நையாண்டிக்குத் தனியாக விமரிசனம், வியாக்கியானமெல்லாம் எதற்கு?😀 

அடுத்த வீடு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஒழித்துக் கட்டுவதில் ஜெகன் மோகன் ரெட்டி பிசியாக இருக்கிற அதே வேளையில் மத்தியில் ஆளும் பிஜேபியோடு மோதாமல் ஒரு மாதிரி நீக்குப்போக்காக இருப்பதே ஜெகன் தலைக்குத் தீம்பாகி விடலாம் என்று எச்சரிக்கிறார்கள் இங்கே!


Andhra Pradesh CM Jagan Mohan Reddy is playing nice with the BJP, which is the ruling party at the Centre. He has promised to support BJP’s one nation, one election bid in return for Special Category Status for Andhra, and has generally gone soft against the party, say analysts. He is also an amused spectator as the BJP is on a poaching spree from his main rival in the state, Chandrababu Naidu’s TDP. However, letting the BJP strengthen its roots in the state at the cost of TDP will ultimately affect Jagan’s YSRCP, say experts.
Noted columnist and political scientist professor K Nageswara Rao observes, “Jagan shouldn’t take the bait and play along with the BJP and commit the blunder of weakening the TDP.” என்று சந்திரபாபு நாயுடுவை விட்டுவைக்கும்படி சொல்கிறார்கள். ஜெகன் காதில் வாங்கி கொள்ள வேண்டுமே!   

பக்கத்து வீடு கேரளா செய்தி என்னவாம்?


     

சபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்

தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, சபரிமலை பிரச்னையால் தான் கட்சி தோல்வியடைந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சகாவே! மத்திய கமிட்டி சொல்லியாச்சுன்னா அதோட விட்டுடணும்! நோண்டி ஆராய எல்லாம் கூடாது!

மீண்டும் சந்திப்போம்.
 
   

Tuesday, June 25, 2019

இந்திரா காது கழுதைக் காதுதான்! சொல்வதில் தயக்கமென்ன?

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு  ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம்   வருவதற்கு முயற்சிப்பது நன்றாகவே புலப்பட்டது. கட்சிக் கூட்டத்தில் பேசுகிறமாதிரியே நாடாளுமன்றத்திலும்! எல்லாப் பிரச்சினையையும் தானே பேசிப்பெயர் எடுத்துவிட வேண்டும் என்கிற மாதிரி! கொஞ்சம் வீடியோவைப் பாருங்கள்!  


இந்த வீடியோவுக்கு லோக்கல் சேனல் வைத்திருக்கிற தலைப்பு பாராளுமன்றத்தில் வெளுத்துவாங்கிய தயாநிதி!  ஆனாலும் இம்புட்டு நக்கலாகச் சொல்லியிருக்கக்கூடாது!😁😁 


தேர்தலில் தோற்ற பிறகும் கூட காங்கிரஸ் கட்சி படிப்பினை எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இனிமேலும்  கற்றுக் கொள்கிற அறிகுறி எதுவும் தெரியவில்லை.  லோக்சபா காங்கிரஸ் கட்சித்தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி கங்கையைப் போன்ற இந்திரா எங்கே சாக்கடை போன்ற பிரதமர் எங்கே என்று பேசிவிட்டு, எதிர்ப்புக் கிளம்பியதும் மன்னிப்புக் கேட்ட படலம் நேற்று. 
"they were provoking me and hence I told them that it was like comparing Ganga with a nali. This does not mean I said something to hurt the Prime Minister's feelings. If he is hurt I will apologise. I did not make personal attack at him. My Hindi is not good. Naali means channel, not sewer" என்கிறாரே 

गंदी नाली என்றால் என்ன அர்த்தமாம்?

அன்னை கங்கையைப் போன்ற இந்திரா எங்கே என்று சொன்னாரல்லவா அந்தக் கதையைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளச் சரியான நாள் இன்று! ஜூன் 25 தான்!

இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  

மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்!

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது.

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார்.
அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது. இப்படி எழுதியது ஒரு புத்தக விமரிசனமாக 
இங்கே எழுதப்புகுந்த ஒரு பதிவில் தான்! 

Today is exactly 44 years since Indira Gandhi declared the Emergency on June 25, 1975. Yesterday, in the Rajya Sabha, Senior Congress leader Ghulam Nabi Azad made a passionate appeal to bring back the “Old India.”   


காங்கிரஸ் பன்றிகளுக்கு நாற்றம் துளைக்கும் சாக்கடையும் சேறும் சொர்க்கமாகத்தான் தெரியும்! அதிர் ரஞ்சன் சௌதுரியோ குலாம் நபி ஆசாதோ மட்டும் விதிவிலக்காக இருந்து விட முடியுமா என்ன?   

எமெர்ஜென்சியின் அந்த இருண்ட நாட்களை அவ்வளவு எளிதாக மறந்துவிடத்தான் முடியுமா?

  

.  

Monday, June 24, 2019

ஒண்ணுமில்லே ச்சும்மா தமாஷு! அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்!

குரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே! அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற மாதிரி எதையாவது சொல்லிவிட்டு, அப்புறம் மறுப்போ வியாக்கியானமோ சொல்வதும் இன்று நேற்றுப் புதிதல்ல!


சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு, அப்புறம் அதற்கு வியாக்கியானம் சொல்வது இப்போது  கே என் நேருவுடைய முறை! இதற்கு முன் ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்குத் தண்ணீரா? திமுக பெரிய போராட்டம் நடத்தும் என்று சொன்ன ரெண்டு முருகன், தான் சொன்னதைத் திரித்துச் சொல்லிவிட்டார்கள் என்று ப்லேட்டைத் திருப்பிப் போட்டதும் கூட சமீபத்தில்தான்!  ஆனால் இதற்கெல்லாம் விடை காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கப் போகிறதா? உதயநிதி கேட்ட மாதிரி நாங்குநேரி சட்டசபைத் தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா என்று ஆழம் பார்க்கிற வேலை மாதிரித் தான் தெரிகிறது. திமுகவிடம் உரத்துப் பேரம் பேசுகிற அளவுக்கு காங்கிரசுக்குத் தெம்பிருக்கிறதா? தெரியவில்லை! ஆனாலும் கே எஸ் அழகிரி வாய்ச்சவடாலுக்குக் குறைச்சல் இல்லை! அழகிரி (எந்த அழகிரி?) விரும்பினாலும்  அண்ணன்  கே என்  நேரு  விரும்பினாலும் காங்கிரஸ் திமுக உறவில் விரிசல் வராது என்கிறார். 

காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி நாடாளுமன்றத்தில் வெட்டி அலப்பறை செய்ய ஆரம்பித்திருக்கிறார்! விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டுமாம்! அவனவன் அஞ்சுபத்து வருடங்களில் அடிக்கிற காமெடியை ஒரேநாளில்!   ச்சும்மா டமாசு கொடிகட்டிப் பறக்கிறது!    


புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா?  வராதா?     இப்படி ஒரு கேள்வியை வைத்து இன்னொரு வலைப்பக்கத்தில் பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்களைக் குறித்து எழுதிய பதிவு, பிரதானமாக புள்ளிவிவரங்களை விதவிதமாய் அலசி வெறும் ஸ்டேட்மெண்டுகளாகத் தயாரித்து வீணாய்ப்போன ஒரு பொதுத்துறை வங்கியைப் பற்றி எழுதியதை நினைவு படுத்திக்கொள்கிற மாதிரி சதீஷ் ஆசார்யாவின் இந்த கார்டூன் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு முதலில் அரசியல் புரிந்து, அரசியல் செய்வது எப்படி என்று தெரிந்திருக்கவேண்டும். மாறாக கொஞ்சம்போல ஒத்தாசையாக இருக்கக் கூடிய புள்ளி விவரங்கள், கருத்துக்கைப்புகளையே நம்பினால் காங்கிரஸ் மாதிரி வீணாய்த்தான் போக வேண்டியிருக்கும்! Data analyst பிரவீண் சக்ரவர்த்தி மீதே முழுப்பழியையும் போடுவது அடிமுட்டாள் தனத்தின் உச்சம்!  


Outlook இதழின் நடப்பு இதழ்  அட்டைப்படக் கேள்வி! மம்தாவால் மோடியை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியுமா? இந்தக் கேள்வியை திமுக உள்ளிட்ட வெட்டி அலப்பறை செய்துகொண்டிருக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியைப் பார்த்தும் கேட்கலாம்! திமுகவின் TR பாலு உல்டாவாக உளறியதைப் போல, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்ததால் தான் மோடி ஜெயித்தார் என்றல்ல. தெருச்சண்டை வீராங்கனை மம்தா ஏன் இனிமேலும் நிம்மதியாகத் தூங்க முடியாது   என்ற தலைப்பில் ரஜத் ராய் எழுதியிருக்கிற கவர் ஸ்டோரி கொஞ்சம் அலசுகிறது.


ச்சும்மா டமாஷு! எத்தினியாவது வெட்டி அலப்பறைன்னு கணக்கு வச்சுக்க முடியாத அளவு தாண்டிடுச்சு! 

மீண்டும் சந்திப்போம்.



Sunday, June 23, 2019

கூத்தாடி ....கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

ஒருவழியாகக் கூத்தாடிகள் சங்கத்தேர்தல் நடந்து முடிந்து விட்டதாம்! வாக்கு எண்ணிக்கை இரண்டு வாரம் கழித்துத் தானாம்! இனிமேலாவது நாட்டில் என்ன நடக்கிறது, எது முக்கியமானது என்பதைப்பற்றி இங்குள்ள ஊடகங்கள் கவனத்தைப் பெறுமா? பேசுவார்களா? என்று கேட்டால் இல்லை, மாறமாட்டார்கள் என்பது மட்டுமே பதிலாக வரும். 


RJ பாலாஜி காமெடியாகப்பேசுகிறேனென்று, ஒரு  உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்! உண்மை கூட யார் பேசுகிறார்கள் என்பதில்தான் அளவிடப்படுகிற உலகத்தில் ஒரு சாதா காமெடியன் பேசினால் எடுபடுமா?    இங்கே ஊடகங்களுக்கு அதுவும் மெல்லக் கிடைத்த சிறு பொரி,  அவல் அவ்வளவுதான்! எது பொருளோ அதை பேசவே மாட்டோம் என்பதில் எத்தனை உறுதியாக நிற்கிறார்கள், பாருங்கள்!


தமிழ்நாட்டைச் சீரழிப்பதில் புதிய தலைமுறை, தந்தி டிவி இரண்டுமே  நீ முந்தியா நான் முந்தியா  என்ற போட்டியில் இருக்கின்றன போல!  

பெரும்பாலான தமிழ் சேனல்கள் ...மக்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத நடிகர் சங்க தேர்தலை.. அமெரிக்க அதிபர் தேர்தல் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வேயிலும் யூனியன் சங்க தேர்தல்கள் நடக்கின்றன. எக்கச்சக்கமான அரசியல். ஏகப்பட்ட அரசியல். SRMU வின் அரசியல் அட்டகாசங்களை குறித்து மட்டுமே பல மாதங்களுக்கு எழுதலாம்.அந்த அளவிற்கு பல நிர்வாக & அரசியல் விஷயங்களை /தகவல்களை கொண்டவை.
அத் தேர்தல்கள் குறித்து என்றாவது மக்களுக்கு கொண்டு சேர்க்கப் பட்டிருக்கிறதா ??!


மருத்துவர் ராமதாஸ் ஊடகக்காரர்களிடம் கோபப்பட்டதில் எவ்வளவு நியாயம் அவர்தரப்பில் இருந்தாலும், பேசியவிதம் அத்தனையையும் அடித்துப்போட்டுவிடுகிறதே!  ஊடகங்கள் தவறான செய்திகளைப் போட்டதில் தான் தோற்றோம் என்கிறார் ராமதாஸ். இப்படிப் பேசினால் எப்படி நல்லவிதமாகச் செய்தி போடுவார்கள்?


          
இங்கே விதவிதமாய் மோசடி செய்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பெரும்பாலான தருணங்களில் மோசடி செய்கிறவர்களுடைய கூட்டாளிகளாக இருப்பதும் ஒரு காரணம் Islamic Monetary Advisory என்ற மோசடி நிறுவனம் 2006 இலேயே ஆரம்பிக்கப்பட்டு 2008 இல் கலைக்கப் பட்டு 2013 இல் இப்போதைய வடிவத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து ஷரியத் சட்டப்படி நடத்தப்படுகிற முதலீட்டு நிறுவனம், வருடத்துக்கு 20% வருமானம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி 5000 கோடிரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்கிறார்கள். மோசடிக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 40000 பேர்களைத் தொடும் என்றும் சொல்கிறார்கள். இப்போது நடிகர் பிரபு விளம்பரங்களில் பிரபலப்படுத்திய நகைக்கடை மீதும் ரெட் பிக்ஸ் தளம் என்னென்னமோ சொல்கிறது. உஷாராய் இருந்து கொள்ள வேண்டியது மக்கள்தான்!

நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தானொரு  தோண்டி 
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்றொரு தத்துவப்பாடல் உண்டு! நான் இங்கே தத்துவமெல்லாம் பேசப் போவதில்லை! கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற கதையாக நாட்டுநடப்பைச் சொல்லவேண்டுமென்கிற ஆசையில் எழுத ஆரம்பித்த பதிவுக்கு  மிகவும் பொருத்தமான நபர் ராகுல் காண்டி  அவரையே பிடித்து இன்னமும்  தொங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி இந்த இரண்டை விட்டால் வேறேது?  சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

ஒண்ணுமில்லே ச்சும்மா! ஜாலிக்கு ஒரு பழைய பட விமரிசனம்!

1964 இல் ராஜ்கபூர், ராஜேந்திர குமார், வைஜயந்தி மாலா நடித்து வெளிவந்த படம் சங்கம் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான்! ஆனால் கொஞ்சம் வித்தியாசமான க்ளைமாக்ஸ், வசனம்  என்பதோடு ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பில் அத்தனை பாடல்களும் ஹிட்டான படம்.



பள்ளிமாணவனாக இருந்த நாட்களில் இந்தப்படத்தின் பாடல்களைக் விரும்பிக் கேட்டதோடு மொழி தெரியாதபோதே மதுரை சென்ட்ரல் தியேட்டரில் படத்தையும் பார்த்ததாக நினைவு! தியேட்டர் வேறாகக் கூட இருக்கலாம். 



சுந்தர் (ராஜ் கபூர் ) கோபால் (ராஜேந்திர குமார் ) இருவரும் நண்பர்கள். சினிமா இலக்கணப்படி சுந்தர் கொஞ்சம் வசதிக் குறைச்சலானவன் கோபால் பணம்படைத்தவன். இருவருமே ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள் ராதா(வைஜயந்தி மாலா) என்கிற    அந்தப்பெண்ணுக்கோ கோபால் மீது காதல்!  கோபாலின் பொருட்டு ராதா சுந்தரின் காதல் அப்ரோச்சை சகித்துக் கொள்கிறாள்!  என்ன  வழக்கமான முக்கோணம் தானே என்று தள்ளிவிடமுடியாதபடி கோபால் தன்னுடைய காதலை விட சுந்தருடைய நண்பனாக இருப்பதையே முக்கியமானதாக நினைக்கிறான்.


ராதா மனதைக்கவருவதற்காக சுந்தர் விமானப்படையில் பைலட்டாகச் சேருகிறான்.யுத்தத்தில் ஹீரோவாக, மரணம் அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிற நிலையில் ராதா கோபால் நெருக்கம் அதிகமாகிறது.

இறந்துபோய்விட்டதாக நினைத்துக்கொள்ளப்பட்ட சுந்தர் விமானப்படை சீருடை மெடல்களோடு திரும்ப வந்து நிற்கையில் முக்கோணம் மறுபடியும் முன்னே வந்து நிற்கிறது. கோபால் நண்பனுக்காக ராதாவை தியாக சிகரமாக  விட்டுக் கொடுக்கிறான்.

கதை முடிந்தது என்றுதானே நினைக்கிறீர்கள்? மூன்றரை மணி நேரப்படத்தில் முக்கோண முடிச்சு அவ்வளவு எளிதாக அவிழ்ந்து விடுமா என்ன?!  

அப்படி கதை முடிச்சு அவிழ்க்கப்படுவதில் தான் இன்றைக்கு 2019 இலும் கூடப் பார்க்க முடிகிற சிறந்த படமாக சங்கம் இருக்கிறது. 

ராதா தன்னுடைய உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காமல், ஏதோ ஒரு பொருளைக் கைமாற்றுவதை போல கோபால் தன்னை சுந்தரிடம் தள்ளிவிடுவதை ஏற்க மறுக்கிறாள். நண்பர்கள்  இருவரையும் விடத் தெளிவாக முடிவெடுத்து சுந்தரின் மனைவியாகவே  ஆகிவிடுகிறாள்.

  
ஐரோப்பாவுக்கு ஹனிமூன் போகிற இடத்தில் சுந்தர் கொஞ்சம் கவர்ச்சிகரமான நடனம் பார்க்க ஆசைப்படுவதைத் தடுக்கிற ராதா, தானே அறையில் கவர்ச்சியாக ஆடி சுந்தரை வியக்க வைக்கிறாள். அந்த நாகரீகப்பெண்கள் வெர்சஸ் குடும்பக் குத்துவிளக்கு என்கிற சுந்தரை  நன்றாகவே நையாண்டி செய்கிறாள். கதை     இப்படியே நல்லாவே போயிட்டிருந்தா எப்படி சாமி கதையில் ட்விஸ்ட் வரும்? 

ட்விஸ்ட்டும் வருது! கல்யாணத்துக்கு முன்னால் ராதாவும் கோபாலும் நெருக்கமாக இருந்தது சுந்தருக்குத் தெரிய வருகிறது. இப்போது மனைவி /காதலியைத் தியாகம் செய்ய வேண்டிய முறை சுந்தருக்கு! ஆக இந்தக் கதையில் ஆண்கள் இருவருக்குமே பெண் என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை! தியாக சிகரங்களாகத் துடிக்கும் இருவருக்கிடையில் சிக்கிக் கொண்ட   பெண் என்ன செய்வாள்? 

தமிழ்ப்படமாக இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசியே நம் கழுத்தில் தீட்டியிருப்பார்கள். இங்கே கொஞ்சம் அளவாக!  

கங்கையும் யமுனையும் சங்கமிக்க வேண்டுமானால் மூன்றாவது நதியான சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாமல்  அடிநீரோட்டமாக மறைந்து விடவேண்டுமென்று சொல்லிவிட்டு கோபால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துபோகிறான்.

ஆக ராதா சுந்தர் இருவரும் சங்கமிக்கிறார்கள் என்று End Card போட்டுப் படத்தை முடிக்கிறார்கள். மூன்றரை மணிநேரம் என்று கொஞ்சம் கூட அலுப்புத்தட்டாமல் படம் போகிறது!

அது போதாதா?  
          

Saturday, June 22, 2019

கூத்தாடிகள் ரெண்டுபட்டால் தான் என்ன? திமுகவுக்கு கொண்டாட்டம்!

பொதுவாக தமிழ்நாட்டில் எந்தத்தேர்தல் வந்தாலும் தபால் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் ஆதரித்து விழும் என்பதில் பெரிய அதிசயம் எதுவுமில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம் தான்! சிதம்பர ரகசியம்தான்! ஆனால் நடிகர் சங்கத் தேர்தல்களைப் பொறுத்தவரை தபால் ஓட்டுக்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதா?

  
பொதுவாகக் கூத்தாடிகளைப்  பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நாடகமோ சினிமாவோ நன்றாக இருந்தால் இன்னொரு முறை பார்ப்பேனே தவிர, கூத்தாடியை நடு வீட்டுக்குள் கொண்டுவந்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் இங்கே தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சொல்லி வைத்த மாதிரி எல்லாச் சேனல்களிலும் நடிகர்சங்கத்தேர்தல்களைப் பற்றியே பேட்டிகளை ஒளிபரப்பி,தமிழன் என்றொரு தனி  இனத்துக்கு இதைத்தவிர வேறு முக்கியமான பிரச்சினையே இல்லை என்கிறமாதிரிக் கூத்தடித்ததில் ரொம்பவுமே நொந்து போயிருந்தவனை உசுப்பிவிட்டு என்னையும் இந்த விஷயமாகப் பதிவெழுத வைத்திருக்கிறது. காரணம் கூத்தாடிகளுக்கிடையிலான போட்டியோ அரசியலோ இல்லை!  தி மு கழகம்  கூத்தாடிகளுக்குள்ளே புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிற விஷயம் உறுதியாகத் தெரிய வந்தது தான்!   
    

இங்கே விஷால் பேசுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் தான்!  நடிகர்களுடைய தபால் ஓட்டுக்களைக் காசு கொடுத்து வாங்கி விஷால் அணியினரை ஜெயிக்க வைக்க வேண்டுமென்று யார் பின்னணியில் இருக்கிறார்கள்? தெரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விஷயமில்லை. சேனல்களுக்குத் தீனி போட்டதைத்தவிர இந்த விஷயம் வேறு எதையாவது சாதித்திருக்கிறதா?

ஆக, மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா போக வாய்ப்பே இல்லை போல! போய்த்தான் என்ன செய்யப் போகிறார் என்று கேட்கிறீர்களா? 

இந்திய இடதுசாரிகளுக்கு இனி எதிர்காலம் உண்டா?
கேள்வியெழுப்புவதும் பதிலும் ராமசந்திர குகா  

If the Left in India hopes or wishes to rise up from the ashes, then the first thing it must do is to become more Indian. In 1920, shortly before the Communist Party of India was established, the Mumbai Marxist, S.A. Dange wrote a pamphlet exalting Lenin over Gandhi. Ever since, Indian communists have found their heroes in a country other than India. They have venerated, in turn, the Germans Karl Marx and Friedrich Engels, the Russians V.I. Lenin and Josef Stalin, Mao Zedong of China, Ho Chi Minh of Vietnam, the Cuban Fidel Castro, and the Venezuelan Hugo Chávez.

The problem with these foreigners is not just that they were foreigners. They were also totalitarians, who believed in a one-party State run by themselves. The likes of Lenin and Mao had no understanding of India or of Indian society; nor an appreciation of the virtues of multiparty democracy either. By worshipping them at the expense of home-grown thinkers such as Gandhi and Ambedkar, the communists found themselves out of sync with Indian realities.

என்று போகாத ஊருக்கு, காது கொடுத்துக் கேட்காத இந்திய இடதுசாரிகளுக்கு வழிசொல்லித் தருகிறார் ராமசந்திர குகா.
முழுக்கட்டுரையையும் வாசிக்க 

மீண்டும் சந்திப்போம்.


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)